6/14/2009

யோசனையா இருக்கு!

மக்களே வணக்கம்! கடந்த இரண்டு மூன்று வாரங்களாக வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் பண வீக்கம் தொடர்கிறது. இதனால் கடன் வட்டி, கல்நெய் விலை மற்றும் இதர பொருட்களின் விலையும் உயர்ந்து வருவதைக் காண்கிறோம். பொருளாதார மந்தம் தெளிந்தது போல்க் காணப்பட்டாலும், இன்னும் சரிவிலிருந்து மீளவில்லை. இந்நிலையில் G8 மற்றும் BRIC கூட்டங்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என அனைவரும் எதிர்நோக்கி உள்ளனர். இவ்விரு கூட்டங்களும் இவ்வாரத்தில் நடைபெற உள்ளது. மொத்தத்தில், கையிருப்பு இருக்கும்பட்சத்தில் பணமாக இருப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது. :-0(

நாம் ஒரு மாத விடுப்பில் 33 இடுகைகளை இட்டு, அவற்றில் பெரும்பாலானவை உங்களால் பெரும் வரவேற்பைப் பெற்றன. மிக்க மகிழ்ச்சி! ஆனால் விடுப்பு முடிந்து, Virgenia Westin Beachல் அமைந்திருக்கும் ஒரு நிறுவனத்திற்கு கட்டமைக்கப் போகும் பெரும் தொகையான ஒப்பந்த வேலைக்கு அச்சாரம் இட வேண்டியுள்ளதால் இடுகை இடுவதில் தற்காலிகத் தொய்வு!! எனினும் அவ்வப்போது வழமையான இடுகைகள் இட முயற்சிக்கிறேன் என்ற தகவலுடன்,

பழமைபேசி (எ) மணிவாசகம்.


22 comments:

ஆ.ஞானசேகரன் said...

//அவ்வப்போது வழமையான இடுகைகள் இட முயற்சிக்கிறேன் என்ற தகவலுடன்,

பழமைபேசி (எ) மணிவாசகம். //

வணக்கம் நண்பா, எப்பெல்லாம் உணர்வுகள் உந்தப் படுகின்றதோ அப்பெல்லாம் இடுக்கை இடலாம் நண்பா....வாழ்த்துகள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//நாம் ஒரு மாத விடுப்பில் 33 இடுகைகளை இட்டு, அவற்றில் பெரும்பாலானவை உங்களால் பெரும் வரவேற்பைப் பெற்றன. மிக்க மகிழ்ச்சி!//

உங்கள் விடுமுறை எங்களுக்கு இனிமையாக இருந்தது.

அடுத்த விடுமுறையை ஆவலாக எதிர்பார்க்கிறோம்

Unknown said...

பழமைபேசி கலாட்டா.......

ஆப்டர் தி பிரேக் ........... டன் டோடோ டொயிங்.......

Mahesh said...

போயிட்டு வாங்க !!! வேலையை நல்லபடியா முடிங்க...

பணத்தை பணமாகவே வைக்கறதை பத்தி குழப்பமாத்தான் இருக்கு :(

RRSLM said...

ரொம்ப பக்கத்தில் தான் இருக்கீங்க, எங்கயோ ரொம்ப தொலைவில் இருக்கீங்கன்னு இல்ல நினச்சுகிட்டு இருந்தேன்!.. எனது அழைப்பை ஏற்று கொண்டு Northern Virginia விஜயம் செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். Dulles விமான நிலையத்திற்கு வெகு அருகில் வசித்து வருகிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

சுந்தர் said...

//அவ்வப்போது வழமையான இடுகைகள் இட முயற்சிக்கிறேன்// முயற்சிக்க வேண்டுகிறேன்

குடுகுடுப்பை said...

நான் கூட இப்ப ஒரு கடன் வாங்கினேன். ரெண்டு நாள் வட்டி குறையும்னு காத்திருந்தேன் அடிச்சிட்டாங்க 50 points ஆப்பு.

குடுகுடுப்பை said...

டெக்ஸாஸ் பக்கம் ஒரு கிளையண்ட் புடிங்க பழமையாரே

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்லது .ரொம்பத் தொய்வில்லாமல் பாத்துக்குங்க.

வேத்தியன் said...

அப்பப்போ எழுதுங்க அண்ணே...

தீப்பெட்டி said...

//அவ்வப்போது வழமையான இடுகைகள் இட முயற்சிக்கிறேன் என்ற தகவலுடன்//

காத்திருக்கிறோம் உங்கள் கருத்து செறிவான பதிவுகளுக்காக..

தங்களது வேலைகளை வெற்றிகரமாக நடத்தி இடையில் எங்களுடனும் நேரம்கிடைக்கையில் அளவளாவினால் மகிழ்ச்சி..

Anonymous said...

இனிமையான பதிவு

kathir said...

சுருக்கா சோளிய முடிச்சுப்போட்டு... வந்து போயிட்ருங்க....

kathir said...

ஆமா ... இந்த ஓட்டு பட்டைய எப்படி சொருகறதுன்னு கொஞ்ச சொல்லுங்க..

தேவன் மாயம் said...

நல்லா வேலையைப் பார்க்கவும்!
கொஞ்சம் வலையைப் பார்க்கவும்!!

ப்ரியமுடன் வசந்த் said...

// Virgenia Westin Beachல் //

அப்போ நீங்க அமெரிக்கா பேசியா

எதிர்பார்க்கிறோம் தொடர்ச்சியான பதிவுகளை

நசரேயன் said...

சீக்கிரம் வாங்க அண்ணே .. நல்ல படியா போயிட்டு

குறும்பன் said...

Virginia Beach ரொம்ப நல்லா இருக்குங்க. அனுபவிக்க தவறாதிங்க.

\\கையிருப்பு இருக்கும்பட்சத்தில் பணமாக இருப்பது குறித்து யோசிக்க வேண்டிய தருணம் இது. :-0(\\

பெரிய சிக்கலா இருக்குங்க. கைல வச்சா பணவீக்கம் அப்படின்னு பயமுறுத்துறாங்க. பங்கு வாங்கலாம்னா அது ஒரு மாதிரியா இருக்கு.
வீடு வாங்குனவங்க பொழப்பு நாறி போயி இருக்கு. உங்க ஊரு பரவாலைன்னு கேள்வி.

என்னதான் பண்றது போங்க...

பழமைபேசி said...


மக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! உங்க பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சியில என்ன சொல்றதுன்னே தெரியலை.... நன்றி!

Unknown said...

தங்கள் பயணம் இனிமையாகவும், முழுமையாகவும் அமைய வாழ்த்துகள்..

//.. thevanmayam said...

நல்லா வேலையைப் பார்க்கவும்!
கொஞ்சம் வலையைப் பார்க்கவும்!! ..//

அதே..

Muniappan Pakkangal said...

ome inbtwn for posting articles Nanba.

பழமைபேசி said...

//Muniappan Pakkangal said...
ome inbtwn for posting articles Nanba.

//

தலை ஒன்னும் புரியலை!