10/14/2010

கடும் பகை

பொன்னானையும் அம்மணியையும்
ஊருக்கு அனுப்பிவை!
காரி மாட்டை துங்காவிக்காரனுக்கு
புடிச்சுக்குடு!
இந்தா, கழுத்துல என்ன?
மாரப்பங்கிட்டக் கழ்ட்டிக்குடு!
மாடே இல்ல,
தவுட்டு மூட்டைக எதுக்கு?
ஆறானை வெச்சிக்கச்சொல்லிக் காச வாங்கு!
எல்லாமும் ஆச்சு,
விதைநெல்லுக்கு இன்னும் வேணும்
ஆயிரத்து முந்நூறு!

கெடை கொள்ளமுடியலடீ!
கெடை கொள்ளமுடியலடீ!!

மாமா, சொன்னாக் கோவிச்சிக்க
மாட்டீகளே?
நானுங்கூடா வர்றேன்
எதுத்தவாசக் கதவைத் தட்டுனா என்னோ?
காசுக்கு முடைன்னு சொன்னாத்
தராமலா போய்டுவாய்ங்க??

பன்னெண்டு ஆண்டுப் பகை
கட்டினவ மனசு மாறியிருக்கா
உடுவானா தங்கவேலூ??

தட்டினான்
பனிரெண்டு ஆண்டுகள்
தட்டாத தன் பங்காளி வீட்டுக் கதவை!

அருக்காணீ...
வாசல்லயே நிக்காட்டி என்னோ??
இந்தா....
தங்கான் வந்துருக்குறான்...
அந்தவெடக்கோழி ரெண்டையும்
அடிச்சுப் போட்டுச் சாறக் காச்சு!

காசுங்கிடைச்சது
மனமும் நெறஞ்சது
நடையா நடந்து வந்த
பன்னெண்டு வருசத்து
நீதிமன்றத்து வழக்கும் ஒழிஞ்சது!!

24 comments:

Unknown said...

ஆஹா. பழமை. சூப்பர் ஆ ஒரு அவுட் ஒப் கோர்ட் செட்ட்ல்மென்ட்.

அழகு பழமை அழகு.

கவி அழகன் said...

அருமை அருமை கலக்கிறிங்க

Mahi_Granny said...

ஊர்மொழி அழகு. ஒரு கதவுத் தட்டலில் பகை தீர்ந்து போனது ரொம்பவே அழகு

vasu balaji said...

அட கொடுமையே. பங்காளி சண்டை தீந்ததுக்கு வெடக்கோழிக்கு கட்டம் சரியில்லாமப் போச்சே. :)).

/காசுங்கிடைச்சது
மனமும் நெறஞ்சது/

காச்சுன சாற்றில வகுறுமுங்கூட.

சொம்புக்கு வேலை போச்சே:))

வருண் said...

ஆக தங்கவேலுவோட 12 ஆண்டு சண்டையை வெடைக்கோழி அடிச்சு தீர்த்து வச்சுட்டீங்க!

தல!

அப்படியே இந்தப் பதிவுலகில அடிச்சுக்கிட்டு திரிகிறவங்கள எல்லாம் ஒரு "கோழி பிரியாணி" கவிதை எழுதி பிரச்சினையை செட்டில் பண்ணுங்க! :)))

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

கோழிக் குழம்பு வாசம் தூக்குது.. :) கிராமங்கள்ல இப்படித் தான்.. அடிச்சுட்டு சேர்ந்துக்குவாங்க...

a said...

அட அட............ வக்கீல் பொழப்புல மண்ணு அள்ளி போட்டுடுவீங்க போலருக்கு...

தாராபுரத்தான் said...

கெடைகொள்ளமுடியல்லை...ங்க

நிகழ்காலத்தில்... said...

\\மாமா, சொன்னாக் கோவிச்சிக்க
மாட்டீகளே?
நானுங்கூடா வர்றேன்
எதுத்தவாசக் கதவைத் தட்டுனா என்னோ?\\

வாழ வேண்டிய வழி என்ன என்பதை காட்டிவிட்டீர்கள் பங்காளி!!!

Unknown said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

Jerry Eshananda said...

Brainy...write more..like this.

Unknown said...

'Ego'வை விட்டுவிட்டால் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பஞ்சமிருக்காது.
அழகு நண்பரே.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அடடா..

கலக்கல்னா இது தான்..

VELU.G said...

நல்லாயிருக்கு தல

Vel Tharma said...

வித்தியாசமாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

////love... என்னோட இடுகையில பாலாண்ணன் எதோ சொல்ல வர்றாரு...//

ம்க்கும்!விமானத்துல இருக்கும் போது ஒரு இடுகை.வீட்டுக்கு வந்த பின் ஒரு இடுகை.அலுவலகம் புறப்படும் முன் ஒரு இடுகைன்னா எங்கே போய் தேடுவது?தொடுப்பு கொடுத்திருக்கலாமில்ல?

ஒருவேளை Because love don't count days பற்றிக் குறிப்பிடுகிறீர்களோ!

கயல் said...

ம்ம். இது நல்லாருக்கு.

எஸ்.கே said...

மிக அருமை!

ALHABSHIEST said...

பதிவுலகத்துல என்னை பாதித்த, "ஜாக்கி சேகர்,சுரேஷ்கண்ணன்" எல்லோரும் தற்போது பிரச்னை(பதிவுலக பிரச்னை)ல இருக்கும் போது இப்படி ஒரு பதிவை வலையேற்றியதற்கு நன்றி

sakthi said...

அருமைங்க அப்படியே நம்ம பாஷையில

ILA (a) இளா said...

நம்மூர்ல கூட பங்காளிங்க எல்லாம் சேர்ந்து தொழ(எந்த ல’ன்னு தெரியலீங்க), எடுத்தாங்க. உங்க கவிதை வேற அதே நேரத்துல வந்திருக்கா அருமைங்க.

ஈரோடு கதிர் said...

அருமைங்க மாப்பு

இளா,
அதை தொழவுன்னு சொல்வாங்க

ILA (a) இளா said...

போன வாரம் சிறந்த பதிவு என்பார்வையில்(சிபஎபா), இந்த இடுகையச் சேர்த்திருக்கேன், நன்றி!

அன்பரசன் said...

அருமைங்க