4/04/2010

அறச்சீற்றம்!

பிற்பகல் மணி நான்கு அல்லது நாலரை இருக்கும். மனம் எதிலுமே நாட்டம் கொள்ளவில்லை. ஏற்காட்டுக் குளிரை அனுபவிக்க ஆசை ஆசையாய்க் கூட்டி வந்த ஆசை நாயகியை, புறப்பாட்டுச் சமிக்கை ஊதிய பிறகும் இரயில நிலையத்தில் காணாத கட்சித் தலைவனைப் போல இருப்பற்று அலைந்து கொண்டிருந்தது மனம்.

தொலைக்காட்சியில் இரஞ்சிதாக் காட்சிகள் ஓடியும், குழந்தைகள் அருகிலே இருப்பது கண்டு காணக் கொடுத்து வைக்க முடியாமையை எண்ணிக் குமுறுவதைப் போல தேகத்துக்குள் ஒரு ஊமைக் குமுறலானது, வெளியே தெரியாதபடி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தது.


ஒரு இடத்தில் அமர்ந்து பார்ப்போமென இருக்கையில் இருத்திப் பார்த்ததுதான் தாமதம், தவழ்ந்து வந்து கரையை நெருங்கியதும் சீறும் கடலலையைப் போல, வலியெனும் மின்னலைகள் மண்டையின் மையப் பகுதியில் இருந்து வெளிப்புறமாக நகர்ந்து இடித்ததில், கண்களும் கண்களை அண்டிய பகுதியும் தாக்குண்டது.

இது வேலைக்காவாது என நினைத்த மாத்திரத்தில், முன் முற்றத்தில் உலாவுதல்; உலாவும் பொருட்டு இரண்டு அடிகள் கூட வைத்திருக்கவில்லை கழல்கள். புதுடெல்லி இராஸ்டிரபதி பவனில் இருந்து, சென்னை சாஸ்திரி பவனுக்கு வந்த கட்டளையைப் போல, அவ்வளவொரு துரித கதியில் அவசரக் கட்டளை எப்படி நிகழ்ந்தது என்றே தெரியவில்லை.

முன்முற்றத்தில் இருந்த மானுடல், மின்னல் வேகத்தில் எட்ட இருக்கும் குளியலறைக்கு இடம் பெயர்ந்தது. அது எப்படி சாத்தியமானது? உடலில் இருக்கும் மூலக்கூறுகளை எல்லாம் மின்னணுக்களாக மாற்றி, அதைச் செல்ல வேண்டிய இடத்திற்கு மின்னூடகத்தின் வழியாகச் செலுத்தி, அடைய வேண்டிய இடத்தில் வைத்து மீண்டும் மறு உருவாக்கம் செய்து இருப்பார்களோ? ஆம், மானுடல் குளியலறைக்கு எப்படிச் சென்றதென்றே தெரியவில்லை.

கட்சியில் தலைவனின் தலைமைக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் கிராம நகரத் தளபதிகள் எல்லாம் கிளம்பி, தலைவனும் தலைமையும் இருக்கும் தலைநகரத்தை ஆட்கொள்வதைப் போல, உடலில் திசுக்கள் இருக்கும் எல்லாவிடத்தும் வெளிப்படும் சக்தியானது, குறிப்பிட்ட அந்த இடத்தின் திசுக்களுக்கு முன்னேறிச் சென்று ஒன்று கூடியது.

கால்கள் இரண்டும் மடங்கியபடி, கைகள் இரண்டும் தரையில் முன்னூன்றியபடி! கால்களுக்கும் கைகளுக்கும் இடையில் தேகத்தின் மையப்பகுதி தொங்கிக் கொண்டு இருக்கிறது நுணலைப் போல.

ஆத்மாவையும் மீறிய ஒருவன் இந்த உடலில் இருப்பானோ? ஒருவேளை அவன்தான், புறநானூற்றில் சங்கொலி எழுப்பித் தலைவன் படைவீரர்களுக்குச் சமிக்கை அளிப்பதைப் போல, Ready, Set, Goவென சமிக்கையை அளித்திருப்பானோ?

உடலெங்கும் வியாபித்திருக்கும் திசுக்களில் இருந்து வந்து குழுமிய சக்தியனைத்தும், அக்குறிப்பிட்ட இடத்தின் திசுக்களை இறுக்கிச் சீறியது. ஏ அப்பா? என்ன வலுவான சக்தியது?? பூமா தேவியின் ஈர்ப்பு சக்தியையும் மீறிச் செலுத்துகிற சக்தியல்லவா அது?! தன் வீரியம் அனைத்தையும் ஒருங்கே வெளியிட்டு வென்று காட்டியது.

ஒரே ஒரு முறைதான், ‘உவ்வே!’. தேகம் விடுதலை அடைந்து, பரிபூர்ண விடுதலைக் காற்றை அனுபவிக்கத் துவங்கியது. கட்சி மாநாட்டுக்குக் குழுமிய தொண்டர் எல்லாம், தத்தம் தலைவனின் உருட்டு மிரட்டுச் சீற்றத்தைக் கண்டபின் தத்தம் ஊர்களுக்குத் திரும்புவதைப் போல, உணர்வானது உடலின் எல்லாப் பாகங்களுக்கும் விரவிப் படர்ந்து கொண்டிருந்தது.

ஆகா... ஆகா... விடுதலை, விடுதலை, விடுதலை! மகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சி!! ஆனந்தப் பள்ளு பாடியது மானுடல்!!! சக்தியைத் திரட்டிய திசுக்களெல்லாம் ஓய்வு கோரியிருக்க வேண்டும். நித்திரை தேவன், மானுடலை சயனத்தில் ஆழ்த்த, அதன் பொருட்டுக் கண்கள் சொருக, மானுடம் நிசப்தம் கூடிய அமைதியின் ஆழ்கடலில் இன்ப இலயிப்பினூடாக!

19 comments:

Anonymous said...

udalnilai ippo eppadi irukku....

துபாய் ராஜா said...

//ஏற்காட்டுக் குளிரை அனுபவிக்கப் போவதற்கு ஆசை ஆசையாய்க் கூட்டி வந்த ஆசை நாயகியை, புறப்பாட்டுச் சமிக்கை ஊதிய பிறகும் இரயில நிலையத்தில் காணாத கட்சித் தலைவனைப் போல இருப்பற்று அலைந்து கொண்டிருந்தது மனம்.//

//தொலைக்காட்சியில் இரஞ்சிதாக் காட்சிகள் ஓடியும், குழந்தைகள் அருகிலே இருப்பது கண்டு காணக் கொடுத்து வைக்க முடியாமையை எண்ணிக் குமுறுவதைப் போல//

//புதுடெல்லி இராஸ்டிரபதி பவனில் இருந்து, சென்னை சாஸ்திரி பவனுக்கு வந்த கட்டளையைப் போல, அவ்வளவொரு துரித கதியில் அவசரக் கட்டளை எப்படி நிகழ்ந்தது //

//கட்சியில் தலைவனின் தலைமைக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் கிராம நகரத் தளபதிகள் எல்லாம் கிளம்பி, தலைவனும் தலைமையும் இருக்கும் தலைநகரத்தை ஆட்கொள்வதைப் போல,//

//கட்சி மாநாட்டுக்குக் குழுமிய தொண்டர் எல்லாம், தத்தம் தலைவனின் உருட்டு மிரட்டுச் சீற்றத்தைக் கண்டபின் தத்தம் ஊர்களுக்குத் திரும்புவதைப் போல,//

புதுமையான, பொருத்தமான வர்ணனைகள் அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கால்கள் இரண்டும் மடங்கியபடி, கைகள் இரண்டும் தரையில் முன்னூன்றியபடி! கால்களுக்கும் கைகளுக்கும் இடையில் தேகத்தின் மையப்பகுதி தொங்கிக் கொண்டு இருக்கிறது நுணலைப் போல.//

Super
:-))))

பெருசு said...

இஃஇஃஇஃஇஃஇஃஇஃஇஃஇஃஇஃஇஃஇஃஇஃஇஃஇஃஇஃஇஃஇஃஇஃகிகிகிகிகி


ஒரே ஒரே குவளை மிகுதியால் விளைந்ததோ
இந்த அறச்சீற்றம்.

vasu balaji said...

இது ‘காலு’க்கு மிஞ்சின ‘அரை’ச் சீற்றம் மாதிரியில்ல இருக்கு=))

ஈரோடு கதிர் said...

வர்ணனையும் சீறி வருகிறது

பிரபாகர் said...

ஒவ்வொரு பத்தியிலும் உதாரணங்களுடன் வர்ணித்ததை மிகவும் ரசித்தேன்... ஆஹா! என்னமாய் ஒரு வர்ணனைச் சீற்றம்...

ரொம்ப ரொம்ப நல்லாருக்குங்கண்ணே!

பிரபாகர்...

பழமைபேசி said...

//Anonymous said...
udalnilai ippo eppadi irukku....//

குடுகுடுப்பையண்ணே, வணக்கம்! பூந்தாது ஒவ்வாமை(pollen allergy)... இப்ப ந்ல்லா இருக்கு...

@@துபாய் ராஜா
@@T.V.ராதாகிருஷ்ணன்
@@ ஈரோடு கதிர்

நன்றிங்க!!!

@@வானம்பாடிகள்
@@பெருசு

அண்ணனுக்கும் தம்பிக்கும் சொல்லிகிடுறேன்... எனக்கு அந்தப் பழக்கம் கிடையாதுங்கோ.... Pollen Allergy, பூந்தாது ஒவ்வாமையினால உடல் நலம் சரியில்லை.... இப்ப மாத்திரை சாப்பிட்டுப் பரவாயில்லை!!!

பழமைபேசி said...

@@பிரபாகர்

வாங்க பிரபாகர்; நன்றி!!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

எந்த விசயத்தையும்.. மாறுபட்ட விதத்தில் எழுதலாம் என்பதைக் காட்டும் இடுகை. விரைவில் உடல் நலம் தேறிவரவும்.

ராஜ நடராஜன் said...

எழுத்து நடை வித்தியாசமாக இருக்கிறதே!பன்முகப் புலவரே.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

நல்ல வர்ணனை!! :)))

//ஆத்மாவையும் மீறிய ஒருவன் இந்த உடலில் இருப்பானோ?//

எல்லாம் reflex.. ஆன்மாவே தேவையில்லை!! :)

குமார் said...

வாந்திக்கு ஒரு அலப்பறையா?

Anonymous said...

இப்படி இலக்கியமா எழுதிக்கூட சிரிக்க வைக்கமுடியுமா :)

Unknown said...

uvamai ellaam kalakkureenga..

intha arach cheetram, kaal adiththathaal vanthatha?

அப்பாவி முரு said...

கழிவறையில் இருக்கும் போது.,

கணநேரத்தில் தோன்றிய எண்ணமிதுவோ?

க.பாலாசி said...

ஆகமொத்தம் ஒரு சிறு அரசியலை உடலுக்குள்ள வச்சிருக்கீங்க... இப்பயாவது தலைவர்களும் தொண்டர்களும் சரியா வேலைசெய்யுறாங்களா?

பழமைபேசி said...

@@ ச.செந்தில்வேலன் நன்றிங்க தம்பி!
@@ ராஜ நடராஜன் அண்ணா, புலவரா?அவ்வ்வ்வ்...
@@ எல் போர்ட்.. பீ சீரியஸ்.. நன்றிங்க!
@@குமார் இஃகிஃகி!
@@சின்ன அம்மிணி நன்றிங்க, எதோ நமக்குத் தெரிஞ்சது!
@@ முகிலன் நன்றிங்க முகிலன்!
@@அப்பாவி முரு ஒரு சிந்தனைதான்!இஃகி!!
@@க.பாலாசி அதேதானுங்க!

INDIA 2121 said...

NALLA PATHIVU
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAAL PAIYYAN