6/08/2010

தமிழ் விழாவில், வட அமெரிக்கப் பதிவர் சந்திப்பு

மக்களே, வணக்கம்! ஜூலை 3, 4, 5ல் கனெக்டிக்கெட்டில் நடைபெறும் தமிழ்விழா 2010க்கு பெருந்திரளான பதிவர் பெருமக்கள் வரவிருக்கிறார்கள். அனைவரும் முன்கூட்டியே இவ்விடுகையின் கீழ் தெரியப்படுத்தினீர்கள் என்றால், பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும். பதிவர் சந்திப்பின் ஒருங்கிணைப்பாளராக நண்பர் இளா மற்றும் தளபதி நசரேயன் அவர்களைச் செயல்படுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

சிறப்பு விருந்தினர்கள்: அண்ணன் அப்துல்லா மற்றும் தம்பி பெருசு

செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!

21 comments:

Paleo God said...

சிறப்பாய் அமைய வாழ்த்துகள்! :)

ILA (a) இளா said...

பாஸ்ரன் மக்கள் யாராவது இருந்தா சொல்லுங்கப்பு. (பாபா, வற்றாயிருப்புத், ஸ்ரீரான் தவிர)

ILA (a) இளா said...

சிட்டை கிடைக்குமான்னுதானே கேட்டேன். அதுக்குள்ளேவா?

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தமிழ்விழாவும், பதிவர் சந்திப்பும் சிறக்க வாழ்த்துகள்.

எம்.எம்.அப்துல்லா said...

உங்களுக்கு பிடித்த ஆங்கிலத்தில் பதில் சொல்கின்றேன்

ஐ யாம் பிரசண்ட் சார் :)))

எம்.எம்.அப்துல்லா said...

நான் பெரிதும் மதிக்கும் அன்பு அண்ணன் இளா அவர்களைப் பார்க்க எனக்கு பெரும் விருப்பம்.

அதற்காக மற்றவர்களை அல்ல என்று அர்த்தம் அல்ல.

ILA (a) இளா said...

வாய்யா வா! பல நிஜ முகத்தைப் பார்த்துட்டு இந்தியா போயி புலம்புவீங்க இல்லே.. அப்போ தெரியும். நாங்க எல்லாம் எப்பவுமே ஃபுல் பார்ம்ல இருப்போம்,.. அப்ப நீங்க?

நசரேயன் said...

ஆளுங்களை தயார் பண்ணனுமா ?

சின்னப் பையன் said...

உள்ளேன் ஐயா!

பெருசு said...

டிஜிட்டல் பிளகஸ் பேனர் , ரெண்டு மைலுக்கு டூப் லைட்டு,மைக் செட்டு
இதெல்லாம் இருந்தால்

நானும் உள்ளேன் அய்யா

இனியா said...

Please count me in. I will be there atleast for one day...

ILA (a) இளா said...

நசரேயன், வெளியூருல இருந்து மக்கள் வர்றாங்க. உருட்டுக்கட்டயோட, ஸ்டம்ப்ம் சேர்த்து எடுத்துகிட்டு வாங்க

vasu balaji said...

// நசரேயன் said...

ஆளுங்களை தயார் பண்ணனுமா ?//

இவரு அலப்பறை தாங்கலடா சாமி:)))

நசரேயன் said...

//ILA(@)இளா said...
நசரேயன், வெளியூருல இருந்து மக்கள் வர்றாங்க. உருட்டுக்கட்டயோட, ஸ்டம்ப்ம் சேர்த்து எடுத்துகிட்டு வாங்க//

சந்திப்பா? சண்டையா ?

நசரேயன் said...

//இவரு அலப்பறை தாங்கலடா

சாமி:)))//

அல்லலோ .. நாங்களும் ரவுடிதான்

vasu balaji said...

நசரேயன் said...
//ILA(@)இளா said...
நசரேயன், வெளியூருல இருந்து மக்கள் வர்றாங்க. உருட்டுக்கட்டயோட, ஸ்டம்ப்ம் சேர்த்து எடுத்துகிட்டு வாங்க//

சந்திப்பா? சண்டையா ?

இப்புடி கேட்டுப்புட்டு


நசரேயன் said...
//இவரு அலப்பறை தாங்கலடா

சாமி:)))//

அல்லலோ .. நாங்களும் ரவுடிதான்

இப்புடி உதாரு வேற. :))

sriram said...

அலோ அலோ மைக் டெஸ்டிங்..

நானும் பாஸ்டன்ல ஆஜர்..

அப்துல்லா அண்ணே.. எப்போ வர்றீங்க?
பாஸ்டன்ல என்னோட சில நாட்கள் தங்க முடியுமா?? கைப்பேசி எண் nsriram73@gmail.com க்கு அனுப்புங்க, நாளை போன் பண்றேன்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

எம்.எம்.அப்துல்லா said...

// ILA(@)இளா said...
வாய்யா வா! பல நிஜ முகத்தைப் பார்த்துட்டு இந்தியா போயி புலம்புவீங்க இல்லே.. அப்போ தெரியும். நாங்க எல்லாம் எப்பவுமே ஃபுல் பார்ம்ல இருப்போம்,.. அப்ப நீங்க?

//அடப்போண்ணே..

நாங்க சிங்கையில கோவியாரு, துபாயில குசும்பரு, சவூதியில தமிழ்பிரியன்னு பல ட்டெரரை ஏற்கனவே பாத்தவைய்ங்க இஃகிஃகி

தாராபுரத்தான் said...

சிறப்பா நடக்க நாங்களும் வாழ்த்தறோம்ங்க.

ராம்ஜி_யாஹூ said...

My perosnal feeling is instead of priyamani, vikaram, barathiraja you could have invited tamil writers poets, lecturers.

பழமைபேசி said...

//ராம்ஜி_யாஹூ said...
My perosnal feeling is instead of priyamani, vikaram, barathiraja you could have invited tamil writers poets, lecturers.
//

அதெப்படிங்க, இதுக மட்டும் உங்க கண்ணுக்குத் தெரியுது? இலக்கியவாதிகளும்தானே வர்றாங்க??

அவங்களை மட்டுமே அழைக்க நாங்க தயார்தான்... ஆனா, வருவதற்கு மக்கள்??

மேலும் திரைப்படம் என்பது தீண்டத்தகாதது அல்ல!!