12/20/2011

மயிரணி

”தொந்தி சரிய மயிரே வெளிர நிரை தந்தம் அசைய முதுகே வளைய இதழ் தொங்க ஒரு கை தடி மேல் வர மகளிர் நகை ஆடி” எனத் துவங்குகிறது அருணகிரிநாதர் அருளிய திருப்புகழின் அறுபத்தி எட்டாவது பாடல். மயிர் வெளிற இருப்பவனே என மிக இயல்பாய்ச் சொல்லிச் செல்வதை நாம் காண்கிறோம். தற்காலத்தில் நாம் மயிர் என ஒலிக்கவே தயங்குகிறோம். எடுத்துக் காட்டாக, குந்தள மயிரணியை உரித்த அழகு மிகுந்த நல்ல உமாதேவியாரோடு என்பதானது, ”சந்தமலி குந்தள நன்மாதினொடு” என தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியாக, மயிரை அணிப்படுத்துவதையும் அதற்குகந்த சொற்களைச் சுட்டுவதையுமே இப்படைப்பானது நமக்குக் காட்சிப்படுத்துகிறது. 
அரும்பம் (soft sprouting hair)

அளகம்(highlighted hair)

குதறம் (loose and spread)


குந்தளம் ( hair crinkles)

குழலி(folded back into a roll)
குழற்சிகா (folded back into a roll with curly)
கூழாமணி ( who has peacock's tail)
கொண்டை ( rolled knot in a style)


அலரி(form of a cluster-bean)

கொந்தளவல்லி ( who has hair gathered in a coil)


கொப்பு (as a whole with a knot)

பூங்கோதை (decorated with flower)

சடாதரவல்லி(who has long roll with a weave)

சிகண்டம்(arranged like peacock tail)

சுருளம்(curly hair)

சுளகுவல்லி (loose and wide plaiting of the hair)

துஞ்சுகுழல்(with multiple roll)

பம்பை(rough and dense hair)


பின்னைமாட்டி(weaving decorated hair)

மிஞ்சுகா (long roll hair) 


பூஞ்சுகா (lock of hair adorned with flower)

பொறுப்பி-1: படங்கள் உதவி கூகுள்

5 comments:

Unknown said...

ஏனுங்க இன்னும் உங்கூட்டு அம்மணி ஊருல இருந்து வல்லீங்களா பாத்து சூதானமா இருந்துக்குங்கோ :-))..

பழமைபேசி said...

அண்ணா, தமிழ்ப்பணி இது!! நீங்களே இப்படிச் சொல்லலாமா??

விஜி said...

இவ்ளோ இருக்கா? இதெல்லாம் தெரியாமையே கூந்தலை வளர்த்திட்டு இருக்கமா?

KANNAA NALAMAA said...

கூந்தல் அலங்காரங்களை இவ்வளவு அழகாக -வகைப்படுத்த - அதுவும் இப்படி அழகான பெண்களின் அலங்காரங்களுடன் வகைப்படுத்த தங்களால் மட்டுமே முடியும் என எண்ணுகிறேன் !

முரளிகண்ணன் said...

வாவ்