5/28/2009

ஒன்றுக்கும் உதவாத உணர்ச்சிகர உரைகள், நிகழ்ச்சிகள்!

புரட்சிகரமான உரை, புரட்சிகரமான பேச்சு, புரட்சிகரமான எழுத்து, உணர்ச்சிகரப் பேச்சு, உணர்ச்சியுரை என்றெல்லாம் பல விதமாகக் குறிப்பிடப்பட்டு கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பது, புத்தகங்கள் விற்பது, ஒரே இரவில் தனிநபர் தலைவர் ஆவது, புகழ்ந்து பேசி மனதைக் கவர்வது போன்றனவும், தமிழகமும், உயிரும் மெய்யும் போன்றது.

புரட்சிகரமான பேச்சு, புரட்சிகரமான உரை என்பதை காது கொடுத்துக் கேட்டுப் பார்த்தால், பெரும்பாலான நேரங்களில் அது உணர்ச்சிகர உரையாக இருக்கும். மேலும், மக்களைக் கவர்ந்திழுக்கிற உரைகளையும் உணர்ச்சிகரப் பேச்சு என்றே குறிப்பிடுவதும் உண்டு. மனம் நெகிழ்ந்து, கேட்பவரை அழ வைக்கக் கூடிய உரையை உருக்கமான பேச்சு என்றும் குறிப்பிடுவது வழக்கம்.

ஆனால், சமூகத்தில் வெற்றி பெறுகிற உரைகளை எவரும் சரியான அர்த்ததில் பெரும்பான்மையான நேரங்களில் குறிப்பிடுவதே இல்லை. எப்படி ஊடகங்களில் வரும் கட்டுரை மற்றும் செய்திகளை, கருத்து(opinion), கூற்று(fact), நிகழ்வு(incident) என்றெல்லாம் பிரித்துப் பார்த்து, அதற்கேற்ப புரிந்துணர்வு(perception) கொள்வது யதார்த்தத்தைப் பிரதிபலிக்க உதவுமோ அதைப் போல, நாம் கேட்கும் உரைகளையும் இனங்கண்டு அதற்கேற்ப ஆட்படுத்திக் கொள்வது, கேட்பவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல மனநிலைக்கும் மிக அவசியம்.

1990களில் நடைபெற்ற திராவிடர் கழகம், தி.மு.க முதலிய கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் மாநாடுகளில் முக்கியப் பேச்சாளர்கள் பெரும்பாலும் அற்புத(Rhetoric) உரையாற்றுவார்கள். அந்த காலகட்டங்களில், அதைக் கேட்டுத்தான் பெரும்பாலான இளைஞர்களுக்கு தமிழ் மொழியின்பால் ஒரு ஈர்ப்பு வந்தது என்று சொல்லலாம்.

அது என்ன அற்புதவுரை? அதாவது, ஏற்ற இறக்கம், உவமை, உருவகம், எதுகை, மோனை, சொலவடை, இலக்கியச் சான்றுகள் முதலியவற்றை உள்ளடக்கிய மொழி வளத்தின் அடிப்படையிலாலானது. சமீபத்தில் நடந்த அமெரிக்கத் தேர்தலில் கூட, ஒபாமா அவ்ர்களுடைய பேச்சு வெறும் Rhetoric என்றும், பேச்சில் எந்த விதமான உள்ளீடு(substance) இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. தமிழகத்திலும் அதே நிலைதான்!

இத்தகைய அற்புதமான உரையினுள் வெளிப்படுத்த வேண்டிய கருப்பொருளையும் உள்ளடக்கி, தேவையான இடத்தில் மட்டும் உணர்வுகளைக் கொட்டி, கேட்போரை உரையின் துவக்கம் முதல் இறுதி வரையிலும் உடன் கொண்டு செல்லக் கூடிய உரைதான் நேர்த்தியான உரை (perfect speech). முன்னாள் பிரதமர் வாஜ்பாய், இந்தியில் நேர்த்தியான உரை நிகழ்த்தக்கூடிய விற்பன்னர். இந்தி மொழி தெரியாதவர்களே கூட, அவரது உரையில் மெய் மறந்து ஒன்றிப் போவதும் உண்டு.

இயல்பான உரையாக, எழுதி வைத்துப் படிக்கும்/ குறிப்பைப் பார்த்துப் பேசும் பேச்சாளர்களே பெரும்பாலும் உள்ளனர். இதே வகையில், உரக்கப் பேசாமல் சொல்ல வந்ததை கேட்போருடைய தன்மைக்கு ஏற்பப் பேசுவது எளிமைப் பேச்சு. மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், இத்தகைய உரையில் வெகு சிறப்பாகப் பேசுவார்.

இறுதியாக வருவதுதான் உணர்ச்சியுரை(emotional speech). உணவுக்கு சேர்க்கும் ஊறுகாய் போல, உணர்வுகளைக் கொட்டினால் அது சிறப்பாக அமையும். ஆனால் இத்தகைய பேச்சுகள், அதிகப்படியாக உணர்வுகளை வைத்தே இருக்கும். என்னென்ன உணர்வுகள்?

மகிழ்ச்சி, வருத்தம், ஊக்குவிப்பு, கோபம், விரக்தி, பதட்டம் என்பன முக்கியமானவை. நகைச் சுவையாகவே பேசி கேட்போரைக் கவர்வது. முழு உரையும் நகைச்சுவையாக இருப்பின், அது உரை அன்று! பெரும்பாலும் கோபம், விரக்தி, ஊக்குவிப்பு, பதட்டம் இவற்றைக் கலந்து உரக்கப் பேசி, கேட்போரைக் கட்டிப் போட்டு விடுவார்கள் இவ்வகையான பேச்சாளர்கள். உரத்த குரல் இல்லாதோருக்கு, இவ்வகைப் பேச்சு அமையாது என்பதும் குறிப்பிடத் தக்கது ஆகும்.

இவ்வகைப் பேச்சைக் கேட்ட உடனேயே, உள்ளம் கிளர்ந்து எழும். உடலுக்குள்ளும் ஒருவித இரசாயன மாற்றம் நிகழத் துவங்கும். அறிவியல்ப் பதம் பாவித்துச் சொல்ல வேண்டுமாயின், நரம்புச் செல்களும் நாளச் சுரப்பிகளும் முழு வேகத்தில் தட்டி எழுப்பப்படும். ஒருவர் உணர்வுகளுக்கு முழுகதியில் ஆட்பட்டு இருக்கிறாரா என்பதை, அவரது தேகம், அவரது எழுத்து அல்லது அவர் படைக்கும் படைப்பு மற்றும் செய்கை முதலானவற்றைப் பார்த்துக் கூற முடியும்.

கோபம், அச்சம், பதட்டம் போன்ற ஒரு சில உணர்வுகள் மேலோங்கும் போது, சிந்தனை ஆற்றல் நின்று போகும். பேசுபவருக்கும், கேட்பவருக்கும் உணர்வுகள் மட்டுமே பரிமாறப் படுகிறது. மனநிலையை பேசுபவர் எடுத்துக் கொள்வார். அவர் இடும் கட்டளை எதுவாயினும், அடிபணியக் காத்திருக்கும் கேட்பவரின் மனம்! அரசியல் நிகழ்வுகளின் போது, வன்முறைகள் மற்றும் விரும்பத் தகாத நிகழ்வுகள் நிகழ்வதும் இதனாலேதான்!!

இவ்வகை உணர்வுப் பேச்சுகளை உண்டு செய்பவருக்கும் உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது, கேட்பவரும் ஒருவிதமான மனநிலை இறுக்கத்துக்கு ஆட்படுவர். இரவில் விறுவிறுப்பான பேச்சைக் கேட்டுவிட்டு வந்தவன், நித்திரை கொள்ள முடியாமல் தவிப்பான். பேசியவர் என்ன பேசினார் என்பதை விட, அந்த உணர்வுகளே மேலிடும். அடங்க நீண்ட நேரம் பிடிக்கும். மீண்டும் அதைக் கேட்க மனம் அலைபாயும். கிட்டத்தட்ட போதையின் ஒரு பகுதிதான் இதுவும்.

உணர்வுப் பேச்சுகள் தோல்வி அடைவதும் இதனாலேதான்! உணர்வுக்கு ஆட்பட்டவன், வெளிப்படுத்திய கருப்பொருளை உள்வாங்கி இருக்க மாட்டான். மற்றவருக்கு உணர்வுகளை உள்வாங்கியபடி பரிமாறவும் முடியாது. அடுத்தவருடன் பரிமாற முயற்சிக்கும் போது, வார்த்தைகள் பிறழும் (Emotional gobbledygook), கூடவே தடித்த சொற்கள், முறையற்ற அங்க அசைவுகள் என பலவும் வெளிப்படும்.


இத்தகைய பேச்சை வெளிப்படுத்துவதன் மூலம், அந்த பேச்சாளர் பிரபலம் ஆகலாமே ஒழிய, மற்ற உரைகளைப் போல் பேச்சு சிறப்படைவது இல்லை! தமிழ்நாட்டில், உணர்வுகளைத் தட்டி எழுப்பி, போதை உண்டுபண்ணுவது நாளுக்கு நாள் மிகையாவது கவலைக்கு உரியது. சமூகம் விழித்தெழுமா?


இன உணர்வு கொள்வதில் தவறில்லை.
சினமுறச் செய்யப்படுவது நன்றன்று!

தன்மான உணர்வு கொள்வதில் தவறில்லை;
வெறியுணர்வு கொள்ளப்படுவது சரியன்று.!

விடுதலையுணர்வு கொள்வதில் தவறில்லை;
விசருணர்வு கொள்ளப்படுவது சரியன்று!

முன்னது Consciousness(உணர்தல்);
பின்னது Emotion (மனோசலனம்)!

ஒரு பேச்சாளனின் கடமை புரிய வைப்பது;
மனக்கிலேசத்தை உண்டாக்குவது அல்ல!

புரட்சிக்கு வித்திடு;
ஒழுங்கீனத்திற்கு வித்திடாதே!


Yes, you have full rights to have revolution; not for disorder!

32 comments:

ராஜ நடராஜன் said...

கடையைப் பூட்ட நேரமாச்சு.நான் அப்புறமா மறுபடியும் வாரேன்.

வால்பையன் said...

ரொம்ப பேசுனா கொட்டாவி வருமாமே உண்மையா?

குறும்பன் said...

//உணர்ச்சியுரை// இங்க யாருங்க அந்த மாதிரி பேசறதில் கில்லாடி? :-))

நமக்கு அதிமான அளவில் நேர்த்தியான உரை நிகழ்த்துவோர் தேவை. தமிழ் நாட்டில் அந்த மாதிரி யாராச்சும் இருக்காங்களா?

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
கடையைப் பூட்ட நேரமாச்சு.நான் அப்புறமா மறுபடியும் வாரேன்.
//

சரிங்க அண்ணே!

பழமைபேசி said...

//வால்பையன் said...
ரொம்ப பேசுனா கொட்டாவி வருமாமே உண்மையா?
//

இடுகை கொஞ்சம் நீளமாயிடுச்சி... அதுக்கு இப்பிடி வாருறீங்களா வாலு? அவ்வ்வ்....

பழமைபேசி said...

//குறும்பன் said...
//உணர்ச்சியுரை// இங்க யாருங்க அந்த மாதிரி பேசறதில் கில்லாடி? :-))
//

அவ்வ்வ்வ்.... நான் இல்லை!//குறும்பன் said...
நமக்கு அதிமான அளவில் நேர்த்தியான உரை நிகழ்த்துவோர் தேவை. தமிழ் நாட்டில் அந்த மாதிரி யாராச்சும் இருக்காங்களா?
//

பின்னாடி வர்றவங்க பின்னூட்டத்துல சொல்வாங்க! :-0)

நசரேயன் said...

இதுக்கு தான் நான் வாயே பேசுறது இல்லை

- இரவீ - said...

சிறப்பு ...

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.

vasu balaji said...

பேசுறவங்க என்ன எப்படி பேசினாலும் கேகுறவங்க எப்படி புரிஞ்சிகிட்டாலும் செயல் பாட்டில இது ரெண்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பது கண்கூடு. இந்தக் கால கட்டத்தில் பேச்சு விவாதத்துக்கும், பொழுது போக்குக்கும் மட்டுமே என்றாகிவிட்டதோ?

பழமைபேசி said...

//பாலா... said...
பேசுறவங்க என்ன எப்படி பேசினாலும் கேகுறவங்க எப்படி புரிஞ்சிகிட்டாலும் செயல் பாட்டில இது ரெண்டுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருப்பது கண்கூடு. இந்தக் கால கட்டத்தில் பேச்சு விவாதத்துக்கும், பொழுது போக்குக்கும் மட்டுமே என்றாகிவிட்டதோ?
//

பாலாண்ணே, பேச்சுக்கு எப்பவும் ஒரு மதிப்பு இருக்கு... கா.காளிமுத்து, துரைமுருகன், மு.இராமநாதன், ப.சிதம்பரம், மலைச்சாமி I.A.S இவங்கெல்லாம் கருத்துகளை புரிய வைப்பதில் கில்லாடிகள்...

பொதுவுடமைக் கட்சியில சுப்பராயன், தெளிவா பேசுவார். பாமரமக்கள் கூட பொதுவுடமைச் சிந்தாந்தங்களைப் புரிஞ்சிகிட்டு, இன்னும் கிராமங்கள்ல இருக்காங்க...

உணர்வுப்பூர்வமா ஆய், ஊய்க் கூட்டந்தான் புரிஞ்சும் புரியாம...கொள்கையாவது, கோட்பாடாவதுன்னு இருக்காங்கன்னு நினைக்குறேன்.

தினேஷ் said...

/குறும்பன் said...
நமக்கு அதிமான அளவில் நேர்த்தியான உரை நிகழ்த்துவோர் தேவை. தமிழ் நாட்டில் அந்த மாதிரி யாராச்சும் இருக்காங்களா?
//

தமிழ்நாட்ல தெரிலபா , ஆனா வெள்ளைகார நாட்டண்ட பழமைபேசி கீராரு...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

முக்கியமான ஒருத்தரப் பத்தி சொல்லாம விட்டுட்டீங்களே தல


,


,


,

,
,
,


,


நம்ம சூப்பர் ஸ்டாரோட உரைகளைப் பத்தி..,

பழமைபேசி said...

@@சூரியன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சூரியன்!

@@SUREஷ்

மருத்துவர் அண்ணே, இப்படி ஏமாத்திட்டீங்களே என்னை?!

Emotionsக்கு என்னென்ன பக்க விளைவுகள், அது மூளையில என்ன மாதிரியான பதிவுகளைப் பதியுது, sudden impulseனால நரம்பு(neuro)க்கு என்ன பாதிப்பு வரலாம்... pshycolical problems இதெல்லாம் சொல்லாம, தலைவர் பேச்சைக் கேட்டுட்டு போயிட்டீங்களே?

அவர் நகைச்சுவை, அற்புதம்ன்னு, கடைசியா நேர்த்தியில முடிக்கிறவராச்சே?! படத்துல மட்டும் ஆய்...ஊய்... இஃகிஃகி!!

குறும்பன் said...

//தமிழ்நாட்ல தெரிலபா , ஆனா வெள்ளைகார நாட்டண்ட பழமைபேசி கீராரு...//

ஒத்துக்கிரங்க சூரியன்.

//நம்ம சூப்பர் ஸ்டாரோட உரைகளைப் பத்தி..,//

ஒரே தமாசு தான் உங்களோட SUREஷ்சு.

பழமைபேசி said...

//குறும்பன் said...
//தமிழ்நாட்ல தெரிலபா , ஆனா வெள்ளைகார நாட்டண்ட பழமைபேசி கீராரு...//

ஒத்துக்கிரங்க சூரியன்.
//

ஏங்க, நான் என்ன தப்பு செய்தேன்? அவ்வ்வ்வ்...

Mahesh said...

அதெல்லாஞ்செரி.... இந்த தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா... இவுங்க பேசறதெல்லாம் எந்த வகைல வரும்னு சொல்ல முடியுமா?

மாட்னீங்களா... இஃகி ! இஃஇ !!!

பழமைபேசி said...

//Mahesh said...
அதெல்லாஞ்செரி.... இந்த தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான், வண்ணை ஸ்டெல்லா... இவுங்க பேசறதெல்லாம் எந்த வகைல வரும்னு சொல்ல முடியுமா?

மாட்னீங்களா... இஃகி ! இஃஇ !!!
//

வாங்ண்ணா வாங்ண்ணா,,,,

நெசமானாச்சிக்கும் சொல்றேங் கேட்டுகுங்... மொதல் ரெண்டுமு நாங்கேட்டதே இல்லீங்....

பால பாடத்துக்கு வண்ணையம்மாங்...

அப்பறமேல்ட்டு, நகைமுகன், தஞ்சாவூரு முருகுபாண்டியன், திருப்பூர்க் கூத்தரசன், கோயமுத்தூரு இராமநாதன், பெதப்பம்பட்டி தூயமணி, SK இராசு, வக்கீல் சாகுல் அமீது இந்த மாதர பேச்சுகாரங்கதான் நாங்கெல்லாம் கேட்டதாக்கூ...

கிருஷ்ண மூர்த்தி S said...

//அந்த காலகட்டங்களில், அதைக் கேட்டுத்தான் பெரும்பாலான இளைஞர்களுக்கு தமிழ் மொழியின்பால் ஒரு ஈர்ப்பு வந்தது என்று சொல்லலாம்.//

இது தவறென்றே எனக்குத் தோன்றுகிறது.

தாயிடத்தில் ஆசை, பக்தி இல்லாத பிள்ளை எவரும் இல்லை. தமிழ் மீதான பற்றை உ வே சா, பாரதி, சுத்தானந்த பாரதி போல, தமிழுக்குத் தொண்டு செய்தவர்கள் ஒரு பக்கம். அவர்களிடம் ஆர்ப்பாட்டம் இல்லை, அடுத்தவர் நேரத்தை வெட்டிப் பேச்சுப் பேசி வீணடிக்கிற தன்மையும் இல்லை.

அடுத்து இங்கே ஒரு கூட்டம், அ'னாவை அடுத்து அ'னாவும், க'னாவை அடுத்துக் க'னாவும் வருகிற மாதிரி மூக்கினால் பேசியே தங்களைத் தனித்தமிழ் ஆர்வலர்களாக வெளிச்சம் போட்டுக் கொண்டது. இலவசமாகக் கிடைத்த பொழுது போக்கில் தமிழ்நாடு இவர்களிடம் ஏமாந்து போனது.இலவசங்களிலேயே மயங்கி, தன்னுடைய மொத்தத்தையும் இன்னும் தொலைத்துக் கொண்டிருக்கிறது.

பேசிக் கெடுத்தவர்களை, கேட்டுக் கெட்டவர்கள் அடையாளம் தெரிந்து கொண்ட பிறகும் மாற மனம் வரவில்லை இன்னமும்!

பழமைபேசி said...

//கிருஷ்ணமூர்த்தி said...
//அந்த காலகட்டங்களில், அதைக் கேட்டுத்தான் பெரும்பாலான இளைஞர்களுக்கு தமிழ் மொழியின்பால் ஒரு ஈர்ப்பு வந்தது என்று சொல்லலாம்.//

இது தவறென்றே எனக்குத் தோன்றுகிறது.
//

வணக்கமுங்க ஐயா! நான், நகர வாசனையே படாத கிராமத்துக்காரன். 2 மணி நேரத்துக்கு ஒரு தடவை உடுமலைப் பேட்டைக்கு ஒரு வண்டி, 4 - UBT வரும்...

பாமர, ஏழை விவசாயிகள்தான் எங்க ஊர்ல... அந்த சூழ்நிலையில தமிழ் வாசமே எங்களுக்கு இந்த் பொது கூட்டங்கள் வாயிலா இலவசமாக் கெடைச்ச பேச்சுகள்தான்... எனக்கும் என்னையொத்த நண்பர்களுக்கும் கிடைச்சது இதானுங்க ஐயா...

அவன்யன் said...

நண்பா
என்னை மறுபடியும் மறுப்பு சொல்ல வைக்கிறீங்க. உங்க கருத்துல எனக்கு உடன்பாடு இல்லே. உணர்ச்சிகரமான கருத்துகளும் புரட்சிகரமான கருத்துகளும் ஒரு சிறிய நூலிழையில் தான் வேறு படுத்த படுகின்றன. அந்த வேறுபாடை கண்டுபிடிக்கும் அளவுக்கு நம்ம மக்கள் வளர்ந்து உள்ளார்களா இல்லையா என்பது தான் இப்போ நாம அறிய வேண்டியது. நம்ம சுதந்திர போராட்ட காலத்திலே பல தலைவர்கள் ஆற்றிய உணர்ச்சியை தூண்டுகிற புரட்சிகரமான உரைகள் தான் பல இளைனர் போராட்டத்தில் இணைய காரணம். அப்போவும் நம்ம மக்கள் இதை விட சிந்திக்கும் ஆற்றல் குறைந்தவர்களாக தான் இருந்தாங்க. ஆனா நம்ம தலைவர்கள் அப்படி அவர்களின் உரைகள் உண்மையாக கருபொருளை கொண்டு இருந்தன. அதுனால எல்லா உரைகளையும் அப்படி உபயோகமில்லாதவை என தள்ளி விட முடியாது. ஐரோப்பா நாடுகளின் பல புரட்சிகள் உணர்வு பூர்வமான எழுத்துகளில் இருந்தும் உரைகளில் இருந்தும் தான் தோன்றின. ஒரு வேலை உங்க வாதம் உபயோகமில்லாத அந்த உரைகளை பற்றி தான் என்றால் நீங்க சொல்றது சரி தான். ஆனா உண்மையான பல விடயங்களும் உணர்ச்சி பூர்வமா தான் சொல்ல படுகிறது, ஏனா சில கேள்விகள் நம் மனதில் எழும் போது உணர்ச்சி கொந்தளித்து தன போகிறது. நம்மளாலே ஒன்றும் செய்ய முடியாது என தோன்றும் போது அவை நம் உடலில் எதிர் வினைகளை தன தோற்றுவிக்கறது.

பழமைபேசி said...

//அவன்யன் said...
நண்பா
என்னை மறுபடியும் மறுப்பு சொல்ல வைக்கிறீங்க
//

வணக்கம்! இவ்விடம் மாற்றுக்கருத்துகள் வரவேற்கப்படும்!!

அவன்யன், நீங்க உணர்வுக்கும், மனக்கிலேசத்திற்கும் உண்டான வேறுபாட்டை தெரிஞ்சிக்கணும். புழக்கத்திலே, தமிழில் இந்த இரண்டுக்கும் உணர்வுன்னேதான் சொல்றது,

இன உணர்வு கொள்வதில் தவறில்லை. கோப்ம் கொள்ள்ப்படுவது தவறு.

தன்மான உணர்வு கொள்வதில் தவறில்லை; வெறியுணர்வு கொள்ளப்படுவது தவறு.

விடுதலை உணர்வு கொள்வதில் தவறில்லை; விசர் உணர்வு கொள்ளப்படுவது தவறு.

முன்னது consiciousness (உணர்தல்); பின்னது emotion (மனோசலனம்).

ஒரு பேச்சாளனின் கடமை புரிய வைப்பது; மனக்கிலேசத்தை உண்டு பண்ணுவது அல்ல!

புரட்சிக்கு வித்திடு; கலகத்திற்கு வித்திடாதே!

Yes, you have full rights to have revolution; not for disorder!

பழமைபேசி said...

இடுகையிலும் மேலதிக விபரம் சேர்க்கப்பட்டது!

கிருஷ்ண மூர்த்தி S said...

//இலவசமாகக் கிடைத்த பொழுது போக்கில் தமிழ்நாடு இவர்களிடம் ஏமாந்து போனது.இலவசங்களிலேயே மயங்கி, தன்னுடைய மொத்தத்தையும் இன்னும் தொலைத்துக் கொண்டிருக்கிறது.

பேசிக் கெடுத்தவர்களை, கேட்டுக் கெட்டவர்கள் அடையாளம் தெரிந்து கொண்ட பிறகும் மாற மனம் வரவில்லை இன்னமும்!//
இந்தப் பகுதியை படிக்கவில்லையோ?

மூக்கினால், கரகரத்த குரலில் தமிழ்ச்சேவை[?!] செய்ய வந்தவர்களை, இலவசமாய்க் கிடைத்த பொழுதுபோக்கு என்ற அளவில் தமிழகம் அண்ணாந்து பார்த்ததும், ஏமாந்து போனதும் தெரிந்த கதை தானே.

கேள்வி, இலவசமாய்க் கிடைக்கிற மயக்க நிலையில் இருந்து விடுபட உத்தேசம் உண்டா இல்லையா என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லையே:-)

ஆ.ஞானசேகரன் said...

சிலர் பேச்சை சும்மாவுன்னு கேட்பதுண்டு... சமிபத்தில் நான் சம்பத்தில் பேச்சில் மெய்சிலிர்த்தேன்...

பேச்சைப்பற்றிய உங்க பார்வையில் அலசி இருகிங்க நண்பா

பழமைபேசி said...

//ஆ.ஞானசேகரன் said...
சிலர் பேச்சை சும்மாவுன்னு கேட்பதுண்டு... சமிபத்தில் நான் சம்பத்தில் பேச்சில் மெய்சிலிர்த்தேன்...//

நண்பரே பார்த்து... அவரு அடுத்த Rhetoric... கூடவே, அவனே இவனேன்னு எல்லாம் பேசுவாரே? மெய் சிலிர்க்கிறதுக்கு என்ன இருக்குங்க?? திருவாசகம் பாடினாரா என்ன???


//பேச்சைப்பற்றிய உங்க பார்வையில் அலசி இருகிங்க நண்பா
//
நன்றிங்க ஞானியார்!

அவன்யன் said...

ஒண்ணு நிச்சயம். நம்ம அரசியல் வாதிகள் பேசறது எல்லாமே சாக்கடை தான். நாம தான் கருத்து எதாவது இருக்கானு தேடி பார்க்கணும்.

ராஜ நடராஜன் said...

//இறுதியாக வருவதுதான் உணர்ச்சியுரை(emotional speech). உணவுக்கு சேர்க்கும் ஊறுகாய் போல, உணர்வுகளைக் கொட்டினால் அது சிறப்பாக அமையும்.//

ஊறுகாய் நிறைய சாப்பிட்டடுமோ?ஜீரணக்கோளாறு ஆயிடுமின்னுதான் பெரியார் என்ற நாட்டு மருந்தும் கண்டுபிடிச்சாங்களோன்னோ என்னவோ?ஆனா மருந்து கொடுக்குற மருத்துவர்கள் எந்த நோய்க்கு எவ்வளவு சொட்டு தரணுமின்னு தெரியல.சரி அத விடுங்க.

பேசத் தெரியாத ஒருத்தரு படுத்துகிட்டே தோத்துப் போனாரு.
பேசத் தெரிந்த ஒருத்தரு படுத்துகிட்டே ஜெயிச்சுட்டாரே?இதுக்கென்ன சொல்றீங்க?

பழமைபேசி said...

@@ராஜ நடராஜன்

வாங்கண்ணா, நான் இப்பத்தான் வெவகாரமான ஒரு இடுகையில இருந்து வர்றேன்... ஒன்னும் சொல்றதுக்கு இல்லை....

:-0(

ராஜ நடராஜன் said...

உங்கள் இடுகைக்கு வந்து விட்டு பின்னூட்டமும் இட்டு விட்டு இங்கே போனால்

http://valaipadhivan.blogspot.com/2009/05/blog-post.html

உடல் அல்லது மூளையின் ரசாயன மாற்றத்தால் எனது பின்னூட்ட எழுத்துக்கள் அப்படித்தான் வந்து விழுந்தன.மனித அவலங்களை மறைக்கும் உலக அரங்கின் சுய நல சூதாட்டக்காரர்கள் வெற்றி பெறும் போது முதலில் உணர்வது மூளையல்ல.இதயம்.

பழமைபேசி said...

//ராஜ நடராஜன் said...
உங்கள் இடுகைக்கு வந்து விட்டு பின்னூட்டமும் இட்டு விட்டு இங்கே போனால்

http://valaipadhivan.blogspot.com/2009/05/blog-post.html

உடல் அல்லது மூளையின் ரசாயன மாற்றத்தால் எனது பின்னூட்ட எழுத்துக்கள் அப்படித்தான் வந்து விழுந்தன
//

அண்ணே, இந்த விசயத்தில் நாம் போராளிகள், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று பல நாமகரணம் சூட்டப்படுபவர்களிடம் இருந்து ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் மிகவும் நிதானமாக, அமைதியாக இருப்பார்கள்!

செல்வன் said...

*ஒன்றுக்கும் உதவாத உணர்ச்சிகர உரைகள், நிகழ்ச்சிகள்!*
சரியாக சொன்னீர்கள். இது மட்டும் தானே தமிழ் பதிவுகளை பெரும்பாலும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது.

பழமைபேசி said...

//May 29, 2009 8:13 AM
செல்வன் said...
*ஒன்றுக்கும் உதவாத உணர்ச்சிகர உரைகள், நிகழ்ச்சிகள்!*
சரியாக சொன்னீர்கள். இது மட்டும் தானே தமிழ் பதிவுகளை பெரும்பாலும் ஆக்கிரமித்து கொண்டிருந்தது.

//

நன்றிங்க செல்வன்... இருக்குறதுதான்... :-o)