6/23/2010

FeTNA: சொல்ல நினைத்தேன் இது கேளீர்!

வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் - உம்பால்
சொல்ல நினைத்தேன் இது கேளீர்!

உள்ளங்குடியுறு உம்தமிழை உயிராய் ஓம்பிடுவீர்
மற்றனமுன் வேம்பாய் ஒருகாலும் நினையாதீர்
வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் - உம்பால்
சொல்ல நினைத்தேன் இது கேளீர்!

தனித்தியங் கும்தன்மை உமக் குண்டு
தமிழே ஞாலத்தில் தாய்மொழி பண்டு!
புலம்பெயர்ந்த நாடிதில் நற்பண்பு கொணர்
தமிழை என்றென்றும் போற்றிடுவீர்!!

வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் - உம்பால்
சொல்ல நினைத்தேன் இது கேளீர்!

வந்த இடத்திற் தாய்மொழி மறவல் ஆகிடுமோ
வாழ்வில் உயிர்நாடி புறத்தொழித்தல் வேண்டாமே
உம்மக்கள் கூடிடுவார் பேரவையின் விழாவதிலே
வந்திடுவீர் பெருங்கூட்டமெனக் கூடிடுவீர்

விழாவிற் கூடியபின் பிரிந்திட நெஞ்சம் பெறாது
இசைத்திட்ட தமிழை பேசாதிருத்தல் ஒண்ணாது
கொண்ட உறவைப் போற்றாதிருக்க மனமொப்பாது
இன்பந்தரு தமிழில் ஒன்றிட உயிர் மறுக்காது

வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் - உம்பால்
சொல்ல நினைத்தேன் இது கேளீர்!


எவையும் தன்னுள் ஆக்கிய பெருவெளி
எங்கும் அடடே தாயின் பேரொளி என
எந்தையும் தாயும் குலாவி மகிழ்ந்திட்ட
எம்மொழியைச் செப்பி மகிழ்ந்திட வாரீர்

எண்ணிப் பத்துத்தினங்களே உள அன்றோ?
எண்ணிப் பார்க்காது இன்றே பதிந்திடுவீர்
ஞாலமெலாம் நோக்க இருப்பன கண்டிடுவீர்
தமிழரே வாரீர்! வாரீர்! வாரீர்!!

வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் - உம்பால்
சொல்ல நினைத்தேன் இது கேளீர்!
கனெக்டிக்கெட் தமிழ்த் திருவிழாவிற்கு உம்முறவு
உடன் அழைத்து வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் - உம்பால்
சொல்ல நினைத்தேன் இது கேளீர்!

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

4 comments:

BaMa said...

////எவையும் தன்னுள் ஆக்கிய பெருவெளி
எங்கும் அடடே தாயின் பேரொளி////
நெகிழ்ச்சியான வரிகள்!!

a said...

கவிதை அருமை...... அழைப்பிற்க்கு நன்றி...விழாவில் கலந்து கொள்ள கண்டிப்பாக முயற்சிக்கிறேன்...

a said...

// எண்ணிப் பத்துத்தினங்களே உள அன்றோ? //

"எண்ணிப் பத்துத்தினங்களே உள்ள தன்றோ?"
என்று இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் ....

ஈரோடு கதிர் said...

||வட அமெரிக்கத் தமிழரே இது கேளீர் ||

அட.. நாங்களும் கேக்குறோம்