6/11/2009

என் மனைவி திருமணம்!

நீலமலைச் சாரலில் நெளிந்து வரும் தென்றலினை வளைய விட்டு, பால் போன்ற இதயங்களை உயிர்ப்பித்து, பண்பினையும் அன்பினையும் ஊட்டி விடும் பேரூர்தான் அந்த வஞ்சி நாட்டின் வாஞ்சை பொழில் நல்லூர் கோயம்பத்தூர்! பரந்து விரிந்த பல பஞ்சாலைகள் ஊருக்கு முதுகெலும்பென்றால், தொழில்நுட்பத்தில் மேலோங்கி அந்தநல்ல ஊருக்கு இதயமென அன்றைய காலத்தில் இருந்ததுதான் இலட்சுமி இயந்திர ஆலை, Lakshmi Machine Works(LMW).

ஊட்டிக்குச் செல்லும் மேட்டுப்பாளையம் சாலையிலும், தேசிய நெடுஞ்சாலை நாற்பத்தேழு(NH-47) அவினாசி சாலையிலும் இயந்திர ஆலையின் இளம்பச்சைச் சொகுசுப் பேருந்துகள் தவழ்ந்து திரிய, பெருமையாய்ப் பார்த்திடுவர் ஊர் மக்கள். தன் பிள்ளை, தன் மகன், தன் மகள், தன் பேரன், தன் பேத்தி இதிற்சென்று வேலை பார்த்து ஊதியம் ஈட்டுவது எந்நாளோ என ஏங்கித் தவித்ததும் உண்டு.

பிறவியிலேயே சற்று உயரமாய்ப் பிறந்ததின் பயனாய் நான்கு வயதிலேயே தன் வலக்கை தலைமேற்ச் சென்று மறுபக்கத்து காதைத் தொட்டுவிட, குடும்பத்து ஆசிரியர் அவனை ஐந்து வயதுப் பாலகனாக்கி பெயரையும் மாற்றி முதல் வகுப்பில் உட்கார வைத்துவிட, அந்த பாலகன் பதினேழு வயதிலேயே பட்டயப் படிப்பு முடிந்த கையோடு, கல்லூரியே நேரடியாக வேலைக்கு அமர்த்தியதின் பொருட்டு இயந்திர ஆலையில் பணி புரியலானான்! அதுவும் ஒரு பிரிவின் மேற்பார்வையாளனாக!!

மீசை முளைக்காத பாலகன், தன்னைவிட பல வயது மூத்த பணியாளர்களுக்கு முதன்மைப் பொறியாளனானான். உடன் பணிபுரிந்த ஏனைய அலுவலர்களும் அவனைவிட பல வயது மூத்தவர்களாகவே இருந்தனர். அதன்பொருட்டு அவன் அவர்களுக்கு குழந்தையானான். ஆம், “குழந்தை” என்றே அழைக்கப்பட்டானவன்.

பதின்மவயதுப் பாலகன் குழந்தை பணி புரிந்த பிரிவு, இழை உருளிப் பிரிவு( Flutted Rollers - FRS Department). அதே பிரிவில் உடன் வேலை செய்த தரக் கட்டுப்பாட்டு அலுவலர்கள் நாகராஜ், மனோகரன், ஜெயச்சந்திரன் முதலானோர். இவர்கள் அனைவருமே குழந்தையைவிட ஆறிலிருந்து பத்து வயது மூத்தோர், எவருக்கும் திருமணம் ஆகவில்லை. நல்ல குணமுடைய, சுவாரசியமிக்க இளைஞர்கள், நல்ல நண்பர்களும்கூட!

திங்கட்கிழமை மாலை நான்கு மணி இருபது நிமிடம்! இரண்டாவது நேர வேலைக்கு அலுவலர்களை ஏற்றி வந்த சொகுசுப் பேருந்து, இயந்திர ஆலையின் வாசலில் வந்து நிற்கிறது. சொகுசுந்தை விட்டிறங்கிய ஜெயச்சந்திரன் ஆலையினுள் உள்ள பதிவேட்டு அட்டையில்(time card) பதிந்து விட்டு உள்நுழைய, கண்காணிப்பாளர் கேசவன் பரிதாபமாகப் பார்த்துவிட்டுச் செல்கிறார். ஜெயச்சந்திரனுக்கு அவரது வித்தியாசமான பார்வை ஒரு வித வியப்பைத் தந்தது. அவர் ஏன் அப்படிப் பார்த்து விட்டுச் செல்கிறார் என்ற சிந்தனையினூடே தன் பிரிவான FRSக்குச் செல்கிறார்.

“Good Eveningடா நாகராஜ்!”

“Good Eveningடா!”

“எங்கடா மனோகரனைக் காணம்?”

“அவன் இங்கதாண்டா இருந்தான். ஒரு வேளை Sheet Metalக்கு அரவிந்தனைப் பாக்கப் போயிருப்பான்!”

“ஓ, அப்பிடியா? அப்புறம் எல்லா Machineம் நல்லாப் போகுதுதானே?:

“ஒன்னும் பிரச்சினை இல்லடா ஜெயச்சந்திரா! டேய், நான் மறக்கத் திரிஞ்சேம்பாரு, JB உன்னை வந்து பாக்கச் சொன்னாரு!”

“எதுக்குடா? எதும் பிரச்சினையா?”

“தெரியலடா, ஒன்னும் பிரச்சினை இருக்குற மாதரித் தெரியல!”

தரக்கட்டுப்பாட்டுக்கு(Quality Control) மேலாளரான இவர் (QC Manager) எதுக்கு தன்னை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார். நாம் ஏதும் வேலையில் தவறு செய்து விட்டோமோ? அல்லது, யாராவது தன்னைப் பற்றி மோசமாகக் கோள்மூட்டி விட்டார்களோ? இப்படிப் பல விதமான யோசனைகளின் ஊடே தனது மேலாளரான J.பாலகிருஷ்ணன் அவர்களுடைய அறையை அடைந்தார் ஜெயச்சந்திரன்.

“Sir, May I come in?"

"Yes!"

"Sir, Good Evening Sir!"

"வாப்பா ஜெயச்சந்திரா! உனக்கு ரொம்பப் பெரிய மனசு!! ஆனாலும் மனசு ரொம்பச் சங்கடமா இருக்குப்பா, வாழ்க்கைன்னு இருந்தா இப்படித்தான். அதுக்காக நாம நொடிஞ்சு போய் உக்காந்துற முடியுமா? அதையே நினைச்சுட்டு இருக்காத, ஆமா வீட்ல நீ ஒருத்தந்தான?”

அவர் பேசியது ஒன்றுமே விளங்காத ஜெயச்சந்திரன், “ஆமாங்க சார்!”

“நல்லதாப் போச்சு, இன்னும் ஒரு வருசங்கழிச்சு இன்னொன்னு பாத்துகிடலாம், நொம்ப செளரியமாப் போச்சு போ!”

“சார், நீங்க என்ன பேசுறீங்கன்னே ஒன்னும் புரியலீங்க சார்!” என்று தயங்கித் தயங்கி பயங்கலந்த மரியாதையுடன் சொன்னார் ஜெயச்சந்திரன்.

“யோவ், எனக்கெல்லாம் தெரியும்யா! இது உன்னோடதுதானே?” என்று வினவியபடியே எதையோ காண்பிக்க, ஜெயச்சந்திரனின் முகம் ஆப்பிள்பழத் தோல் போலச் சிவந்தது. பின் ஓரிரு நிமிடம் தனது மேலாளரிடம் ஏதோ பேசிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினார்.

நேராக தனது பிரிவான FRSக்கு வந்த ஜெயச்சந்திரன், கடுமையான முகத்துடன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு,

“டேய் நாகராஜ், எங்கடா அந்த நாதாரி மனோகரன்?”

“டேய் என்றா நடந்துச்சு, இவ்ளோ கோவமா இருக்கே?”

“இல்லடா, அவனைக் கையக் கால ஒடைக்காம விடப் போறதில்லை இன்னைக்கு!”

“அண்ணா ஏனுங்ண்ணா இவ்ளோ கோவமா இருக்கீங்க, கொஞ்சம் அமைதியா...” என்றான், அந்த நேரத்திற்கு எங்கிருந்தோ வந்த குழந்தை.

“நீ ச்சும்மா இரு குழந்தை! நாயி, அவன் மண்டையப் பொளக்காம விடுறதுல்ல இன்னைக்கி, என்ன ஆனாலுஞ்சரி!”

இடைமறித்த நாகராஜ் மிகக் கடுமையான குரலில், “நிறுத்துறா! மொதல்ல என்ன நடந்துச்சு சொல்வியா? ச்சும்மா எகுறாங் கெடந்து?!”

நாகராஜின் கடுமையை எதிர்பார்த்திராத ஜெயச்சந்திரன், ”இல்லடா, நான் சனிக்கிழமை ஒரு கல்யாணத்துக்கு போக வேண்டி இருந்ததால வேலைக்கி வரல பாரு. அதுக்காக மனோகரங்கிட்ட லீவு கார்டைக் குடுத்து JB ரூம்ல போடச் சொல்லியிருந்தேன்!”

“சரீ, அதுக்கென்ன இப்போ?”

“Reason columnல நான் எழுதி இருந்த மேரேஜ்ங்றதுக்கு முன்னாடி மை வொய்ஃப்ங்றதைச் சேத்தி, மை வொய்ஃப் மேரேஜ்(my wife marriage)னு வர்றமாதிரி மாத்தி அவரு ரூம்ல போட்டுட்டான் இந்த நாயி. ரொம்ப மானக்கேடாப் போயிருச்சு தெரியுமா?”

அடக்கமுடியாத சிரிப்புடன் அண்ணன் நாகராஜும் குழந்தையும் ஆளுக்கொரு திசையாய் சிட்டெனப் பறந்தனர்!

35 comments:

குப்பன்.யாஹூ said...

I HEARD LMW IS CLOSED RECENTLY IN CBE, IS IT TRUE?

பழமைபேசி said...

//குப்பன்_யாஹூ said...
I HEARD LMW IS CLOSED RECENTLY IN CBE, IS IT TRUE?
//

nope.... it is still leading industry....

குடுகுடுப்பை said...

உமக்கு எப்படி அய்யா நேரம் கிடைக்குது.

vasu balaji said...

இவ்வளவு விலாவாரியா சொல்லிட்டு அந்த குழந்தை யாருன்னு சொல்லலையே?

அது சரி(18185106603874041862) said...

தலைப்பை பார்த்து பயந்துட்டேன் :0))

நசரேயன் said...

எழுதினாது நீங்களா!!!, my wife marriage ன்னு எழுதினாது நீங்களா

சின்னப் பையன் said...

இவ்வளவு விலாவாரியா சொல்லிட்டு அந்த குழந்தை யாருன்னு சொல்லலையே?

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
உமக்கு எப்படி அய்யா நேரம் கிடைக்குது.
//

உமக்கு எப்படியோ, அப்படியே அய்யா!

//பாலா... said//

இஃகி இஃகி!

//அது சரி said... //

எல்லாம் வீட்டு அம்மாவோட ஒப்புதலோடத்தான் அண்ணே! இஃகிஃகி!!

//நசரேயன் said... //
அவ்வளவுதான், அடிச்சுக் குருமா வெச்சி இருப்பாங்க அப்புறம்...

//ச்சின்னப் பையன் said... //
நானும் உங்களப் போலத்தாண்ணே!

வருண் said...

"என் திருமணத்தை" வித்தியாசமா "என் மனைவி திருமணம்" னு சொல்றீங்களானு பார்த்தேன் :-)))

அப்பாவி முரு said...

அந்தக் குழந்தையே நீங்கதான் சார். ...

ஆ.ஞானசேகரன் said...

//அடக்கமுடியாத சிரிப்புடன் அண்ணன் நாகராஜும் குழந்தையும் ஆளுக்கொரு திசையாய்ப் பறந்தனர்!//

என்ன குழந்த இப்படி பன்னிபுட்டீங்க

Mahesh said...

அந்தக் கொளந்தப் புள்ளையா இந்தப் பதிவப் போட்டுருக்கறது?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

முற்றிலும் வித்தியாசமான பதிவு....

தல அசத்துங்க..,

பழமைபேசி said...

//வருண் said...
"என் திருமணத்தை" வித்தியாசமா "என் மனைவி திருமணம்" னு சொல்றீங்களானு பார்த்தேன் :-)))
//

குண்டக்க மண்டக்க வேலை அல்ல இது!

தேவன் மாயம் said...

தலைப்பை இப்படி வைத்து திகிலூட்டிவிட்டீரே!

இவன் said...

:))))

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல நகைச்சுவை.

தீப்பெட்டி said...

:)))

ப்ரியமுடன் வசந்த் said...

//“Reason columnல நான் எழுதி இருந்த மேரேஜ்ங்றதுக்கு முன்னாடி மை வொய்ஃப்ங்றதைச் சேத்தி, மை வொய்ஃப் மேரேஜ்(my wife marriage)னு வர்றமாதிரி மாத்தி அவரு ரூம்ல போட்டுட்டான் இந்த நாயி. ரொம்ப மானக்கேடாப் போயிருச்சு தெரியுமா?”
//

ஹ..ஹ..ஹா

நம்ம கட்ச்சி

அன்புடன் அருணா said...

கலக்கிட்டீங்க!!!!

ரவி said...

ஜூப்பரு...........

RAMYA said...

அந்த குழந்தை நீங்கதானே
அதே சொல்லவே இல்லையே
கடைசி வரை :)

ரொம்ப நாட்கள் கழிச்சு வரேன்
ஏதேனும் தரக்கூடாதா அண்ணா :)

RAMYA said...

சிரிக்க வச்சி கொன்னுட்டீங்க போங்க :)

பழமைபேசி said...

@@வருண்
@@அப்பாவி முரு
@@Mahesh
@@SUREஷ் (பழனியிலிருந்து)
@@thevanmayam
@@இவன்
@@ஸ்ரீதர்
@@தீப்பெட்டி
@@பிரியமுடன்.........வசந்த்
@@அன்புடன் அருணா
@@செந்தழல் ரவி
@@RAMYA

மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிங்க! இஃகிஃகி, குழந்தை..நாந்தேன்...

Poornima Saravana kumar said...

தலைப்ப பார்த்து கொஞ்சம் ஆடிப் போயிட்டேன்:(

Poornima Saravana kumar said...

கதை அருமை அண்ணாச்சி அதுவும் அந்த நம்ம ஊரு பாஷை கலக்கல்:)

வில்லன் said...

//பிறவியிலேயே சற்று உயரமாய்ப் பிறந்ததின் பயனாய் நான்கு வயதிலேயே தன் வலக்கை தலைமேற்ச் சென்று மறுபக்கத்து காதைத் தொட்டுவிட, குடும்பத்து ஆசிரியர் அவனை ஐந்து வயதுப் பாலகனாக்கி பெயரையும் மாற்றி முதல் வகுப்பில் உட்கார வைத்துவிட//

சரியாய் சொன்னிங்க... அப்பல்லாம் யாரு பெர்த் சர்டிபிகேட் வாங்குனா........அப்ப பொறந்ததுக்கு இப்ப சர்டிபிகேட் வாங்க வேண்டி இருக்கு இங்க பச்சை அட்டை வாங்க.. கொடுமைடா சாமி.

வில்லன் said...

//நாகராஜ், மனோகரன், ஜெயச்சந்திரன் முதலானோர். இவர்கள் அனைவருமே குழந்தையைவிட ஆறிலிருந்து பத்து வயது மூத்தோர், எவருக்கும் திருமணம் ஆகவில்லை. நல்ல குணமுடைய, சுவாரசியமிக்க இளைஞர்கள், நல்ல நண்பர்களும்கூட!//

நண்பர்களும்கூட அப்படின்னா வார கடைசி தண்ணி கிண்ணி!!!!!! எல்லாமா!!!!!!!!!!

வில்லன் said...

//“Reason columnல நான் எழுதி இருந்த மேரேஜ்ங்றதுக்கு முன்னாடி மை வொய்ஃப்ங்றதைச் சேத்தி, மை வொய்ஃப் மேரேஜ்(my wife marriage)னு வர்றமாதிரி மாத்தி அவரு ரூம்ல போட்டுட்டான் இந்த நாயி. ரொம்ப மானக்கேடாப் போயிருச்சு தெரியுமா?”
அடக்கமுடியாத சிரிப்புடன் அண்ணன் நாகராஜும் குழந்தையும் ஆளுக்கொரு திசையாய் சிட்டெனப் பறந்தனர்! //

அருமை அருமை மீண்டும் பழமை தனது எழுத்து திறமையை நிருபித்து விட்டார்...

குறும்பன் said...

மனோகரன் அப்படின்னு பேரு வச்சிருக்கவங்களே இப்படிதான்... என்னங்க குழந்தை நான் சொல்லறது. இஃகி


ஜெயசந்திரனின் அப்போதய நிலமை சிரிப்பாதான் இருக்கு.LOL. என்ன இருந்தாலும் மனோகரன் இப்படி பண்ணி இருக்கக்கூடாது.

பழமைபேசி said...

//Poornima Saravana kumar said...
கதை அருமை அண்ணாச்சி அதுவும் அந்த நம்ம ஊரு பாஷை கலக்கல்:)
//

நன்றிங்க சகோதரி!

//வில்லன் said...
நண்பர்களும்கூட அப்படின்னா வார கடைசி தண்ணி கிண்ணி!!!!!! எல்லாமா!!!!!!!!!!
//

சரியாச் சொன்னீங்க... சகலமும் தானுங்க... கோவளம், மாகே, மங்களூர், கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம் இப்படி பல ஊர்களுக்கு அவங்களோட போனது, பலதும் தெரிஞ்சிகிட்டது..சுகமான சுவையான அனுபவம்... வயசு வித்தியாசம் பார்க்காம என்னையும் அவங்கள்ல ஒருத்தரா பாவிச்சதுக்கு நான் ரொம்பவும் கடமைப்பட்டு இருக்கேன்!

//குறும்பன் said...
ஜெயசந்திரனின் அப்போதய நிலமை சிரிப்பாதான் இருக்கு.LOL. என்ன இருந்தாலும் மனோகரன் இப்படி பண்ணி இருக்கக்கூடாது.
//

இது போல பல கலாட்டாக்கள்...அப்பப்ப எடுத்து விடுறேன் இருங்க...

Unknown said...

நல்ல கதையமைப்பு..

//.. இது போல பல கலாட்டாக்கள்...அப்பப்ப எடுத்து விடுறேன் இருங்க...//

எடுத்து விடுங்க.. நாங்களும் அப்பப்போ கொசுவர்த்தி பத்தவைக்கறோம்..

Karthikeyan G said...

:)))))

செல்லாதவன் said...

my wife marriage ன்னு எழுதினாது நீங்களா

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

ஆமா, சில வார்த்தைகள மாற்றி எழுதினால் அர்த்தமே மாறி விடும்.. :-)

தலைப்பும் பதிவும் அருமை!! அதுவும் நம்ம ஊரு (உடுமலை) தமிழ் அப்படியே!!