6/07/2009

மகிழ்விப்புநர்

”என்னங்கடா இது? இடுகை இடுறேம்பேர்வழின்னு ஊருக்கு உபதேசமா? மனவெறுமை(boredom)ங்கறான்... கிருதா(ego)ங்றான்... என்ன வெளையாட்டா இருக்கா எங்களைப் பார்த்தா?”, இப்படியெல்லாம் ஊருக்குள்ள பேசுவாங்க... இஃகிஃகி, அது நமக்குந் தெரியும்... ஆனா, அவிங்க நெனைக்குறா மாதர இல்லை நம்ம பொழப்பு.

நெசந்தாங்க, சொன்னா நம்போணும்! வெளிநாட்டுக்கு வந்தப்புறம் கொஞ்ச நாள் அமைதியா இருந்துதான் பாத்தேன். குழுமங் குழுமமா எங்கியோ ஒரு எடத்துல எதோ ஒரு காரியத்துக்கு கூடுறது உண்டு. அங்க அரைச்ச மாவையே அரைச்சிகினு, பாடுன பல்லவியே பாடிகினு... வெறுமையாத்தான் இருந்துச்சு... கூடவே வாற சனங்களுக்குள்ள அவிங்க அவிங்க தகுதிக்கேத்தாப்புல கிருதாவும்...

நம்ம சனங்கன்னு இல்ல, அது எல்லார்த்துகிட்டயுந்தான் ஒளிஞ்சிட்டு இருக்குது. கிருதாமானின்னு ஒன்னு இருந்து அதை வெச்சுப்பாத்தா தெரியும், ஒவ்வொருத்தர்கிட்டவும் அது எவ்வளவு இருக்குன்னு... அப்ப, கூடுன எடத்துல, முன்பின் தெரியாத நம்ம சனத்தை ஒருத்தொருக்கொருத்தர் எப்பிடி சகசமாப் பழக வெக்கிறதுன்னு யோசிக்க, அப்புறமேல்ட்டு கட்டுனதுதான் இந்த மகிழ்விப்புநர் வேசம்.

ஆமாங்க, அஞ்சாறு வருசமா வாய்ப்பு கெடைக்கும் போதெல்லாம் நாம இந்த வேசங்கட்டிட்டு வர்றோம். நூறு பேர் வரைக்கும் கூடுன கூட்டத்தை எல்லாம் நாம சிரிக்க வெச்சு, ஒரு நல்ல சூழ்நெலைய உண்டு பண்ணி இருக்கோம். பிறந்த நாள் விழாக்கள் நடத்தி இருக்கோம்... நல்ல அனுபவம் இருக்கு கைவசம்... இஃகிஃகி!

வந்த சனங்களுக்குள்ள பேதமை கலந்த, அதாவது நல்ல தமிழ்ல சொன்னா கேனத்தனமான வெளையாட்டு நடத்துறதுதாங்க இந்த மகிழ்விப்புநர் வேலை. அதென்ன கேனத்தனமான வெளையாட்டு? ஆமாங்க, நல்ல வெளையாட்டுலயும் கிருதா வந்து உக்காந்துக்குறதுக்கு வாய்ப்பு இருக்கே, அதான் இந்த பேதமை கலந்த வெளையாட்டு.

Small Fish, Big Fish

வந்திருக்குற சனத்தை எல்லாம் வட்டமா உட்கார வெச்சிடணும். பத்து பேர்ல இருந்து எவ்வளவு பேர் வேணுமின்னாலும் இதுல கலந்துகிடலாம். ஒருத்தர் பெரியமீனைக் காண்பிக்கற மாதிரி கைய விரிச்சிட்டு சின்னமீன் அப்படீன்னு சொல்ல, அடுத்தவர் சின்ன மீனைக் காண்பிக்கிற மாதிரி கையக் காண்பிச்சிட்டு பெரியமீன் அப்படீன்னு சொல்லணும். இப்படியே மாறி மாறி சொல்லிட்டே வரணும். அப்ப யார் தப்பா சொல்றாங்களோ, அல்லது தப்பா கையக் காண்பிக்கிறாங்களோ அவங்க ஆட்டத்துல இருந்து விலக்கம். இப்படியே, ஒருத்தர் ஒருத்தரா விலக்கிட்டு வந்து கடைசியா யார் மிஞ்சி இருக்காங்களோ, அவர் வெல்லுனவர். விளையாடிப் பாருங்க, ரொம்ப நல்லா இருக்கும். மகிழ்விப்புநர் சிரிப்பைக் கட்டுப்படுத்தி நடத்தணும், அதுலதான் அவரோட திறமை இருக்கு.

Plain Bun, Plum Bun, Bun without Plum

ஆட்களை வட்டமா உட்கார வெச்சிடணும், அல்லன்னா நிக்க வெச்சுடணும். ஒருத்தர் Plain Bun சொல்ல, அடுத்தவர் Plum Bun சொல்லணும், அடுத்தவர் Bun without Plum சொல்லணும். இப்படியே மாறி மாறி சொல்லிட்டு வரணும். அப்படி சொல்லிட்டு வரும்போது யார் தவறுதலா சொல்றாங்களோ, அல்லது கேனத்தனமா சிரிச்சிட்டு காலம் தாழ்த்துறாங்களோ அவங்க விலக்கம். இப்படி விலக்கிட்டு வரும்போது கடைசியா யார் மிஞ்சி இருக்காங்களோ அவங்க வெற்றியாளர். ஆங்கிலத்துல இதை tongue twistterனு சொல்றது.

இப்படி நிறைய விளையாட்டுகள்... ஒரு இருபது, முப்பது விளையாட்டுக தெரியும். எல்லார்த்தையும் சொல்ல ஆரம்பிச்சா விடிஞ்சிடும். அதுனால இதோட நிறுத்திக்கிறேன். கடைசியா, நம்மூரு tambolaவும் விளையாடுறது உண்டு. அதுக்குண்டான சீட்டுகளை இங்கியே உங்களுக்கோசரம்... இஃகிஃகி!!









கடைசியா திரி ஒன்னை கொழுத்திப் போடுலாம், இப்ப என்ன? தலைகீழா நின்னுட்டுப் பொய் சொல்ல முடியாதுன்னு சொன்னோம் இல்லீங்களா? அதே மாதிரி, கண்ணைத் திறந்திட்டே தும்ம முடியாதுங்களாமே? அப்பிடிக்கிப்பிடி தும்ம(sneeze) முடிஞ்சா சொல்லி அனுப்புங்க, சரியா? வர்றேன்??

21 comments:

இராகவன் நைஜிரியா said...

// "மகிழ்விப்புநர்" //

அருமைங்க.. அருமை...

நிஜமாவே நீங்க சொல்வது சரிதாங்க. மகிழ்விப்புநர் வேலை மிகக் கடுமையானதுதாங்க.. எல்லோரையும் சந்தோஷப் படுத்த, நீங்க கொஞ்சம் கஷ்டப் பட்டுத்தான் ஆகணும்

Anonymous said...

இவ்வளவு விவரங்கள சொல்லற நீங்க எவ்வளோ விவரங்கள் சேகரிக்க கஷ்டப்படறீங்க. மகிழ்விப்புனருக்கு நன்றிகள் பல(மகிழ்விப்புநர் சரியா, மகிழ்விப்புனர் சரியா) ரெண்டுமே சரியா

Anonymous said...

//OpenID authentication failed: Bad signature//

என்ன கொடுமை இது சரவணா, மகிழ்விப்புனருக்கு ஓட்டுப்போட முடியாம தமிழ்மணம் சோதனை பண்ணுது.

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
//OpenID authentication failed: Bad signature//

என்ன கொடுமை இது சரவணா, மகிழ்விப்புனருக்கு ஓட்டுப்போட முடியாம தமிழ்மணம் சோதனை பண்ணுது
//

yahoo ID புழங்கிப் பாருங்க....

username@yahoo.com

பழமைபேசி said...

//சின்ன அம்மிணி said...
இவ்வளவு விவரங்கள சொல்லற நீங்க எவ்வளோ விவரங்கள் சேகரிக்க கஷ்டப்படறீங்க. மகிழ்விப்புனருக்கு நன்றிகள் பல(மகிழ்விப்புநர் சரியா, மகிழ்விப்புனர் சரியா) ரெண்டுமே சரியா
//

வாங்க, அகரமுதலில ரெண்டும் சரிங்கற மாதிரி இருக்குங்க...

புநர் [ *punar ] . Again. See புனர்.

ஆ.ஞானசேகரன் said...

மகிழ்விப்புநர்..
மகிழ்விக்க ஏதோ வித்தை செய்யுரார் போல இருக்கு.....

//தலைகீழா நின்னுட்டுப் பொய் சொல்ல முடியாதுன்னு சொன்னோம் இல்லீங்களா? //
தலைகீழா நின்னுட்டுதானுகோ சொல்லுரேன்... முடியாதுன்னு

தமிழ் said...

மகிழ்விப்புநருக்கு
நன்றி

வேத்தியன் said...

தும்மும் கணத்தில் உடற்செயற்பாடுகள் அனைத்தும் நின்றுவிடுமாம்..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வித்தியாசமான விளையாட்டுகள்தான்.ஆனா விளையாடிப் பாக்கத்தான் ஆளுமில்ல ,பொழுதுமில்ல. அப்புறமென்ன, வழக்கம் போல நல்ல பதிவுதான்.

ராஜ நடராஜன் said...

//கடைசியா திரி ஒன்னை கொழுத்திப் போடுலாம், இப்ப என்ன? தலைகீழா நின்னுட்டுப் பொய் சொல்ல முடியாதுன்னு சொன்னோம் இல்லீங்களா? அதே மாதிரி, கண்ணைத் திறந்திட்டே தும்ம முடியாதுங்களாமே? அப்பிடிக்கிப்பிடி தும்ம(sneeze) முடிஞ்சா சொல்லி அனுப்புங்க, சரியா? வர்றேன்??//

தும்மலே வா!

vasu balaji said...

தும்முறேன் பார்த்து சொல்லுங்கன்னா ஒரு பய எதிரில நிக்கமாட்டங்குறானே:(

பழமைபேசி said...

@@ ஆ.ஞானசேகரன்
@@ திகழ்மிளிர்
@@ வேத்தியன்
@@ ஸ்ரீதர்
@@ ராஜ நடராஜன்
@@ பாலா...

எல்லாருக்கும் வணக்கம், நன்றி!
என்ன டபாய்க்குறீங்களா? ஒருத்தர் தும்மல் வரலேங்குறாரு... அடுத்தவர் எல்லாமே நின்னுடும்ங்றாரு.... அடுத்தவர் எதிர்ல எவனும் நிக்க மாட்டேங்றாங்றாரு....

நல்லா முயற்சி செய்து பாருங்க.... இஃகிஃகி!

தீப்பெட்டி said...

கைவசம் நிறைய தொழில் இருக்கு...
நடத்துங்க நடத்துங்க...

பழமைபேசி said...

//தீப்பெட்டி said...
கைவசம் நிறைய தொழில் இருக்கு...
நடத்துங்க நடத்துங்க...
//

நம்மூர்ல இதெல்லாம் எடுபடாதுங்களே?!

தேவன் மாயம் said...

சாமி! சரக்கு எடுத்து சரசரன்னு எற்க்குறீக!! புத்தகமாப் போடுங்கப்பு!!

குறும்பன் said...

அவங்க மலையாறப் படம் பார்க்குறது இல்லை போலிருக்கு இஃகிஃகி..

மகிழ்விப்புநர் வேசம் இருக்கறதில்லையே ரொம்ப கடினமான வேலைங்க.

பழமைபேசி said...

//thevanmayam said...
சாமி! சரக்கு எடுத்து சரசரன்னு எற்க்குறீக!! புத்தகமாப் போடுங்கப்பு!!
//

எல்லாம் இன்னும் ஒரு வாரம்... அப்புறம் வேலைக்கு போகணும்.... அவ்வ்.......

"உழவன்" "Uzhavan" said...

சரியான விளையாட்டுதான்.. சும்மா பின்னி பெடலெடுக்குறீங்க.ம்ம்ம்

Unknown said...

இது மாதிரி நம்மகிட்டயும் கைவசம் ஒரு விளையாட்டு இருக்குங்க..

கால் முதினு பேரு..

எப்படினா யாரவது ஒருத்தர ஒப்புக்கு சப்பான் போட்டு out ஆக்கிரனும். அவரு குழுவில இருக்குரவிங்க யாரவது கால(பாத பகுதிய மட்டும்) முதிக்கோனும்.. யாரு முதி வாங்குறாங்களோ அவங்க அவுட்டு..

முயற்சி பண்ணி பார்த்துட்டு எப்படின்னு சொல்லுங்க..

பழமைபேசி said...

//உழவன் " " Uzhavan " said...
சரியான விளையாட்டுதான்.. சும்மா பின்னி பெடலெடுக்குறீங்க.ம்ம்ம்
//

இஃகிஃகி!


//பட்டிக்காட்டான்.. said... //

ஆகா, புது விளையாட்டுக்கு நன்றி!

Unknown said...

அடடா நன்றி எல்லாம் எதுக்குங்க..??!!

இவ்ளோ கஷ்டப்பட்டு பதிவெல்லாம் போடுறிங்க..
பின்னூட்டதுலயாவது நம்ம திறமைய காட்டலாமேன்னு தான்(ஒரு விளம்பரம்..)..