3/23/2013

இரட்டிப்பு

விமான நிலைய 
விரிவாங்கு முனையத்தில் 
எதையோ நினைத்து 
எங்கோ பார்த்து 
இடையூறு விளைவித்த நான் 
சாரி சொல்வதற்குள் 
என்னை அறைந்தது சாரி! 
இரட்டிப்பு வலி 
மனத்துக்கு!! 
நையப் புடைக்க வேண்டும், 
வெள்ளைக்காரனுக்கு 
நாண 
நன்னயம் 
சொல்லிக் கொடுத்த 
திருவள்ளுவரை!

2 comments:

மதுரை சரவணன் said...

நல்லாயிருக்குப்பு....வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

சரிங்க... செய்துடலாம்...