3/10/2011

அமெரிக்கத் தமிழ் வில்லுப்பாட்டு

ஆண்டுதோறும் நடைபெற்று வரும், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாவானது இம்முறை தென்கரோலைனா மாகாண கடற்கரை நகரான சார்ல்சுடன் நகரில் நடைபெற உள்ளது. இவ்வாண்டுத் தமிழர் விழாவை அமெரிக்காவில் நடத்த இருப்போர் மிகுந்த பெருமைக்குரியவர்கள் ஆவர்.

ஆம்; இவ்வாண்டுக்கான தமிழர் விழாவை நடத்த இருப்பவர்கள் பனைநிலத் தமிழ்ச் சங்கத்தினர். தமிழ் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு போற்றுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களே. அங்கே இருப்போர் பெரும்பாலும் முனைவர்கள் ஆவர். தமிழ்க் கலை, இலக்கியத்தை வார்த்தெடுப்பதில் மகா விற்பன்னர்கள். எந்த ஒரு நிகழ்ச்சியைச் செய்தாலும், அதிலொரு தனிமுத்திரை பதித்திடுவர். அப்படியானவர்கள் ஒருங்கிணைந்து நடத்தப் போகும் இவ்வாண்டுக்கான விழாவானது, வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் மகுடத்தில் ஒரு மாணிக்கமாக மிளிரப் போவது திண்ணம்.


2011 சூலை மாதம் 2, 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் நடைபெறப் போகும் இவ்விழாவில், வழக்கம் போல பல தரப்பட்ட நிகழ்ச்சிகளும் சமச்சீரோடு இடம் பெறப் போகிறது. அதற்கும் மேற்பட்டு, அழகிய இந்த கடற்கரை நகரில் பல எழிலார்ந்த இடங்களும் கண்டு களிக்க அமையப் பெற்றிருக்கிறது. ஆகவே, அமெரிக்கத் தமிழரெலாம் வாரீர். நமக்குள் ஒன்றிணைவோம்! தமிழருக்கான கட்டமைப்பை வலுப்படுத்துவோம்!!தமிழால் இணைந்தோம்!
தமிழராய் வாழ்ந்திடுவோம்!!


   24th Annual Tamil Convention, July 2-4, 2011
  Gaillard Municipal Auditorium, Charleston, SC, USA
  தனித் தமிழே நனிச் சிறப்பு ! 
இனம் பேணல் நம் பொறுப்பு !!

4 comments:

Chitra said...

அழைப்பிதழ் வந்தாச்சு... விமான டிக்கெட்ஸ் உள்ளே இல்லையே... ஹி,ஹி,ஹி,ஹி...

ஓலை said...

Vaazhthukal.

vasu balaji said...

/ஓலை said...

Vaazhthukal./

இதை வாழ்த்தோலை எனக் கொள்ளவும்:))

ஓலை said...

சார்,
முதல்ல வாழைத்தோல் என்று படிச்சிட்டு சிரிச்சிட்டேன். அப்புறம் தான் மறுபடியும் பார்த்தேன்.