6/24/2010

வட அமெரிக்கப் பதிவர் சங்கமம் - பரிசு அறிவிப்பு

உணர்ந்திடுக, இன்றே உணர்ந்திடுக
தமிழனுக்கு நேரும் ஏற்றம்
உமக்கு நேரும் ஏற்றம் அன்றோ?!
பிணிநீக்க எழுந்திரு நீ இளந்தமிழா,
பதிவுலகச் செம்மலே,
பிற்றை நாளுக்கணிசெய்யும்
தமிழ்ப்பணி செய்ய எழுகவே!
அறத்தைச்செய்!
வீறுகொள் அழகு நாட்டில்!!
பணிசெய்வாய் தமிழுக்கு
துறைதோறும் துறைதோறும்
பழ மொழியோனே!
தமிழ்த் திருவிழாவின்
பதிவர் சங்கமத்தில்
சங்கமித்திடுக! உறவு பேணிடுக!!

பதிவுலகப் பொங்குதமிழ்ச் செலவங்களே,

அமெரிக்காவிலே, கனெக்டிக்கெட் மாகாணத்திலே, வாட்டர்பெரி நகரில் எதிர்வரும் ஜூலை மாதம் 3. 4 மற்றும் 5ம் தேதிகளில் தமிழர்கள் கூடும் திருநாள் நடைபெற உள்ளமை நீங்கள் அறிந்ததே! விரைவில், விழாவுக்குப் பதிவு செய்யும் முறைமையானது நிறைவெய்த உள்ளது. கூடுதல்த் தகவல்களுக்கு, பேரவையின் வலைமனையை நாடவும்.

மேலும் திருவிழாவிற்கு அழகுமிகு அவனியின் எட்டுத் திக்கெங்கும் இருந்து பன்னாட்டுப் பதிவர்கள் வர இருப்பது இவ்வாண்டுத் திருவிழாவினுடைய மகுடத்திற்கு அணி சேர்க்கும் மாணிக்கக் கல்லாகும். தனிப்பட்ட முறையிலே, இது எனக்கும் பெருமை சேர்க்கும் ஒரு பற்றியம்.

நீங்களும் வந்து சங்கமத்திலே வந்து உங்களை இணைத்துக் கொள்வீர்களேயானால், இன்னும் பல இரத்தினங்கள் மகுடத்தில் கோர்க்கப்பட்டதென முரசு கொட்டுவேன். வாருங்கள், உறவை மேம்படுத்திப் பெருமை கொள்வோம். விழாவுக்கு உடனே, பதிவு செய்யுங்கள்! பதிவு செய்த மறுகணமே, பதிவர் சந்திப்புக்கும் உங்கள் பெயரை முன்மொழிந்து விடுங்கள்.

ஆம், ஜூன் 29ந் தேதி கிழக்கு அளவீட்டு மணி மாலை ஐந்துக்கு முன்னர் பதிவு செய்பவர்கள், சிறப்புப் பரிசில் பெறத் தகுதி உள்ளவர் ஆகுவர். பதிவர் சங்கமத்தின் போது வெற்றியாளர் குடவோலை முறையில் தெரிவு செய்யப்பட்டுப் பரிசில் பெற்றுச் சிறப்பெய்துவர் என்பதையும் அன்பொழுகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுகாறும் குடவோலையில் இடம்பெற்றோர்:

இனிய இளா
தளபதி நசரேயன்
சுந்தர வடிவேலு
தமிழ்சசி
சின்னப்பையன் சத்யா
மோகன் கந்தசாமி
வழிப்போக்கனின் கிறுக்கல் யோகேசுவரன்
மருதநாயகம்
மோகன்
விஜி சத்யா

சிறப்பு விருந்தினர்

புதுகைத் தென்றல் அப்துல்லா
பெரு நாட்டுப் பெருந்தகை பெருசு

குறிப்பு: ஜூன் 29க்கு முன்னர் இப்பதிவிலோ, எமது மின்னஞ்சலிலோ பதிவு செய்யாதோரின் பெயரோலைகள் குடத்தில் இடப்படாது.

வேர்கள் தமிழில்! விழுதுகள் உலகெங்கும்!!

11 comments:

ரவி said...

மோகன் கந்தசாமி அய்யாவை குறுக்கு வழியில் கெலிக்க வைக்க ஏதும் வழியுண்டா ?

tamilchannel said...

வணக்கம் உறவே

உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..

நன்றி

வலையகம்.கொம்

அபி அப்பா said...

கலந்தே கொள்ளாமல் கெலிக்க ஏதும் வழியுண்டா?

vasu balaji said...

நான் பதியத் தயார். பரிசு அப்துல்லாட்ட குடுத்துவுடுங்க:))

இனியா said...

அய்யா, என்னையும் சேர்த்துக்கொள்ளுங்கள்,
நான் ஒரு நாள் மட்டும் வருவதாக இருக்கின்றேன்.
நான் வினாடி வினா நிகழ்ச்சியில் கலந்துக் கொள்கின்றேன். (vipulanandar Ani)

Starjan (ஸ்டார்ஜன்) said...

///வானம்பாடிகள் said...

நான் பதியத் தயார். பரிசு அப்துல்லாட்ட குடுத்துவுடுங்க:))///

ripeeeatee....

மோகன் கந்தசாமி said...

//மோகன் கந்தசாமி அய்யாவை குறுக்கு வழியில் கெலிக்க வைக்க ஏதும் வழியுண்டா ?///
எதையும் பேசி தீர்த்துக்கலாம் ரவி! :-)))
பிறகு, நலமா?

தாராபுரத்தான் said...

கலக்கறதுன்னு முடிவு பண்ணிவிட்டீர்கள்..வாழ்த்துக்கள்.

a said...

கற்பனை காட்சி :
இடம் : விழா அரங்கம்
முதல் பரிசு : தங்க சங்கிலி....
இரண்டாம் பரிசு : தங்க மோதிரம்....

பரிசு அளிப்பவர் : அண்ணன் பழமைபேசி...
இரண்டாம் பரிசு பெறுபவர் : அண்ணன் அப்துல்லா...

அண்ணன் பழமைபேசி : ஆமா, இந்த மோதிரத்த என்ன பண்ணுறதா உத்தேசம்?

அண்ணன் அப்துல்லா : உள்ள வாங்கி வெளிய விக்க வேண்டியதுதான்... அட போப்பா, அத போயி வெரல்ல மாட்டிக்கிட்டு அசிங்கமா.....

சீமாச்சு.. said...

//பதிவர் சங்கமத்தின் போது வெற்றியாளர் குடவோலை முறையில் தெரிவு செய்யப்பட்டுப் பரிசில் பெற்றுச் சிறப்பெய்துவர் //

குலுக்கல் முடிஞ்சப்புறம் குடம் எனக்கு :)

“சுட்டுட்டியா..சுட்டா தலை எனக்கு !!” - ஆதவன் ஸ்டைலில் படிச்சிக்கவும..

“குலுக்குன அப்புறம் குடம் எனக்கு !!!”

a said...

கற்பனை காட்சி :

இடம் : விழா அரங்கம்
முதல் பரிசு : தங்க சங்கிலி....
இரண்டாம் பரிசு : தங்க மோதிரம்....

பரிசு அளிப்பவர் : அண்ணன் பழமைபேசி...
இரண்டாம் பரிசு பெறுபவர் : அண்ணன் அப்துல்லா...

அண்ணன் பழமைபேசி : ஆமா, இந்த மோதிரத்த என்ன பண்ணுறதா உத்தேசம்?
அண்ணன் அப்துல்லா : உள்ள வாங்கி வெளிய விக்க வேண்டியதுதான்... அட போப்பா, அத போயி வெரல்ல மாட்டிக்கிட்டு அசிங்கமா.....