4/05/2010

யாக்கை!

யாங்கெங்கிலும்
யார் யாருக்கோ
யார் யாரையோ
யாதோவொன்றால்
யாத்திருக்கிறது!

அண்ட வெளியில்
உமக்கும்
யார் யாரையோ
யாண்டெங்கிருப்பினும்
யாதோவொன்றால்
யாமென
யாத்திருக்கும்!!

நின்னையும்
யார் யாருக்கோ
யாதெனக் கேளாது
உம்மிலும் யாமளமாய்
யாத்தேயிருக்கும்
தொடர்ந்து செல்
யாங்ஙனமென வினவாது
யவனமே உவணமென!!!

24 comments:

தாராபுரத்தான் said...

செம்மொழி மாநாட்டுக்கு ஒத்திகையா? சபாஷ்..

Paleo God said...

அருமைங்க!.


--
(படிச்சிட்டு கீழ் வாய் திறந்தே கிடக்குது! படித்த விவரங்களாலா?, வார்த்தைகளாலா?? தெரியல!)
:)

vasu balaji said...

யா! யா! :))

ஈரோடு கதிர் said...

யானுங்க மாப்பு...

யிதுல யெதாவது யுள் குத்து யிருக்குங்ளா!!?

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
யா! யா! :))//

புரியலங்கறதுக்கு இப்டியொரு பில்டப்பா..:-) !!!

பிரபாகர் said...

யாவும் அருமை...

பிரபாகர்...

பழமைபேசி said...

//க.பாலாசி said...
//வானம்பாடிகள் said...
யா! யா! :))//

புரியலங்கறதுக்கு இப்டியொரு பில்டப்பா..:-) !!!//

ஆசிரியரே, “யா”ங்றது தமிழ்ச் சொல் அய்யா!

யா == ஆம்

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

சிறப்பான சொல்லாடல்.. சில வார்த்தைகளை அகராதியில் பார்த்துக் கொண்டேன். என்னைப் போன்றவர்களுக்காக சில சொற்களின் பொருள்..

யாத்தல் - பிணைத்தல், கட்டுதல்
யாண்டும் - எப்போதும், எல்லாயிடத்திலும்
யாமளம் - காளியைப் போற்றும் வேதம்
யாங்ஙணம் - எங்கு, எப்படி
யவனம் - ஒரு நாடு
உவணம் - உயர்ந்தது.

முந்தைய இடுகையில்...

//மற்றும் விழாவிலே இடம் பெறப் போகும் இலக்கிய வினாடி வினா மற்றும் கவியரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், எனது மின்னஞ்சல் வழியாகத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்!//

இப்படி எல்லாம் இடுகை போட்டீங்கன்னா.. யாராவது இலக்கிய வினாடி வினாவிற்கு வருவாங்க? எனக்கு இப்பவே கண்ணக்கட்டுதே.. அவ்வ்வ்வ்வ் :)

ஆனா.. தமிழ் சரியாகத் தெரியாதது வெட்கப்பட வேண்டியதே :(

பழமைபேசி said...

@@தாராபுரத்தான் நன்றிங்க
@@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║

நன்றிங்க சங்கர்

@@வானம்பாடிகள் நன்றிங்க!

@@ஈரோடு கதிர் இல்லங்க மாப்பு; எதார்த்தம்தானுங்களே சொல்லி இருக்குறது?!

@@க.பாலாசி நன்றி!

@@பிரபாகர் நன்றிங்க பிரபா!

@@ச.செந்தில்வேலன்

தம்பி, பின்னிப் படல் எடுத்துட்டீங்க...இஃகிஃகி!!

அரசூரான் said...

உம் இடுக்கை-யில் ஒரு யாக்கை
தணிந்தது எம் தமிழ் வேட்கை

(பழமை நீர் புலவர்... வினாடி வினாவில் ஆயிரம் பொற்காசுகள் உமக்கே)

கிரி said...

உம்மைப் பிடித்து ஓங்கி சாத்த வேண்டும் போல இருக்குய்யா! அவ்வளவு அட்டகாசமாய் எழுதியிருகீர்!

துபாய் ராஜா said...

பழமை அண்ணா, இந்த செய்யுளுக்கு கருத்துரையும் போட்டீங்கன்னா இன்னும் நிறைய பேருக்கு புரியும்.

Unknown said...

எல்லாவிடத்திலும்
யார் யாருக்கோ
யார் யாரையோ
ஏதோவொன்றால்
பிடித்திருக்கிறது

அண்ட வெளியில்
உமக்கும்
யார் யாரையோ
எங்கே இருப்பினும்
ஏதோவொன்றால்
உறவென்று
இணைத்திருக்கும்.

உன்னையும்
யார் யாருக்கோ
எதுவென அறியாமல்
உன்னிலும் சிறப்பாய்
பிடித்தே இருக்கும்
தொடர்ந்து செல்
எப்படி எனக் கேட்காமல்
எழிலே உயர்நததென!!!

துபாய் ராஜாவுக்காக,
ச.செந்தில்வேலன் வாழ்க

சிறிது பொருந்துகிறதுதான் என்றாலும் பழமை ஐயா.
பிழை திருத்துங்கள்

பழமைபேசி said...

@@சுல்தான்

100%

வணக்கமும் வாழ்த்துகளும் நன்றியும்!

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

அருமை!! பொருள் கூறிப் புரிய வைத்ததற்காக செந்தில்வேலனுக்கும் சுல்தானுக்கும் நன்றிகள்!!

Thekkikattan|தெகா said...

பழம எப்பூடிங்க இப்பூடியெல்லாம். அசத்திப்புட்டீங்க போங்க.

பழமைபேசி said...

@@அரசூரான்

தமிழ் மேலோங்கி வருதே...நல்லது, நல்லது!

@@கிரி காதல் பிசாசு மாதிரிங்களா...ச்சரி ச்சரி...

@@T.V.ராதாகிருஷ்ணன்

நன்றிங்க ஐயா!

@@துபாய் ராஜா

சுல்தான் ஐயா, அடிச்சித் துவச்சி அலசிக் காயப் போட்டு இருக்காங்க பாருங்க...

@@எல் போர்ட்.. பீ சீரியஸ்.. நன்றிங்க!

@@Thekkikattan|தெகா தலைவருக குடுக்குற ஊக்கந்தான் காரணம்!

naanjil said...

ச.செந்தில்வேலன் வாழ்க

Anonymous said...

இடம் தெரியாமல் நுழைந்திட்டேன் போல.... நல்ல வேளை நண்பர் பல வார்த்தைகளுக்கு பொருள் சொல்லியிருந்தார் புரிந்துக் கொண்டேன்....

ராஜ நடராஜன் said...

இரண்டாம் முறை படித்தும் பொருள் உணர முடியவில்லை.

கபீஷ் said...

உடம்பு சரியாயிடுச்சா? தப்பாப் போச்சே.
சுல்தான் அண்ணா பொருள் சொல்லாட்டி எதுவும் புரிஞ்சிருக்காது.

ராஜ்நட் அண்ணா, நீங்க இந்த பக்கம் வரதுக்கான எலிபிஜிட்டி அடைய நாளாகும் போல இருக்கே

தாராபுரத்தான் said...

புரிஞ்சுகிட்டேன்ங்க.

INDIA 2121 said...

வித்யாசமான பதிவு
visit
www.vaalpaiyyan.blogspot.com

அன்புடன் நான் said...

அண்ட வெளியில்
உமக்கும்
யார் யாரையோ
எங்கே இருப்பினும்
ஏதோவொன்றால்
உறவென்று
இணைத்திருக்கும்.//

நல்லாயிருக்குங்க.