6/02/2010

பெண் நடிகை?!

நெஞ்சம் என் மொழிக்காகவே துடிக்கிறது
மற்ற மொழிகளிலும் தாழ்வாய்
என்மொழியைச் சிலர் நினைத்திடலாம்
பொது மன்றங்களில் அது
பேசப்படாமலும் போகலாம்; ஆனால்
எனக்கு உயர்ந்தது என் தாய்மொழியே!
என் அவார் மொழியானது
நாளை உதிருமெனில், சாவு
என்னை இன்றே சூடிக்கொள்ளட்டும்!

ஏன்? ஏன்?? இவன் நல்லாத்தானே இருந்தான்... என்னாச்சு இவனுக்கு அப்படின்னுதானே நினைக்குறீங்க? நமக்கெல்லாம் இந்தளவுக்கு நெஞ்சுரம் வந்திடுமா என்ன?? நான் ஒரு கோழைப்பயல்ங்க.... பிரச்சினைன்னு வந்தா, எட்டு காததூரம் ஓடிடுவேன்... இஃகிஃகி!! சரி, அப்ப யார்தான் இதைச் சொன்னது??

தசுகிசுத்தான் நாட்டைச் சார்ந்த பாவலன் இரசூல் கம்செத்தோவ் சொன்னதுதாங்க இது. சரி, அவங்க நாட்டோட மக்கள் தொகை எவ்வளவு? வெறும் 80 இலட்சம்தாங்க! தசிக்ங்றது அவங்க மொழி!! எல்லாருமே, தூய தசிக் மொழியிலதான் பேசிப் புழங்குறாய்ங்களாம். ஆண்டுக்கு ஆண்டு, அம்மொழியைப் பேசுவோர் எண்ணிக்கை கூடுதாமாங்க. தமிழ்நாட்டுல??

இரசூல் கம்சொத்தோவ் போலப் பாடி புகழ் பெற முடியாதுதான். ஆனாலும், நமக்குன்னு ஒரு கிருதா இருக்கத்தான செய்யுது?


உங்களால மட்டும் எப்படி ஆங்கிலச் சொல் கலக்காமப் பேச முடியுது? அதுவும் அமெரிக்காவுல இருந்துட்டு, அமெரிக்காவுல இருக்கிற சகதமிழர்கள்கிட்ட எப்படிச் சரளமாத் தமிழ் பேசமுடியுதுன்னு அடிக்கடி மக்கள் கேக்குறாய்ங்கள்ல, நம்மையும் பார்த்து??

அவங்க அப்படிக் கேட்கும் போதெல்லாம், வட அமெரிக்க வலைஞர் தளபதி நசரேயன் சொன்னதுதாங்க நினைவுக்கு வரும். அவர் அப்படி என்னதான் சொன்னாரு??

“பழமையண்ணே, எதிர்ல நிக்கிறவன் தமிழன்னு தெரிஞ்சாப் போதும்.... நமக்கு சுட்டுப் போட்டாலும் தமிழைத் தவிர வேறெதும் வராதுண்ணே! நானும் மேலாளரா இருக்கேன்... வெள்ளையப்பனுக, வெள்ளையம்மாகூட ஆங்கிலத்தில பேசுறதோட சரி, மத்தபடி எல்லாம் தமிழ்தான்!”

தளபதி, இப்படி சொல்லிச் சொன்னதுல இருந்து நாமளும் அதேதானுங்க. கூடவே, வட அமெரிக்கத் தமிழச் சங்கப் பேரவைத் தலைவர் சொல்றதும் நினைவுக்கு வரும். அவர் அப்படி என்ன சொன்னாருன்னு கேக்குறீங்களா??

“நேரம் இல்லை; விபரம் தெரியாது; பேச்சு வராது அப்படின்னு நினைச்சா, எதுவொன்னும் செய்ய முடியாது. ஆனா, மனசு வெச்சிட்டா எதையும் செய்ய முடியும்!”, அப்படின்னு சொல்லிச் சொல்வாரு. இதுவும் எனக்குப் பிடிச்சிருக்கு; நிதர்சனமும் கூட!

ஆகக் கூடி, என்ன சொல்ல வர்றேன்னா, தமிழனைக் கண்டா தமிழ்லதான் பேசுறதுங்றதுல மனசு வெச்சா, தன்னால தமிழ் வந்து நாக்குல தாண்டவம் ஆடும்ங்றேன்... என்ன நாஞ்சொல்றது??

இப்படித்தான் பாருங்க, நம்ம பங்காளி ஒருத்தன் எடக்குமுடக்காவே பேசிட்டு இருந்தான். எங்க நாஞ்சொல்றதை எல்லாம் தமிழ்ல சொல்லு பாக்கலாம்னான். செர்றா பங்காளி, பேசு பாக்கலாம்னேன் நானு!

“யார்கோட கால்ல, இவ்வளவு சீரியசாப் பேசிட்டு இருக்கே?”

“அழைப்புல யார்றா அது, வெகு மும்முரமாப் பேசிட்டு இருக்கே?”

“நான் இப்ப பிசி...நீ கேக்குற கொசுடீன்க்கெல்லாம் ஏன்சர் குடுத்துட்டு இருக்க முடியாது!”

“நான் இப்ப ரொம்ப முசுவு... நீ கேக்குறதுக்கெல்லாம் மறுமொழி குடுத்துட்டு இருக்க முடியாது!”

இப்படியே சித்த நேரம் மாறி மாறிப் பேசிட்டு இருந்தோம். கடைசில, மிரண்டு போய், கை கூப்பி வணக்கம் சொல்லத் துவங்கிட்டான்.


அதே போல வார இதழ்கள்ல அடிக்கடி பார்க்கிற சில சொற்கள், எரிச்சல் வர்றா மாதிரி இருக்கும் பாருங்க...

பெண் நடிகையுடன் தொழில் அதிபர் இரகசியப் பயணம்னு எழுதுவான். ஏன்டா, என்னைக்குடா ஆண் நடிகைய எங்களுக்கு காண்பிக்கப் போறீங்க? எனக்கு வெவரந் தெரிஞ்ச நாள்ல இருந்து, பெண் நடிகை, பெண் தோழி, பெண் வேலைக்காரின்னு பெண்களாவே சொல்லிச் சொல்றீங்களே?


..ங்கொய்யால, நடிகை, தோழி, வேலைக்காரப் பெண்மணி அப்படின்னு எழுதினா, கிளுப்புகிளுப்புத் தட்டாதோ??

அதைவிடக் கொடுமை... நான் நாலஞ்சி மாசத்துக்கு முன்னாடி ஊருக்குப் போயிருந்தப்ப பார்த்தனுங்க.... முதல் மாதிரி, பொடி பொட்டுக எல்லாம் பாவாடை, தாவணி, உள்ளூர்த் தையல்காரர் தைச்ச சட்டை இதெல்லாம் உடுக்கறது கிடையாது... எல்லாம், திருப்பூர் பின்னல்ச் சட்டைதாம் போங்க.... சரி, காலமாற்றம்... நாகரிக மேம்பாடு... இருந்துட்டுப் போகட்டும்....

Love is sweet... Look at here... இப்படித்தான் சொல்லுது அதுல இருக்குற வாசகம்... ஏப்பா, என்னைக் கவனி, காதல் இனிது... பொன்னேந்தல்... இப்படியான வாசகங்கள் திருப்பூர் அச்சுல ஏறாதா?? என்னமோ போங்க...

என்னமோ சொல்ல வந்துட்டு... என்னமோ பேசிட்டு இருக்கம்பாருங்க... மக்கா, இன்னும் சரியா ஒரு மாதந்தான் இருக்கு... நம்ம வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையோட தமிழ் விழாவுக்கு.... கனெக்டிகெட்ல நடக்குது இந்த ஆண்டு.... எல்லாரும் வரப் பாருங்க...

விழாவுக்கு இன்னமும் பதியாதவங்க, உடனே பேரவையோட இணைய தளத்துல போயிப் பதிஞ்சுடுங்க... முக்கியமா, போக்குவரத்து, விடுதி வசதிகளை உடனடியாச் செய்யப் பாருங்க... சரியா?


செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!

14 comments:

vasu balaji said...

/கம்செத்தோவ்/

தாய்மொழி, தமிழ்,கம்செத்தோவ் என்னமோல்லாம் கவனம் வருதுங்க..அவ்வ்வ்

/வெள்ளையப்பனுக, வெள்ளையம்மாகூட ஆங்கிலத்தில பேசுறதோட சரி, மத்தபடி எல்லாம் தமிழ்தான்!”//

தளபதிங்களா! அப்ப அவிங்களையும் போட்டுத் தள்ளுறாரா:)). அண்ணாச்சிக்கு மனசார ஒரு கும்பிடு.

/இப்படியான வாசகங்கள் திருப்பூர் அச்சுல ஏறாதா?? என்னமோ போங்க.../

ஏன் இந்த கொலவெறி. இப்புடி எழுதினாலே எழுத்துக்கூட்டி படிச்சிட்டு இவனுங்க பண்ற ரவுசு தாங்கல. பொண்டு புள்ளைக வெளிய வாசல்ல போகமுடியல? ஏன் அப்புடி போடணும்னு ஒரு கட்சி அலையுது. இதில தமிழ்ல வேற போட்டா டீக்கடையில பேப்பர் படிக்கிறவன் இந்தாம்மா சித்த நில்லுன்னு தொரத்திக்கிட்டு போவானுங்களே.

பொன்னேந்தல் எதுக்கு?

இந்த வெறுப்பேத்துற வேலதானே வேணாம். அவ்வ்வ்வ்வ்வ்வ். அங்க உக்காந்து உருப்படியா என்னல்லாமோ பண்ணுறீங்க. நாங்க பாருங்க வேல வெட்டியில்லாம என்னமோ பண்ணிட்டிருக்கோம். :((

எட்வின் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள் அன்பரே:) ஆங்கிலத்தில பேசுறத பெருமையா நெனச்சுக்கிறாங்க பலர். என்ன பண்றது :(

ஜோதிஜி said...

அந்த வெள்ளையம்மா வெள்ளைச்சாமியை நானும் பார்க்கனும்போலிருக்கு.

அத ஏன் கேட்குறீங்க? நன்றின்னு சொன்னாக்கூட மேலும் கீழும் பாக்றாங்க பய புள்ளய்ங்க...

சூப்பர் சிங்கர் பாருங்கண்ணே. அந்தம்மாக்கள் தீர்ப்பு சொல்லுவாங்க பாருங்க. கல்வெட்டு. என்ன ஒன்று தமிழுக்குத்தான் காலராவெட்டு.

நீங்களும் விடாம தலைகீழா தண்ணி குடிச்சு தான் பாக்குறீங்க. ரொம்ப புதுமையண்ணே நீங்க.........

குடுகுடுப்பை said...

வெள்ளையப்பனுக, வெள்ளையம்மாகூட ஆங்கிலத்தில பேசுறதோட சரி, மத்தபடி எல்லாம் தமிழ்தான்//
அப்பட்டமான நிறவெறியோட எழுதியிருக்கிறீர்கள் என்று என்னால் குயுக்தியுடன் மாற்றமுடியும்

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
வெள்ளையப்பனுக, வெள்ளையம்மாகூட ஆங்கிலத்தில பேசுறதோட சரி, மத்தபடி எல்லாம் தமிழ்தான்//
அப்பட்டமான நிறவெறியோட எழுதியிருக்கிறீர்கள் என்று என்னால் குயுக்தியுடன் மாற்றமுடியும்

June 3, 2010 1:35 AM//

அரிப்பே எடுக்கலைன்னு சொன்னீங்களே சித்தப்பா??

வன்பாக்கம் விஜயராகவன் said...

பெண் நடிகையா???? ஆண் நடிகைகூட இருக்காங்களா !!!!!

சின்னப்பயல் said...

//ஆகக் கூடி, என்ன சொல்ல வர்றேன்னா, தமிழனைக் கண்டா தமிழ்லதான் பேசுறதுங்றதுல மனசு வெச்சா, தன்னால தமிழ் வந்து நாக்குல தாண்டவம் ஆடும்ங்றேன்... என்ன நாஞ்சொல்றது??//

ரொம்ப சரி அண்ணா.. :-)

வன்பாக்கம் விஜயராகவன் said...

“தசுகிசுத்தான் நாட்டைச் சார்ந்த பாவலன் இரசூல் கம்செத்தோவ் சொன்னதுதாங்க இது. சரி, அவங்க நாட்டோட மக்கள் தொகை எவ்வளவு? வெறும் 80 இலட்சம்தாங்க!”

பழமைபேசி

ரசூல் கம்சடாவின் தாய்மொழியான அவாரை பேசுபவர்கள் எண்ணிக்கை அதிகபட்சம் 5 லக்ஷம்.

http://www.gamzatov.ru/bioeng.html

ரசூல் இருக்கும் டாகெஸ்தானின் மக்கள் தொகை 20 லக்ஷம். தற்போது டாகெஸ்தானில் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் அட்டகாசம் அதிகமாக உள்ளது - உபயம் செச்னியா.

இந்த பிரதேசங்களில் நூற்றுக் கணக்கான இனக்குழுக்களும், மொழிகளும் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் அவார்.http://www.ethnologue.com/show_language.asp?code=ava

http://en.wikipedia.org/wiki/Avar_language

விஜயராகவன்

பழமைபேசி said...

விஜயராகவன் ஐயா,

வாங்க, வணக்கம்; தங்களது மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றிங்க. நான் இரவு வந்து உங்க சுட்டிகளை எல்லாம் வாசிக்கிறேன்.... ஆவலுடன் இருக்கிறேன். மிக்க நன்றி!!

குறும்பன் said...

ஆளு தமிழ்ன்னு தெரிஞ்சா என்னால ஆங்கிலத்தில பேச முடியாது, தமிழ் தான். தென்னிந்தியரை பார்த்தாலும் தமிழ் தான் பேச தோனுது. தமிழில் பேசிட்டு அவங்களுக்கு புரியாதுன்னு புரிஞ்சப்புறம் ஆங்கிலத்துக்கு மாறுவேன்.

குறும்பன் said...

/Look at here//

இது எங்க இருக்கும் தெரியுங்கலா?

Mahesh said...

//கனெக்டிகெட்// இணைத்துவெட்டு !!

நானும் இனி உம்மோட தமிழ்லயே அளவளாவுறேன். பார்ப்போம்... உங்களுக்காச்சு... எனக்காச்சு !!!

vinthaimanithan said...

மறத்தமிழன் வாழ்க!

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

பாலான்ணே, வணக்கம்; எதோ நம்மால ஆனது!

@@எட்வின்

நன்றிங்க எட்வின்!

@@ஜோதிஜி

நன்றிங்க தேவியர் இல்லம்!!

@@குடுகுடுப்பை

குயுக்தியை விளக்கி அண்ணன் குடுகுடுப்பையார் இடுகை இடவும்!

@@சின்னப்பயல்

நன்றிங்க!

@@குறும்பன்

நன்றியோ நன்றிங்க!

@@Mahesh

மகேசு அண்ணே, வாங்க...பாத்துறலாம்!!

@@விந்தைமனிதன்

வாழ்த்துக்கு நன்றிங்க!!