5/19/2009

இலங்கை வைத்துக் கொண்ட சூன்யம்...

தெற்காசிய அரசாட்சி போன்றதொரு கயமைத்தனம் வாய்ந்த ஒன்று இந்தப் புவியில் வேறொன்றும் இருக்க முடியாது. இந்தியா, பாகிசுதான், ஆப்கானிசுதான், வங்காள தேசம், நேபாளம், பூடான், இலங்கை, ஈழம், பர்மா, மாலத்தீவுகள் அடங்கிய இந்த பகுதியில, என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது?? ஒருவருக்கொருவர் வைத்துக் கொள்ளும் சூன்யம் நாளுக்கு நாள் அதிகமாகிறதே ஒழிய, குறைந்த பாடில்லை. இந்த சூழ்நிலையில் இலங்கை அரசு, தனக்குத் தானே வைத்துக் கொண்ட சூன்யம்தான், தற்போது நிகழ்ந்து வரும் கபட நாடகங்களும், செயல்களும்.

பெரிய பெரிய வல்லரசுகளே, செய்த தவறுகளுக்கு உண்டான விளைவுகளை அறுவடை செய்யும் இவ்வேளையில், மனிதர்களைக் கொன்று குவித்தும், கபட நாடகங்கள் ஆடுவதின் மூலம் நம்பகத் தன்மையைக் குலைத்துக் கொண்டும், நன்றாக மாட்டிக் கொண்டது இலங்கை என்பதே உண்மை.

தமிழர்கள் என்று பார்த்தால், உலகம் முழுமைக்கும் பரவலாக கிட்டத்தட்ட எட்டு கோடிப் பேர் இருக்கலாம் எனத் தெரிகிறது.


இந்தியா - 6,50,00,000
ரெயூனியன் - 1,25,000
இலங்கை - 35,00,000
பிஜி - 80,000
மொரிசீயசு - 1,00,000
மலேயம் - 18,00,000
சிங்கப்பூர்- 2,50,000
கனடா - 3,50,000
சுவிட்சர்லாந்து - 45,000
ஆப்பிரிக்க நாடுகள்- 3,00,000 (இராகவன் ஐயா மற்றும் உருப்புடாதது அணிமா சேர்த்து)
பிரித்தானியா - 2,00,000
இதர நாடுகள் - 15,00,000

அண்மைக் காலமாக அவர்களது படிப்பறிவும், பொருளாதார வளர்ச்சியும் வெகு முன்னேற்றம் அடைந்து வருகிறது என்பதும் கவனிக்கத் தக்கது. இப்படியாக தமிழர்கள், உலகில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருவதும் நிகழ்ந்த வண்ணமே உள்ளது. நடப்புத் தலைமுறையினர் வரையிலும், மாறாமல் இருந்து வரும் குறைபாடு ஒன்று என்றால், அது சகிப்புத்தன்மை இல்லாமை என்பது சொல்லித் தெரிவது இல்லை. ஆனால், வரும் தலைமுறையினர் நன்கு கற்றுத் தேர்வதோடு மட்டுமில்லாமல், ஆளுமை பொருந்திய வண்ணம் இருக்கிறார்கள். அது கண்டு இந்தியா மட்டுமல்ல, அகில உலகமும் வியந்த வண்ணம் இருப்பதுவும் கண்கூடு. ஆகவே, தமிழனைத் தமிழனாய் மதித்துச் செயல்பட்டாக வேண்டிய நிலை வந்தே தீரும்.

உதாரணத்திற்கு, நடப்பு ஆண்டில் இந்திய ஆட்சியாளர் பணித்துறையில் (IAS) தேர்வு பெற்ற தமிழர் எண்ணிக்கை 96 பேர். மொத்த தேர்ச்சி 791 பேர். பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம், ஒரு இலக்கத்தில் இருந்தாலே அது பெரிய சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில், இதில் பெரும்பங்கு வகிக்கும் சைதை துரைசாமி அவர்களுடைய பங்களிப்புக்கு நன்றி கூறுவது நம் கடமை. ஆகவே, தமிழன் என்றாவது ஒரு நாள் ஆள்வான், அவனது கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

நண்பர்களே, அந்த நல்ல நம்பிக்கையோடு தொடர்வோம் வாருங்கள் தமிழோடு! சிங்கை நண்பர் அ.ஞானியார் காணொளிக் கருவி என்று அவரது இடுகையில் குறிப்பிட்டு இருக்கிறார். எமக்கு அதை வாசிக்கையில், வாசிப்புத் தட்டுகிறது அன்பர்களே. அப்படியானால், என்னதான் சொல்வது?

ஆங்கிலத்திலே, tool, equipment, instrument என்று தனிப்பட்ட சொற்கள் கொண்டு புழங்குகிறோம் அல்லவா? அதைப் போலவே தமிழிலும். இதனால், ஒன்றைச் சரியாகக் குறிப்பிட முடியும். Tools are objects to work with and that is generic. Instrument is not generic, it has pre-defined purpose and an instrument is also a piece of equipment. Equipment is an aggregation term of instruments.

ஆயுதம், கருவி, சாதனம் என்பதைக் கேள்வியுற்று இருப்பீர்களல்லவா? இந்த சொற்களையும் மேலே சொன்ன விளக்கத்தையும் பொருத்தி பாருங்கள், எளிதில் இனம் காணமுடியும். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்கிறோம். ஆக, எதுவும் ஆயுதம் ஆகலாம். ஒரு செயலைக் கருத்தில் கொண்டு செய்வன கருவி. ஒரு காட்சியை நிழலாகப் பிடிப்பது, நிழல்படக் கருவி. ஒலி, ஒளி என ஒன்றுக்கு மேற்பட்டவற்றைப் பிடித்துக் காண்பிக்கும் சாதனம், காணொளிச் சாதனம். ஒருவருக்கு, அழகூட்டக் கூடிய ஒன்றுக்கு மேற்பட்டவற்றைச் சொல்வது, அழகு சாதனப் பொருட்கள். இந்த மூன்று சொற்கள் தவிர, பொறி, எத்தனம், எந்திரம் என்று நிறைய உள்ளது. ஆனாலும், மேற்கூறிய மூன்றுமே அடிப்படை.

பாதிப்பும், தாக்கமும் பெரும்பாலும் சரிவர பாவிக்கப்படுவது இல்லை. இது தமிழில் மட்டுமே அல்ல, ஆங்கிலத்திலும்தான். Yes, 'effect' and 'affect' are used interchangeably with wrong interpretation often. When you affect something, you produce an effect on it. பாதிக்கப்படும் போது, நம்முள் ஏதோ ஒரு தாக்கம் ஏற்படுகிறது. நாம் பாதிக்கப்பட்டு இருக்கிறோம், சகிப்புத்தன்மை கொண்டு, உணர்ச்சி வயப்படாமல் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்துவோம், நாளை நம் கையில்!!!

16 comments:

அது சரி(18185106603874041862) said...

//
தெற்காசிய அரசாட்சி போன்றதொரு கயமைத்தனம் வாய்ந்த ஒன்று இந்தப் புவியில் வேறொன்றும் இருக்க முடியாது. இந்தியா, பாகிசுதான், ஆப்கானிசுதான், வங்காள தேசம், நேபாளம், பூடான், இலங்கை, ஈழம், பர்மா, மாலத்தீவுகள் அடங்கிய இந்த பகுதியில, என்ன நடக்கிறது? ஏது நடக்கிறது?? ஒருவருக்கொருவர் வைத்துக் கொள்ளும் சூன்யம் நாளுக்கு நாள் அதிகமாகிறதே ஒழிய, குறைந்த பாடில்லை.
//

முற்றிலுமாக வழிமொழிகிறேன்....

பெரும்பாலும் ஜனநாயகம் என்ற பெயரில் மாஃபியா கும்பல்களும், இன/மத வெறி அரக்கர்களும் தான் இங்கு ஆட்சி புரிகிறார்கள்...

டண்டணக்கா said...

/*இதில் பெரும்பங்கு வகிக்கும் சைதை துரைசாமி அவர்களுடைய பங்களிப்புக்கு நன்றி கூறுவது நம் கடமை.*/
Can you write more on this - about him and his nature of work. It will help us approach him for our village.

Thekkikattan|தெகா said...

மிகச் சரியாக கூறப்பட்டிருக்கிறது. இலங்கை தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொண்டதாகத்தான் என்னால் காண முடிகிறது. ஒரு முடிவின் தொடக்கமாக...

குடுகுடுப்பை said...

தமிழன் உழைப்பில் முன்னேறி வெற்றி பெற வேண்டும். அடித்தவன் அனைவரும் அதனைப்பார்த்து ஏங்கவேண்டும்.

vasu balaji said...

/ஒருவருக்கொருவர் வைத்துக் கொள்ளும் சூன்யம் நாளுக்கு நாள் அதிகமாகிறதே ஒழிய, குறைந்த பாடில்லை. /

சூன்யமெனத் தெரிந்தே சந்தோசமாக வைத்துக் கொள்ளும் அழகே அழகு. இதில் அலட்டலும் அலம்பலும். நல்லாச் சொன்னீங்க‌

இராகவன் நைஜிரியா said...

// ஆப்பிரிக்க நாடுகள்- 3,00,000 (இராகவன் ஐயா மற்றும் உருப்படாதது அணிமா //

ஐயா அவர் உருப்புடாதது அணிமா.

// இந்த சூழ்நிலையில் இலங்கை அரசு, தனக்குத் தானே வைத்துக் கொண்ட சூன்யம்தான், தற்போது நிகழ்ந்து வரும் கபட நாடகங்களும், செயல்களும்.//

காலம் ஒரு நாள் மாறும். எது உண்மை, எது போலி என்று தெரியும் நாள் தூரத்தில் இல்லை.

பதி said...

உங்கள் பதிவுடன் உடன்படுகின்றேன்.. அதேசமயம், அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற மேற்கத்திய அமைப்புகளும் இன்று தமிழனுக்கு சூனியம் வைப்பதில் தாங்களால் முடிந்த பங்களிப்பை செய்து கொண்டுதான் உள்ளனர். நாம் தான் அவதானமாக இருக்க வேண்டும்.

பழமைபேசி said...

//டண்டணக்கா said...
/*இதில் பெரும்பங்கு வகிக்கும் சைதை துரைசாமி அவர்களுடைய பங்களிப்புக்கு நன்றி கூறுவது நம் கடமை.*/
Can you write more on this - about him and his nature of work. It will help us approach him for our village.
//

நண்பா, அந்த 96 பேர்ல, 25 பேர் இவரோட பயிற்சியகத்துல இருந்து தேர்ச்சி பெற்று இருக்காங்க. மேலதிகத் தகவலுக்கு இந்த சுட்டியச் சொடுக்குங்க!


ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி ஏன்?

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

அவர்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் நேரத்தில் எல்லாமே அவர்கள் கைகளை விட்டுப் போய்க்கொண்டிருக்கும்.

எம்.எம்.அப்துல்லா said...

விரைவில் புதுக்கோட்டையிலும் அதுபோன்ற ஒரு மைய்யம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். உங்க வாழ்த்துகளும், வேண்டுதலும் தேவை.

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் நண்பா,
உங்களின் 'காணொளி கருவி' பற்றிய விளக்கம் சரி என்றெ ஒப்புகொள்கின்றேன். காணோளி சாதனம் என்பதே சரியான சொல்லாகும்..

நண்பா தமிழின் ஒற்றுமையின்மையும் மற்றும் அவனிடத்தில் உள்ள பொறாமைக்குணங்களும் அவனின் அழிவுக்கு காரணமாக உள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி ஒருநாள் தமிழன் உலகை ஆழ்வான் என்ற நம்பிக்கையும் உள்ளது.

சுந்தர் said...

//நாளை நம் கையில்!// நம்பிக்கையில்

பழமைபேசி said...

//அது சரி said...


முற்றிலுமாக வழிமொழிகிறேன்....
//

அது சரி அண்ணாச்சி, வாங்க, வணக்கம்!

//Thekkikattan|தெகா said...
மிகச் சரியாக கூறப்பட்டிருக்கிறது. இலங்கை தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொண்டதாகத்தான் என்னால் காண முடிகிறது. ஒரு முடிவின் தொடக்கமாக...
//

நன்றிங்க!

//குடுகுடுப்பை said...
தமிழன் உழைப்பில் முன்னேறி வெற்றி பெற வேண்டும். அடித்தவன் அனைவரும் அதனைப்பார்த்து ஏங்கவேண்டும்.
//

ஆமாங்க அண்ணே!

//பாலா... said...

சூன்யமெனத் தெரிந்தே சந்தோசமாக வைத்துக் கொள்ளும் அழகே அழகு. இதில் அலட்டலும் அலம்பலும். நல்லாச் சொன்னீங்க‌
//

பாலாண்ணே, வாங்க, நல்லா இருக்கீங்களா?

//இராகவன் நைஜிரியா said... //

நன்றிங்க ஐயா! அப்படியே அதுக்குண்டான வித்தியாசமும் சொல்லிடுங்களே? இஃகிஃகி! மாத்திட்டனுங்க ஐயா!!

Arasi Raj said...

நீங்க இதுவரைக்கும் எழுதின பதிவுலே முதல் ரெண்டு வரிகளை மட்டும் படிச்சுட்டு என்னை ஓட்டு போட வச்ச பதிவு இது தான்யா...

பெருமை படுகிறேன்....நீங்க சொன்ன மாதிரி தனக்கு தானே சூன்யம் வச்சுக்கிட்டாங்கன்றது தான் உண்மை...

ஒரு நாள் இல்லை ஒரு நாள் பதில் சொல்லி தான் ஆகணும்... நாயை அடிச்சா என்னமோ பண்ணனும்னு சொல்லுவாங்களே...கண்டிப்பா பண்ண தான் போறாங்க ...பண்ண வைப்போம்

பழமைபேசி said...

//பதி said... //

வாங்க பதி!

//மதுவதனன் மௌ. said...
அவர்கள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கும் நேரத்தில் எல்லாமே அவர்கள் கைகளை விட்டுப் போய்க்கொண்டிருக்கும்.
//

நம்பிக்கைதானுங்களே வாழ்க்கை!

//எம்.எம்.அப்துல்லா said...
விரைவில் புதுக்கோட்டையிலும் அதுபோன்ற ஒரு மைய்யம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். உங்க வாழ்த்துகளும், வேண்டுதலும் தேவை.
//

நல்ல செய்தியண்ணே, நிச்சயமா... நல்லபடியா நடக்கும், அடிச்சி ஆடுங்கண்ணே!!

// ஆ.ஞானசேகரன் said... //

ஞானியார் வாங்க!

//தேனீ - சுந்தர் said...
//நாளை நம் கையில்!// நம்பிக்கையில்
//

ஆமாங்க தேனியார்...நன்றிங்க!!

பழமைபேசி said...

//நிலாவும் அம்மாவும் said...
நீங்க இதுவரைக்கும் எழுதின பதிவுலே முதல் ரெண்டு வரிகளை மட்டும் படிச்சுட்டு என்னை ஓட்டு போட வச்ச பதிவு இது தான்யா...
//

நன்றிங்க, நன்றிங்க...