5/30/2009

பதிவுலகம் மற்றும் திரட்டிகள் அந்நியப்படுகிறதா?

சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியத் தேர்தல், ஈழம் குறித்த செய்திகள் மற்றும் இடுகைகள், முதன்மைத் திரட்டியான தமிழ்மணத்தின் சமீபத்திய அறிவித்தல் இடுகை மற்றும் வேறொரு பதிவில் கண்ட இந்த பின்னூட்டம் முதலானவை, எம்மை மிகவும் பாதித்தது; விளைவாய் சிந்திக்கவும் நேரிட்டது.

"Your thoughts are SUPER. Among all dirty bloggers who write for the sake of writing – you differ!"

பதிவர்களல்லாத வாசகர்களிடத்தில் பதிவுலகம் ஏமாற்றத்தையும், ஒரு விதமான விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது போன்றே தெரிகிறது. அதற்கு முதல் காரணம், desktop journalism என்று சொல்லப்படுகிற கணினி வியாசகம் என்பதுதான்.

முறையாகச் செய்வதானால், நிகழ்வுகள், கூறுகள், சான்றுகள், சாட்சியங்கள் முதலியன கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட வியாசகர்(jouralist)களால் வெகுசனப் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வருவன செய்திகள். ஊடகங்களில் வரும் செய்திகளை அடிப்படையாக வைத்து, பதிவரால் அவருடைய நிலைப்பாட்டைத் தாங்கி வருவது இடுகையில் இடம்பெறும் கட்டுரை. மாறாக, அவற்றோடு தனது கருத்துகளைத் தவுக்காரிட்டு விவாதமும் இழைக்கலாம்.

ஆனால் இன்றைய நிதர்சனம் என்ன? வெகுசன ஊடகங்கள் வலைப்பதிவுகள் போலச் செயல்பட்டு வருகிறது. அவற்றில் வரும் செய்திகளும் தலையங்கங்களும் கட்டுரைகளும் ஒரு சார்போடு, ஏற்றியும், திரித்தும், நம்பகத் தன்மையை இழந்து வருகிறது.

அந்த நம்பகத் தன்மை இல்லாத, அல்லது முழுமை அடையாத செய்திகளோடு சொந்த நிலைப்பாடு விருப்பு வெறுப்புகளைக் கொட்டி, பதிவர்களாகிய நாமும் தத்தம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம்.


கத்தரிக்காய் முதிர்ந்தால் சந்தைக்கு வந்துதானே ஆக வேண்டும்? அப்படி உண்மை தெரிய வரும்போது, வாசகர்களோடு நாமும் சேர்ந்து விரக்தி அடைகிறோம். இவ்வாறான எண்ணற்ற இடுகைகள் திரட்டிகளை ஆக்கிரமிக்கிற போது, வலைப்பதிவுகளோடு திரட்டிகளும் சேர்ந்து வெகுசன மக்களிடத்தில் இருந்து அந்நியப்படுகிறது. யதார்த்தத்தைப் பிரதிபலிப்பது இல்லை என்பதை நாம் அறிய முடிகிறது.

நம்பகத் தன்மையற்ற செய்திகள், கட்டுரைகள் மட்டுமல்லாது வேறு பல காரணங்களும் உண்டு. அவற்றில் முதலாவதாக வருவது, தனிமனிதத் தாக்குதல் மற்றும் அவதூறு பரப்புதல். மாற்றுக் கருத்துகள், தனிமனித விருப்பு வெறுப்புகள் காரணமாக, அறிந்தோ அறியாமலோ வெளிப்படும் காழ்ப்புணர்வு, வசைச் சொற்கள், அத்தோடு தெரிந்தே இட்டுக்கட்டி இடும் இடுகைகளும் வாசகர்களை முகம் சுழிக்க வைக்கிறது.

மேற்கூறியவை மேலோங்குவதற்கு, இடுகைகளுக்கு கிடைக்கும் பரபரப்பும் ஒரு காரணம். இளைஞர்கள் பெருமளவில் இத்தகைய இடுகைகளுக்கு ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே சொடுக்கு எண்ணிக்கையும் பெருகுகிறது. அதுவே, இத்தகைய இடுகைகளுக்கு ஒரு ஊக்குவிப்பாகவும் அமைந்து விடுகிறது. வெகுசன மக்களிடத்தில் இருந்து அந்நியப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம் என்பதற்கு மேலே கொடுத்த பின்னூட்டமே சான்று.

அடுத்த காரணம், போட்டி மனப்பான்மையால் விளையும் விளைவுகள். இடுகை(content) இருக்கிறது. ஆனால் அதில் உள்ளீடு(substance) இல்லாமல் போய் விடுகிறது. அதன் காரணமாய், திரட்டியில் திரட்டப்படும் இடுகைகள் எல்லாமே மொக்கை இடுகைகள் என்ற தோற்றமும் ஏற்பட்டு விடுகிறது.

எங்கள் பல்கலைக் கழகத்தில், ஒரு நாள் வெளியில் நண்பர்களோடு உலாவிக் கொண்டிருந்த போது, ஓடுதளத்தில் ஓட்டப்பந்தய வீரர் பென் ஜான்சன் மற்ற வீரர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நாங்கள் அவரைக் காணச் சென்ற நேரத்தில், ஒருவர் சக வீரரான டோனவன் பெய்லியின் ஓட்ட மணித் துளிகளைப் பற்றிக் கேட்க, இவர் கடுமையான கோபமுற்றார். பின்னர் அவர் சொன்னார்,

”நீ உன்னுள் போட்டி இடு. உனக்குள் இருக்கும் திறமையை வளர்த்துக் கொள். Try to get the best out of you! அருகில் இருக்கும் டோனவனோடு ஒப்பிடுவதின் மூலம், ஒலிம்பிக்குக்கு வரும் மற்றவர்களின் மணித்துளிகள் தெரியாத காரணத்தால் நீ அவர்களிடம் தோற்றுப் போவாய்” என்றார். இப்படியாக, நான் எனது அடுத்த இடுகை, இந்த இடுகையை விடச் சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுவதே சரியாக இருக்கும். இப்படி என்ணுவதின் மூலம், என்னோடு போட்டிக்கு வர இப்புவியில் எவரும் இல்லை.

இடுகை என்பது, முதலில் இடும் பதிவருக்குப் பிடித்து இருக்க வேண்டும். ஆகவே மனம் நன்னம்பிக்கையில் (optimism) இல்லாத நிலையில், இடுகை இடுவதைத் தவிர்த்திடல் வேண்டும்.

உடலும் மனமும் ஓய்வு என்பது துயில் கொள்தல்; உடல் இளைப்பாறுவது என்பது வினையற்று இருப்பது; உடலுக்கு இனிமை என்பது தொக்கடமிடுதல்(massage) போனறன! மனம் இளைப்பாறுவது என்பது தியானம் என்பன; மனதுக்கு இனிமை என்பது தமை(passion)யுடன் செய்தல். தமையுடன் செய்வதில் தரமோங்கும். அந்த சிந்தனையுடன் சரியானதைச் செய்ய, எனக்குண்டான எல்லை, பலம் மற்றும் பலவீனம் அறிய இன்று முதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன்.

அன்புடன்,
பழமைபேசி.

37 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
”நீ உன்னுள் போட்டி இடு. உனக்குள் இருக்கும் திறமையை வளர்த்துக் கொள். Try to get the best out of you! //


நல்ல வார்த்தைகள் தல.,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// தனிமனித விருப்பு வெறுப்புகள் காரணமாக, அறிந்தோ அறியாமலோ வெளிப்படும் காழ்ப்புணர்வு, வசைச் சொற்கள், அத்தோடு தெரிந்தே இட்டுக்கட்டி இடும் இடுகைகளும் வாசகர்களை முகம் சுழிக்க வைக்கிறது.//உண்மை தல..

சமீபத்தில் திண்டுக்கல் பக்கத்தில் த்மிழன்னை கோவில் கட்டுவதகாக முதன்முதலில் ஒரு இடுகை வ்ந்த போது உண்மையில் அந்த செய்தியையே முதலில் அந்த இடுகையில்தான் வாசித்தேன். இன்றைய சூழலில் மிக அவசிய்மா என்ற ரீதியில் எழுதப் பட்டிருந்தது.


அதன் பின்னரே அதை ஒரு செய்தியாகவே மற்ற இணைய இதழ்களிலும் வலிப்ப்பூக்களிலும் வந்தது.

முதல் இடுகையையும் அவரது கருத்தும் அவர் கொட்டியிருந்த அதே வெறுப்பு அவர் மீது எனக்கும் எழுந்தது. எதுவும் பின்னூட்டம் கொடுக்காமல் இடத்தைக் காலிச் செய்துவிட்டேன்

Suresh said...

////
”நீ உன்னுள் போட்டி இடு. உனக்குள் இருக்கும் திறமையை வளர்த்துக் கொள். Try to get the best out of you! ////

மிக அழகான வார்த்தைகள்

Suresh said...

/த விருப்பு வெறுப்புகள் காரணமாக, அறிந்தோ அறியாமலோ வெளிப்படும் காழ்ப்புணர்வு, வசைச் சொற்கள், அத்தோடு தெரிந்தே இட்டுக்கட்டி இடும் இடுகைகளும் வாசகர்களை முகம் சுழிக்க வைக்கிறது.//

மிக சரி

தேவன் மாயம் said...

முறையாகச் செய்வதானால், நிகழ்வுகள், கூறுகள், சான்றுகள், சாட்சியங்கள் முதலியன கொண்டு, அங்கீகரிக்கப்பட்ட வியாசகர்(jouralist)களால் வெகுசனப் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வருவன செய்திகள். ஊடகங்களில் வரும் செய்திகளை அடிப்படையாக வைத்து, பதிவரால் அவருடைய நிலைப்பாட்டைத் தாங்கி வருவது இடுகையில் இடம்பெறும் கட்டுரை. மாறாக, அவற்றோடு தனது கருத்துகளைத் தவுக்காரிட்டு விவாதமும் இழைக்கலாம்.
///

இதை சிந்திக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் என்றோ அங்கீகரிக்கப்பட்ட நிருபர்கள் என்றோ தனியாக இருக்கின்றனரா? என்ற சந்தேகம் தமிழ் பத்திரிக்கை உலகின் மேல் ஏற்படுகிறது.
இதற்கு நிறைய நிகழ்வுகளை-பொதுவாகவும், தனிப்பட்ட முறையிலும் கூறமுடியும்!
தமிழ்ச் சூழலைப் பொறுத்தவரை!

இதைத் தாங்களும்

ஆனால் இன்றைய நிதர்சனம் என்ன? “வெகுசன ஊடகங்கள் வலைப்பதிவுகள் போலச் செயல்பட்டு வருகிறது”

என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

நிகழ்வுகள்,கூறுகள்,சான்றுகள்,சாட்சியங்களை வைத்து--- அவற்றை ஆராய்ந்து, அவற்றை ஆராய்வதற்கான அடிப்படைத் தகுதிகளுடன் கூடிய பத்திரிக்கையாளர்கள் எழுதும்போது நீங்கள் கூறுவதுபோல் தரம் மிகுந்த நம்பகமான கட்டுரைகளோ,செய்திகளோ கிடைக்கும்.அது தமிழ்ப் பத்திரிக்கை உலகில் பெருகவேண்டும்.
அடிப்படை தமிழ் இலக்கணமோ,அடிப்படை அறிவியல் அறிவோ இல்லாத பத்திரிக்கையாளர்கள் எழுதும் படைப்புகள் நமக்கு மிகவும் வருத்தம் அளிக்கின்றன.
தமிழ்ப்பத்திரிக்கைகளில் மட்டுமல்ல!!!

வலைப்பதிவுகளிலும்தான்!!!!!

மயாதி said...

அழுத்தம் , ஆக்கம் என்பதற்கு மேலாக சரியான தமிழை வாசித்த திருப்தி...

இப்போதெல்லாம் சரியான தமிழில் எழுதப்படும் ஆக்கங்கள் இப்படி எப்போதாவதுதான் பிரசுரமாகிறது...

வாழ்த்துக்கள்.

வேத்தியன் said...

எனது அடுத்த இடுகை, இந்த இடுகையை விடச் சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுவதே சரியாக இருக்கும். இப்படி என்ணுவதின் மூலம், என்னோடு போட்டிக்கு வர இப்புவியில் எவரும் இல்லை.//

இந்த வரிகள் அருமை...

நான் உங்கள் இடுகைகள் ரசித்துப் படிக்க காரணம், தமிழ் தாங்க...
கலக்கல்...
:-)

குறும்பன் said...

//ஆனால் இன்றைய நிதர்சனம் என்ன? வெகுசன ஊடகங்கள் வலைப்பதிவுகள் போலச் செயல்பட்டு வருகிறது. அவற்றில் வரும் செய்திகளும் தலையங்கங்களும் கட்டுரைகளும் ஒரு சார்போடு, ஏற்றியும், திரித்தும், நம்பகத் தன்மையை இழந்து வருகிறது.//

சில வலைப்பதிவுகள் உருப்படியா இருக்கு என்பது உங்களுக்கு தெரியாதா? இஃகி, ஆனா ஒரு ஊடகமும் அப்படியில்லை என்பதே உண்மை. மக்களுக்கு எப்படிதான் பக்க சார்பற்ற செய்திகள் கிடைக்கும்?


வலைப்பதிவு என்பதே அவர்களுக்கு பிடித்ததை எழுதுவதற்காக தானே? அவர்கள் (பெரும்பாலானோர்) எழுதுவதில் சிறந்தவர்கள் இல்லையே. அடுத்தவரை கவரும் வண்ணம் பேசுவதும் எழுதுவதும் ஒரு கலை... எத்தனை பேருக்கு இது கைகூடியிருக்கு?

தமிழுக்கு வலையுலகம் புதியது. போக போக தெளிவடையும் என்று எதிர்பார்க்கலாம்.

நல்ல பதிவுகளை தேடி வாசகர் படித்துக்கொள்ள வேண்டியது தான்.

ஆரம்ப காலங்களில் தமிழ்மணத்தில் குறைந்த அளவு பதிவர்களே இருந்தனர். அப்போது மொக்கை பதிவுகள் மிக குறைவாய் இருந்தன, இப்போ பதிவர்கள் அதிகம் மொக்கையும் அதிகம். இது தவிர்க்க முடியாதது என்றே கருதுகிறேன்.

Venkatesh Kumaravel said...

செல்வேந்திரன் அண்ணன் சில நாட்களுக்கு முன்னால் 'வலைப்பூ' என்பது ஒரு ரஃப் நோட் மாதிரி என்று எழுதியிருந்தார். நானும் அப்படி தான் நினைக்கிறேன். நமது எழுத்தை இன்னும் கூர்மையாக்கிக்கொள்ள நெட் ப்ராக்டிஸ் செய்யும் இடம் இது என. டைம்ஸ் ஆஃப் இந்தியா படிக்கிறீர்களா? அந்த கொடுமைகளுக்கு இது எவ்வளாவோ தேவலை. சில நாட்களுக்கு முன்னால் முதல் பக்கம் முழுவதும் ஒரே ஒரு விளம்பரத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
வலைப்பதிவுகளில் செய்திகள், இலக்கியம், சினிமா, அறிவியல், தொழில்நுட்பம், ஆன்மீகம், நடிகைகளின் கவர்ச்சிப்படங்கள் என ஏகப்பட்டது வந்தாச்சு.. இதில் நமக்கு தேவையானவற்றை திரட்டிகள், ரீடர்கள் மூலமாக வாசித்து வாசிப்பனுபவமும் பெற தானே இதெல்லாம், அதிலும் இப்படி கோளாறுகள் நடந்து வருவது வருத்தப்பட வேண்டிய ஒன்றே. நீங்கள் சொல்லும் தனி மனித காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்துவரும் சச்சரவுகள் குறித்த நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன்.

பழமைபேசி said...

@@குறும்பன்

மூதாதையர்க்கு வணக்கம்!

சபையில் பெரும்பான்மை தோற்றுவிப்பதுதான் தோற்றம் என்பது தாங்கள் அறியாததா, என்ன?? இஃகிஃகி!!

//வலைப்பதிவு என்பதே அவர்களுக்கு பிடித்ததை எழுதுவதற்காக தானே? //

We may claim that this logically right, but for sure it is not right in practical.

தர்க்க ரீதியாக சரியே ஆயினும், நடைமுறைக்கு ஒவ்வாததே!

நாட்குறிப்பின் ஒரு பக்கம் வாதிடுவர். அப்படியெனில், அது அந்தரங்கமாக இருக்கப்பட வேண்டியது. சொ.க.வா.க தலைவர் தூக்கில் தொங்கி, கல்லடிபடும் நாள், புனித நாளாக மாறும் என ஒருவர் இடுகை இடுவது தகுமா?

மேற்பட்டு, எழுத்து என்பதும் கலை, இலக்கியம் போல, கலாசாரம்/பண்பாட்டுக்கேற்ப கையாளப்பட வேண்டும்.

//அடுத்தவரை கவரும் வண்ணம் பேசுவதும் எழுதுவதும் ஒரு கலை... எத்தனை பேருக்கு இது கைகூடியிருக்கு?
//

அதே கலைதான், குறைந்தபட்ச நாகரிகத்தையும் கொல்கிறது.

//நல்ல பதிவுகளை தேடி வாசகர் படித்துக்கொள்ள வேண்டியது தான். //

வாதத்திற்கு சரியே ஆயினும், ஒவ்வொரு பதிவும் நல்ல பதிவாக இருக்க வேண்டும் என செயலாற்றுவதில் தவறில்லை.

//இப்போ பதிவர்கள் அதிகம் மொக்கையும் அதிகம். இது தவிர்க்க முடியாதது என்றே கருதுகிறேன்.
//

என்னுடைய தனிப்பட்ட கருத்து. எந்த இடுகையும் மொக்கை கிடையாது. ஆனால், குறைந்தபட்ச வரையறையாக, தனிமனிதத் தாக்குதல், சாதி, மத உணர்வுகளை வெளிப்படுத்தாமை/புண்படுத்தாமை முதாலானவை கடைபிடித்தல் இன்றைய தேவை... புதுமை படைக்கிறோம் என, அரதப் பழயதை புது வடிவத்தில் வழங்கல் சரியாகுமா?

//இது தவிர்க்க முடியாதது என்றே கருதுகிறேன்.//

எதுதான் தவிர்க்க முடியும் தமிழுலகில்?

நிகழ்காலத்தில்... said...

//முதலில் இடும் பதிவருக்குப் பிடித்து இருக்க வேண்டும். ஆகவே மனம் நன்னம்பிக்கையில் (optimism) இல்லாத நிலையில், இடுகை இடுவதைத் தவிர்த்திடல் வேண்டும்//

வெறும் வருகையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் அல்லாது மேற்கண்டவிதமாக இருந்தால் பதிவுலகம் ஒரு பொக்கிஷமாக மாறிவிடும்

vasu balaji said...

/ஆகவே மனம் நன்னம்பிக்கையில் (optimism) இல்லாத நிலையில், இடுகை இடுவதைத் தவிர்த்திடல் வேண்டும்./

சரியான வழிகாட்டல்.

/எனக்குண்டான எல்லை, பலம் மற்றும் பலவீனம் அறிய இன்று முதல் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன்./

நானும்.

ராஜ நடராஜன் said...

பதிவுகள் உலக நிகழ்வுகளை முக்கியமாக தமிழகம்,ஈழம் குறித்த பார்வையை வெளிச்சம் போட்டுக் காண்பித்தன.அந்த விதத்தில் பதிவுகளுக்கும்,திரட்டிக்கும் வெற்றியே.ஆனால் தேர்தல்,போர் குறித்த தோல்விகள் பதிவுகளின் கண்ணோட்டதிற்கு தோல்வி என்பதோடு ஊடகங்கள்,உலக அமைப்புக்கள்,தமிழக அரசியல் எப்படி பொய்,போலிக் கொள்கைகளில் மனிதர்களின் நலன்களிலிருந்து விலகி செயல்படுகின்றன என்ற புரிதலையும் தந்திருக்கிறது.

மேலும் சில பதிவுகள் தீவிர வாசகம் என்ற நிலையிலிருந்தும் விலகிப் போய் மனதை அந்தக் கணங்களுக்கு மட்டும் மகிழ்வூட்டும் எழுத்துக்களாகவும் மாறியுள்ளது.பதிவுகளும் (இடுகை என்று சொல்ல வேண்டுமோ!பழக்க தோசம்,மன்னிக்கவும்) நுகர்வுச் சந்தையின் ஒரு பகுதியாகவே மாறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் புரிதலை தந்தமைக்கு பதிவுகளுக்கும் தமிழ்மணத்திற்கும் நன்றி.

எம்.எம்.அப்துல்லா said...

வரவர உங்க இடுகைகளைப் படிப்பது எனக்கு போதையாகிவிட்டது. தொடரட்டும் இந்த அசத்தல்.

:)

ஆ.ஞானசேகரன் said...

//அந்த நம்பகத் தன்மை இல்லாத, அல்லது முழுமை அடையாத செய்திகளோடு சொந்த நிலைப்பாடு விருப்பு வெறுப்புகளைக் கொட்டி, பதிவர்களாகிய நாமும் தத்தம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். //
மெய்தான் நண்பா

//அறிந்தோ அறியாமலோ வெளிப்படும் காழ்ப்புணர்வு, வசைச் சொற்கள், அத்தோடு தெரிந்தே இட்டுக்கட்டி இடும் இடுகைகளும் வாசகர்களை முகம் சுழிக்க வைக்கிறது.//

தனிமனித வசைச் சொற்கள் முக்கியமாக தவிற்கப்படதான் வேண்டும்

//”நீ உன்னுள் போட்டி இடு. உனக்குள் இருக்கும் திறமையை வளர்த்துக் கொள்.//

மிக சரியா சொன்னீங்க நண்பா

இராகவன் நைஜிரியா said...

// இப்படியாக, நான் எனது அடுத்த இடுகை, இந்த இடுகையை விடச் சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுவதே சரியாக இருக்கும். //

மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

பழமைபேசி said...

@@SUREஷ்
@@Suresh

ஆகா, சுரேசர்கள் இருவருக்கும் நன்றி!

யாரோ அவன் யாரோ said...

மற்றவரின் பதிவுகளில் சிறந்த்தை பாராட்டவாவது வேண்டாம். வேண்டுமென்றே தனி நபர் தாக்குதல், கிண்டல், கேலி, நக்கல் என்ற பெயரில் தனக்கு மட்டும் எல்லாம் தெரியும் என்ற ரீதியில் எழுதுவதும் பொதுவாக பேசுவது போல் நையாண்டி செய்வதும் அவர் சார்ந்திருக்கும் அரசிய்ல கட்சியின் தலைமை போன்று பேசுவது நகைப்புக்குரியது.

எல்லாருக்கும் அந்த “அதிர்ஷ்டம்” கிடைக்குமா..??

பழமைபேசி said...

@@thevanmayam

ஆமாங்க மருத்துவர் ஐயா! நாம நம்மை மேம்படுத்த முயற்சி செய்யலாம்... வேற நம்மால ஒன்னுஞ் செய்ய முடியாது. இஃகிஃகி!

நன்றிங்க ஐயா!

பழமைபேசி said...

//மயாதி said...
அழுத்தம் , ஆக்கம் என்பதற்கு மேலாக சரியான தமிழை வாசித்த திருப்தி...

இப்போதெல்லாம் சரியான தமிழில் எழுதப்படும் ஆக்கங்கள் இப்படி எப்போதாவதுதான் பிரசுரமாகிறது...
//

வணக்கங்க மயாதி! தங்களின் வருகைக்கு மிக்க நன்றி!

இப்போதெல்லாம் என்று சொல்லி விட்டீர்களே? நானும் கிட்டத்தட்ட தினமொரு இடுகை இவ்வளவு நாளும் இட்டது தமிழ் அல்லவா? அவ்வ்வ்.....

பழமைபேசி said...

//வேத்தியன் said...
எனது அடுத்த இடுகை, இந்த இடுகையை விடச் சிறப்பாக இருக்க வேண்டும் என எண்ணுவதே சரியாக இருக்கும். இப்படி என்ணுவதின் மூலம், என்னோடு போட்டிக்கு வர இப்புவியில் எவரும் இல்லை.//

இந்த வரிகள் அருமை...

நான் உங்கள் இடுகைகள் ரசித்துப் படிக்க காரணம், தமிழ் தாங்க...
கலக்கல்...
:-)
//

நன்றிங்க வேத்தியன்!

பழமைபேசி said...

//வெங்கிராஜா said... //

வாங்க வெங்கிராசா... வணக்கம்!


//செல்வேந்திரன் அண்ணன் சில நாட்களுக்கு முன்னால் 'வலைப்பூ' என்பது ஒரு ரஃப் நோட் மாதிரி என்று எழுதியிருந்தார். நானும் அப்படி தான் நினைக்கிறேன். நமது எழுத்தை இன்னும் கூர்மையாக்கிக்கொள்ள நெட் ப்ராக்டிஸ் செய்யும் இடம் இது!//

வெள்ளோட்டம் பார்க்கலாம்... சரிதான்... அந்த வெள்ளோட்டமும் நல்லதா இருக்க வேணாமா? நாயே பேயேன்னும்.... தெருமுனைச் சவடால்களையும் வலையேத்தி, வலையகத்தையும் தெருமுனையாக்கணுமா??


//டைம்ஸ் ஆஃப் இந்தியா படிக்கிறீர்களா? அந்த கொடுமைகளுக்கு இது எவ்வளாவோ தேவலை. சில நாட்களுக்கு முன்னால் முதல் பக்கம் முழுவதும் ஒரே ஒரு விளம்பரத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.//

இடுகையில குறிப்பிட்ட மாதிரி, ஊடகங்கள் ஊடகங்கள் மாதிரி இல்லை என்பதும் கண்கூடுதான்!

//நீங்கள் சொல்லும் தனி மனித காழ்ப்புணர்ச்சி காரணமாக நடந்துவரும் சச்சரவுகள் குறித்த நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன்.
//

இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்தால் பரவாயில்லை; தலைவர்களை கொச்சையான வார்த்தைகள் கொண்டு விளிப்பதும், குறைந்தபட்ச நாகரிகத்தைக் காற்றில் பறக்க விடுவதும்தான் தலையாய பிரச்சினை...

நாம ஒன்னும் செய்ய முடியாதுங்க வெங்க்கி... திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால், திருட்டை அழிக்க முடியாது... பழம்பாடல் சொல்லுதே?!

jeevagv said...

மிக்க நன்று, வாழ்த்துக்கள்!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

Very good. voted.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

மணி,
சரியாக ஆராய்ந்திருக்கிறீர்கள்.

பதிவுகள் போடாத என் நண்பர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இந்த தமிழ் வலையுலகம் என்னவோ அந்நியமாகத்தான் தெரிகிறது.

பழமைபேசி said...

@@நிகழ்காலத்தில்...
@@பாலா...
@@ ராஜ நடராஜன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே, இந்த இடுகை என்னை முன்னிறுத்துவதற்கு அன்று, எனவே முடிந்தவரை வலையுலகத்திற்கு மதிப்பு கூட்ட முயற்சி மேற்கொள்வோம்!

பழமைபேசி said...

//எம்.எம்.அப்துல்லா said...
வரவர உங்க இடுகைகளைப் படிப்பது எனக்கு போதையாகிவிட்டது. தொடரட்டும் இந்த அசத்தல்.
//

அண்ணே, இருக்கட்டு, இருக்கட்டு, உங்களுக்கு இன்னும் போதை ஏத்தக் கிடக்கு இன்னைக்கு... இஃகிஃகி!

பழமைபேசி said...

@@ ஆ.ஞானசேகரன்
@@ இராகவன் நைஜிரியா
@@ யாரோ அவன் யாரோ

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

Muniappan Pakkangal said...

Try to get the best out of you & also give the best in you.Nalla post nanbaa.

Renga said...

//அந்த நம்பகத் தன்மை இல்லாத, அல்லது முழுமை அடையாத செய்திகளோடு சொந்த நிலைப்பாடு விருப்பு வெறுப்புகளைக் கொட்டி, பதிவர்களாகிய நாமும் தத்தம் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கிறோம். //

Wow!! Exactly You have expressed my thoughts & concerns..

Once again Great Article from your end and congratulations!!!!!

Krish said...

Ungaloda Yeluthukkal puthgama padikkpada vendiya ragam...Velai idaiye padika mudiyadha neenda aanal uruppadiyana yeluthu...

ராஜ நடராஜன் said...

உங்கள் இடுகையை எலிப் பரிட்சார்த்தமா ஒரு ஓட்டுப் போட்டா பழைய கணக்கு 5 தான் தமிழ்மணத்துல தெரியுது.எண் கூடவில்லையே?

பழமைபேசி said...

@@Muniappan Pakkangal
@@Renga
@@Krish

நன்றி மக்களே!

@@ராஜ நடராஜன்

அண்ணே, தெரியலைங்களே! ஆனாத் தெரியுது நீங்க ஓட்டு இடுகை வெளியான அன்னைக்குப் போடவே இல்லைனு... அதான் நீங்களே சொல்ட்டீங்களே?! இஃகிஃகி, இது எப்டி இருக்?

நாமக்கல் சிபி said...

ரைட்டேய்!

jothi said...

Good article

முனைவர் கல்பனாசேக்கிழார் said...

மிகச் சரியான வார்த்தைகள்.உங்கள் பதிவு குட்ப்ளாக்கில் வந்துள்ளது.வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

//முனைவர் சே.கல்பனா said... //

முனைவர் அவர்களுக்கு மிக்க நன்றி!