10/20/2009

ஆறைநாட்டானின் அலம்பல்கள் - 9

மக்களே, எதோ ஒரு ஆர்வத்துல கொங்கு நாட்டுல இருக்கிற எல்லா நாடுகளைப் பத்தியும் இருக்கிற விருத்தங்களை எழுத ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன், மக்கள் மின்னஞ்சல் மின்னஞ்சலா அனுப்பிகிட்டே இருக்காங்க; நல்லது; மகிழ்ச்சி! நிச்சயமா, எல்லா நாட்டையும் ஒரு கை பார்த்துட்டுதான் ஓய்வான் இந்த பழமைபேசி! இஃகிஃகி!! டிச-2ம் தேதிக்கு முன்னாடி எல்லாமும் வந்திடும்; ஆமா, அதுவரைக்கும் பொறுமையா நம்ம பக்கத்துக்கு வந்திட்டுப் போங்க மக்களே!

ஆனைமலை அப்படீன்னாலே ஒரு குதூகலம்தானே! இந்தவாட்டி ஊருக்கு வரும் போது கட்டாயம் ஆத்தாகிட்ட வந்துட்டுதான் வாறது. கோடித் தாத்தா இருக்குற வரையிலும் புரவிபாளையம் அரண்மனைக்கு போயிட்டு, அப்படியே ஒரு எட்டு ஆனை மலைக்கும் போறது உண்டு. கடைசியாப் போயிட்டு வந்து நெம்ப நாளாச்சு. சரி, நாம இன்னைக்கு ஆனைமலை நாடு பாக்குலாம் வாங்க!

ஆனைமலை காளியர சூர்மஞ்ச நாயக்கனம்பிச்சி
யின்புதூரும்
அர்த்தநா ரிப்பாளையம் பாரமடை ரெட்டி
யாரூர்கோ டங்கிபட்டி
சோனைபொழி பெரியபோ துப்பிலிய நூர்முத்தூர்
சொல்பூச்ச நாரியுடனே
தொகுதியுறு மிட்டுப்புள் ளாச்சிமா றப்பனூர்
சுகசின்ன யன்பாளையம்
ஞானமுறு தாத்தாரா வுத்தன் புதூரோடு
நற்கம்பா லப்பட்டியும்
நாவலர்கள் புகழ்கின்ற வேட்டைக்கா ரன்புதூர்
நவமாகு முடையகுளமும்
வானைநிமிர் மலையோங்கு காடருட நிறவுளர்கள்
மலைசர்களு மடைவதாக மாதங்க
வேட்டைபுரி யானைமலை
தனில்நின்று வளமாகு மிருபதூரே!

ஆனைமலை, காளியாபுரம், அரசூர், மஞ்சநாய்க்கன்பட்டி, அப்பிச்சிகவுணன் புதூர், அர்த்தநாரி பாளையம், பாரமடை, ரெட்டியாரூர், கோடங்கிபட்டி, பெரியபோது, உப்பிலியனூர், முத்தூர், பூச்சநாரி, ஆட்டுப்புள்ளாச்சி, மாறப்பக் கவுண்டன் புதூர், சின்னய்யன் பாளையம், தாதாராவுத்தன் புதூர், கம்பாலப்பட்டி, வேட்டைக்காரன் புதூர், உடையகுளம் என ஆனைமலைநாடு கொண்டது இருபது ஊர்கள்.

ஆனைமலை நாட்டைச் சொல்லிட்டு, பக்கத்துல காவடிக்கனாடு சொல்லாமப் போனா, பக்கத்து நாட்டுக்காரங்க பொக்குன்னு போயிட மாட்டாங்க? ஆமா, பொக்குன்னு போறது என்னான்னு உங்களுக்குத் தெரியுமாங்க?? அதாவது, பொக்குன்னா, உள்ளீடில்லாத நிலக்கடலை, உள்ளீடில்லாத எந்த காயும்... அதே மாதர, மனசுக்கு உள்ள மகிழ்ச்சியில்லாம வாடிருவாங்கன்னு சொல்லிச் சொல்றதுதான், பொக்குன்னு போயிடுவாங்க அப்படீன்னு.

இந்த இடுகையானது, நம்ம சலத்தூர் அன்பர் பொற்செழியன் அவர்களுக்காக! இஃகிஃகி!!


உண்மைமிகு பொள்ளாச்சி நகமஞ்சந் தராவரம்
ஊற்றுநகர் ராமபட்டணம்
ஓதுநா கூர்வடுக பாளையம் கோமங்கை
யொத்தகோ பாலபுரமும்
வண்மைமிகு மாய்ச்சிநகர் மாவலுப் பன்பட்டி
வருசலத் தூர்சிராமி
வண்ணாரின் மடகறைப் பாடிசிங் காநல்லூர்
மருவு வெள்ளாளரூரும்
பண்மைமிகு ராசக்கா பாளையம் மாய்க்கனாம்
பட்டியுட னேபுதூரும்
பருவமழை யகலாது பொழியவள மொடுவயல்கள்
பலனுதவி வினிதினோங்கு
திண்மையொடு குடிசெழித்துத் தானதருமந்
திருக்கோயிலுந் தொழில்களுஞ்
சேரச் சிறந்தழகி தேவடிக் கன்புவினை
செய்காவ டிக்கனாடே!

பொள்ளாச்சி, நகமம், சந்திராவரம், ஊற்றுக்குழி, ராமபட்டணம், நாகூர், வடுகபாளையம், கோமங்கலம், கோபாலபுரம், ஆய்ச்சிபட்டி, மாவலுப்பன் பட்டி, சலத்தூர், சிராமி, வண்ணார்மடை, கறைப்பாடி, சிங்காநல்லூர், வெள்ளாள பாளையம், இராசக்கா பாளையம், மாய்க்கனாம் பட்டி, புதூர் என காவடிக்கனாட்டில் ஆக மொத்தம் ஊர்கள் இருபது.

ஆச்சு ஆச்சுன்னு பொள்ளாச்சி போயி,
பிட்டு வாணிச்சிகிட்ட இளிச்சானாம் பல்லு!

11 comments:

Mahesh said...

கூட படிச்ச காளியாபுரம் விசயகுமாருமு, வே.கா.புதூர் குமாரவேலுவுமு, தேவனூர் புதூர் சக்திவடிவேலுமூ நினப்புல வந்தாங்க.... என்ன பண்றானுகளோ... எங்கிட்டு இருக்கானுகளோ?? ஹ்ம்ம்.... :(

அப்பாவி முரு said...

//நாவலர்கள் புகழ்கின்ற வேட்டைக்கா ரன்புதூர்//

சூரிய வம்சம் படத்தில் காட்டுவாங்களே அதானே?

பிரபாகர் said...

//ஆமா, பொக்குன்னு போறது என்னான்னு உங்களுக்குத் தெரியுமாங்க?? அதாவது, பொக்குன்னா, உள்ளீடில்லாத நிலக்கடலை, உள்ளீடில்லாத எந்த காயும்... அதே மாதர, மனசுக்கு உள்ள மகிழ்ச்சியில்லாம வாடிருவாங்கன்னு சொல்லிச் சொல்றதுதான், பொக்குன்னு போயிடுவாங்க அப்படீன்னு. //

பொக்குனு இருக்கும், அவனுக்கு பொக்குனு போயிடுச்சி.... பலமுறை சொல்லியும் கேட்டும் இருக்கேன். வெறுமை என மட்டும் எண்ணியிருந்தேன்... அழகான விளக்கம் என் அன்பு நண்பரின் மூலம்... நன்றி பழமைபேசி.

பிரபாகர்.

ஈரோடு கதிர் said...

//பொக்குனு போறது//

அருமையான விளக்கம் மாப்பு

vasu balaji said...

/கதிர் - ஈரோடு said...

//பொக்குனு போறது//

அருமையான விளக்கம் மாப்பு/

என்னாடா காணோமேன்னு பார்த்தேன். எதுக்கும் புதிப்பிக்கலாம்னு F5 போட்டா வந்துடிச்சி பின்னூட்டம். =))

இவ்வளவு அழகா வயல் பச்சை எப்போ புடிச்சது. வயலும் பாட்டும் ஜில்லுன்னு இருக்கு.

vasu balaji said...

/ஆச்சு ஆச்சுன்னு பொள்ளாச்சி போயி,
பிட்டு வாணிச்சிகிட்ட இளிச்சானாம் பல்லு!/

இதாரு? அப்புறம் பல்லுகட்ட எவ்வளவு தண்டம்?

க.பாலாசி said...

எனக்கும் இப்பதான் பொக்குன்னு போறதுன்னா என்னன்னு தெரியுது. நல்ல விளக்கம்....நல்ல இடுகை....

பழமைபேசி said...

@@Mahesh

அண்ணே வாங்க, நீங்க இந்த பக்கம் வந்து எம்புட்டு நாளாச்சு?! இஃகிஃகி!

@@அப்பாவி முரு

அதேதானுங்க சின்னாளப்பட்டி சிங்கமே!

@@பிரபாகர்

மிக்க நன்றி ஐயா!

@@கதிர் - ஈரோடு

நன்றிங்க மாப்பு!

@@வானம்பாடிகள்

அது ஒரு சொலவடைங்க அண்ணே; வெளியூர் போயிட்டு போன வேலைய செரி வர செய்யாட்டி இப்படியெல்லாம் விழும் அர்ச்சனை!

@@க.பாலாசி

நன்றிங்கோ!

Unknown said...

//.. எல்லா நாட்டையும் ஒரு கை பார்த்துட்டுதான் ஓய்வான் இந்த பழமைபேசி ..//

நாங்க உங்கள உடமாட்டம்.. :-)

போட்டா எங்க புடிச்சிங்க.. அருமையா இருக்குது..

Unknown said...

பொக்குன்னு போயிடுவாங்க

குறும்பன் said...

கொங்கு நாட்டு சதகம் புத்தகம் இணையத்துல இருக்குங்களா? தேடிப்பார்த்தேன் எனக்கு கிடைக்கலை. ஆனா வில்லங்கமான ஒரு கதை கிடைச்சிச்சு இஃகிஃகி