12/11/2011

சுவர்க்கோழி


உறக்கம் கலைந்தேன்
அடுக்களையில் எதையாவது
உருட்டிக்கொண்டிருக்கும் மனையாள்

இருப்பது அனைத்தும் அறிந்து
பிறர் அறியாததை அறியவைக்க
சதா எதையாவது
மாய்ந்து மாய்ந்து
படித்துக்கொண்டிருக்கும் மூத்தவள்

கைக்கணினி கேட்டு
அழுது அடம்பிடித்து
அழுதுகொண்டிருக்கும் அடுத்தவளென
யாருமில்லா வீட்டின்
சுவர்களை வெறித்துப்பார்க்க
எக்காளமாய்ச் சிரிக்கிறது சுவர்க்கோழி!

1 comment:

கொங்கு நாடோடி said...

தனிமையின் கொடுமை புரிகிறது..

அண்ணியாரும் குழந்தைகளும் எப்போது திரும்புகிறார்கள்...