6/05/2009

சுயங்கிருதானர்த்தம்!

முதல்ல கொஞ்சம் கட்டையப் போட்டுட்டு, அப்புறமா ஆக வேண்டியதைப் பாக்கலாஞ் செரியா கண்ணுகளா? பாரு கண்ணூ, பரங்கிப் பழமயில Ego, Egoன்னுச் சொல்லிச் சொல்றாங்களே, அப்படீன்னா என்ன?

ஒருத்தர் ’நான்’, ’தனது’, ’என்’ இந்த மாதரயெல்லாம் தன்னையே பிரதானமா வெச்சிப் பேசறதும், அந்த நெனப்புல திரியறதுன்னும்ன்னு சொல்றாங்க. அதைத்தான் நம்ம தமிழ் சொல்லுது, ’கிருதா’ன்னு.

அவன் ஒரு கிருதா கொணங்(குணம்) கொண்டவன், அவன் ஒரு கிருதன்ன்னு சொல்றது. அர்த்தம், அனர்த்தம்ன்னு சொல்லிக் கேட்டு இருப்பீங்க. அர்த்தமுன்னா சுலுவுல தெரியும் உங்குளுக்கு! அனர்த்தம்ன்னா? தத்துபித்துன்னு தப்புத் தப்பா எதனாச்சும் பேசி வெக்கிறது. சுயம்ன்னா, தனக்குத் தானே!

இப்ப உங்குளுக்கு நான் என்ன சொல்ல வாறேன்னு தெரிஞ்சி போச்சாக்கூ? இஃகிஃகி! ஆமாங் கண்ணூ, என்னைப் பத்தி நானே, கிருதனாட்டம் அனர்த்தம் சொல்லப் போறேன். பொறுத்துகுங்க என்ன? நெம்பக் கோவம் வந்தா, அதுக்கு நாம்பொறுப்புக் கெடையாது! என்னைய இப்பிடி எழுதச் சொன்னவிங்க சிங்கப்பூரு ஞானியாரு, அவரை வெய்யுங்கோ, என்ன வேணுமின்னாலும் செய்யுங்கோ!! என்னிய உட்ருங்க செரியா??

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பழமைபேசிங்றதா? எங்க ஊர்ல பழமை பேசுறதுன்னா, திண்ணையில, பொடக்காளீல, கோயல்வாசல்ல, சத்திரத்துலன்னு பொதுவான எடங்கள்ல, காத்தோட்டமா ஒக்காந்து பேசுறதைச் சொல்றது கண்ணு. அதான், உங்ககோடெல்லாம் பழமை பேசுறவன்ங்ற அர்த்தத்துல பழமைபேசின்னு எனக்கு நானே வெச்சிகிட்டன்.

நெசப் பேரு கேக்குறீங்களா? எங்க பெரியண்ணம் பேரு பிரபாகரன், சின்ன அண்ணம் பேரு சந்திரசேகரன்; அதுனால, கரன்னு முடியோணுமின்னு எங்கப்பனாத்தா வெச்ச பேரு மனோகரன். ஆனா, எங்களுக்கு நெம்ப வேண்டப்பட்ட வாத்தியாரு ஒருத்தரு மணிவாசகம்ன்னு பள்ளிக்கூடத்துல காதைத் தொட்டுச் சேத்தும் போது எழுதிப்போட்டாரு. அதேவும் நெலைச்சும் போச்சு கண்ணூ. எனக்குமு புடிச்சுத்தான் இருக்குது.

2. கடைசியாக அழுதது எப்பொழுது?

அன்புப் பதிவரு அகநாழிகை, அவ்ரோட இடுகை ஒன்னுல ’இப்படிக்கு ரோசு’ன்னு சொல்லிச் சொல்ல, நான் அது யாருன்னு வலையில மேய, காணொளி ஒன்னு அகப்பட்டுது. சரி பாப்பமின்னு அதைப் பாக்க, அதுல எனக்குத் தெரிஞ்ச ஈழம் - உடுப்பிட்டி அக்காவுங்க மாதரயே, ஒரு சகோதரி கதைக்குறதப் பாத்தமுமே ஒரே அழுகாச்சி. நாள் பூராவுமு ஒளிஞ்சி இருந்து, ஒளிஞ்சு இருந்து அழுதனாக்கூ. அதுவுமு, அந்த சகோதரி தன்னோட சகோதரனைப் பத்தி சொல்லும் போது, எனக்கு தாங்க முடியல.



3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

நெம்பப் புடிக்கும்.

4.பிடித்த மதிய உணவு என்ன?

முருங்கைக்கா சாம்பாருமு, தயிருமு சோத்தோடொ!

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

என்ன கேளுவியிது? நட்புன்னாலே, மத்தவங்க கூடப் பழகுறதுதான?!

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

கண்ணூ, நான் கெராமத்துல பொறந்து வளந்தவன். எங்கூர்ல இந்த ரெண்டும்மில்லை. அதுனால, எனக்கு ரெண்டும் புடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

என்னியப் பாத்து அகோ சொல்றது, குறுஞ்சிரிப்பு சிரிக்குறது, இப்பிடி சொல்லுற வணக்கத்துக்கு எதோ ஒரு விதத்துல பதில் வருதான்னு கெவினிப்பேன்.

8.உங்ககிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

புடிச்சது, வெளிநாட்டுக்கு வந்து நெம்ப வருசங்களானாலும் இன்னியுமு ஊர் ஞாவகத்தை வெச்சிருக்குறது. புடிக்காதது, செஞ்ச தப்புகளையும் சேத்தி மறக்காம இருக்குறது.

9. உங்க சரிபாதி கிட்ட உங்களுக்கு பிடித்த, பிடிக்காத விஷயம் எது?

புடிச்சது பொறுமை; புடிக்காதது, வெகுளியா இருக்குறது.

10.யார் பக்கத்தில் இல்லாமல் இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்பா, அம்மா!

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை நெற பனியனாவு, நீல நெறத்துல சல்லடம்.

12. என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

இப்ப பாட்டுக் கேக்குலியே!

13. வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ஆகாயத்துல இருக்குற நீல நெறம்.

14.பிடித்த மணம்?

பழனி சித்தனாதன் துண்ணூறு வாசம்.

15. நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

குறும்பன்
ராஜ நடராஜன்

இவங்க நல்லா எழுதுறவங்க! ஆனா, எப்பவாச்சும் ஒரு இடுகைதான் இடுறாங்க, அதான் காரணம்; நான் இந்த இடுகை இடுறது, நிமித்தம்!!

16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

கேள்வியில பிழை இருக்கு. பிடித்த இடுகை எதுன்னு கேட்டு இருக்கோணும். சிங்கை ஞானியார் பதிவுல இருக்குற இடுகை எல்லாமே பிடிச்சு இருக்கு.

17. பிடித்த விளையாட்டு?

கபடி

18. கண்ணாடி அணிபவரா?

அல்ல!

19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

கிராமியச் சூழல்ல இருக்குற படம்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

எம்மக வரைஞ்ச குதரை!

21. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?

தென்பாங்குப் பூந்தமிழ்

22.உங்களுக்கு பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை. இது எல்லாமும் புடிக்கும். இது தவிர வேறெதுனா சத்தம் சொல்லி இருக்காங்களா கண்ணூ?!

23.பிடித்த பருவ காலம் எது?

மழலைப் பருவம்.

24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தமிழ்ல கேளுங்க, தெரிஞ்சா சொல்றேன்.

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?

பதினோராயிரம் மைல்கள்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

தனித் திறமைக்கும், பொதுத் திறமைக்கும் என்ன வித்தியாசமுன்னு தெரியலீங்களே.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

புருசனோட கண்ணாலம்.

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அளவு கடந்த நித்திரை.

29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?

மலையாள தேசம் பூராவுமு.

30. எப்படி இருக்கணும்னு ஆசை?

நோவு நொடி இல்லாம!

31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?

தூங்குறதுதான்!

32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?

வாழ்க்கை நல்லா இருந்தா, வாழ்வும் சிறப்பா இருக்கும்ன்னு நம்புறவன் நானு!

35 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

தலைப்பும் அதற்கு விளக்கமும் அருமை..

நம்ம ஊர் பொடக்காளிய ( அதான் பட்டி) கேட்டு ரொம்ப நாளாச்சு..

நேரம் இருந்தா நம்ம பக்கத்துக்கும் வந்துட்டுப் போங்க.

vasu balaji said...

நயம்கிருதார்த்தம்.

பழமைபேசி said...

//S Senthilvelan said...
தலைப்பும் அதற்கு விளக்கமும் அருமை..
//

நன்றிங்க!

//பாலா... said...
நயம்கிருதார்த்தம்.
//

பாலாண்ணே, எதிர்வினை நல்லா இருக்கு!!!

நசரேயன் said...

//24. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

தமிழ்ல கேளுங்க, தெரிஞ்சா சொல்றேன்.
//

நான் வரலை இந்த ஆட்டைக்கு

தமிழ் said...

அருமை

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் பழம,
வழக்கம் போல தமிழில் நல்லா இருக்கு....

சொல்லரசன் said...

ஏனுங்க, இந்த 18 வது கேள்விக்கு "இல்லை" என்ற பதில்தானுன்க செரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
நீங்க எப்படி நினைக்கறிங்க‌.

பழமைபேசி said...

//சொல்லரசன் said...
ஏனுங்க, இந்த 18 வது கேள்விக்கு "இல்லை" என்ற பதில்தானுன்க செரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
நீங்க எப்படி நினைக்கறிங்க‌.
//

எங்கெல்லாம் இருக்கு, உண்டு வருமோ அங்க மட்டுமே இல்லை வரும்.

சரியா? சரி அல்ல, சரி அன்று!
அவனா? அவன் அல்ல!
அதுவா? அல்ல.

பார்த்திருக்கிறாயா? இல்லை.
பார்த்தாயா? ஆம் அல்லது இல்லை.

நான் அவன் அல்ல!
நான் அவன் அன்று!
நான அல்லன்!

அணிபவரா? அணிபவன் அல்லன்!

வேத்தியன் said...

உங்க உண்மையான பெயர் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி...

வேத்தியன் said...

11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

வெள்ளை நெற பனியனாவு, நீல நெறத்துல சல்லடம்.
//

சல்லடம்ன்னா???
அர்த்தம் தெரியாது..
வழக்குத் தமிழிலுள்ள வார்த்தை சொல்லவும்..
:-)

வேத்தியன் said...

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்ச தொலைவு?

பதினோராயிரம் மைல்கள்.//


அதுக்கு மேல ஒரு மில்லிமீட்டர் கூட நகரலயோ???
:-)

வேத்தியன் said...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அளவு கடந்த நித்திரை.//

இதுல நானும் சேர்ந்துக்கிறேன்...
:-)

அகநாழிகை said...

அன்பின் பழமைபேசி,
தனித்துவமான நடைதான் உங்களின் சிறப்பு. அதையே இதிலும் நிருபித்திருக்கிறீர்கள்.
பழமைபேசி போல எழுத பழமைபேசியால் மட்டும்தான் முடியும்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

பழமைபேசி said...

//வேத்தியன் said...

சல்லடம்ன்னா???
அர்த்தம் தெரியாது..
வழக்குத் தமிழிலுள்ள வார்த்தை சொல்லவும்..
:-)
//

சல்லடம், Loose drawers; குறுங்காற்சட்டை.

பழமைபேசி said...

@@அகநாழிகை

நன்றிங்க நண்பரே!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

குஷி படத்தில

ஜோதிகாவுக்கு இருந்தது கிருதா தானா?

எவ்வளவு பெரிய கிருதா?

எம்.எம்.அப்துல்லா said...

//29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?

மலையாள தேசம் பூராவுமு.

//

என்ன சொல்ல வந்தீங்கன்னு நெம்பச் சரியாப் புடுஞ்சுக்கிட்டேன்

இஃகிஃகிஃகிஃகி

செந்திலான் said...

//எங்க ஊர்ல பழமை பேசுறதுன்னா, திண்ணையில, பொடக்காளீல, கோயல்வாசல்ல, சத்திரத்துலன்னு பொதுவான எடங்கள்ல, காத்தோட்டமா ஒக்காந்து பேசுறதைச் சொல்றது கண்ணு. அதான் //

எப்படியோ பன்னண்டாப்பு முடிச்சுட்டு என்ன பண்றதுன்னு தெரியாம பன்னீர் மச்சான் வாசல்யும்,கதர் கடையிலயும் வேனாயங் கோயில்லையும் உக்காந்துக்கிட்டு ஊர பறஞ்ச நாட்கள் ஞாபகம் வருதே ......................!!!!!!!!!!! அய்யகோஓஒ....!!!!

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
என்ன சொல்ல வந்தீங்கன்னு நெம்பச் சரியாப் புடுஞ்சுக்கிட்டேன்

இஃகிஃகிஃகிஃகி
//

அகஃகஃகா! அது ஏன் கேக்குறீங்க, ஒரு தடவை எர்ணாகுளத்துல நாங்கபட்ட பாடு இருக்கே? தலை தப்புச்சுறா சாமின்னு, மூனு கால் ஓட்டத்துல ஓடி வந்தோம்.

பழமைபேசி said...

@@செந்தில்

நல்லாக் கிளறி உட்டனாக்கூ? இஃகிஃகி!!

பழமைபேசி said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
குஷி படத்தில

ஜோதிகாவுக்கு இருந்தது கிருதா தானா?

எவ்வளவு பெரிய கிருதா?
//

சரியாப் பிடிச்சிட்டீங்க...

ராஜ நடராஜன் said...

நான் நாளைக்கு வாரேன்.ஊர் சுத்திகிட்டு இருக்கேன்.

பதி said...

//நெம்பக் கோவம் வந்தா, அதுக்கு நாம்பொறுப்புக் கெடையாது! //

படிக்குற நாங்க தான் பொறுப்பு !!!!

1ம் 2ம் அருமையான பதில்கள் !!!!!

குறும்பன் said...

எனது அடுத்த இடுகை தாமதமாக வருவதற்கு பழமையாரே காரணம் என்பதை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த இடுகை பற்றி அப்புறம் கருத்து சொல்லப்படும் என்பதை பழமையாருக்கு சொல்லுகிறோம். கோயிலுக்கு போக நேரமாச்சுங்க.

ப்ரியமுடன் வசந்த் said...

தங்களைப்பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

மணி,

உங்களை நான் மணி என விளிக்கும்போதெல்லாம் மிகுதி என்ன என்று கேட்கத் தோன்றும். :D

இண்டைக்கு அறிஞ்சாச்சு.

பதிலெல்லாம் மிக நல்லாருக்கு.

மதுவதனன் மௌ.

தீப்பெட்டி said...

//அயோத்தி, மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை//

இங்கு சத்தத்துக்கு என்ன அர்த்தம்?

குடுகுடுப்பை said...

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

அளவு கடந்த நித்திரை.

//
திங்கள் முதல் வியாழன் வரை.

குடுகுடுப்பை said...

எம்.எம்.அப்துல்லா said...

//29. உங்களுக்கு பிடித்த சுற்றுலாத்தலம்?

மலையாள தேசம் பூராவுமு.

//

என்ன சொல்ல வந்தீங்கன்னு நெம்பச் சரியாப் புடுஞ்சுக்கிட்டேன்

இஃகிஃகிஃகிஃகி//

நம்மள மாறி நல்லவங்களுக்கு சரியா புரியும்னே.

பழமைபேசி said...

@@ராஜ நடராஜன்

அழைப்பை மதிச்சு, இடுகை இட்டதுக்கு நன்றிங்கோ!

@@பதி

சரியாச் சொன்னீங்க பதி!

@@குறும்பன்

கோயல்லயே அவிசாயந் தளிகை தாறங்கன்னுச் சொல்லி, இருந்தர்றதா? சித்த திலிம்பி வாங்கோ...

@@பிரியமுடன்.........வசந்த்

நன்றிங்கோ!

@@மதுவதனன் மௌ.

அட...இத்தினி நாள் தெரியாமலா இருந்தீங்க? நன்றிங்க!

@@தீப்பெட்டி

சத்தம் அப்பிடீன்னாங்க, எண்ணிக்கையில் ஏழு கொண்ட எதுவும். இஃகிஃகி!

@@குடுகுடுப்பை

வாங்கண்ணே!

குறும்பன் said...

"கிருதா"வுக்கு புது பொருள் தெரிந்தது.

மனோகரா..... உங்களப்பத்தியும் தெரிந்தது.

நா. கணேசன் said...

முருகனைத் திருப்புகழ்
மனோகரன் என்கிறது!

http://groups.google.com/group/santhavasantham/msg/8b712b465f7fafa2

பழமைபேசி said...

//நா. கணேசன் said...
முருகனைத் திருப்புகழ்
மனோகரன் என்கிறது!
//

மிக்க மகிழ்ச்சிங்க அண்ணா! மேலதிகத் தகவலுக்கு நன்றியும்!!

பழமைபேசி said...

//குறும்பன் said...
"கிருதா"வுக்கு புது பொருள் தெரிந்தது.

மனோகரா..... உங்களப்பத்தியும் தெரிந்தது.
//

இஃகி!

Anonymous said...

"பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு"
என்பது குறள்.

பழமை வேறு பழைமை வேறு.