10/22/2009

அமெரிக்காவில் இப்படியும் வில்லங்கம்!

நாம எப்பவுமே இராத்திரிச் சோறு உண்டதுக்கு அப்புறம் வலையுல மேயுறதும், இடுகை இடுறதும் ஒரு வாடிக்கை. ஆனாப் பாருங்க, நேற்றைக்கு அதுக்கு ஒலை வெச்சிட்டான் கூட வேலை பாக்குற பொட்டி தட்டி; அவம் பேரு Quint! என்னாச்சுன்னுதான கேக்குறீங்க? கதைய மேல படீங்க.

Norfork, VAல வேலை எல்லாம் முடிச்சுட்டு, Virginia Beachல இருக்கிற விடுதிக்கு வந்து, கைகால் முகமெல்லாம் கழுவி, உடுப்பு மாத்திட்டு வெளியில சாப்பிடப் போறது வழக்கம். அதே போல வந்து, மாலைக் கிரியை எல்லாம் முடிச்சுட்டு முன்னாடி முற்றத்துக்கு வந்து, சித்த நேரம் ஊர்ப்பழம பேசிட்டு வெளில கிளம்பவும், கூட இருந்த Quintக்கு அவனோட அம்மணிகிட்ட இருந்து அலைபேசில அழைப்பு.

என்னமோ பேசுறாங்க, பேசுறாங்க, பேசிட்டே இருக்காங்க. இவனுக்கா முகமெல்லாம் சாயங்கால நேரத்துக் கதிரவனாட்டம் செக்கச் செவேன்னு மாறுது. இடையில Shit, Shitனு வேற சொல்லிக்கிடுறான். ஒரு வழியாப் பேசி முடிச்சு, ஒரு நிதானத்துக்கு வரவே மணி எட்டு ஆயிப் போச்சுங்க.

என்னடா ஆச்சுன்னு கேட்கவும், வெவரத்தை சொல்ல ஆரம்பிச்சான். ஆமாங்க, அவங்க வீட்ல நடக்கக் கூடாதது நடந்து போச்சுங்க. இவந்தான், அட்லாண்டால இருந்து எங்கூடப் பொட்டி தட்டுறதுக்கு இங்க விர்ஜீனியாவுக்கு வந்துட்டானே, அங்க அவனோட அம்மணி அவுங்க ஊட்டு சொகுசுந்தை(Car) அங்க எதோ உள்ளூர் சீருந்து(train station)வளாகத்துல நிறுத்திப் போட்டு ஊர் சுத்தப் போயிருக்குறா.

அம்மணி அங்க, Dunwoodyல இருந்து கிளம்பிப் போனதுதான் தாமுசம், எவனோ ஒரு புண்ணியவான் அம்மணியோட வாகனத்தைக் கள்ளச்சாவி போட்டுக் கிளப்பி இருக்குறான். அவனுக்கு எங்க போறதுன்னு அவனுக்குள்ளவே ஒரு கேள்வி? பாத்தான், அங்கயே, (GPS) இடநியசு சாதனம் இஃகிஃகீன்னு பல்லிளிச்சுட்டு இருக்குறதைப் பாக்கவும் அந்தப் புண்ணியவானுக்கு ஒரே எல்லையில்லா மகிழ்ச்சி.

நாமதான் அதிபுத்திசாலிகளாச்சே, நம்ம வீடு எங்க இருக்கு, நம்ம ஆத்தா வீடு எங்க இருக்கு, இப்படி நாம அடிக்கடி போயி வாற இடமெல்லாம் அதுல பதிஞ்சி வெச்சிருக்கமே? புண்ணியவான், நாம மொதல்ல அம்மணி வீட்டுக்கே போவோம்ன்னு, அந்தத் தொடுதிரையில இருந்த வீடுங்ற பதிப்பை அமுக்கவும், வாகனம் எந்த செரமும் இல்லாம ஊட்டுக்கே கொண்டாந்து உட்டு இருக்கு. இனி ஊட்டுக்குள்ள போகணுமே? சுத்தியும் முத்தியும் பார்த்தான். அப்புறம்?

ஆமாங்க, அதுவும் அங்க, காருக்குள்ளவே இருந்துச்சு. எது? வாகன நிறுத்து சாலைக்கான தொடுப்பில்லா சாவி(Garage door remote key). அப்புறம் என்ன, எந்த செரமும் இல்லாமப் பொன்னான் ஊட்டுக்குள்ள போயி, இருந்ததை எல்லாம் சுருட்டிட்டு, வாகனத்தை மறுபடியும் கிளப்பிட்டு எங்க போனான்னே தெரியலையாம். அவ்வ்வ்வ்வ்வ்........ அம்மணி மட்டும் தெருவுல!

இந்தக் கூத்துகளுக்குத்தான் நான் எந்த அதிநவீன சாதனமும் அவ்வளவு சீக்கிரத்துல வாங்குறதே கிடையாது. அப்படியே வாங்கினாலும், அம்மணிக்குத் தாறது இல்லவே இல்லை, நம்ம ஊட்ல! நான் அம்மணியோட திறமையக் குறைச்சி சொல்லலை. அவங்க, குழந்தைகளை வெச்சிச் சமாளிக்கிறதே பெரும்பாடு. அந்த நேரத்துல அவங்களால, இதுகளைக் கட்டி மேய்க்க முடியாதுன்னுதான்! உபகாரம் இல்லாட்டாலும், உபத்திரம் இருக்காது பாருங்க!!

அப்புறம் என்ன? Quintகிட்ட கதையெல்லாம் கேட்ட பொறகு, அவனைக் கொண்டுப் போயி பக்கத்தூர் விமான நிலையத்துல ஏத்தி உட்டுட்டு வரவே மணி இராத்திரி பதினொன்னு! அப்புறம் வெறும் ஆப்பிள் பழத்தை மட்டும் கடிச்சித் தின்னுபோட்டு, நித்திரை கொள்ள வேண்டியதாப் போச்சுங்க நேத்து!

35 comments:

பாலா said...

ஆத்தி..!

கராஜ் டோரை தவிர.. மத்த அத்தனை சமாச்சாரமும்... நம்ம கிட்ட இருக்கே..!

ஏற்கனவே ஒருத்தன் கார் கண்ணாடியை உடைச்சி, $300 gps ஐ தூக்கிட்டு போனான். கூடவே கண்ணாடிக்கு $150 ஆச்சி.

இதுல வீட்டு அட்ரஸெல்லாமா.. வாவ்.! ச்சான்சே.. இல்ல! :)

cheena (சீனா) said...

mmmm றிவியல் முன்னேற்றத்தில் இப்படியும் ஒரு துயரம. என்ன செய்வது .... நாம்தான் சாக்கிரதையாக இருக்க வேண்டும்

நல்லாருக்கு இடுகை ரசித்துப் படிப்பதற்கு

நல்வாழ்த்துகள் பழமைபேசி

குடுகுடுப்பை said...

நல்ல யோசனை, முதல்ல ஜிபிஎஸ்லெ பேர மாத்துறேன். அப்படியே வீட்டுக்கு வந்தாலும் என் செல்போந்தான் இருக்கும்
அய்யாவுக்கு

ஈரோடு கதிர் said...

அடப் பாவமே..

மாப்பு பார்த்து
சூதானமா இருங்கப்பு

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உங்கள் நண்பருக்கு நடந்தது வேதனையானது.

பல சமயங்களில் நவீன சேவைகளைப் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கத்தான் செய்கிறது.

vasu balaji said...

ஆனாலும் ஒரு ஆறுதல். அமெரிக்காங்கறதால இதோட போச்சு. இதே நம்மூருன்னா, என்னாச்சுன்னு கேட்டு, இப்புடித்தான் 2 வருசம் முன்னாடின்னு ஒவ்வொருத்தரும் ஆரம்பிச்சி, சாக்கிரதயா இருக்க வேணாமான்னு சொல்ற அட்வைசெல்லாம் வேற கேட்டிருக்கணும்.

புலவன் புலிகேசி said...

அறிவியல் வளர்ச்சி அளவுக்கு மிஞ்சிப் போய் கொண்டிருக்கிறது. அதான் இந்த நஞ்சு..

தீப்பெட்டி said...

இப்படியெல்லாம் கூட நடக்குதா?..

velji said...

oh!shit!

ப்ரியமுடன் வசந்த் said...

ஓஹ்..அடப்பாவிமக்கா..

பிரபாகர் said...

எங்கள் வீட்டின் கதவினை பூட்டியதே கிடையாது, நெடு நாள் வரை. எனது கல்யாணத்தின்போது எல்லோரும் செல்லும் சூழல் வந்தபோது, பூட்டினை தேடியும் கிடைக்காமல் பக்கத்து வீட்டில் வாங்கி போட்டார்கள். கிராமம் என்பதால் புது நபர் வருகை எளிதாய் எல்லோருக்கும் தெரியும்.

அதிக அளவில் ஆடம்பரத்தில் உழழுதலின் விலை இதுதான்.

நல்ல இடுகை, உபயோகிப்போருக்கு எச்சரிக்கை மணி.

நன்றி பழமைபேசி...

பிரபாகர்.

க.பாலாசி said...

//சொகுசுந்தை(Car) அங்க எதோ உள்ளூர் சீருந்து(train station)வளாகத்துல//

புதிய வார்த்தைகள் அறிமுகத்திற்கு நன்றி...

இதுதான் விஞ்ஞான திருட்டோ...

பாத்துங்கப்பு வீட்ட பூட்டிய வச்சிருங்க...

அப்பாவி முரு said...

படிக்க நேரம் போதவில்லை.

இருந்தாலும் பெண்ணடிமைத் தனத்தை கண்டிக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

//அப்புறம் வெறும் ஆப்பிள் பழத்தை மட்டும் கடிச்சித் தின்னுபோட்டு, நித்திரை கொள்ள வேண்டியதாப் போச்சுங்க நேத்து! //

ஓஒ அப்படியா நண்பா

நிகழ்காலத்தில்... said...

Quint!

நண்பரின் நிலையை நினைத்துப்பார்த்தால் வேதனையாக இருக்கு,

நீங்க சாப்பிடாட்டியும் பரவாயில்ல,
ஊருக்கு போக கொண்டுபோயி விட்டீங்களே அந்த வரைக்கும் சர்தான்..

இராகவன் நைஜிரியா said...

ஐயா ஆயிரம்தான் சொல்லுங்க நம்ம திண்டுக்கல் பூட்டு மாதிரி வருங்களா?

சுந்தரா said...

ஐயோ Quint!

நம்ம பாலைவனத்துப்பக்கம் எவ்வளவோ பரவால்ல போலிருக்குதே. பலதடவை வீட்டைப் பூட்ட மறந்தே வெளியில் சென்றதுண்டு.

அதுமாதிரி,இங்கே கராஜ் கதவைத் திறந்தே போட்டாலும் ஆரும் உள்ள வரமாட்டாங்க.

தமிழ் நாடன் said...

பாவங்க அவரு!

அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்.

Mahesh said...

luxury car - சொகுசுந்து
pleasure car - மகிழ்வுந்து
car??

Unknown said...

நல்ல பகிர்வு. உங்கள் நண்பர் Quintக்கு ஆறுதல்கள். என் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த $400 GPSஐ எடுத்துக் கொண்டு போனதில் இருந்து நான் GPSஐ காருக்குள் விட்டு வருவதே இல்லை.

வீட்டை விட்டு வெளியே வரும்போது அலார்ம் போடாமல் வருவதே இல்லை.

குறும்பன் said...

//அப்படியே வாங்கினாலும், அம்மணிக்குத் தாறது இல்லவே இல்லை. நம்ம ஊட்ல! நான் அம்மணியோட திறமையக் குறைச்சி சொல்லலை. //

அம்மணிக்கு நவீன சாதனங்களை வாங்கி தரதில்லன்னு சொல்லறதுக்கு எவ்வளவு காரணம் சாமியோவ்வ்வ்வ்......

\\அங்கயே, (GPS) இடநியசு சாதனம்\\
எனக்கு இந்த இடநியசு சாதனம் பிடிக்கவே பிடிக்காது எப்பவும் வரைபடம் தான். 3 தெரு தள்ளி இருக்குற கடைக்கு போறதுக்கு கூட நம்மாளுங்க இடநியசு சாதனம் பயன்படுத்தறாங்கப்பா. இதோட புழக்கம் அந்த அளவு அதிகமாகிடிச்சு.... என்னவோ போங்க..


Quint நிலைமை பாவம். வீட்டு காப்பீடு இந்த இழப்பை சரி செய்யுமா? கேட்டு பாத்தீங்களா?

துபாய் ராஜா said...

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. விஞ்ஞான வளர்ச்சியின் விபரீதம் கொடுமைதான்... :((

தென்னவன். said...

ஈருறுளி/சீருந்து இதெல்லாம் Bike அப்படினு நெனச்சிக்கிட்டு இருந்தேன்
train அப்படின்னா தொடருந்து அப்படினு மட்டும் தான் நெனச்சென்.
இடநியசு புதுசா கத்துக்கிட்டேன்

நன்றி
தென்னவன்

RRSLM said...

உங்கள் நண்பருக்கு ஏற்ப்பட்ட இதே சம்பவம், கொஞ்சம் நாள் முன்னால், எங்கோ ஏற்ப்பட்டதாக, ஒரு மின்னஞ்சலாக வந்தது பழமை.....
அதில் மேலும் செல்போன் திருடபட்டதனால் ஏற்ப்பட்டு இழப்பு பற்றியும் இருந்தது......இதோ அதன் copy இங்கே

MOBILE PHONE
I never thought of this...
This lady has now changed her habit of how she lists her names on her
mobile phone after her handbag was stolen. Her handbag, which
contained her cell phone, credit card, wallet...etc...was stolen. 20
minutes later when she called her hubby, from a pay phone telling him
what had happened, hubby says 'I received your text asking about our
Pin number and I've replied a little while ago.' When they rushed down
to the bank, the bank staff told them all the money was already
withdrawn. The thief had actually used the stolen cell phone to text
'hubby' in the contact list and got hold of the pin number. Within 20
minutes he had withdrawn all the money from their bank account.

அது சரி(18185106603874041862) said...

//
அப்புறம் என்ன, எந்த செரமும் இல்லாமப் பொன்னான் ஊட்டுக்குள்ள போயி, இருந்ததை எல்லாம் சுருட்டிட்டு, வாகனத்தை மறுபடியும் கிளப்பிட்டு எங்க போனான்னே தெரியலையாம். அவ்வ்வ்வ்வ்வ்........ அம்மணி மட்டும் தெருவுல!
//

எனக்கு பரவால்ல....காரை மட்டும் தான் கெளப்பிட்டு போனாய்ங்க...

பழமைபேசி said...

மக்களே, இது ஒரு தகவலுக்குதாங்க! மத்தபடி உங்க எல்லாருக்கும் நன்றி!

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நல்ல யோசனை, முதல்ல ஜிபிஎஸ்லெ பேர மாத்துறேன். அப்படியே வீட்டுக்கு வந்தாலும் என் செல்போந்தான் இருக்கும்
அய்யாவுக்கு
//

அண்ணே, நீங்க வாலாட்டுற பக்கத்து வீட்டுக்காரன் முகவரிய உங்க வீட்டு முகவரியாப் பதிஞ்சு வெச்சுருக்கிறதா சொன்னீங்களே? அவ்வ்வ்வ்.....

பழமைபேசி said...

//Mahesh said...
luxury car - சொகுசுந்து
pleasure car - மகிழ்வுந்து
car??
//

motor - உந்து சாதனம்
bus - பேருந்து
car - சிற்றுந்து
lorry - சரக்குந்து
train - தொடருந்து
light rail - சீருந்து
rickshaw - இழுவை உருளி
auto rickshaw - சிட்டுந்து

Anonymous said...

நியூஸில வீட்ட திறந்து போட்டாலும் யாரும் உள்ள வரமாட்டாங்க. பயமே இல்லை.ஆஸி அப்படி இல்லை. வந்த கொஞ்ச நாள்லயே தெரிஞ்சுது. சாக்கிரதையாத்தான் இருக்கோணுமுங்க

அரசூரான் said...

பழமை, சொன்னா நம்புங்க நான் டன்வுட்டி பக்கம் போகவே இல்ல... :(

நாங்க கொஞ்சம் விவரமுங்க, நம்ம வழி காட்டில மூனுவூடு தள்ளி விலாசம் போட்டு வெச்சிருக்கோம், சாவி பூட்ட திறக்காதுல்ல... எப்பூடி

நசரேயன் said...

எல்லாம் நம்ம அண்ணாச்சிமார்கள் செயல்

Rekha raghavan said...

அடடா! அங்கே இப்படியெல்லாம் கூட நடக்கா? நாமத்தான் உஷாரா இருக்கனுங்கோவ்!

ரேகா ராகவன்.

naanjil said...

தம்பி மணி
தகவலுக்கு நன்றி.
நண்பர்களுக்கு பயன் உள்ளதாக
இருக்கும்.
வாசிங்கடன் பகுதியில் நடக்கும் திருட்டுக்கள் பற்றி செய்திதாள் செய்தியென்றை அனுப்புகிறேன்.
http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2009/10/16/AR2009101603653.html?hpid%3Dtopnews&sub=AR

அன்புடன்
நாஞ்சில் பீற்ற்ர்

Karthick Chidambaram said...

இடநியசு - GPS

மிக்க நன்றி பழமைபேசி. இந்த பதிவை நான் படிக்க விட்டு இருந்தேன். சுட்டி தந்தமைக்கு நன்றி.

ஜோதிஜி said...

ஐயா ஆயிரம்தான் சொல்லுங்க நம்ம திண்டுக்கல் பூட்டு மாதிரி வருங்களா?


ஆத்தி..!mmmm றிவியல் முன்னேற்றத்தில்
மிகவும் ரசித்த வரிகள்

புதிய வார்த்தைகள் அறிமுகத்திற்கு நன்றி...