1/10/2011

நகைச்சுவை நடிகர் ஷோபனா அவர்கட்கு அஞ்சலி!

பொதுவாக திரைப்படம், தொலைக்காட்சித் தொடர் போன்றனவற்றை எல்லாம் நாம் கண்டு களிப்பது என்பது மிகக் குறைவே. எனினும் எப்போதாவது வாய்க்கப் பெறும் தருணங்களில் சிலவற்றைக் காண்பதின் வழியாகச் சில கலைஞர்கள் அபிமானக் கலைஞர்களாக ஆகிவிடுவதும் உண்டு.

குறிப்பாக, துணை நடிகர்களின் உழைப்பின் மேல் அபரிதமான நம்பிக்கை நமக்கு எப்போதும் உண்டு. வணிக தந்திரம் மற்றும் மேட்டிமைத் துண்டு போடல்கள் முதலானவற்றை எல்லாம் இவர்கள் நம்பி இருக்காமல், உழைப்பின் மேல் நம்பிக்கை வைத்து படைப்பாளிகளாக வலம் வருபவர்கள் என்பதும் நமது அபிமானத்துக்கு ஒரு காரணியாகும்.

எப்போதும் துடுக்குத்தனமாகவும், அதே வேளையில் வரம்பு மீறாமல் காட்சிக்கு பெருமை சேர்ப்பார் இவர். போண்டா மணி, முத்துக்காளை, கொட்டாங்குச்சி முதலானோர் வரிசையில், இக்கலைஞரின்பாலும் எனக்கு பெரும் ஈர்ப்பு. சில காட்சிகளை, யூட்டியூப் வழியாகத் திரும்பத் திரும்பப் பார்த்ததும் உண்டு. எதேச்சையாகத்தான் பார்த்தேன், தூக்குப் போட்டுத் தற்கொலை எனும் செய்தியை.

மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினேன். எனது அபிமானக் கலைஞர்கள் வரிசையில், சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த நடிகர் சிந்து. சமீபத்தில் பாடகர் சொர்ணலதாவின் இழப்பு. மீண்டும் அபிமான நடிகர் ஒருவரது இழப்பையும் காண்கிறேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது. அன்னாரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.

13 comments:

Chitra said...

May her soul rest in peace.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அவருக்கு அஞ்சலிகள்..
நல்ல நடிகை..

ILA (a) இளா said...

May her soul rest in peace.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

வருத்தமான விசயம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.

கோமதி அரசு said...

ஷோபனாவை எனக்கும் பிடிக்கும்.
அவர் இழப்பு ஈடு செய்யமுடியாத ஒன்று.

அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.

ungalrasigan.blogspot.com said...

உங்கள் பதிவின் மூலம்தான் இவர் மறைந்த செய்தியை அறிந்தேன். பழைய நகைச்சுவை நடிகை டி.பி.முத்துலட்சுமி, எம்.சரோஜா இவர்களிடம் உள்ள நடிப்புத் திறமை இந்த நடிகையிடமும் இருப்பதைக் கண்டு வியந்து ரசித்துப் பார்த்திருக்கிறேன். இவரது அகால மறைவு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

குறும்பன் said...

தமிழ் உலகம் நல்ல நடிகையை இழந்துள்ளது. இவரின் நகைச்சுவை காட்சிகளுக்கு நான் ரசிகன்.

sriram said...

உங்க பதிவு படிச்சுத்தான் விசயம் அறிந்தேன். அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.

உ.த அண்ணன் இத எப்படி மிஸ் பண்ணார்?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Indian said...

may her soul rest in peace.

வருண் said...

பாவம் என்ன கஷ்டமோ? இந்தப் பாழாப்போன லோகத்தவிட்டுப்போயி நிம்மதியா இருக்கட்டும்.

கோவி.கண்ணன் said...

வருத்தமான நிகழ்வு, நல்ல நகைச்சுவை நடிகை

bandhu said...

மிக வருத்தமான நிகழ்வு. நல்ல நடிகை!

vasu balaji said...

/உ.த அண்ணன் இத எப்படி மிஸ் பண்ணார்?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

அவரா மிஸ் பண்ணுவார். முதல்ல பஸ் விட்டாரே