3/22/2011

2011: திமுக வெல்வதற்கான காரணங்கள்!!!

10. நுகர்வோர் நேரிடையாகப் பாதிப்புக்குள்ளாகும் பிரச்சினைகள் வெகுவாக இல்லை. இசுபெக்ட்ரம்(Spectrum) என்று சொல்லப்படுகிற அலைக்கற்றை ஊழல் கவனிக்கத்தக்க ஒன்று என்றாலும், அதனால் நேரிடையான பாதிப்பு இல்லை. நேரடி பாதிப்பான, மின்வெட்டுப் பிரச்சினை என்பது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தாலும், மக்கள் அதற்குப் பழக்கப்பட்டு விட்டார்கள் என்பதே யதார்த்தம்.

9. அரசு அலுவலகங்கள், சொத்துப் பிரச்சினை, விபத்துக்கால அவசர உதவி முதலானவற்றுக்கு ஓடிவரும் திமுகவினரின் அன்னியோன்யம். கையூட்டு என்பது இடம் பெற்றாலும், காரியம் ஆகிறது எனும் மன ஆற்றுமை!

8. அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு மற்றும் முந்தைய காலங்களில் ஏற்பட்ட விரும்பத்தகாதன எதுவும் நடப்பு ஆட்சியில் இடம் பெறாமை.

7. துணை முதல்வரின் எளிமை மற்றும் அனைவரையும் அனுசரித்துப் போகும் தன்மை. மேலும் அவரது ஆக்கப்பூர்வமான அணுகுமுறை.

6. கட்டித்தரப்பட்ட ஏழைகளுக்கான உயர்தர வீடுகள்.

5. தொழில் நிறுவனங்களை தமிழகத்துக்குள் ஈர்த்துப் போற்றுவதால் ஏற்படும் நேரிடையான வேலைவாய்ப்புகள்.(மறைமுகமாக ஆட்சியாளர்கள் பெரும்பேறு பெறுகிறார்கள் என்பது விமர்சனத்திற்கான ஒன்று!)

4.தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டம்

3. தேர்தல் வாக்குறுதிக்கொப்ப வழங்கப்பட்ட இலவசத் தொலைக்காட்சிகள்

2. கிலோ அரிசி, ரூபாய் ஒன்றுக்கு தொடர்ந்து வழங்கப்படுவது

1. களப்பணி, கட்டமைப்பு, கூட்டணியினரிடம் காணப்படும் இணக்கமான போக்கு

குறிப்பு: மக்களே, அதிமுக வெல்வதற்கான காரணங்களும் வரும். அதுக்குள்ள பொங்கிடாதிங்க... ஆனாலும், திமுகவே முந்திய நிலையில் இருக்கிறது என்பது பொதுப்புத்தியுடன் கூடிய யூகம்.

36 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//
அதுக்குள்ள பொங்கிடாதிங்க.
//

சே..சே..
என்னொட அறிவுக்கண்ண தொறந்துவிட்டுட்டீங்க தொரை.!!!
:-)

அமுதா கிருஷ்ணா said...

ஆமாம்.மின்சாரம் கட் செய்வது தென் மாநிலங்களில் பழக்கமாயிடுச்சு. அதற்கு ஏத்த மாதிரி வேலைகளை செய்கிறார்கள். இலவச டிவி மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

Unknown said...

ஊடகங்களின் பிரம்மையால் ஏற்பட்ட கருத்து அது .. ,அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வால் ஏற்றம் பெற்ற விலைவாசி.
ஒரு ரூபாய் அரிசி பருப்பு 60 ரூபாய் .
கட்சி காரர்களே பெரும் பாலன இலவசங்களை பெற்றது .மணல் கடத்தல் , ரவுடியிசம் , கட்டப்பஞ்சாயத்து ........ இன்னும் பல .தி மு க அரசை நிச்சயம் கவிழ்க்கும்

Unknown said...

ஊடகங்களின் பிரம்மையால் ஏற்பட்ட கருத்து அது .. ,அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வால் ஏற்றம் பெற்ற விலைவாசி.
ஒரு ரூபாய் அரிசி பருப்பு 60 ரூபாய் .
கட்சி காரர்களே பெரும் பாலன இலவசங்களை பெற்றது .மணல் கடத்தல் , ரவுடியிசம் , கட்டப்பஞ்சாயத்து ........ இன்னும் பல .தி மு க அரசை நிச்சயம் கவிழ்க்கும்;;;http://jskpondy.blogspot.com/2011/03/blog-post_22.html

Sketch Sahul said...

"6. கட்டித்தரப்பட்ட ஏழைகளுக்கான உயர்தர வீடுகள்."

இத எழுதும் பொது உங்களுக்கே சிரிப்பு வந்திருக்குமே ..:-)

ராஜ நடராஜன் said...

ஒற்றைக்கண்:)

பழமைபேசி said...

@@ ஜெ.சதீஷ் குமார்

நான் நேற்றைக்கு ஒரு நிகழ்ச்சிக்காக, எங்க உறவினர் ஊருக்கு போயிருந்தனுங்க... அங்கிருந்த போது மக்கள் பேசிகிட்டதை வெச்சித்தான் இது... தோற்பதற்கான காரணங்களும் இருக்கு... ஆனாலும் வலுவாக இல்லை....

உதாரணம்: கட்டித்தரப்பட்ட வீடுகள் தரமில்லை... ஒருசிலருக்கே... பாரபட்சம்... கட்சியினருக்கே... அதில் ஊழல்... இதெல்லாம் முன்வைக்கும் பிரச்சாரத்தைப் பொறுத்தது.... ஒப்புதல் வாக்குமூலமாகவும் அமையலாம்... அதே தோற்புக் காரணியாகவும் அமையலாம்... முன்வைக்கும் வீரியத்தைப் பொறுத்தது அது.... ஆனால், இன்றைய தேதியில் வீரியம் என்பதா? அப்படி ஒரு குற்றச்சாட்டே முன்வைக்கப்படலை... இன்னும் நாட்கள் இருக்கு... பொறுத்திருந்து பார்ப்போம்!!

பழமைபேசி said...

@@ராஜ நடராஜன்

அப்படி இல்ல...

1 0
0 1

ஆக, நான்கு இடுகைகளுக்கான விபாடம் இருப்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். நான்கும் நமது வலையகத்தில் இடம் பெறும்!!

VJR said...

பழமைபேசியில்லையய்யா நீங்கள், புதுமைபேசி.

நீங்கள் சொன்னதுதான் நிஜ நிலவரம்.


அப்புறம், ஊர்லயா இருக்கீங்க? ஃபேஸ்புக்க கூட ஹேக் பண்ணிட்டானுவ. உங்கள புடிக்க முடியல.

கணேஸ்.

மறத்தமிழன் said...

பழமைபேசி அண்ணே,

முதல் பாய்ன்டை பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

திமுக‍ ‍‍காங்கிரசு தொண்டர்களிடையே பிணக்கு...
திமுக ஓட்டு காங்கிரசுக்கு முழுதும் விழாது...

என்ன தான் டாக்டர் ராமதாசும், அண்னன் திருமாவளவனும் இணக்கமாக இருந்தாலும் அடிமட்ட தொண்டர்களிடையே காணப்படும் வேறுபாடுகள்...

இதை எல்லாம் வைத்து பார்த்தால் அதிமுக அணி முன்னிலையில் உள்ளதாக நான் சென்ற கிராமத்தில் பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள் !

பழமைபேசி said...

//

Date: 2011/3/22
Subject: Re: [தமிழ் மன்றம்] 2011: திமுக வெல்வதற்கான காரணங்கள்!!!
To: tamilmanram@googlegroups.com
Cc: பழமைபேசி , tamizhamutham@googlegroups.com, முத்தமிழ்
22 மார்ச், 2011 5:05 am அன்று, பழமைபேசி எழுதியது:

2011: திமுக வெல்வதற்கான காரணங்கள்!!!தோற்பதற்கான காரணங்களையும் சொல்லுங்கள்

நாங்க சீர் தூக்கி முடிவு செய்வோம்


இசுடாலினும் மாறனும் எனக்கு பிடித்தவர்கள். அவர்கள் மீண்டும் வரணும்.


--
வேந்தன் அரசு

எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல
//

இது, இதேதான் நாம் எண்ணி இடுகை இட்டதும்!!

குறும்பன் said...

இன்னும் நிறைய தேர்தல் இடுகைய எதிர்பார்க்கறோம். லட்டு மாதிரி வாய்ப்பு உங்களுக்கு கிடைச்சிருக்கு விடாதிங்க :)))

1, 5, 6 ஒத்துக்கமுடியலை.

அப்பாதுரை said...

கேள்விப்பட்டதை உங்கள் பதிவில் சரி பார்க்க முடிந்தது. திமுகவை விட்டால் இனி கதியில்லை என்ற கருத்து மாறி, திமுக பரவாயில்லை என்ற கருத்து இருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்.

Ivan Yaar said...

Tell me openly. Are you still eating 1 Rupee Rice at home???

பழமைபேசி said...

@@Ivan Yaar

It's not about me buddy...It's voice of people... I will put-up a video real soon... I am justifying what I wrote... It doesn't mean that I try to make a case that is favor to any one...

Raveendran Chinnasamy said...

திமுகவே முந்திய நிலையில் இருக்கிறது //100 %

vasan said...

10.ஸ்பொக்ட்ர‌ம் ப‌ண‌ம் 'க‌லைஞ‌ர் டிவி' வ‌ரை பாய்ந்திருக்கிற‌து. டாடா வோல்டாஸ் கைமாறி இருக்கிற‌து. குடும்ப‌த்தின‌ர் ப‌ணம‌ழையால் சுற்று நில‌ங்க‌ளை நனை(இணை)த்திருக்கிறார்க‌ள்.
மின்வெட்டு, ம‌க்க‌ளின் வருமான வெட்டாய் இருக்கிற‌து.


9. (தி)முக‌ குடும்ப‌த்தின‌ரின் அனும‌தியின்றி பெரிய‌ சொத்து ப‌திவாகாது. க‌ரை வேட்டி க‌ட்ட‌வில்லையெனில், அது வெட்டி வேலையாகிவிடும். விப‌த்தான‌ல் 'காரிய‌ம்'தான் ந‌ட‌க்கிற‌து.

8. 2006 ல், 52 லட்ச‌ம் க‌ட‌னில் இருந்த‌ த‌மிழ்நாடு ஐந்தாண்டுக‌ளில் 1கோடியை தாண்டி விட்ட‌து.

7. அவரின் தொழிற்சாலை ம‌துதான் (மெம்பிஸ் பிராந்தி)தான் டாஸ்மாக்கில் சிற‌ப்பு விற்ப‌னையாம். இசியார், ஒஎம்மார் இட‌ங்க‌ள் இவர் தேர்த‌லில் அறிவித்த 2.11 கோடி சொத்தில் சேர்க்கப்ப‌ட்டிருக்கிற‌தா?

6. 70 ஆயிர‌த்தில் உய‌ர்த‌ர‌ வீடுக‌ள்!!! பாதி செங்க‌ல் சூலைக‌ள் மூட‌ப்ப‌ட்டு விட்ட‌ன. ம‌ணல், செங்க‌ல் விலை மூன்று ம‌ட‌ங்கு உய‌ர்ந்துவிட்ட‌து, முத‌ல்வரின் இந்த‌ அறிவிப்புக்குப் பின்.

5. அந்த‌ நிறுவ‌ன‌ங்க‌ளுக்கு ம‌ட்டும் த‌டையில்லா மின்சார‌ம், த‌ண்ணீர், சாலை வ‌ச‌திக‌ள்.
வேலைத்த‌ள‌த்தில் ஊழிய‌ர் ம‌ர‌ண‌மே அடைந்தாலும் த‌டையில்லாது எந்திர‌ம் ஓடும். எந்திர‌மாய் ம‌னித‌னும் ஓட‌னும். ஊழிய‌ர்க‌ள் ச‌ங்க‌ங்க‌ளுக்கு ச‌ங்கு. அரசு அடியாள் மாமுலில்.

4. 60% அரசிய‌ல்வாதிக‌ளுக்கு, 40% கைநாட்டு போடுற‌வுங்க‌ளுக்கு. வேலை????

3. ஆறு மாத‌ங்க‌ளுக்கு காட்சி தெரியும். பின்பு...?? கேர‌ளாவில் ம‌லிவு விற்ப‌னையில்.
ஒன்னு எடுத்தா இர‌ண்டாயிர‌ம், இர‌ண்டெடுத்தா மூவாயிர‌த்து ஐநூறு.


2. ம‌த்திய‌த‌ர‌ ஹோட்ட‌லில் இர‌ண்டு இட்லி இருப‌து ரூபாய். கோழிக்கு சீப்பான உண‌வு. ஆந்திரா போய் (மா)பாலிஸ் ஆகி மீண்டும் விற்ப‌ன‌க்கு. 14 ரூபாய் ம‌த்திய‌/மாநில‌ அரசுக‌ளின் மானிய‌மாய், ம‌க்க‌ள் (ந‌ம்) த‌லையில்.


1.தின‌க‌ர‌ன் எரிப்பில் 'ரெளடி', பின்பு க‌ண்க‌ள் ப‌னிக்கும், இத‌ய‌ம் இனிக்கும். இள‌வ‌ல்க‌ளுக்குள் யுத்த‌ம். இளவ‌ர‌சியுட‌ன் ப‌னிப்போர். அந்த‌ப்புர‌ங்க‌ளில் இடியோசை.த‌ங்க‌த்த‌லைவிட‌ம் "மூனுசீட்டு",அம‌ச்ச‌ர் வாப‌ஸ். பின்பு வாப‌ஸ்ஸே வாப‌ஸ். க‌ட்சியின் குறுநில‌ம‌ன்ன‌ர‌களுக்கிடையே எல்லைத் தொல்லை, கொலை, புதிதாய் வந்த‌ மாற்றுக‌ட்சியின‌ர் பிர‌ச்னை. மாமா, ம‌ருமக‌ன் த‌க‌ராறு. ஆகா! என்னே ஒற்றுமை. (ச‌ன், க‌ல‌ஞ‌ர் டிவி ம‌ட்டும் தான் யுஎஸ்ல‌ தெரியுதா?)

Jayadev Das said...

2011: திமுக வெல்வதற்கான காரணங்கள்!!!
1. இவர்களின் எதிரிகள் ஆளுக்கொரு மூலையில் பிரிந்து போய் கிடப்பது, இவனுங்க எதையதையோ பண்ணி காங்கிரஸ் கூட்டணியை தக்க வைத்துக் கொண்டது.
2. தேர்தல் சமயத்தில் இவனுங்களால் கொடுக்கப் பட இருக்கும் பணம், சாராயம், பிரியாணி,வேட்டி, சேலைகள் முதலான.
3. கள்ள வோட்டு, ரவுடிகளைப் பயன்படுத்துதல், வாக்குச் சாவடிகளைக் கைப் பற்றுதல், எதிர்க் கட்சி வாக்காளர்களை வோட்டு போட விடாமல் தடுத்தல்.
4. இந்த ஆட்சி மாதிரி கேவலமான ஆட்சி என்று தெரிந்தும், அன்றைக்கு கிடைக்கும் இலவசங்களால் அதையெலாம் மறந்து போகும் தமிழனின் முட்டாள் தனம் + ஏமாளித் தனம்.
5. எருமை மாட்டுமேல் மழை போல அத்தனை பித்தலாட்டங்களுக்கும் \\மக்கள் அதற்குப் பழக்கப்பட்டு விட்டார்கள்\\ என்ற உண்மை. There is no end to this list!!

Jayadev Das said...

கட்டித்தரப்பட்ட ஏழைகளுக்கான உயர்தர வீடுகள்.
Please kindly don't cut jokes in a serious post.

பழமைபேசி said...

@@vasan

I enjoyed your comments... however...

நான் அமெரிக்காவில் இருந்த வரையிலும், அனுபவப் பதிவுகள்தானே ஒழிய... கருத்துரைகள் எழுதவில்லை... எப்போதெல்லாம் தாயகம் வருகிறேனோ அப்போது மட்டும், கண்டவை, கேட்டவற்றைப் பகருகிறேன்....

வெளிநாட்டு வாழ் வலைஞர்கள் தாயகத்துக்கு வந்திருந்து எதையும் எழுதுவதில்லை... ஊடகங்களில் வருவதை வைத்து எழுதுவதுதான் பொய்ப் பிம்பத்தை உருவாக்கி விடுகிறது.

Desktop journalism is the one providing wrong impression on reality....

http://maniyinpakkam.blogspot.com/2009/05/blog-post_30.html

Jayadev Das said...

தேர்தல் வாக்குறுதிக்கொப்ப வழங்கப்பட்ட இலவசத் தொலைக்காட்சிகள்
- Will run for just one year, then will go to dustbin. TV's are free at Govt. cost and cable will be charged by Maran's and Nidhi's!!

Jayadev Das said...

\\கிலோ அரிசி, ரூபாய் ஒன்றுக்கு தொடர்ந்து வழங்கப்படுவது.\\ Unfit for consumption, used as chikken feed!!

பழமைபேசி said...

மக்களே... இப்பவும் சொல்றேன்... நான் இல்லாததை எழுதவில்லை...

நீங்க சொல்ற அத்துனை விமர்சனங்களுக்கும் செவிமடுக்கிறேன்... அத்தனை குறைபாடுகள் இருப்பின், மாநிலந்தழிவிய போராட்டம் ஏன் வெடிக்கவில்லை??

கட்ந்த 5 ஆண்டுகளில், எதிர்க்கட்சியினரின் மாநிலந்தழுவிய போராட்டங்களை வரிசைப்படுத்த முடியுமா?? ஆளுங்கட்சிக்கு எதிரான அலையும் இல்லை... மகத்தான ஆதரவு அலை என்பதும் இல்லை என்பதுதானே உண்மை?!

மேலும் கூறப்பட்ட காரணங்களுக்கு மறுப்புச் சொன்னால், நான் அதற்கு பதில் கூறக் கடமைப்பட்டவன். ஆனால், அது குறித்த விமர்சனங்களுக்கு நான் பதில் கூறப் போவது இல்லை!!

புழுத்த அரிசி என்பார்... அதையொட்டி வண்டி, வண்டியாய் அண்டை மாகாண்த்துக்கு கடத்தல் என்றும் சொல்வார்.

பழமைபேசி said...

@@ராவணன்

நண்பரே, மன்னிக்கணும்!

Jayadev Das said...

\\அத்தனை குறைபாடுகள் இருப்பின், மாநிலந்தழிவிய போராட்டம் ஏன் வெடிக்கவில்லை??\\ மக்கள் அதற்குப் பழக்கப்பட்டு விட்டார்கள் என்பதே யதார்த்தம்.

பழமைபேசி said...

@@Jayadev Das

மக்களுக்காகப் போராட வேண்டியது எதிர்க்கட்சிகளோட கடமைங்க... அப்பத்தான் ஆட்சியாளருக்கு எதிரான அலை வீசும்...

Jayadev Das said...

\\புழுத்த அரிசி என்பார்... அதையொட்டி வண்டி, வண்டியாய் அண்டை மாகாண்த்துக்கு கடத்தல் என்றும் சொல்வார்.\\ இந்த அரிசியை கருணாநிதி, அவரோட மகனுங்க, மகளுங்க, பெண்டாட்டிகள், பேரனுங்க, கொள்ளு, எள்ளு பேரனுங்க இவனுங்களில் யாராச்சும் ஒருத்தனை ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டும் சாப்பிடச் சொல்லுமையா, அப்புறம் பேசும். அண்டை மாகாணத்து கோழிகள் நல்லா பருத்து வளருதாம், வேறொன்னுமில்லை.

பழமைபேசி said...

@@Jayadev Das

சரிங்கய்யா..

bandhu said...

// அத்தனை குறைபாடுகள் இருப்பின், மாநிலந்தழிவிய போராட்டம் ஏன் வெடிக்கவில்லை??//
ஏனென்றால் எனக்கு நேரடியாக பாதிப்பில்லை என்றால் எந்த அக்கிரமும் எனக்கு எளிதில் பழகி விடும். அதுவுமில்லாமே எனக்கு எருமை தோல்! ஏன்னா, நான் தமிழன்!

Jayadev Das said...

@ bandhu

Appadi podunga aruvaalai!!

thiyaa said...

சும்மா குடுத்து சொம்போறியான தமிழ் நாட்டை உருவாக்கும் தி.மு.க ................................................................
வெல்ல காரணம்.................................. என்று தலைப்பு போட்டிருந்தால் அருமையாக இருந்திருக்கும்

Paleo God said...

நேரிடையாகப் பாதிக்கப் பட்ட ஒருவன் என்ற முறையில் 1, 2 தவிர்த்து மற்றவை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை.//

//மின்வெட்டுப் பிரச்சினை என்பது எரிச்சலை ஊட்டுவதாக இருந்தாலும், மக்கள் அதற்குப் பழக்கப்பட்டு விட்டார்கள் என்பதே யதார்த்தம்//

// கையூட்டு என்பது இடம் பெற்றாலும், காரியம் ஆகிறது எனும் மன ஆற்றுமை!//

6. கட்டித்தரப்பட்ட ஏழைகளுக்கான உயர்தர வீடுகள்.

மறைமுகமாக ஆட்சியாளர்கள் பெரும்பேறு பெறுகிறார்கள் என்பது விமர்சனத்திற்கான ஒன்று!)//

கலைஞரே ரசிக்குமளவிற்கான சமாளிப்பு! :)))


3. தேர்தல் வாக்குறுதிக்கொப்ப வழங்கப்பட்ட இலவசத் தொலைக்காட்சிகள்//
உண்மையான பல பயனாளிகளுக்கு இது கிட்டவில்லை. மற்றபடி காரில் வந்து வாங்கிச் சென்றவர்களையெல்லாம் கணக்கெடுத்தால் வெற்றி! வெற்றி! வெற்றியோ வெற்றி!

7. துணை முதல்வரின் எளிமை மற்றும் அனைவரையும் அனுசரித்துப் போகும் தன்மை. மேலும் அவரது ஆக்கப்பூர்வமான அணுகுமுறை//

கட்சிக்காரர்களுக்கு என்றால் சரி.

அல்லது

இவர் மக்களுக்கு தனியா ஒரு துணை முதல்வரா என்னனென்ன செய்தார்னு ஒரு இடுகை எழுதுங்களேன் (அவரின் எளிமையும் அமைதியும் எனக்கும் பிடிக்கும் ஆனால்...)


குறிப்பு: மக்களே, அதிமுக வெல்வதற்கான காரணங்களும் வரும். அதுக்குள்ள பொங்கிடாதிங்க...//

இது வேறையா அவங்க செஞ்சாங்க அவங்க செஞ்சாங்கன்னுதான் இவங்க செய்யறதுக்கெல்லாம் பதில் சொல்றாங்க இசுபெக்ட்ரம் உட்பட!!!

///
நீங்க சொல்ற அத்துனை விமர்சனங்களுக்கும் செவிமடுக்கிறேன்... அத்தனை குறைபாடுகள் இருப்பின், மாநிலந்தழிவிய போராட்டம் ஏன் வெடிக்கவில்லை??
///
சோற்றாலடித்த பிண்டத்திற்கு உயிர்வரும் நாள் என்னாளோ???


@ஜெயதேவ் தாஸ்

கடுமையாக மறுக்கிறேங்க!. உண்பவன் என்ற முறையில் நகரத்திலும் சரி, தற்பொழுது நான் வசிக்கும் கிராமத்திலும் சரி அரிசி நன்றாகவே இருக்கிறது!!

சரண் said...

நீங்க சொன்ன எல்லாக் காரணங்களை விடவும் மிக முக்கியமானக் காரணமாக எனக்குத் தோணுவது, ஒரு தகுதியான எதிர்க்கட்சி இல்லாம இருப்பதுதான்..

திமுக ஆட்சிய வெறுக்கற ஒரு சில சதவிகித மக்களுக்கு வேற யாரும் இல்லைங்கறதுதான் உண்மை.. அந்தம்மா ஆடற ஆட்டம் இப்பவே தாங்க முடியல.. இன்னும் திருந்தலைங்கறது நல்லாத் தெரியுது.

மாயாவி said...

உங்கள் கருத்துக்கள் தவறானது என்று தேர்தல் முடிவுகள் தெரிவிக்கும்.

ராஜேஷ், திருச்சி said...

தீபாவளியன்று பெரியவாள உள்ளே வெச்சவாளுக்கு ஒட்டு போடணுமா ??? ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது சிரிரங்கத்தில்

Denzil said...

நிறைகள் நிறைய இருந்தாலும் குறைகள் அதை விட அதிகமாக இருக்கிறதுதான் திமுகவுக்கு பாதகமான அம்சம். கணிக்கிறதுக்கு மிகக்கடினமான போட்டி இந்த தடவை. ஆனா தமிழ்நாட்டுல வாக்காளர்கள் ஒரே மாதிரி சிந்திக்கிறதுதான் இது வரைக்கும் நடந்திருக்கு. சிறிய வித்தியாசத்துல எதிர்க்கட்சி கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கக்கூடிய வாய்ப்புகள்தான் தற்சமயம் அதிகமா தெரியுது. பிரச்சாரத்துக்கு கிடைச்சிருக்கிற இந்த குறுகிய காலத்துல வாக்காளர்களை தங்கள் பக்கம் சாய வைக்க கடுமையாக உழைக்கும் கூட்டணிக்கே வெற்றி சாத்தியமாகும்.