றிச்சேட் இருதயநாதன்
கட்டுரை எழுதுவது என்பது வெறும் தேர்வுக்காக மட்டும் அல்லாமல், சிந்தனைகளை ஒழுங்குபடுத்தி, மற்றவர்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க உதவும் ஒரு முக்கியமான கலை ஆகும். தமிழ்க் கட்டுரைகள், மூன்று பகுப்புகளைக் கொண்ட ஒரு நிலையான அமைப்பைப் பின்பற்றுகின்றன. முன்னுரை, இது வாசகரின் கவனத்தை ஈர்க்கும் திறவுகோல். கருப்பொருள், இங்கேதான் காரண ஏரணங்களும், தகவல்களும் எடுத்துக்காட்டுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவும் அடுக்கடுக்காகவும் வைக்கப்படுகின்றன. முடிவுரை, இது கட்டுரையின் சுருக்கத்தினை தொகுத்துச் சொல்கின்றது அல்லது சொல்லப்பட்ட அனைத்தையும் சுருக்கமாக, வலுவாக முடிக்கும் பகுதி. தமிழ் மொழியில் கட்டுரைகள் எழுதுவதற்கான மரபு, இலக்கண நூல்களான தொல்காப்பியம், சங்க இலக்கியப் பாடல்களின் அமைப்பிலிருந்தே தோன்றியிருக்கலாம். அதாவது, ஒரு கருத்தைத் துவக்கி, விளக்கி, முடிக்கும்முறை, தொன்றுதொட்டு வருகிறது.
கட்டுரை எழுதும் திறனை மேம்படுத்த, கவனம் ஈர்க்கும் கட்டம், தேவைகளைக் கண்டறியும் கட்டம் , காட்சிப்படுத்தும் கட்டம், செயல் கட்டம் போன்ற சிறப்பு நுட்பங்களானது ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது மாணவர்களுக்குக் குழப்பமின்றி தெளிவாக எழுத உதவுகின்றது.
கட்டுரை எழுதுவது என்பது ஒரு பொருள் பொதிந்த தலைப்பை எடுத்து, எளிமையாகவும், ஒழுங்காகவும், தெளிவாகவும் மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி வெளிப்படுத்தும் ஒரு கலை. மின்னசோட்டா தமிழ்ச்சங்கமானது தமிழ்மொழிக்கும் கலைக்கும் முக்கியத்துவம் அளித்து அதன் ஆழத்துக்கே சென்று பேணிவருகின்றது. கட்டுரைப் போட்டிகளுக்கு நடுவராக இருக்கச் சொல்லி சில பல கட்டுரைகளைக் கொடுத்தார்கள். தட்டச்சில் இருந்தன கட்டுரைகள் சிலவற்றைத் தவிர. செய்யறிவு மேலோங்கி இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் தகவல்களைத் திரட்டுவதென்பது அவ்வளவு பெரிய செயலன்று. ஆகவே கையால் எழுதித் தரப்பட்ட கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரலானேன். ஐந்து அல்லது ஆறு பக்கங்கள் கொண்ட படைப்புகள், ஒரு சிறு அடித்தல் திருத்தலின்றி எழுதுகோலால் எழுதப்பட்டிருந்தன அவை. வியப்புற்றேன். புலம்பெயர் மண்ணில் தமிழைப் போற்றுகின்றவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர் என்பது நற்செய்தி.
வட அமெரிக்க வாகை சூடியின் படைப்புத்தேனீ பிரிவில், கட்டுரைப் போட்டிகளின் செயல்தலைவர்தாம் திரு. றிச்சேட் இருதயநாதன் அவர்கள். போட்டிக்கான பதிவுகளை ஆய்ந்து முறைப்படுத்துதல், ஒவ்வொரு பகுப்புக்குமான தலைப்புகளைத் தெரிவு செய்து வடிவமைத்தல், முதற்கட்டக் கட்டுரைகளை நடுவர்களிடம் அளித்துத் தரவரிசைப்படுத்துதல், பெற்றோர்களுடன் கலந்தாய்வு நடத்தி கடைசிகட்டப் போட்டிக்கு மாணவர்களைப் பயிற்றுவித்தல், கடைசிகட்டப் போட்டிகளுக்கான வளமிக்க தலைப்புகளைக் கண்டறிதல், விழாவில் இறுதிகட்டப் பணிகளென ஈடுபாட்டுடன் செயற்பட்டவர். சோர்வுறாமல், ஊக்கமொழியுடனும் உடல்மொழியுடனும் பேசுவதன் மூலம் பங்கேற்பாளர்களை நிகழ்வோடு பிணைக்க வேண்டும். தமிழின்பாலும் அக்கறையுடன் இருத்தல் வேண்டும். சிற்சிறு பற்றியங்களிலும் கவனத்தைச் செலுத்துவதன் வாயிலாக முழுமையடைகின்றது எடுத்துக்கொண்ட செயல். திரு. றிச்சேட் இருதயநாதன் அவர்களின் பங்களிப்பு போற்றுதலுக்குரியது.
Focusing on the next generation means planting seeds of possibility in soil we may never walk upon ourselves. It calls us to lead with vision, compassion, and courage, knowing our choices today shape the world they inherit. When we invest in their growth, 𝐰𝐞 𝐢𝐧𝐯𝐞𝐬𝐭 𝐢𝐧 𝐚 𝐟𝐮𝐭𝐮𝐫𝐞 𝐝𝐞𝐟𝐢𝐧𝐞𝐝 𝐧𝐨𝐭 𝐛𝐲 𝐨𝐮𝐫 𝐥𝐢𝐦𝐢𝐭𝐬 𝐛𝐮𝐭 𝐛𝐲 𝐭𝐡𝐞𝐢𝐫 𝐩𝐨𝐭𝐞𝐧𝐭𝐢𝐚𝐥. Let us rise to the responsibility of empowering them to dream boldly and build wisely.
நீரார்ந்த உலகமிதில் நிலைத்திருக்கும் மொழிகளுள்ளே
சீரார்ந்த முதல்மொழியாம் சிறப்புநல் தமிழ்மொழியே!
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
-பழமைபேசி.

No comments:
Post a Comment