1/19/2010

சலனமில்லாமல்...

கோ.து.நாயுடு (G.D.Naidu), கோயம்பத்தூர்

கோ.து.நாயுடு அவர்கள், ஏழைகள் அனைவருக்கும் ஏராளமான வானொலிச் சாதனங்களைத் தயாரிச்சு வழங்கணும்னு பிரயத்தனப்பட்டு, தன்னோட U.M.S. Radio Factoryல நிறைய மின்மாற்றிகளை (transistors) தயாரிச்சு வெச்சி இருந்தாராம். அரசாங்கம் என்ன செய்துச்சு தெரியுங்களா, அதுகளுக்கு எக்கச்சக்கமா வரியப் போட்டு ஏழை எளியவங்க வாங்க முடியாதபடிக்கு செய்திட்டாங்களாம். இவர் உடனே, Construction for Destructionனு சொல்லி எழுதி வெச்சுட்டு, எல்லார்த்தையும் போட்டு உடைச்சிட்டாராமுங்க. அதான் இன்னும் அவரோட நிறுவனத்துல இருக்கிற அந்த வாசகம்.

இந்த நிறுவனத்துல ஒரு விழாவுக்கு, கோ.து.நாயுடு அவர்கள் அன்றைய நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களை தலைமை தாங்க அழைச்சு இருந்தாராம். விழா துவங்குற கால நேரமும் வந்துச்சி. 5 மணித்துளிகள் ஆச்சு, பத்து மணித்துளிகள் ஆச்சு, அமைச்சர் வந்தபாட்டைக் காணோம். சரின்னுட்டு, நாயுடு விழாவை ஆரம்பிக்கச் சொல்லவே, விழாவும் நல்லபடியா முடிஞ்சது.

போகும் போது பக்கத்துல இருந்த பணியாளரை அழைச்சு, கல்வெட்டுல இருந்த, "presided by Honorable Minister"ங்ற வாசகத்துல, presidedக்கு முன்னாடி notனு செதுக்கிடுங்கன்னு எந்த சலனமும் இல்லாமச் சொல்லிட்டு மத்த வேலை வெட்டியப் பார்க்கப் போயிட்டாராம். அதை எடுக்கச் சொல்லி எவ்வளவோ நிர்ப்பந்தம் வந்தும், அது இன்னும் வெச்ச இடத்துல வெச்சபடியே இருக்காமுங்க!

இது ஒரு சொகுசு வாகனம். இடது பக்கம் இருக்குற இருக்கைய விரிச்சுப் போட்டா, ரெண்டு பேர் தாராளமா நித்திரை கொள்ளலாம். குளுகுளு வசதி என்ன? காணொளி என்ன? நவீன பாட்டுப் பொட்டி என்ன? பானங்க வெச்சிக் குடிக்கிறதுக்கு தாங்கு பொட்டி என்ன? கலைஞர், துணை முதல்வர், முன்னாள் முதல்வர், மலையாள நடிகர் பிரித்விராஜ் வரிசையில இது 17வது வண்டியாமுங்க.

இடது பக்கம் இருக்குற இருக்கைகளையும் பின்னாடி விரிச்சுவிட்டு ரெண்டு பேர் நித்திரை கொள்ளலாமுங்க. பின்னாடி இருக்குறது ஒரு சின்ன அறை!

அந்த சின்ன அறைக்கு இடது புறம் கழிப்பிடம்; வலதுபுறம் நின்னுட்டே குளிக்கிற மாதிரி ஒரு அமைப்பு, கூடவே ஒரு நிலைக்கண்ணாடியும் இதர ஒப்பனை வசதியும்.

விலை ரொம்ப குறைச்சல்தாங்க, ஆமாங்க பதினேழு இலட்சம் ரூபாய், லிட்டருக்கு எட்டு கிலோ மீட்டராமுங்க. திருப்பதி போலாம்ன்னு உறவினர்கிட்ட இருந்து எடுத்துட்டு வந்தோம், வெடிஞ்சு பாத்தா தெலுங்கானாவுல வாண வேடிக்கை.... அப்புறம் என்ன? வன பத்திரகாளியம்மன் கோயிலோட முடிஞ்சு போச்சு நம்ம யாத்திரை.... அவ்வ்வ்......


1/18/2010

ஊர்ல புடிச்சதுங்கோய்!






தமிழறிஞர் முனைவர் நா. கணேசன் அவர்களுடன் கோவையில்

பதிவர்கள் சஞ்சய், ஆரூரன் மற்றும் மாப்பு கதிர்

கதிர், வடகரை வேலன், சஞ்சய், செல்வேந்திரன், ஆரூரன்

கதிர், சஞ்சய், செல்வேந்திரன், ஆரூரன்

வடகரை வேலன், கதிர், சஞ்சய், செல்வேந்திரன், ஆரூரன், பழமைபேசி










மேற்கண்ட நாணயங்கள் கொடுத்துதவிய, சென்னையில் விருந்தோம்பல் நடத்திய நாளைய பதிவர் மணி

1/16/2010

ஈரோடு ஆரவாரம் - செம சூடுங்க இராசா

நாம இருப்பிடம் திரும்பியாச்சுங்கோய்.... அதான் வந்த உடனே.... இஃகிஃகி!!

வரவேற்புரை



அறிமுகம் செய்துக்கிறாங்க மக்கள்!


எண்ணங்களைப் பகிர்தல்ங்க... இஃகி!

(இது செம சூடு மச்சி)




நன்றியுரை

இரவு உணவு

  • இட்லி
  • பரோட்டா
  • கோழிக்கறி
  • தயிர்சாதம்
  • பூக்கறி (cauliflower)
  • புலவுச் சோறு (fried rice)
  • காளான் குழம்பு
  • பாயாசம்
  • பழம்
  • பீடா
  • தோசை
  • முட்டை தோசை
  • பரப்பி முட்டை (Omelett)
  • அரைவேக்காட்டு முட்டை(Half Boil Egg)
  • தேநீர்

1/15/2010

பொங்கல் படங்கள்

















பொங்கல் அன்று அமெரிக்கா திரும்ப வேண்டி இருந்ததால், நகரத்தின் ஊடாக எடுத்த நிழல் படங்கள்!