6/08/2009

தலைவர்களுக்குத் திறந்த மடல்!

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே,
புரட்சித் தலைவி வெற்றிகொள்அம்பிகை அவர்களே,
புரட்சிக் கலைஞர் வெற்றிச்செல்வன் அவர்களே,


எங்கள் செந்தமிழ் நாட்டில், மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் நீங்கள் மூவருமே! இது எந்த தனி மனிதனின் விருப்பு வெறுப்பின் அடிப்படையிலும் தெரிவானது அல்ல. மக்களாட்சிக் கோட்பாட்டின் அடிப்படையிலான தேர்தலில், மாநிலந் தழுவிய மக்களால் தெரிவான ஒன்று. உங்கள் மூவருக்கும் முதற்கண் வணக்கங்களை உரித்தாக்குகிறேன்!

தமிழ்நாட்டில் இல்லாத இவனுக்கு, பொதுமடல் எழுத என்ன முகாந்திரம் இருக்கிறது என்று நீங்கள் வினவலாம். மேலை நாடுகளில், புலம் பெயர்ந்து வாழும் வாக்களர்களுக்குத் தரும் வாக்குரிமையைப் போன்று, இந்தியாவிலும் கொடுத்தால் என்னவென்று எந்த அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம் யோசிக்கிறதோ, அதே அடிப்படையில் எழுதுவதுதான் இந்த மடல்.

இன்றைக்குத் தமிழ்நாட்டிலே, எந்த ஒரு தனிமனிதனும் தனது வசதிக்கேற்ப கட்சி துவங்கி, தேர்தலில் பங்கு பெறலாம் என்கிற நிலை கோலோச்சுகிறது. அதன் விளைவாய், தான் நடித்ததில் மூன்றாவது அல்லது நான்காவது திரைப்படம் வெற்றி பெறும் போதே, கட்சிக்கு பெயர் தேடும் பணிக்கு ஒப்பந்தப் புள்ளி கோரும் வழக்கம் வந்து விட்டதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாதி என்றால் மனம் கூச்சப்படுகிறதென்று, சமூகமாகிவிட்ட அந்த மக்கள்த் திரள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கட்சி. வசதி வாய்ப்பு வாய்க்கும்பட்சத்தில் இரண்டு அல்லது மூன்று கட்சிகள். இந்த மக்கள்த் திரள்களில் உள்ள மூத்தோர், இளையோரைக் கட்சி துவக்க வாய்ப்பளிக்க விடாமல் அவர்களே கட்சிகளைத் துவக்கி ஆக்கிரமித்துக் கொள்வதால், புது மக்கள்த் திரள்களை உருவாக்குவது எப்படி என்று தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவர் முழு வீச்சில் புத்தகம் எழுதி வருவதாகவும் நம்பகமான செய்திகள் கூறுகின்றன.

நிலமை இவ்வாறிருக்க, தமிழகம் எங்கும் வியாபித்திருக்கிற மற்றும் வரப்போகிற எண்ணற்ற கட்சிகளால் மக்கள் சலிப்படைந்து வருவதையும் அறிய முடிகிறது. அதன் விளைவாய், அதிகப்படியான கட்சிகளால் மக்களுக்கு ஏற்படும் பாதகங்கள் என்னென்ன என்று ஆராய்ந்து பார்த்ததில், நமக்குத் தெரிந்தது கீழே வருமாறு:

1. சமூகப் பிரச்சினைகளுக்கு யாரை அணுகுவதென்றே தெரியவில்லை.

2. உணர்வுப் பூர்வமான பிரச்சினை என்றால், ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அதைக் கையிலெடுத்துக் கொண்டு, ஊதிப் பெரிதாக்கிப் பெரிதாக்கி, இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களையே அழித்தொழிக்கிற அவலம்.

3. கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு அறிவிக்கும் போராட்டங்களினால், வெகுசன மக்களுக்கு பெருத்த கால விரயம் மற்றும் பணநட்டம்.

4. ஒற்றுமையாக இருக்க வேண்டிய சமூகம், பல பிரிவுகளாகப் பிரிந்து அல்லல்படுகிறார்கள்.

5. ஒவ்வொரு கட்சியும் தனக்கென காணொளி அலைகள் வைத்திருப்பதால், நம்பகமான செய்திகள் கிடைக்கப் பெறுவதில்லை. அதில் ஏற்படும் குழப்பத்தின் காரணமாய் பல சிக்கல்கள்.

6. கட்சியை மாற்றச் சொன்னார்கள். பிறகு பிடித்த நடிகனை மாற்றச் சொன்னார்கள். இப்போது இல்லாத சாதியையும் மாற்றச் சொல்கிறார்கள். மாநில எல்லையில் இருப்போரை, இனத்தையும் மாற்றச் சொல்கிறார்கள். இப்படி மாறி மாறி, மாறுவதே ஒரு கூடுதல் தொழிலாக ஆனதினால், பொது மக்களுக்கு கூடுதல் பணிச்சுமை.

7. எண்ணற்ற கட்சிகள் இருப்பதால், அரசியல் ரீதியாகக் கொள்கை கோட்பாடுகளுடன் இருந்த நீங்களும், பொறுப்பு(accountability)லிருந்து தப்பித்து உங்கள் கட்சியின் அடிப்படைக் கோட்பாடுகளையே காற்றில் பறக்கவிட்டு வருகிறீர்கள்.

இதைப் போல நிறைய பாதகமான அம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இருந்தாலும் உங்களுடைய நேரத்தை வீணடிக்க விரும்பாததால், நேரடியாக விசயத்துக்கு வருகிறோம். மக்களாட்சித் தத்துவத்தின்படியும், தனிமனித உரிமைகளின்படியும் நாம் எவரையும் கட்சி ஆரம்பிக்க வேண்டாமென்றோ, இருக்கும் கட்சியைக் கலைத்து விடும்படியோ வற்புறுத்த முடியாது, வற்புறுத்தவும் கூடாது. எனவேதான் உங்களுக்கு இந்த மடல்!

ஆமாம். நீங்கள் மூவரும் மனமாச்சரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஏற்கனவே, மத்திய நிதியை மாநிலங்களுக்கு ஒதுக்குவதில், அந்தந்த மாநிலங்களின் பங்களிப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதில் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். பாராட்டுகள்!

அது போலவே, தேசியக் கட்சிகள் தவிர மற்ற சிறு சிறு கட்சிகளுடன் உடன்பாடு கொள்ளாமல் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என உங்கள் தலைமையிலான கட்சிகள் ஒருமித்த முடிவு மேற்கொள்ள வேண்டும். இதனால், சிறு அளவிலான கட்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும். மேற்கூறிய பாதகமான அம்சங்களும் ஒழிந்து போகும். செய்வீர்களா?

இல்லாவிடில், தமிழ்ச் சமுதாயம் மேலும் பிரிந்து பிரிந்து சிறு சிறு குழுக்களாக ஆவதில் இருந்து தப்பவே முடியாது. தமிழனைச் சீர்குலைத்த பழி பாவம் உங்களையே வந்தடையும். மாநிலந் தழுவிய ஆதரவு இல்லாத கட்சிகள், வெறும் துணைநிலை குழுக்களே!

அவர்களின் ஆதரவு தேவைப்படுமாயின், அவர்களுக்கு ஆதரவு உள்ள பகுதிகளின் உள்ளாட்சி அதிகாரங்களை அவர்களுக்கு அளிக்கலாம். அவர்களும் கைமாறாக, அவர்களது ஆதரவினை சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் உங்களுக்கு அளிக்கலாம்.

இதன் மூலம், அவர்களும் சமுதாயக் கடமை ஆற்றுவதில் பங்கு பெற முடியும். சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில், கணக்கு அடிப்படையிலான முடிவு அல்லாது, மக்களின் நேரிடையான முடிவு வெளிப்படும். உங்களுக்கும் களப்பணி ஆற்றுவது எளிமையாக இருக்கும். எனவே, இவ்விசயத்திலும் ஒன்றிணைந்து செயல்படுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்களுக்கு:

இந்த மடல் எழுதியவனுக்கும் உங்களுக்கும் உள்ள தோழமை அல்லது பகைமையக் கருத்தில் கொள்ளாது, சிறு சிறு கட்சிகள் நாட்டிற்கு இம்சை என்று கருதினால் தமிழ்மணப் பட்டையில் உள்ள மேல்நோக்கில் ஒப்பமுக்குங்கள்! சிறு கட்சிகளின் பங்களிப்பு தேர்தலில் தேவை எனக் கருதினால், கீழ்நோக்குப் பொத்தானில் ஒப்பமுக்குங்கள்!!

இதன் மூலம் வாசகர் கருத்து வலையுலகினருக்கும், மேற்கூறிய தலைவர்களுக்கும் தெரிய வருமன்றோ? ஆகவே கட்டாயமாக உங்கள் கருத்தை ஒப்பமுக்குவதின் வழியாகத் தெரிவித்துச் செல்லுங்கள்!

33 comments:

நசரேயன் said...

நான் மேல் நோக்கி ஓட்டு போட்டேன்

ILA (a) இளா said...

நான் மேல் நோக்கி ஓட்டு போட்டேன்

குறும்பன் said...

சிறு சிறு கட்சிகள் நாட்டிற்கு இம்சை என்று நான் கருதவில்லை.

பழக்கத்துல மேல் நோக்கி குத்திட்டேன். இஃகிஃகி

அது சரி(18185106603874041862) said...

//
இந்த மடல் எழுதியவனுக்கும் உங்களுக்கும் உள்ள தோழமை அல்லது பகைமையக் கருத்தில் கொள்ளாது, சிறு சிறு கட்சிகள் நாட்டிற்கு இம்சை என்று கருதினால் தமிழ்மணப் பட்டையில் உள்ள மேல்நோக்கில் ஒப்பமுக்குங்கள்! சிறு கட்சிகளின் பங்களிப்பு தேர்தலில் தேவை எனக் கருதினால், கீழ்நோக்குப் பொத்தானில் ஒப்பமுக்குங்கள்!!

//

எந்த கொள்கையும் இல்லாமல் ஜாதி ஒன்றையே பிரதானமாக கொண்டு கட்சி ஆரம்பிப்பதால் ஆரம்பித்தவனுக்கும் அவனது மனைவி, மகன், மகள், பேரன், பேத்தி, அக்கா பையன், அக்கா பையனோட ஒண்ணுவிட்ட சகலை மகன்,இப்பிடியே அடுத்து ஏழு தலைமுறைகள் தவிர வேறு யாருக்கும் பலன் இல்லை என்பதால் சிறு கட்சிகள் இம்சையே என்ற உங்கள் கருத்தை ஆதரிக்கிறேன்....

அதனால் ஓட்டு உண்டு..

(ஆனா அண்ணே, நீங்க அரசியலுக்கு லாயக்கு இல்லீங்கோ!)

இராகவன் நைஜிரியா said...

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

நானும் மேல் நோக்கித்தான் ஓட்டுப் போட்டேன்.

தமிழிஷிலும் ஓட்டு போட்டாசுங்க...

பழமைபேசி said...

@@நசரேயன் ஐயா
@@ILA ஐயா
@@குறும்பன் ஐயா
@@அது சரி ஐயா
@@இராகவன் நைஜிரியா

வாக்கெடுப்புல கலந்துகிட்டவங்களுக்கும் உங்களுக்கும் நன்றிங்கோ!

குடுகுடுப்பை said...

நல்லா சிந்திக்கறீங்க , ஆனா அது சரி சொன்ன மாதிரி நீங்க அரசியலுக்கு லாயக்கு இல்லை. பேசாமா கு.ஜ.மு.க வில சேந்துருங்க.

பழமைபேசி said...

//குடுகுடுப்பை said...
நல்லா சிந்திக்கறீங்க , ஆனா அது சரி சொன்ன மாதிரி நீங்க அரசியலுக்கு லாயக்கு இல்லை. பேசாமா கு.ஜ.மு.க வில சேந்துருங்க.//

ஆகட்டும்ண்ணே!

Mahesh said...

திறந்த மடல் எழுதி நாமளே திருப்தி பட்டுக்க வேண்டியதுதான்.... குடும்பப் ப்ரச்னைகளே கழுத்து வரைக்கும் இருக்கும்போது மக்கள் ப்ரச்னையாவது மண்ணாங்கட்டியாவது !!!

சரத்பாபு மாதிரி ஆளுகளுக்கு டெபாசிட்டை காலி பண்ணிட்டு இன்னும் இந்த கழகக் கழுதைகளை நம்பிக்கிடுருக்கோம் பாருங்க.... நம்மளை எதால அடிச்சா தேவலாம்??
:(

ஆ.ஞானசேகரன் said...

அரசில இதேல்லாம்....
இதுக்குபோய் மடலெல்லாம் எதுக்கு பழம?

மடலெல்லாம் கணக்குலே வரதுப்பா

பழமைபேசி said...

@@Mahesh

அகஃகா... மாற்றம்ங்றது தனி மனுசங்கிட்ட இருந்தல்லவா வரணும்... நாம சாதி, மதம், அது, இதுன்னு போகப் போக அவிங்க குளிர் காயத்தாண்ணே செய்வாங்க? வருத்தமாத்தான் இருக்கு... சாதி அடிப்படையில மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கேக்குறவனுக்கு இவங்க மேல்... இது என்னோட தனிப்பட்ட கருத்து!

@@ஆ.ஞானசேகரன்

மடல்ல ரெண்டு விசயம் இருக்குங்க... ஒன்னு பாராட்டு, ரெண்டாவது நமக்குள்ள ஒரு புரிதல்... அவ்வளவுதான்... மத்தபடி அவிங்க இதை படிப்பாங்கன்னா எழுதுறது?!

*இயற்கை ராஜி* said...

நானும் மேல் நோக்கி ஓட்டு போட்டுட்டேன்

தேவன் மாயம் said...

எழுத்து சும்மா நச்சுன்னு இருக்கு!! நோகாம குத்திட்டீங்க!!

vasu balaji said...

குறைந்த பட்சம் வாசகர்கள் ஒரே கருத்துடையவர்களாய் ஒன்று பட்டிருக்கோம். சரியான கருத்துக்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

ஒப்பம்

:)

Mahesh said...

/பழமைபேசி said...
@@Mahesh

அகஃகா... மாற்றம்ங்றது தனி மனுசங்கிட்ட இருந்தல்லவா வரணும்... நாம சாதி, மதம், அது, இதுன்னு போகப் போக அவிங்க குளிர் காயத்தாண்ணே செய்வாங்க? வருத்தமாத்தான் இருக்கு... சாதி அடிப்படையில மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கேக்குறவனுக்கு இவங்க மேல்... இது என்னோட தனிப்பட்ட கருத்து!
//

அண்ணே வாஸ்தவந்தான்... மாற்றம் தனிமனுசங்க கிட்ட இருந்துதான் வரணும்... சந்தேகமேயில்ல.. மாற்றத்துக்கான வாய்ப்புகள் இருந்தபோதும் உபயோகப்படுத்திக்கலயே :(

அடுத்த 5 வருஷ வாழ்க்கையை விட அடுத்த வேளை பிரியாணி உசத்தியாப் போற அளவுக்குதானே வாழ்க்கைத் தரம் இருக்கு 62 வருஷத்துக்கு அப்பறமும்.

மக்கள் குளிர் காய சாதி, மதம்னு ஒரு மணி நேரமே எரியற விறகு போடறவங்க யாரு? நல்ல வாழ்க்கைத் தரம், கல்வி, வேலை வாய்ப்புன்னு பல காலம் பயனளிக்கிற சூரியன்களை இல்ல குடுக்கணும்?

SUBBU said...

போட்டாச்சி, போட்டாச்சி :)))))))))))))))))

தீப்பெட்டி said...

//அவர்களின் ஆதரவு தேவைப்படுமாயின், அவர்களுக்கு ஆதரவு உள்ள பகுதிகளின் உள்ளாட்சி அதிகாரங்களை அவர்களுக்கு அளிக்கலாம். அவர்களும் கைமாறாக, அவர்களது ஆதரவினை சட்டமன்ற, பாராளுமன்றத் தேர்தல்களில் உங்களுக்கு அளிக்கலாம்//

இதுதான் சரியான தீர்வு..
ஆனா இதெல்லாம் நடக்கனும்னா உங்க கையில மந்திரக்கோல் இருக்கணும்...
பிரச்சனை என்னன்னா எல்லோர் கையிலும் மந்திரக்கோல் இருப்பதுதான்...

ராஜ நடராஜன் said...

//எங்கள் செந்தமிழ் நாட்டில், மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் நீங்கள் மூவருமே!//

மற்ற இருவரும் விருப்பு,வெறுப்புகளுக்கு உட்பட்டவர்கள் என்றாலும் விஜயகாந்த் இன்னும் பரிட்சைக் கூடத்தில் மட்டுமே உட்கார்ந்திருக்கிறார்.

ராஜ நடராஜன் said...

சும்மா நீள நீளமா பின்னூட்டம் போட்டுகிட்டுருந்தவனை ஓட்டுப் போட சொல்லிக் கொடுத்திருக்கீங்க.ஓட்டுப் போட்டுட்டேன்.

(ஆனா தமிலிஷ் சொல்ற பின்னூட்ட ஆங்கில தமிழ்தான் மண்டைய காய வைக்குது)

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

போட்டாச்சு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்ல கருத்துக்கள்

காலதாமதமானாலும் தமிழீஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டுவிட்டேன்

பழமைபேசி said...

//இய‌ற்கை said...
நானும் மேல் நோக்கி ஓட்டு போட்டுட்டேன்
//

நன்றிங்க!

//thevanmayam said...
எழுத்து சும்மா நச்சுன்னு இருக்கு!! நோகாம குத்திட்டீங்க!!
//

இஃகிஃகி! நன்றிங்க!!

//பாலா... said...
குறைந்த பட்சம் வாசகர்கள் ஒரே கருத்துடையவர்களாய் ஒன்று பட்டிருக்கோம். சரியான கருத்துக்கள்.
//

ஆமாங்கண்ணே! நன்றிங்க!!

// எம்.எம்.அப்துல்லா said...
ஒப்பம்

:)
//
அண்ணே, வாங்க வாங்க!!

பழமைபேசி said...

//Mahesh said...
நல்ல வாழ்க்கைத் தரம், கல்வி, வேலை வாய்ப்புன்னு பல காலம் பயனளிக்கிற சூரியன்களை இல்ல குடுக்கணும்?
//

இஃகிஃகி, அடுத்த தேர்தல்ல இலை வந்திடும்...

பழமைபேசி said...

//SUBBU said...
போட்டாச்சி, போட்டாச்சி :)))))))))))))))))
//

நன்றிங்க!

//தீப்பெட்டி said... //

பின்னிப் படல் எடுத்துட்டீங்க!

@@ராஜ நடராஜன்
@@ஸ்ரீதர்
@@SUREஷ் (பழனியிலிருந்து)

நன்றிங்க மக்கா!

ttpian said...

எவனெல்லாம் தமிழ் இனத்தை காட்டிகொடுத்து தன்னையும் தனது குடும்பத்தையும் வளர்க்கிரானோ,
அவனும் அவன் குடும்பமும், விரைவில் கல்லடி படும்...இது உருதி....
தமிழன் உறக்கம் இன்னமும் கலயவில்லை...
கலயும்போது?

Mahesh said...

//பழமைபேசி said...

//Mahesh said...
நல்ல வாழ்க்கைத் தரம், கல்வி, வேலை வாய்ப்புன்னு பல காலம் பயனளிக்கிற சூரியன்களை இல்ல குடுக்கணும்?
//

இஃகிஃகி, அடுத்த தேர்தல்ல இலை வந்திடும்...
//

என்னாண்ணே இப்பிடி பொசுக்குனு சொல்லிட்டீங்க? நீங்களுமா? நான் நிஜமாவே வேதனையோட சொல்லறேன் :(((

பழமைபேசி said...

//Mahesh said...
என்னாண்ணே இப்பிடி பொசுக்குனு சொல்லிட்டீங்க? நீங்களுமா? நான் நிஜமாவே வேதனையோட சொல்லறேன் :(((
//

ச்சும்மா உங்களோட டமாசு, டமாசு!
:-)))

priyamudanprabu said...

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களே,
புரட்சித் தலைவி வெற்றிகொள்அம்பிகை அவர்களே,
////

hi hi hi

priyamudanprabu said...

உணர்வுப் பூர்வமான பிரச்சினை என்றால், ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் அதைக் கையிலெடுத்துக் கொண்டு, ஊதிப் பெரிதாக்கிப் பெரிதாக்கி, இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களையே அழித்தொழிக்கிற அவலம்.
/////

ஆமாங்க ஆமா

பழமைபேசி said...

@@பிரியமுடன் பிரபு

ஆளே காணோம் நெம்ப நாளா?

priyamudanprabu said...

பழமைபேசி said...
@@பிரியமுடன் பிரபு

ஆளே காணோம் நெம்ப நாளா?
///
\

பழமைபேசி said...
@@பிரியமுடன் பிரபு

ஆளே காணோம் நெம்ப நாளா?

priyamudanprabu said...

பழமைபேசி said...
@@பிரியமுடன் பிரபு

ஆளே காணோம் நெம்ப நாளா?
/////

நான் அப்படித்தான் அடிக்கடி காணமல் போய் மீண்டும் வருவேன்