4/06/2010

நயமான மொக்கை!

சண்டமாருதம்

நீர் பெரிய சண்டமாருதமோ?
அடிச்சிக் காலி செய்திடுவீரோ??
இரைச்சல் இட்டவனைப்
பெருஞ்சத்தம் எதுவுமின்றி
குண்டுக் கட்டாய்க் கட்டி
தூக்கிக் கொண்டு போய்
இருத்தினான்
மாதா கோயிலடியில!
மறுகணமே
அவனிருந்த வீடு பறக்க
வளைந்தடித்தது
ஏசப்படாத
சண்டமாருதம்!!

சுயமுரண்

நயமான மொக்கை
மழுங்கிய கூர்வாள்
தொலைந்த கண்டுபிடிப்பு
உண்மையான பொய்
பெரியார் பூசனை
நீண்ட சிறுகதை
உண்மைக் கதை
ஏழை அமைச்சர்
கருத்தொற்றுமைமிகு பதிவர்கள்
சிங்காரச் சென்னை?!

(மூலம்: மின்தமிழ்க் குழுமம்)

21 comments:

பெருசு said...

இப்பப் போயி பாருங்க

குளுகுளு கோவை
அழகு ஊட்டி
தெளிந்த பவானி

கருத்தொற்றுமைமிகு பதிவர்கள்!
இது உண்மையான பொய்.
ஒரு நீண்ட சிறுகதை
ஆனால் தொலைந்த கண்டுபிடிப்பு
நீங்கள் ஒரு மழுங்கிய கூர்வாள்
உங்களுக்குத் தேவை பெரியார் பூசனை.
நீர் பெரிய
சண்டமாருதமோ?
அடிச்சிக் காலி
செய்திடுவீரோ??

இஃகி இஃகி அஃகா அக்ஃஃகா

இராதாகிருஷ்ணன் said...

சிங்காரச் சென்னை! :)

குறும்பன் said...

//இரைச்சல் இட்டவனைப்
பெருஞ்சத்தம் எதுவுமின்றி//

//மறுகணமே
அவனிருந்த வீடு பறக்க
வளைந்தடித்தது
ஏசப்படாத
சண்டமாருதம்!!//

//நீண்ட சிறுகதை
உண்மைக் கதை//

ஏதும் பொடி வச்சு எழுதலயே? எனக்கென்னமோ பொடி வச்சு எழுதுன மாதிரிதான் தோனுது. மூலம் உங்களுது இல்லைன்னாலும் சொல்ல வர கருத்து எனக்கு ஒரு மாதிரி புரியுது. பல நாளா பதிவுகளை படிக்கறோம்ல...

பழமைபேசி said...

அடச் சே.... வர வர, நாம என்ன எழுதினாலும் அது வில்லங்கத்துலயே போய் முடியுது... அவ்வ்.....

முதல்: மாருதம் அப்படின்னா காற்று. சண்டமாருதம் அப்படின்னா, வலுக்கூடிய, கொடிய காற்று.... அதன் பொருளும், பயன்பாடும் தொனிக்கிற விதத்துல எழுதினது... சொல்லைப் புழக்கத்துல விடுற முயற்சி அது.

இரண்டாவது: உள்ளபடியே அது அங்க oxymoronங்ற தலைப்புல வெளியானதுங்க....

Funny Oxymoron

தாராபுரத்தான் said...

//கருத்தொற்றுமைமிகு பதிவர்கள்//

Unknown said...

ரெண்டு கவிதையும் நல்லாருக்கு...

ஈரோடு கதிர் said...

//பழமைபேசி said...

அடச் சே.... வர வர, நாம என்ன எழுதினாலும் அது வில்லங்கத்துலயே போய் முடியுது... அவ்வ்.....//

க்க்கும்... விளக்கம் வேற குடுக்கறீங்களோ!!!!

பத்மா said...

நயமான மொக்கை உங்க category யோ ?
any ways nice

தென்னவன். said...

என்னங்க சிங்காரச் சென்னைய இங்க போட்டுடிங்க

vasu balaji said...

அப்பச்சி கனவுல வந்து நெம்ப நாளாகிபோச்சா. அதான் எதச் சொன்னாலும் வேற மாதர தோணுதோ! எதுக்கும் இன்னைக்கு தூங்கிப் பாருங்க:))

ஹரிணி அம்மா said...

கருத்தொற்றுமைமிகு பதிவர்கள்!
இது உண்மையான பொய்.//

கருத்தொருமித்தல் மிகக்கடினம்!!

எல் கே said...

ulkutthu iruko :0

வால்பையன் said...

சுயமுரண் அருமை!

க.பாலாசி said...

//சண்டமாருதம்//

இதுக்குள்ளதான் அந்த சம்திங்....

Unknown said...

//.. இதுக்குள்ளதான் அந்த சம்திங்....//

அண்ணன் விளக்கம் சொன்னாலும் நம்ப மாட்டிங்குரிங்க..??!!

பழமைபேசி said...

@@பெருசு

வாங்க தம்பி... இப்படி நெளுவு எடுக்குறீங்களே? அவ்வ்....

@@இராதாகிருஷ்ணன் இஃகி!

@@குறும்பன் நல்லாத்தான் வெட்டி ஒட்டி... அவ்வ்வ்....

@@தாராபுரத்தான் அண்ணன் என்ன சொல்ல வர்றாரு??

@@முகிலன் தம்பி அப்பீட்டு!

@@ஈரோடு கதிர் வேற என்னதாஞ் செய்யுறதுங்க மாப்பு?

@@padma வாழப்பழத்துல ஊசி ஏத்திட்டீங்களே?

@@தென்னவன் வாங்க புதுமாப்புளை... நான் ஒரு தகவல்த் தூதுவன்... Messenger மட்டுமே... இஃகி! போட்டது யாரோ!!

@@வானம்பாடிகள் ஆமாங்க பாலாண்ணே!

@@ஹரிணி அம்மா நீங்க சொல்லுறீங்க... நாங்க கேட்டுக்கிறோம்...நன்றிங்க!

@@LK இருக்கோவா? இல்லை, இல்லை!!

@@வால்பையன் அப்பாட...நன்றிங்க தலை!

@@க.பாலாசி ஆசிரியரே இப்படிச் சொல்லலாமா??

@@ திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்) நீங்களே சொல்லுங்க தம்பி... ஆனா நீங்க தப்பிக்க முடியாது பாருங்க... தட்டச்சட்டி, படங்கள் எல்லாம் என்ன ஆச்சு??

மரா said...

you remind me a famous saying "man is good, men are bad" by bernadashah! :)

Unknown said...

//.. தட்டச்சட்டி, படங்கள் எல்லாம் என்ன ஆச்சு?? ..//
படங்கள் வந்துருக்குமுங்க..

தட்டக்கூட இப்போ 100 ரூபாய்ங்கலாமா. எங்க அப்பா கட்டுத்தார மண்ணப் பூரா குப்பமேட்டுல கொட்டுவாரு, அதனால ஆறு மாசத்துக்கு ஒன்னு வாங்க முடியாதுன்னு இரும்புசட்டி வாங்கிட்டாங்களாம்.. இஃகி.. இஃகி..

Mahesh said...

//கருத்தொற்றுமைமிகு பதிவர்கள்//

ஏன் அப்பிடி இருக்கணும்னு எதிர்பார்க்கறீங்க? முரண் இல்லாம முன்னேற்றம் இல்லையே !!

வில்லன் said...

"ஹொவ் டு டிரைவ் மாட்டுவண்டி"


"அண்ணாச்சி" அந்த வீடியோல நிக்குற டிப் டாப் ஆசாமி யாரு அண்ணாச்சி...... உங்கள போல இருக்கே நீங்க தான?????????????

வில்லன் said...

/ பெருசு said...

இப்பப் போயி பாருங்க

குளுகுளு கோவை
அழகு ஊட்டி
தெளிந்த பவானி//

யோவ் "பெருசு" என்ன நீறு நம்ம அப்பச்சி மாதிரி தத்துவம் எல்லாம் பேசுறீரு....
புலிய பாத்து பூனை சூடு போட்டுகிட்ட கதை ஆய்டாம????? பாத்து......
சூடு போட்டு கோடு போட்டாலும் பூனை பூனைதான் புலி புலிதான்!!!!!!!