3/19/2011

மதிமுக பரபரப்பு முடிவு!

போதிய அளவு இடங்கள் கிடைக்காததால் மதிமுக பதினான்காவது சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிக்கிறது. மதிமுக கட்சியினர் அதிமுகவின் மேல் கடும் எதிர்ப்பிலேயே உள்ளனர்.

மூன்றாவது அணி அமைத்துப் போட்டியிடுவதன் மூலம், போதிய வாக்குகளைப் பெற முடியாமல் கட்சிக்கான அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என்பதால், மதிமுக இம்முடிவினை எடுக்க நேரிட்டு இருக்கிறது. இந்த யோசனையைத் தெரிவித்த அரசியல் விற்பன்னர் பதிவர் குடுகுடுப்பையாருக்கு வைகோ நன்றி தெரிவித்து உள்ளார்.

ஆனால், தமிழ் இனமான உணர்வாளர்கள் நிலை என்ன? தமிழகத் தேர்தல் காட்சிகள், என்றுமில்லாத அளவுக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்க உள்ளது. பிரச்சார பீரங்கிகள், பரப்புரையாளர்கள் புரட்சிப்புயல் வைகோ, நாஞ்சில் சம்பத், செந்தமிழன் சீமான் முதலானோர் முழங்காமல் இருப்பார்களா? சுயமரியாதையை இழந்து குறைவான இடங்களைப் பெறாதவர்கள், மேடையேறாமல் இருப்பதன் மூலம் அந்த சுயமரியாதையைத் தக்கவைத்துக் கொள்வார்களா?? அவர்கள் எடுக்கவிருக்கும் நிலையைத் தமிழகம் மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்குகிறது. அவர்களுக்கு, அண்ணன் குடுகுடுப்பையாரின் ஆலோசனை என்னவாக இருக்கும்??

8 comments:

டக்கால்டி said...

என்னத்த சொல்ல இதைப் பற்றி என் எண்ணத்தை சொல்ல ?

அன்புடன் நான் said...

இது கணிப்பா?

எப்படியோ.... நாடு நாசமா போறது உறுதி!

பழமைபேசி said...

@@சி.கருணாகரசு

இல்லங்க... அதிகாரப்பூர்வ முடிவு! இது எவ்வளவோ பரவாயில்லன்னுதான் சொல்லணும்.

தேமுதிக?? 13 மணி நேரம் பேசி, உடன்பாடு எட்டப்பட்டதாம்! 41 தொகுதிகளை அடையாளம் காணுறதுக்கு எதுக்குடா 13 மணி நேரம்னு கேட்டேன்.

தொகுதிய அடையாளம் கண்டு, அதுல யாரை வேட்பாளரா நிறுத்தப் போறாங்கன்னு சொல்லணுமாம். அதை அடுத்த கட்சிக்காரங்க அலசி ஆராஞ்சி ஒப்புதல் தரணுமாம்... கர்மம்டா சாமி! என்னாவொரு சுயமரியாதை?!

குடுகுடுப்பை said...

தெரிவித்த மதிமுக அபிமானியும் அரசியல் விற்பன்னருமான பதிவர் குடுகுடுப்பையாருக்கு வைகோ நன்றி தெரிவித்து உள்ளார்.//

ஏன் இந்தக்கொலவெறி

பழமைபேசி said...

@@குடுகுடுப்பை

அண்ணே, அடுத்த ஆலோசனையச் சொல்லாமலே போய்ட்டீங்களே?? அவ்வ்...

அப்பாதுரை said...

அது யாருங்க மதிமுக?

அப்பாதுரை said...

நிலவு முகம்னு சொல்றீங்கனு நெனச்சேன் முதல்ல.

ஓலை said...

அப்பிடியா பழமை நடக்குது!

தகுந்த நேரத்தில் தகுந்த அறிவுரை (சுயமரியாதையை காப்பற்றிக்கொள்ள) வழங்கிய கு.ஜ.மு.க பொதுச்செயலாளர் மற்ற கட்சிகளுக்கு என்ன அறிவுரை கூறினீர்.

கொஞ்சம் யோசிச்சு சொல்லுங்க. பின்னாடி texas சதி என்று வரலாற்றில் இடம் பெற்று விடும்.