3/16/2011

2011 தாயகப் பயணம் - 2

எம் தாயகப் பயணமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இருந்தாலும், கடைசித் தருணத்தில் ஒரு வாரம் முன்கூட்டியே வந்திறங்க வேண்டுமென உரிமை கலந்த வேண்டுகோள். எனது நெருங்கிய உறவினர் ஒருவரது இல்லத் திருமணம்.

இரு நாள் நிகழ்ச்சிகளாக மார்ச் 15 ம்தியம் துவங்கி, இன்று மார்ச் 16 மதியம் பல்வேறு நிகழ்வுகள் தொடர்ந்து இடம் பெற்றன. என் வாழ்க்கையில் நான் மனதாற இரசித்த நிகழ்ச்சிகள். முழுக்க, முழுக்கத் தமிழில், ஆன்மிக உணர்வோடு, உள்ளன்போடு நடந்தேறிய நிகழ்ச்சி என்று சொன்னால் மிகையில்லை.

வெறுமனே ஒரு சடங்காகத் திருமணங்களுக்கு வந்து போவார்கள். இதற்கும் மக்கள் அப்படித்தான் வந்திருப்பார்கள். ஆனால், திருமணம் நடந்த பாங்கினைப் பார்த்து, நாத்திக அரசியல்வாதிகள் முதற்கொண்டு, உற்றார் உறவினர்கள் வரை அனைவராலும் அரங்கம் நிரம்பி வழிந்து, திருமண நிகழ்ச்சி இதற்குள் நிறைவுக்கு வந்துவிட்டதே என எண்ணியபடிப் பிரிந்து செல்வதைக் கண்டு கொண்டிருக்கிறேன்.

தூய தமிழில், மிக எளிமையாகச் சிறப்புறச் செய்த அந்தத் தமிழ் ஓதுவார்களுக்கு எம் பணிவார்ந்த நன்றிகள்! எம்மை இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் செய்த எம் உறவினர்க்கும் நன்றிகள்!!

--கோவை இராமகிருஷ்ண திருமண அரங்கில் இருந்து பழமைபேசி.

3 comments:

ஓலை said...

புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துகள்.

தாராபுரத்தான் said...

சிலர் திருமண சடங்குகளைக்கூட தமிழ் மணக்க செய்து..வாழ்த்த வந்தவர்களை வாழ்த்த செய்துவிடுகிறார்கள்..ஆமா..தீடிரென பின்னால வந்து கண்ணை பொத்தி...

மாதேவி said...

”தூய தமிழில், மிக எளிமையாக..” வாழ்த்துகள்.