11/15/2025

பரணி இடைக்காடர் சேரன்

 

பரணி இடைக்காடர் சேரன்

மாணவர்களுக்கான போட்டிகளை நடத்துவது ஏன்?

  • திறமைகளை வளர்த்தல், கண்டறிதல்: போட்டிகள் மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளையும், தனிப்பட்ட பலங்களையும் கண்டறிய உதவுகின்றன. மேலும், அந்தத் திறன்களை மெருகூட்ட ஒரு தளத்தை வழங்குகின்றன.
  • படிப்பைத் தாண்டிய கற்றல்: வகுப்பறையில் கற்பிக்கப்படும் பாடங்களைத் தாண்டி, மாணவர்கள் புதிய பற்றியங்கள் கற்றுக்கொள்ளவும், அவற்றை மெய்யார்வாழ்க்கைத் திறன்களாகப் பயன்படுத்தவும் வாய்ப்பளிக்கின்றன.
  • போட்டி மனப்பான்மையை உருவாக்குதல்: ஆக்கப்பூர்வமான போட்டி மனப்பான்மை (Healthy Competition) மாணவர்களிடையே விடாமுயற்சி, கடின உழைப்பு, இலக்கை அடைவதற்கான உந்துதல் ஆகியவற்றைத் தூண்டுகிறது.
  • தன்னம்பிக்கை, ஊக்கம்: போட்டியில் பங்கேற்பது அல்லது வெற்றி பெறுவது மாணவர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. தோல்வி அடைந்தாலும்கூட, அடுத்த முறை சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்ற ஊக்கத்தினை அளிக்கிறது.
  • முடிவெடுக்கும், சிக்கலைத் தீர்க்கும் திறன்: வினாடி-வினா, கருத்தாடல் அல்லது திட்டப்பணி சார்ந்த போட்டிகளில், மாணவர்கள் விரைவாகவும், சரியாகவும் முடிவுகளை எடுக்கவும், சிக்கல்களைக் கூர்மையாகத் தீர்க்கவும் கற்றுக்கொள்கிறார்கள்.
  • காலநிர்வாகம், குழுப்பணி: திட்டப்பணி போன்ற போட்டிகள் காலக்கெடுவுக்குள் வேலையை முடிக்கக் கற்றுக்கொடுக்கின்றன. குழுப்போட்டிகள் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுதல், கருத்துப் பரிமாற்றம் செய்தல், பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ளுதல் போன்ற குழுப்பணித் திறன்களை மேம்படுத்துகின்றன.
  • அச்சத்தைப் போக்கி மேடையில் பேசுதல்: பேச்சுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் முதலானவை, பொதுவெளியில் பேசும் அச்சத்தைப் போக்கி, கருத்துக்களைத் தெளிவாக வெளிப்படுத்தப் பயிற்சி அளிக்கின்றன.

சுருக்கமாகச் சொன்னால், போட்டிகள் என்பது வெறும் வெற்றி தோல்வி அல்ல, அது மாணவர்களின் சமூக, மனம், கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு சக்திவாய்ந்த கருவியாகும். பரிசுகளும் பெருமை கொள்தலும் முதன்மை பெறுதல் ஆகாது என்கின்ற அடிப்படையில், வட அமெரிக்க வாகை சூடி போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அதற்காக உள்ளூரைச் சார்ந்த பொருத்தமானவர், ஒருங்கிணைப்பாளராக இருத்தல் நன்றெனும் பார்வைக்கொப்ப நமக்கு வாய்க்கப்பெற்றவர்தாம் திருமிகு பரணி இடைக்காடர் சேரன் அவர்கள். வேக் மாவட்டத்தின் 39ஆவது ஆண்டிற்கான சிறந்த பயிற்றுநர் விருது பெற்றவர்.

பொறுப்பேற்றுக் கொண்ட நாள் துவக்கம், பேரவை விழா முடிவுறும் வரையிலும் முழு ஈடுபாட்டுடன் பல நூற்றுக்கணக்கான பெற்றோர்கள், மாணவர்கள், தமிழ்த்தேனீ, குறள்தேனீ, கலைத்தேனீ, படைப்புத்தேனீ, அறிவியற்தேனீ முதலான குழுக்கள், நடுவர்கள், இடம், சான்றிதழ், பரிசுப்பொருட்கள், நிகழ்ச்சிநிரல், உணவு உள்ளிட்ட பலவற்றோடும் தலையைக் கொடுத்துக் கொண்டு, அன்பும் அக்கறையும் பிறழாது செயற்படுவதென்பது எளிதான செயலன்று.

காட்டமாக மின்னஞ்சல்கள் வரும். முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவர். வேடிக்கையும் வியப்புமான செயற்பாடுகள், ஒருவரது பொறுமைக்கே அறைகூவல் விடுக்கும். “ஏங்க, ஒரு குழந்தை படைப்புத்தேனீ, கலைத்தேனீ பிரிவில் இரண்டு போட்டிகள்லதா பங்கேற்க முடியுமெனச் சொல்றீங்க. ஆனா அவுக வேறொரு மின்னஞ்சல் பாவிச்சு, கூடுதலாகப் பதிஞ்சிருக்காங்க. எங்களுக்கு மட்டும்?” “அப்படி செய்திருந்தா நாங்க என்னங்க செய்ய முடியும்? உங்களுக்கும் எதனா அப்படி பதியணும்னா நான் முயன்று பாக்குறன்” “இல்ல, அவுகள எடுத்து வுட்ற முடியுமா?”. “ஞேஞே”. இப்படியெல்லாம் நிகழ்வுகள் இடம் பெறும்.

எல்லாவற்றையும் பொறுமையுடன் கையாண்டு, கொதிப்பவர்களிடம் தன்மனம் பார்க்காமல் மன்னிப்புகள் கோரிக்கோரியே குதூகலம் குறையாமல் பார்த்துக் கொண்டவர் இவர்.

Ms. Parani Idaikaadar Cheran's leadership is a beacon, guiding national competitions with both fierce responsibility and profound empathy. Her success shows that true strength in a leader lies not just in achievement, but in the compassionate heart that motivates it.

-பழமைபேசி. 

11/13/2025

சரவணக்குமார் மணியன்


விழாக்களின் கொண்டாட்டங்களில் உணவு ஓர் இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. இது வெறும் வயிற்றை நிரப்பும் ஒரு பற்றியம் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கலாச்சாரம், பாரம்பரியம், அன்பு, விருந்தோம்பலை வெளிப்படுத்தும் ஒரு முக்கியச் சின்னமாகும். விழா எதுவாக இருந்தாலும், அதில் பரிமாறப்படும் உணவு அந்த நிகழ்வின் தனித்துவமான அடையாளமாக மாறி, மக்களின் நினைவுகளில் நீங்கா இடத்தைப் பிடித்துவிடுகிறது.

ஒவ்வொரு சமூகத்தின் விழாக்கால உணவும் அதன் பாரம்பரிய சமையல் முறைகளையும், உள்ளூர் விளைபொருட்களையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துகின்றது. விழாக்களில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது ஒரு முக்கியமான சமூகச் சடங்காகும். இந்தச் செயல் உறவுகளையும் நட்பையும் வலுப்படுத்துகிறது. சமைப்பவர்களும் பரிமாறுபவர்களும் அன்பைப் பரிமாறுகிறார்கள், உண்பவர்கள் உவப்பினைப் பகிர்ந்துகொள்கிறார்கள். உணவு பரிமாறப்பட்டு அமர்ந்து உண்ணும் ஒவ்வொரு மேசையுமே ஒரு சிறிய பொதுவெளியாக மாறி, உரையாடல்களுக்கும் மகிழ்ச்சிக்கும் சிரிப்பொலிக்கும் வழிவகுக்கிறது. போதாததுக்கு எதிரிலேயே வட அமெரிக்க வாகை சூடியின் மாபெரும் துள்ளாட்டங்களும் இசையொலிகளும்.

தமிழர்களின் மரபில், விருந்தினரை உபசரிப்பது மிக முக்கியமான கடமையாகக் கருதப்படுகிறது. விழாக்களில் வழங்கப்படும் உணவு, விருந்தோம்பலின் உச்சகட்ட வெளிப்பாடு ஆகும். பரிமாறப்படும் உணவின் தரம், வகை, மற்றும் அளவு ஆகியவற்றைக் கொண்டே விருந்தினர்கள் உபசரிப்பின் நேர்த்தியை மதிப்பிடுகிறார்கள். உணவு சுவையாகவும், மனநிறைவாகவும் இருக்கும்போது, விழா முழுமை அடைகிறது. முன்பெல்லாம் பேரவை விழாவுக்கான அரங்கங்களைப் பார்க்கும் போதேவும், உண்ணும் இடத்தைப் பொறுத்தேவும் இடம் தீர்மானிக்கப்பட்டது. அந்த அளவுக்கு உண்ணல் என்பது அடிப்படை.

2025 பேரவை விழாவின் உணவுக்குழு நண்பர்கள் ஷான் பச்சமுத்து, ஜெயராஜ் கனகராஜ் குழுவினர் பின்னிப்படல் எடுத்திருந்தனர். இந்த இடத்தில்தாம் சிகாகோ தமிழ்ச்சங்கத் தலைவர் சரவணக்குமார் மணியன் அவர்களைக் குறிப்பிட்டாக வேண்டும். அவ்வப்போது அழைத்துப் பேசுவார். மாற்றுக்கருத்துகளாகவே சொல்லிக் கொண்டிருந்ததைப் பார்த்த நாம், ஒருமுறைக்குப் பலமுறை நன்கு திட்டிவிட்டோம். இஃகிஃகி. ஆனாலும் அவர் மனத்தில் கொள்ளாது அழைத்து, விழா ஏற்பாடுகளைப் பற்றி வினவுவார்.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு, தமிழ்நாடு அறக்கட்டளை மாநாடு, தமிழ்நாட்டு முதல்வர் விழா என அடுத்தடுத்து விழாப்பணிகளில் ஈடுபட்டதன் வாயிலாக அனுபவங்கள் பெற்றிருப்பவர். ’பிளேட் வாங்கியாச்சா, தண்ணி வாங்கியாச்சா, அதுக்கு என்ன செய்தீங்க, இதுக்கு என்ன செய்தீங்க, மக்கள் மறுசோறு வாங்க எப்படிப் போவாங்க?’ எனப் பலவாறாகப் படுத்தி எடுத்தார். நான் உணவுக்குழுத் தலைவரை அழைத்து இவருடன் கோத்துவுட்டுவிட்டேன். தம் தரப்பு நண்பர்களையும் அழைத்துக் கோத்துவுட்டார் சரவணன். பேசிக்கொண்டு இருந்தனர். செல்ல வேண்டிய பாதை புலப்படுவதாக இருந்தது. அதன்பிறகு, சிகாகோ தமிழ்ச்சங்க நண்பர்கள் இரத்தினக்குமார், விஜய்சாந்தலிங்கம் முதலானோர் முந்தினநாளே வந்திருந்து விழாப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். 

அறை எண் 322. மறக்க முடியாது. 24 மணிநேரமும் அதன் கதவு திறந்து வைக்கப்பட்டே இருந்தது ஒரு வார காலத்துக்கும். இஃகிஃகி. அன்னவாசல் அறை எண் 322. எந்த நேரத்திலும் எவர் வேண்டுமானாலும் அங்கு சென்று வகைவகையான உணவுகளை உட்கொண்டு பசியாறலாம். அறைமுழுக்க குடிநீர் பாட்டில்கள் வேறு. எதோவொரு நேரத்தில், ”உள்ளூர் தன்னார்வலர்கள் குறைவாக இருக்கின்றாற்போல இருக்கின்றது. சம்பளத்துக்குத்தான் ஆட்களை அமர்த்த வேண்டும் போலுள்ளது” என்பதாகப் பேச்சு. நான் அதைப் பற்றிக் குறிப்பிடவே, நண்பர் சொன்னார், “கம்னு இருங்ணா. வாறவுக எல்லாமே வேலை செய்யோணும்ங்ற எண்ணத்துலதா வரப் போறாங்க!”.

𝑳𝒊𝒕𝒕𝒍𝒆 𝒔𝒕𝒆𝒑𝒔 𝒆𝒗𝒆𝒓𝒚 𝒅𝒂𝒚 𝒍𝒆𝒂𝒅 𝒕𝒐 𝒃𝒊𝒈 𝒓𝒆𝒔𝒖𝒍𝒕𝒔.

-பழமைபேசி.

11/11/2025

முருகையா முரளீதரன்


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 38ஆவது தமிழ்விழாவுக்கான தன்னார்வலர்கள் பாராட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டுமெனும் ஆவலுக்கு முதன்மைக் காரணமாக இருந்தவர்தாம் திரு. முருகையா முரளீதரன் அவர்கள். பதிவுக்குழுத் தலைவர், ஈழத்தமிழர் செயற்பாட்டுக்குழுவின் துணைத்தலைவர். விழாவில் கலந்து கொள்ளப் பதிந்தும் இருந்தேன். ஆனால், மாகாண அளவிலான இசைநிகழ்ச்சியில் மகர்கள் கலந்து கொண்டிருந்ததால் வெளியூர் செல்லும்படியாக ஆகிவிட்டது.  https://www.ncmea.net/sections-2/orchestra/orchestra-events/nc-all-state-honors-orchestra/

காலையிலேயே, நண்பரும் தமிழ்ச்சங்க முன்னாள் தலைவருமான திரு மோகன் வைரக்கண்ணு அவர்கள் நினைவூட்டுத் தகவலைப் பகிர்ந்திருந்தார். அழைத்து இயலாமையைப் பற்றித் தெரிவித்ததோடு, தொடர்ந்து திரு முரளி அவர்களைப் பற்றியும் சற்று அளவளாவிக் கொண்டிருந்தோம். அவரைப் பற்றி விழாவில் பேச வேண்டுமென எண்ணியிருந்தேன்.

துவக்கத்தில் இருந்தேவும் 24x7 தொடர்பில் இருந்து வந்தார். எப்போது என்ன கேட்டாலும், அக்கறையுடனும் உள்ளன்போடும் உடனுக்குடனே மறுமொழி அனுப்புவார். வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளுக்கான முனைப்புகளில் ஏராளமான நண்பர்கள், தாமாக முன்வந்து பங்களித்துக் கொண்டிருந்தனர். தன்னார்வலர்கள் உலகெங்குமிருந்து ஊக்கத்துடன் தாமாக முன்வந்ததுதான் விழாவின் வெற்றிக்கான ஒரே காரணம். நண்பர் செந்தூரன் அவர்கள் பொதுவெளியில் பகிர்ந்தது: “நான் 2005ஆம் ஆண்டுகால கட்டத்திலிருந்து ஆண்டுதோறும் கலந்து கொள்கின்றேன். சார்ல்ஸ்டன் விழாவுக்குப் பிறகான சிறப்பு விழாவாக இந்த ஆண்டு விழாவினைக் கண்டேன்”. இதற்கிடையில், பொருளாளர் வள்ளிக்கண்ணன், வட அமெரிக்க வாகை சூடிக்கான சிறப்பு நுழைவுகளின் முன்வரைவினை முன்வைத்தார். செயற்குழு, வழிகாட்டுதல் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு, அதனைச் செயற்படுத்துவதில் திரு முரளியின் பங்கு முக்கியமானது.

பல்வேறு கோணங்களில் பெற்றோர்கள் அணுகுவார்கள். அவற்றுக்கெல்லாம் தாயன்போடு பணிவிடை செய்த திருமிகு பரணி இடைக்காடர் அவர்களுக்குப் பக்கத்துணையாக இருந்து, பதிவுகளில் இருக்கும் விதிவிலக்குகளுக்கான தீர்வுகளைச் செய்து கொடுத்தவர் திரு.முரளி அவர்கள். இடையில் அவரது கணினி தொலைந்து விட்டது, அல்லது பழுதாகிவிட்டதென நினைக்கின்றேன். அந்த நேரத்திலும் கூட, பரபரப்புகள் வலுவாகி சர்ச்சைகள் ஆகிவிடாவண்ணம் துரிதமாகச் செயலாற்றியவர்.

கேட்பதா வேண்டாமாயென்கின்ற மனச்சலனம். கேட்டே விட்டேன். முரளி, ”ஒரு மூணு வாலண்டியர் பாஸ்....”. சொல்லிக் கூட முடிக்கவில்லை. ”இந்தாங்க பழமைபேசி”, சற்றும் யோசிக்காமல் கொடுத்த அந்த மனப்பாங்குக்கு நான் நன்றியுடையவனாகின்றேன். 

காலையில் 8 மணிக்கு விழா துவங்க வேண்டும். இரவெல்லாம் இருக்கைகள் தூக்கிப் போட்டு ஒழுங்குபடுத்திவிட்டு குளித்துவிட்டுப் படுக்கும் போது மணி அதிகாலை 3. காலை ஏழு மணிக்கெல்லாம் வளாகம் வந்தாயிற்று. ஒருங்கிணைப்பாளர் மீனா அவர்களிடமிருந்து அழைப்பு, “பழமைபேசி, நாகசுர தவில் குழுவினர் அங்க முன்னாடி இருக்காங்க. உள்ள வுடமாட்றாங்களாம், பாருங்க”. அவர்களுக்கான நுழைவு அட்டைகளைப் பெற வேண்டுமானால், பதிவுக்குழு வேண்டும். அவர்கள் ஏழரை மணிக்குத்தான் வருவார்கள். முரளி அவர்கள் கொடுத்திருந்த அந்த மூன்று பாஸ்களைப் பாவிக்கலானேன்.  அதிலிருந்து, அந்த மூன்று பாஸ்கள் செயலாற்றிய கடமைகளுக்கு அளவேயில்லை. 

முக்கிய விருந்திநர்களில் பலர் தங்கள் பாஸ்களைக் கொண்டுவரவில்லை. அழைப்பு நமக்கு வரும். இவற்றைக் கொடுத்து, அவர்களை அழைத்து வர வேண்டும். திரும்பவும் அவர்களிடமிருந்து கொடுத்த பாஸைக் கேட்டு வாங்குவதற்குள் தாவு தீர்ந்துவிடும். இஃகிஃகி.

Mr. Murali, it’s because of people like you that the world continues to spin with kindness, empathy, and grace. FeTNA and the entire Tamil community owe you immense gratitude for your selfless service.

-பழமைபேசி.

9/27/2025

திருப்பதி திருமலை

 திருப்பதி திருமலை


சொல்லிக் கொண்டே இருப்பார். எனக்கு அதில் அவ்வளவு நாட்டமில்லை. ஊரில், அம்மா, அப்பா, அண்ணன் என எல்லாரிடமும் சொல்லி ஏற்பாடும் செய்துவிட்டார். குடும்பமாக வெளியூர்ப் பயணம். தொடர் வண்டியில் உற்றார் உறவினர்களோடு இன்புற்று இருந்தோம்.

மூத்த பிள்ளைக்கு வயது 8. நாங்கள் இருவர் என, நாங்கள் மூவர் மட்டும் அடிவாரத்திலிருந்து நடந்தே செல்வதாக வேண்டுதலாம். நான் ஊரில் இருந்தவரையிலும், அலுவலக நண்பர்களோடு ஆண்டுதோறும் சென்று, மலையேறுவது வாடிக்கை. ஆகவே எனக்கு அதில் யாதொரு தயக்கமும் இருந்திருக்கவில்லை.

பாப்பாவுக்கு மாங்காய்ச்சீவல், கொய்யாப்பழம், அது இதுயென வாங்கிக் கொடுப்பது, சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்ப்பதென தொய்வின்றியும் குதூகலமாகவும் அமைந்தது. மலையேறி முடித்ததுமே வரவேற்று, தலைக்கு ஒரு அனுமதிச் சீட்டும் கொடுத்தார்கள். கால்நடையாக வந்தவர்களுக்கான அனுமதிச்சீட்டு, பணம் கொடுக்கத் தேவையில்லை. பணம் கட்டிய நுழைவுச்சீட்டும் வாங்கக் கூடாதாம். வேண்டுதல் அப்படியெனக் கூறப்பட்டது.

வரிசையில் நின்றோம். முதல் அரைமணி நேரம் கால்கடுக்க நின்று நின்று வரிசையில் சென்று கொண்டிருந்தோம். கால்வலியை விட, பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு கும்பலின் நடவடிக்கைகள்தாம் பெரும் தொல்லையாக இருந்தது. மூன்று இளம்பெண்கள், இளைஞர்கள் கொஞ்சம் பேர், ஐடி அலுவலகத்தில் ஒன்றாக வேலை பார்ப்பவர்களெனப் புரிந்து கொள்ள முடிந்தது. தமிழர்கள். காச் மூச் எனக் கத்திக் கொண்டும், வறட்டுச் சிரிப்புகள் சிரித்துக் கொண்டும் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். நான், இல்லாளைக் கடிந்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், அவர்களை முன்னுக்கு, அவர்களின் கூச்சலோசை காதில் விழாதபடியான தொலைவுக்கு முன்விட்டுப் பின்னால் நின்று கொண்டோம்.

ஒருவழியாக பட்டிக்குள் சென்றாகி விட்டது. தரையில் உட்காரும் வாய்ப்பு. சற்று நேரத்துக்கெல்லாம் உறங்கிவிட்டாள் பிள்ளை. நானும் உறங்கி விட்டேன். எழுப்பினார்கள். மீண்டும் வரிசை. கொஞ்சம் தொலைவு சென்றானதும் அடுத்த பட்டி. பெரிய சர்வம் வரும். உணவு பரிமாற. கூட்டம். குறைந்தானதும் போய் வாங்கி வரலாமென நினைப்போம். அதற்குள் தீர்ந்து விடும். மீண்டும் வரும். கூட்டம் கொஞ்சம் குறையட்டும், போய் வாங்கி வரலாமென நினைக்கும் போதே, அது தீர்ந்துவிடும்.

மூவருக்குமே பசி. கூடவே உறக்கமும். இரு பெண்கள் எங்களை நோக்கி வந்தனர். பட்டண ரவை உப்புமா, இரண்டு இலைகளில் கொடுத்து, தண்ணீரும் கொடுத்தார்கள். எங்களை எங்கிருந்து கொண்டோ, கவனித்துக் கொண்டே இருந்திருக்கக் கூடும். வணங்கினேன்.

கிட்டத்தட்ட 15 மணி நேரத்துக்குப் பின், கோவிலின் வெளிச்சுவருக்கு அருகில் வரிசையில். இடதுபக்கம் திரும்பி உள்நுழைய வேண்டும். கண்ணிமைக்கும் நேரத்தில் அப்படியொரு நெருக்கடி. பிள்ளை கசங்கிக் கொண்டிருக்கின்றாள். தூக்கக் கூட முடியவில்லை. பின்னால் இருந்து பெரும் உந்துசக்தி. அப்பாயென வீறிடுகின்றாள். ஒருவழியாக அவளை அலேக்காகத் தூக்கிவிட்டேன். ஆனால் வரிசையிலிருந்து விலகிக் கொள்ளவே முடியாது. ஒன்றன் பின் ஒன்றாகத்தான் சென்றாக வேண்டும். பிள்ளையின் அழுகை, மனைவியின் அழுகை, நான் திட்டிக் கொண்டிருக்கின்றேன்.

அன்று பீடித்த கிலிதான்(Post-Traumatic Stress Disorder). தற்போது கூட, விமானநிலைய வரிசையில் சென்று இடப்பக்கமோ வலப்பக்கமோ திரும்புகையில் மனம் பேதலிக்கும், 𝒔𝒂𝒇𝒆𝒕𝒚 𝒊𝒔 𝒏𝒆𝒗𝒆𝒓 𝒂 𝒄𝒐𝒊𝒏𝒄𝒊𝒅𝒆𝒏𝒄𝒆.

-பழமைபேசி.

9/10/2025

ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும் -ஆபிதீன்

 ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும் -ஆபிதீன்


வணக்கம். கதையின் இருவேறு பிடிமானங்களாக, வாப்பாவின் மோதிரமும், மனம் கொள்கின்ற பயங்களும் உணர்வுகளும், அடுத்தடுத்து, மாறி மாறி, வந்து வந்து போய், கடைசியில் மோதிரம் தன் கைக்கே வந்து, இருப்புக் கொள்வதாக அமைந்திருக்கின்றது.

கதையில் நேரடியாகச் சொல்லப்படுகின்ற அடுத்தடுத்த தகவல்களையும் கடந்து, இந்த இரு பிடிமானங்களும் நமக்குள் ஏதோவொன்றைச் சொல்கின்றதாக நமக்குள் புலப்படுகின்றது.

பெளத்த சமயத்தின் அடிப்படையாகச் சொல்லப்படுவது, தத்துவார்த்த ரீதியாகச் சொல்லப்படுவது, என்னவென்றால், Do not dwell in the past, do not dream of the future, concentrate the mind on the present moment. Mindfulness மனமார்ந்திருத்தல் என்பதற்கும் இதுதான் அடிப்படை. அதாவது, நம் மனம் அலைபாயக் கூடியவொன்று. ஒன்று, கடந்தகால நினைவுகளின்பால் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் அது ஏக்கத்தையும் வருத்தத்தையும் கொடுக்கக் கூடியது.

அடுத்தது, எதிர்காலத்தைப் பற்றிய எண்ணங்கள். எண்ணி எண்ணியே கலக்கம் கொண்டு, அச்சம் கொள்வது. இவை இரண்டும்தான் நம்மில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன, கடந்தகால எச்சத்தின் குறியீடாக வாப்பாவின் மோதிரமும், எதிர்கால எண்ணப் பதற்றங்களின் விளைவாகப் பயமும், மாறி மாறி வந்து போகின்றது கதை நெடுகிலும்.

தற்காலத்தில் ஒன்றியிருக்கும் போது, செயற்பாடுகளால், நான் ஆற்றிக் கொண்டிருக்கும் வினையின்பால் மனம் நிறைந்து இருக்கும். கடந்தகாலத்தின் பொருட்டு, கவலை அல்லது வருத்தம் என்பது இல்லை. வருங்காலத்தின் பொருட்டு, அது நடந்து விடுமோ அப்படியாகி விடுமோ இப்படியாகி விடுமோ எனும் பயம் என்பதும் இல்லை.

கதையின் முடிவாக நாயகன் வசம் வாப்பாவின் மோதிரம் வந்து விடுகின்றது. கடந்தகால எச்சத்தின் சுவடுகள், இன்னும் இன்னுமிருந்து தொடரக்கூடுமெனும் புரிதலைத்தான் இதனூடாக நான் பார்க்கின்றேன்.

ஆபீதீன் அவர்களது, ஒரு மோதிரமும் சில பேய்க்கனவுகளும் எனும் இந்தக் கதை, புலம்பெயர் வாழ்வு, நாயகனின் வாழ்க்கைப் பின்னணி எனப் பலவற்றையும் நமக்குக் கொடுத்தாலும் கூட, ”கதையை படித்துப் படித்து எடிட் செய்வது ஏன் முக்கியம்” என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது. Dwelling on the past or obsessing about the future leads to suffering இயன்றவரை, நாம் தற்காலத்தில் திளைத்திருப்போம். நன்றி, வணக்கம்.

[கதைப்போமா குழுமத்தில், கதை குறித்துப் பேசியது]


8/22/2025

𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆


இத்தனை வருடங்களும்
இதன் நிழல்வாங்கி
இதன் பழம் தின்னும்
பறவைகள் பார்த்து
இதன் துளிரில் துளிர்த்து
சருகில் சரசரக்க நடந்து
திரிகிறவன் எனினும்
இந்த மரத்தை முழுதாகப்
பார்த்ததில்லை என்று புரிய
நேற்றுவரை ஆயிற்று
ஆயுசு போதாது
ஒருமரம் பார்க்க

###

உன்னுடைய கைகள் தானே
யாருடைய கைகளோ போல
பார்க்கிறாயே – என்றான்
என்னுடைய கைகளைத் தான்
வேறு யாருடைய கைகளையோ போல
பார்க்கிறேன்.
என்னுடையதை
என்னுடையதாகப் பார்ப்பதில்
என்ன இருக்கிறது

###

புத்தரைப் போல
நின்று பார்த்தேன்
கூடவில்லை
புத்தரைப்போல
அமர்ந்து பார்த்தேன்
இயலவில்லை,
சுலபம் தான் என்று
புத்தரைப் போலச்
சிரிக்க முயன்றேன்
புத்தர்தான் சிரித்துக்
கொண்டிருந்தார்
என்னைப் பார்த்து
இப்போதும்!

கவிதைகள் - கல்யாண்ஜி
நன்றி: Vannadasan Sivasankaran S

###

𝐈𝐧𝐭𝐞𝐫𝐩𝐫𝐞𝐭𝐢𝐧𝐠 𝐩𝐨𝐞𝐦𝐬 𝐢𝐬 𝐛𝐨𝐭𝐡 𝐚𝐧 𝐚𝐫𝐭 𝐚𝐧𝐝 𝐚 𝐩𝐫𝐚𝐜𝐭𝐢𝐜𝐞. 𝐓𝐡𝐞𝐫𝐞’𝐬 𝐧𝐨 𝐬𝐢𝐧𝐠𝐥𝐞 “𝐜𝐨𝐫𝐫𝐞𝐜𝐭” 𝐰𝐚𝐲 𝐭𝐨 𝐫𝐞𝐚𝐝 𝐚 𝐩𝐨𝐞𝐦, 𝐛𝐮𝐭 𝐡𝐞𝐫𝐞’𝐬 𝐚 𝐭𝐡𝐨𝐮𝐠𝐡𝐭𝐟𝐮𝐥 𝐟𝐫𝐚𝐦𝐞𝐰𝐨𝐫𝐤 𝐭𝐨 𝐡𝐞𝐥𝐩 𝐠𝐮𝐢𝐝𝐞 𝐢𝐧𝐭𝐞𝐫𝐩𝐫𝐞𝐭𝐚𝐭𝐢𝐨𝐧:

🔍 1. 𝑹𝒆𝒂𝒅 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑴𝒐𝒓𝒆 𝑻𝒉𝒂𝒏 𝑶𝒏𝒄𝒆

First, read for the general feel—emotion, tone, rhythm.
On later readings, focus on details: word choices, images, patterns, and shifts.

🧱 2.𝘾𝙤𝙣𝙨𝙞𝙙𝙚𝙧 𝙩𝙝𝙚 𝙎𝙩𝙧𝙪𝙘𝙩𝙪𝙧𝙚

What form is it in? (Sonnet, free verse, haiku, etc.)
How does the structure affect the meaning?
Look at line breaks, stanza divisions, punctuation (or the lack of it), rhyme, and rhythm.

💬 3. 𝙋𝙖𝙮 𝘼𝙩𝙩𝙚𝙣𝙩𝙞𝙤𝙣 𝙩𝙤 𝙇𝙖𝙣𝙜𝙪𝙖𝙜𝙚

Focus on figurative language: metaphors, similes, personification, symbolism.
Note any repetition or striking word choices—they usually point to key themes.
Ask: Why this word? What connotations does it carry?

🧠 4.𝑨𝒔𝒌 𝑾𝒉𝒂𝒕 𝒕𝒉𝒆 𝑷𝒐𝒆𝒎 𝑰𝒔 𝑨𝒃𝒐𝒖𝒕—𝑻𝒉𝒆𝒏 𝑨𝒔𝒌 𝑾𝒉𝒂𝒕 𝑰𝒕’𝒔 𝑹𝒆𝒂𝒍𝒍𝒚 𝑨𝒃𝒐𝒖𝒕

What's happening on the surface level (a description, a story, a memory)?
Then dig deeper: What is the emotional or philosophical core?
Think in terms of themes: love, loss, identity, time, death, nature, etc.

🎭 5. 𝑪𝒐𝒏𝒔𝒊𝒅𝒆𝒓 𝒕𝒉𝒆 𝑺𝒑𝒆𝒂𝒌𝒆𝒓’𝒔 𝑽𝒐𝒊𝒄𝒆

Who is speaking? Not the poet, necessarily.
What’s their attitude, tone, or emotional state?
Who is being addressed? Is there an implied audience?

🌍 6. 𝑪𝒐𝒏𝒕𝒆𝒙𝒕 𝑪𝒂𝒏 𝑯𝒆𝒍𝒑 (𝑩𝒖𝒕 𝑰𝒔𝒏’𝒕 𝑨𝒍𝒘𝒂𝒚𝒔 𝑵𝒆𝒄𝒆𝒔𝒔𝒂𝒓𝒚)

Historical, biographical, or cultural context can add layers of meaning.
But many poems stand on their own and resonate personally or universally.

✨ 7. 𝑻𝒓𝒖𝒔𝒕 𝒀𝒐𝒖𝒓 𝑹𝒆𝒔𝒑𝒐𝒏𝒔𝒆—𝑩𝒖𝒕 𝑺𝒕𝒂𝒚 𝑪𝒖𝒓𝒊𝒐𝒖𝒔

Your emotional reaction matters. If a line strikes you, ask why.
But be open to multiple interpretations, and let the poem surprise you.

🛠️ 𝑻𝒐𝒐𝒍𝒔 𝒕𝒐 𝑼𝒔𝒆:

Paraphrase: Put the poem in your own words to clarify meaning.
Annotate: Mark up the poem with notes on figurative language, shifts, questions.
Compare: Look at other poems by the same poet or in the same genre.

𝑭𝒊𝒏𝒂𝒍 𝑻𝒉𝒐𝒖𝒈𝒉𝒕:

> A good poem doesn’t just say something—it does something.
> Interpretation is the process of feeling what it's doing, and figuring out how.

𝐖𝐨𝐮𝐥𝐝 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐨 𝐭𝐫𝐲 𝐢𝐧𝐭𝐞𝐫𝐩𝐫𝐞𝐭𝐢𝐧𝐠 𝐚 𝐩𝐨𝐞𝐦 𝐭𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫?

###

மரம் என்பது பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி முதலான காப்பாளருக்கு ஒப்பாகின்றது, உவமேயக்கவிதை. அவர்கள் நமக்கு முந்தையவர்கள். முழுதாகப் பார்க்கும் வாய்ப்பு நமக்கில்லை. அவர்களின் முழுமையின் பாகங்களைச் சிறுகச் சிறுக உள்வாங்கிக் கொண்டு இருக்கின்றோம்.

###

தன் செயற்பாடுகளை அடுத்தவர் பார்வையில் பார்க்கும் விமர்சனப் பாங்கு கொள்ள வேண்டும். கை என்பது செயற்பாடுகளின் குறியீடு.

###

சும்மா பாசாங்காகச் செய்வதை இடித்துரைக்கின்றது. riveting thought poem.

-பழமைபேசி.

8/12/2025

குரங்குமத்தேவைகள்

 


ஏன் வகுப்புத் தோழர்களின் தொடர்பும் நட்பும் இன்றியமையாதது?

சமகால நண்பர்கள்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இளையோர், மூத்தோரும் இருக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அனுபவமும் புதியனவும் நமக்குக் கிடைக்கும். ஆனாலும், சமகால வகுப்புத் தோழர்களின் நட்பும் தொடர்பும் முதன்மையானதும் அத்தியாவசியமானதுமாகும். ஏன்?

சமகால நண்பர்கள், சமகால வாழ்க்கைப் பயணித்தில் உடன் பயணிக்கும் பயணிகள். ஒரே காலகட்டத்தில் மேடு பள்ளங்கள், புறவுலக மாற்றங்கள், அனுபவங்கள், நிகழ்ச்சிகளைக் கண்டவர்களாக இருப்பர். பள்ளி முதல், வேலை, உறவுகள், விழாக்கள், வரலாற்று நிகழ்வுகள், பரிணாமங்கள் முதலானவற்றை எதிர்கொண்டிருப்பதால், எளிதில் புரிந்து கொள்ளவும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆளுக்காள் தேற்றுதல்களைப் பகிர்ந்து கொள்ளவும் எளிதாகவும் இயல்பாகவும் இருக்கும்.

உடல்நலம், மனநலம் ஆகியவற்றிலும் ஒத்த வயதுடன், ஒரே போன்ற சூழலைக் கொண்டிருப்பதால், அளவளாவலில் ஈடுபட உதவியாக இருக்கும். தத்தம் நிலைப்பாடுகள், அதற்கான தீர்வுகள், ஆதரவு முதலானவற்றை ஈந்து, மனவூக்கம் பெறுவது இயல்பாகவே நடக்கும். 

இறந்தகாலத்தைப் பற்றி விரித்துரைக்கத் தேவையில்லை. உடன்பயணித்தவர்களென்பதால், அவர்களுக்கு நம்மைப் பற்றித் தெரியும். சமூகத்தில் நாமும் ஒரு ஆள், நாமும் பங்கு வகிக்கின்றோம், தொடர்வதிலும் நல்லதொரு வாய்ப்பு அமையவிருக்கின்றது போன்ற உளநல மேம்பாடுகள் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டே இருக்கும்.

வயது கூடக் கூட, வயதில் மூத்தோர் மறைந்து கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் நமக்கு யாருமே இல்லாதது போலத் தோன்றும். வயதில் குறைந்தோர் அந்நியமாகத் தோற்றமளிப்பர். அத்தகு நிலையில், சமகால நண்பர்கள் நிறையப் பேர் நம்முடன் இருப்பது அத்தகு வெறுமையை அப்புறப்படுத்தவல்லது.

நம் வாழ்வைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பார்கள் சமகாலத்தவர்கள். நம் அடையாளத்தின் சாட்சிகளாக விளங்குவார்கள். மரணித்துக் காடேகும் வரையிலும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய, பகடி செய்ய என எதற்குமானவர்களாக இருக்க ஒரு வாய்ப்புத்துணையாக இருப்பர்.

Not just classmates, but partners in crime through every chapter of life. Jumunakhan is pacca four twenty, beware of him, stay away!

-பழமைபேசி.