லசாங்கிகா சுகுமாரன்
இளம்தலைவர்கள் புதுமையான, துணிச்சலான சிந்தனைகளைக் கொண்டு வருவார்கள். சமுதாயத்தின் சிக்கல்களுக்கு, பாரம்பரிய முறைகளுக்கு அப்பாற்பட்ட புதிய தீர்வுகளைக் காண்பார்கள்.
மாற்றத்தை உருவாக்குபவர்கள்: அவர்கள் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். தங்கள் சமூகத்தில் உள்ள அநீதிகள், குறைகள் அல்லது சவால்களைக் கண்டு, உடனடியாகச் செயல்பட்டு நேர்மறையான மாற்றத்தை உருவாக்கத் துணிகிறார்கள்.
தொழில்நுட்பப் பயன்பாடு: சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், மக்களை ஒன்றிணைப்பதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் அவர்கள் சமூக ஊடகங்கள், நவீன தொழில்நுட்பங்களை திறமையாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஊக்கமளிப்பவர்கள்: இவர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு, வெற்றியின் மூலம், சக இளைஞர்களுக்கும், முதியோர்களுக்கும் கூட முன்மாதிரியாக அமைந்து, சமூகப் பணியில் ஈடுபட அவர்களைத் தூண்டுகிறார்கள்.
பாரபட்சமற்ற அணுகுமுறை: இவர்கள் பெரும்பாலும், பாலினம், மதம், சாதி, பொருளாதாரம் ஆகியவற்றுக்கு அப்பால் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்படுகிறார்கள்.
இணைப்புப்பாலம்: முதல்தலைமுறைக் குடிவரவாளர்களுக்கும் அமெரிக்காவில் பிறந்த, வளர்ந்துவரும் இரண்டாம் , மூன்றாம் தலைமுறையினருக்கும் இடையே பண்பாட்டு ரீதியாக, அணுகும் விதத்தில் பெருத்த இடைவெளி உள்ளது. அதனைச் சரிக்கட்டும் ஆற்றலாய் இளம்தலைவர்கள் விளங்குகின்றார்கள்.
குறிஞ்சி முத்தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர்களுள் ஒருவர், முன்னோடிகள் வார்த்தெடுப்புத் திட்டத்தின் தலைவர், தமிழ்ப்பள்ளி ஆசிரியர், நிர்வாகி, நாட்டியம், இசையில் தேர்ந்த கலைஞர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்தாம் திருமிகு லசாங்கிகா சுகுமாரன் அவர்கள். கொலராடோ மாகாணத்திலிருந்து, மூன்று நாள்களும் தன்னார்வப்பணி செய்வதற்கென்றே வந்தவர். பகலெல்லாம் வட அமெரிக்க வாகை சூடி போட்டிகளில் கலந்து கொண்டிருக்கும் இளையோரை ஆற்றுப்படுத்துகின்ற, நெறியூட்டுகின்ற, நிகழ்ச்சிகளின் நிர்வாகியாகப் பணியாற்றி, முன்னோடியாகச் செயலாற்றியவர். மாலையில் உணவுக்குழுவின் விருந்தோம்புநராகப் பணி. இளம்செயல்த் தலைவர் லசாங்கிகா அவர்களின் பங்களிப்பு அமெரிக்கத் தமிழ்ச்சமூகத்துக்குத் தொடர்ந்து இடம் பெற்றிட வாழ்த்துகள்.
𝐌𝐬 𝐋𝐚𝐬𝐚𝐧𝐠𝐢𝐤𝐚 𝐒𝐮𝐤𝐮𝐦𝐚𝐫𝐚𝐧 is a shining example of youth leadership fueled by passion, vision, and purpose. She inspires others through her dedication to uplifting her community and her courage to lead with integrity. Her journey reminds young people everywhere that 𝐭𝐡𝐞𝐲 𝐡𝐚𝐯𝐞 𝐭𝐡𝐞 𝐩𝐨𝐰𝐞𝐫 𝐭𝐨 𝐜𝐫𝐞𝐚𝐭𝐞 𝐦𝐞𝐚𝐧𝐢𝐧𝐠𝐟𝐮𝐥 𝐜𝐡𝐚𝐧𝐠𝐞.
வட அமெரிக்க வாகை சூடி, FeTNA 2025.
-பழமைபேசி.

No comments:
Post a Comment