5/31/2009

’சூச்சூ’வும, பதிவர் அண்ணனும்!

இராணி மகாராணியும், அசத்தப் போவது யாருவும் கண்டு களித்துவிட்டு, பின் வலையில் மேய்ந்து, அளவளாவி, இடுகையிட்டுப் பின் விடிகாலையில் துயில் கொள்ளப் போய், ஆற அமர எழுந்து, பின் பிற்பகற்க் கடன்களாகிப் போன காலைக் கடன்களைக் கழித்த, ஞாயிறு பிற்பகல் நான்கு மணியந்தக் கணம்.

தங்க மனசுக்கு சொந்தக்காரன், வளர்ந்து வரும் இளம் பாடகன், அண்ணே அண்ணேயென்று பேச்சுக்குப் பேச்சு நெக்குருகி சிலாகிக்கும் அன்புக்குத் தாசனவன், தமிழெனும் இனிமையே அவனானவன், இந்த கதையின் நாயகன் அப்துல்லா! புதுகை அப்துல்லா!!

எழுந்து, முனகிய பாடலுடன் நீராடி, பின் தொழுது, அறை சாத்திவிட்டு, தன் பிரம்மரதமான சொகுசுந்து (plessure car) நோக்கி விருட்டெனச் செல்கிறான்; அப்போதும் பாடல் முணுமுணுப்புத்தான். திறவுகோல் செலுத்தியதில், சொகுசுந்துவின் முன் கதவு திறவுபட, சட்டென ஏதோ நினைவுக்கு வந்தவனாய் அருகில் இருந்தவரிடம்,

“அண்ணே, வணக்கம்ண்ணே! வண்டியில முன் இருக்கைகிட்ட அண்ணன் தொடுதோல்ல இருந்த மண் கொட்டிக் கிடக்கு!”

“இல்லீங்க தம்பீ, நான் உங்ககூட வரவே இல்லீங்களே?”

”ஆமாண்ணே, நேத்து இராத்திரி இன்னொரு அண்ணன் வந்தாரு, அவரோட...”

“இதென்னங்க தம்பீ, இப்பச் சுத்தம் செய்துதாரேன்!”

அங்கிருந்த அடுக்ககப்(apartment) பணியாளர், நாயகனின் பிரம்மரதத்தைத் துப்புரவாக்கித் தரவும், இரதம் ஆடாமல் அசையாமல், மெளனமே நாதமாய் மெள்ள மெள்ள நகர்ந்து அடுக்ககத்தை விட்டு வெளியில் வந்து, சாலையினுள் நுழைந்தது.

பச்சைநிறக் குடைகள் தொடர்ந்து அணிவகுத்தது போல, சாலையின் இரு மருங்கிலும் அலங்காரக் கொண்டை மரங்கள். குடைகளின் அந்த பச்சைநிற மேற்கூரையில், ஆங்காங்!கே இளஞ்சிவப்பு நிறத்தில் கண்களைக் கொள்ளை கொள்ளும் மலர்கள். குடையின் உள்க்கம்பிகளில் இருந்து தொங்கும் தட்டை வாள்கள்.

மரத்தின் அந்தத் தட்டையான காய்களை வாளாக ஏந்தி, நண்பர்களோடு யுத்தம் புரிந்த இனிமைப் பொழுதுகள் நம் நாயகனுக்கு நினைவு வர, வண்டியின் வேகம் குறைய, பின்னாலிருந்து ஒரு அழகு தேவதையின் குரல், சொகுசுந்துவின் மூடிய கதவுகளையும் ஊடுருவிக் கொண்டு,

“என்னா, இராத்திரியில தொங்கல்லவுட்டுப் போய்ட்டாளா அவ? Don't worry dear, some one will be there for you! May God Bless you!!"


என்றவாறு சர்ரென்று ஓடி மறைந்தது சென்னப்பட்டணத்தின் இலட்சங்களில் ஒன்றான அந்தத் துள்ளுந்து(motor cycle). நாயகனுக்கு வெட்கத்தோடு ஒரு புன்முறுவல். முடுக்கு விசையை முடுக்க, பிரம்மரதம் இலக்கை நோக்கி விரைந்தது.

நெல்சன் மாணிக்கம் சாலையில் ஊர்ந்து, பின் இரயில்வேக் கண்டாயம்(Railway Colony) குறுக்குத் தெரு 12க்கு, சாலையில் இருந்து வலது புறமாக நுழைகிறது நாயகனின் பிரம்மரதம்.

“என்ன அழகாகப் பராமரிப்புச் செய்து வெச்சிருக்காங்க. ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாடியும் அழகழகாப் பூஞ்செடிகள், காலையில போட்ட வண்ணக் கோலங்கள், இந்தப் பக்கம் நமக்கு எந்த அண்ணனும் இல்லையே? இருக்கட்டும், சீக்கிரத்துல ஒரு அண்ணனைப் புடிச்சுப் போட்டுறணும்!” என்று என்ணியபடியே இரதத்தை 44/10 எண்ணுள்ள அந்த சிறு மாளிகையின் முன் சருக்குக்கட்டை(brake) இட்டு நிறுத்தி, இறங்கி வருகிறான் நாயகன் அப்துல்லா.

நுழைவாயிலில் அழைப்பு மணியை அமுக்கவும், நடுத்தர வயதில் அவர், ”நீங்க?”

“அண்ணே வணக்கம்! நான் அப்துல்லா, புதுகை அப்துல்லா! பேசும் நாய் விற்பனைக்கு இருக்குன்னு சொன்னது நீங்கதாண்ணே?”

“ஓ ஆமாமா, வாங்க அப்துல்லா, வாங்க!”

”மொதல்ல போயி அவனைப் பாத்துடறீங்களா?”

“சரீங்கண்ணே!” என்று அவர் கைகாட்டிய திசை நோக்கி நாயகன் அப்துல்லா செல்கிறார். வீட்டின் உரிமையாளர், அவர் கையிலிருந்த Indian Express நாளிதழில் படித்துக் கொண்டிருந்ததைத் தொடர்கிறார்.

“ப்ளொள்!”

“நாய் பேசும்ன்னு சொன்னாங்களே? இங்க யாரும் இல்லையா?”

“ஆமா, இங்க யாரும் இல்லை!”

ஆகா, இந்த நாய் பேசுகிறது என்று மனதில் எண்ணியபடியே நாயகன் அப்துல்லா, ”உம் பேரு என்னண்ணே?”

“சூச்சூ!”

“நல்லாயிருக்கு! எங்க நர்சிம் அண்ணனுக்குத் தெரிஞ்சா, ரொம்ப சந்தோசப்படுவாரு!”

“ஓ!”

“ஆமா, தினமும் உனக்கு எப்படிப் பொழுது போகுது?”

“அதென்ன பிரமாதம்? காலையில எழுந்து, வீட்டுக்கு நாந்தான் குழாயில இருந்து தண்ணியடிச்சு கொண்டாந்து ஊத்துவேன்! அப்புறம், பக்கத்து வீட்டு மாமிக்கு பால் பொட்டலம் வாங்கியாந்து தருவேன்!”

“அட, நல்லாயிருக்கே? சொல்லு, சொல்லு!!”

“அப்புறம் இந்த கடைக்குப் போயிட்டு வர்றது, வங்கியில காசோலை போடுறதுன்னு வீட்டு வேலை சரியா இருக்கும்!”


உரையாடலில் மகிழ்ந்த அப்துல்லா, இந்த நாயையே வீட்டுக்கு வேலைக்கும் வைத்துக் கொள்ளலாம் என்கிற யோசனையில், தன் வீட்டு வேலைக்கு வரச் சொல்லியிருந்த பையனின் அப்பாவான தன்னாசியை அழைத்து, இப்போதைக்கு வேலைக்கு ஆள் தேவையில்லை எனச் சொல்லி விட்டு, சூச்சுவின் எசமானரை நோக்கி நகர்ந்தான்.

”அண்ணே, நல்ல திறமையான சூச்சு! நல்லாப் பேசுது. அப்புறம் ஏன் அண்ணே விக்குறீங்க?”

“அதான் தம்பி பிரச்சினையே! அவன் வாயைத் திறந்தா, பேசுறது எல்லாமே பொய்!”

“?!?!”

அதே நேரத்தில், ”இந்த ஆள்கிட்ட பையனை வேலைக்கு சேத்தி விடுறதுல வர்ற முன்பணம் ரெண்டாயிரத்தை வாங்கி, அவளுக்குக் குடுத்திடலாம்ன்னு இருந்தேன். இப்படிக் காலை வாரி வுட்டுட்டானே? இனி அவ வீட்டுக்கே வந்து தகராறு பண்ணுவாளே? பொண்டாட்டிக்குத் தெரிஞ்சா, தோலுரிச்சு உப்புக் கண்டம் போட்டுடுவா. சரி, கூட அம்பது சேத்தி, ரெண்டாயிரத்து அம்பதா இருந்துட்டுப் போகட்டுமே?!” என்று நினைத்துக் கொண்டே, மேத்தா நகரிலிருந்து தன் வீடிருக்கும் அமிஞ்சிக்கரை செல்லும் பாதையிலிருந்து மாறி, சூளைமேட்டில் இருக்கும் மாதவி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தான் தன்னாசி.

22 comments:

இராகவன் நைஜிரியா said...

சத்தியமா ஒன்னும் பிரியலை...

பழமைபேசி said...

//இராகவன் நைஜிரியா said...
சத்தியமா ஒன்னும் பிரியலை...

May 31, 2009 4:17 PM
//

வணக்கம் ஐயா, உள்குத்து எல்லாம் ஒன்னும் இல்லை; ச்சும்மா நம்ப அண்ணனை வெச்சி ஒரு கதை... அவ்வளவுதான்...

Hari. R said...

Anbin Palamai,

I don't know how the story is going to develop. But I am eagerly waiting to read the continuation. Then, I belong to Choolaimedu area. Were you also there before coming to US? Nelson manickam Road, Metha Nagar, Aminjikarai sellum puthia bridge...( Eventhough I didn't see Abdulla, I can very much relate his attitude by his blogs and by his comments with your story)
Thank you very much.

Radha
Canada

பழமைபேசி said...

//Hari. R said...
Anbin Palamai,

I don't know how the story is going to develop. But I am eagerly waiting to read the continuation. Then, I belong to Choolaimedu area. Were you also there before coming to US? Nelson manickam Road, Metha Nagar, Aminjikarai sellum puthia bridge...( Eventhough I didn't see Abdulla, I can very much relate his attitude by his blogs and by his comments with your story)
Thank you very much.

Radha
Canada
//

Hu Radha Madam,

Yes, he is a very nice guy, has helping tendency and singer as well.

Glad to know that you are from Choolaimedu... Yes, I was there for some time m'am. Thanks for your comments!!!

ஆ.ஞானசேகரன் said...

கதை கலம் அந்த அளவிற்கு எனக்கு புரியவில்லை..

பழமைபேசி said...

// ஆ.ஞானசேகரன் said...
கதை கலம் அந்த அளவிற்கு எனக்கு புரியவில்லை..
//

அப்ப சரிங்க, அடுத்த தடவை நல்லதா முயற்சிக்கிறேன்... இஃகிஃகி!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுக்கள் போட்டாச்சு தல..,

cheena (சீனா) said...

கத நல்லா இருக்கு - பழமைபேசி

அப்துல்லா பாவம் - சூச்சுவ வாங்கினாரா இல்லையா

எம்.எம்.அப்துல்லா said...

ஆஹா!!! உங்க போதைக்கு நாந்தான் இன்னைக்கி ஊறுகாயா??
நடத்துங்க..நடத்துங்க

:)

vasu balaji said...

ஆஹா. இதுதான் இன்னும் போதை ஏத்தக் கிடக்குன்னு எச்சரிச்சதா? அவரு உங்க போதைக்கு தான் ஊருகான்னு கதைய மாத்துறாரு. நல்லா இருக்கு.

பழமைபேசி said...

கடமையுணர்ச்சியப் பாராட்டுறோமில்லை? இஃகிஃகி!!

பழமைபேசி said...

// SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஓட்டுக்கள் போட்டாச்சு தல..,
//

பழமைபேசி said...
கடமையுணர்ச்சியப் பாராட்டுறோமில்லை? இஃகிஃகி!!

பழமைபேசி said...

//cheena (சீனா) said...
கத நல்லா இருக்கு - பழமைபேசி

அப்துல்லா பாவம் - சூச்சுவ வாங்கினாரா இல்லையா
//

வணக்கங்க ஐயா! வயித்துல பாலை வார்த்தீங்க.... கதை புரியலண்ணு சொல்லிப்புட்டாங்காளே? இஃகிஃகி!! அது அடுத்த பாகத்துல தெரிஞ்சுடுமுங்களே? நன்றிங்க ஐயா!!

பழமைபேசி said...

//பாலா... said...
ஆஹா. இதுதான் இன்னும் போதை ஏத்தக் கிடக்குன்னு எச்சரிச்சதா? அவரு உங்க போதைக்கு தான் ஊருகான்னு கதைய மாத்துறாரு. நல்லா இருக்கு.
//

அதான? உங்களை மாதிரி அண்ணன்மாரு இருக்கப் பரவாயில்லை. நன்றிங்க அண்ணே!

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
ஆஹா!!! உங்க போதைக்கு நாந்தான் இன்னைக்கி ஊறுகாயா??
நடத்துங்க..நடத்துங்க
//

இஃகிஃகி!!

Muniappan Pakkangal said...

Abdullah'la aarampichu,thannasi'la mudiyuthu kathai-ithu mattum thaan puriyira maathiri irukku.

பழமைபேசி said...

// Muniappan Pakkangal said...
Abdullah'la aarampichu,thannasi'la mudiyuthu kathai-ithu mattum thaan puriyira maathiri irukku.
//

வாங்க, வணக்கம்! என்னோட எல்லை எதுவரைக்கும்ன்னு புரிஞ்சு போச்சுங்க நண்பா! இஃகிஃகி, உளமார்ந்த கருத்துக்கு மிக்க நன்றி!!

நாமக்கல் சிபி said...

புரியலை!

குறும்பன் said...

கதை சரியா புரியலை. :-((

பழமைபேசி said...

//குறும்பன் said...
கதை சரியா புரியலை. :-((
//

அப்ப இது புரியுதுங்களா?


A man sees a sign in front of a house advertising: ‘Talking Dog $50’. He knocks on the door and asks the owner if he can see the Talking Dog. "Sure," says the owner who calls the dog and then leaves the room. "So, you can talk?" says the man to the dog. "Yeah," says the dog. "Wow, that’s amazing. Where did you learn how to talk?" the man asks. The dog replies, "Well, I used to work for the CIA and they trained me to sit in and spy on various conversations and report back to headquarters." The owner returns to the room and the man says, "He’s amazing. How come you only want $50 for him, a dog of his calibre and skill must be worth millions?" The owner replies in disgust, "Oh, he hasn’t been feeding you that rubbish about being in the CIA has he?"

குறும்பன் said...

\\அப்ப இது புரியுதுங்களா?

A man sees a sign in front of a house advertising: ......\\

இது புரியுதுங்க.

பழமைபேசி said...

//குறும்பன் said...
\\அப்ப இது புரியுதுங்களா?

A man sees a sign in front of a house advertising: ......\\

இது புரியுதுங்க.
//

அவ்வ்வ்வ்வ்வ்வ்.......நான் அழறேன்!