10/10/2010

புலப்பம்

புலப்பம்னா என்ன? தாறுமாறா எதையாவது உளறி வைக்கிறதுதான் புலப்பம். அதான், வலையில தினமும் புலப்பம் திங்றதுல ஏப்பம் வுடவெச்சிகினு இருக்கியே? அப்புறம் என்ன, இதுல வியாக்கியானம் வேற, அப்படின்னுதான நினைக்கிறீக? இஃகிஃகி!!

==========================

நாம பொட்டி தட்டுற ஊரான, சட்டனூகாவுல அதிவேக இணைய வசதி வருதாமுங்க. அமெரிக்காவுலயே அதிக வேகத்துல இருக்குற இணைய வசதி வரப் போறது அங்கதானாம்; up to 1 gigabit per second. மாசம் 330 அமெரிக்க வெள்ளி கட்டணமாம். இவ்வளவு செலவு செய்து, அதை வாங்கி என்னடா செய்யப் போறிங்கன்னு கேட்டா, சொல்லுறான் ஆகப்பட்டவன், “தலையில கூந்தல் உள்ள மகராசி, அள்ளியும் முடிவா... அவுத்துட்டுப் பராக்கும் பாக்குவா”, அப்படின்னு! ஆடுங்கடி, ஆடுங்க...

==========================

புலப்பம்னு சொல்லிட்டி, புலப்பலை அள்ளிக் கொட்டாம இருந்தா எப்புடி? சொல்றேன் கேட்டுகுங்க.... அடுத்தடுத்து, நாம பல ஊர்களுக்கு சுற்றுப்பிரயாணம் செய்யப் போறம் அப்பூ, சுற்றுப் பிரயாணம் செய்யப் போறம்... அதுக்கென்ன இப்பவா?? போற இடத்துல எல்லாம் பதிவர் சந்திப்பு இராசா, பதிவர் சந்திப்பு... அங்க அங்க இருக்குற நம்ம சக பதிவர் பங்காளிக எல்லாம் சித்த ஒத்தாசை பண்ணுங்க கண்ணுகளா!

அக் 15-17: மூத்த பிரபலம் சீமாச்சு தலைமையில அட்லாண்டா, stone mountain parkல கூட்டம்

அக் 30: தென் கரோலைனா, சார்ல்சுடன்ல மாபெரும் மாலை விழா

நவ 6: நியூயார்க் மாகாணம், அல்பேனியில வாரஈறுக் களியாட்டம்

நவ 13: அமெரிக்கத் தலைநகர்ல, தமிழ்ச் சங்க விழா! பட்டிமன்றத்துல ஆத்தப் போறோம் சொற்பொழிவு!!

அங்கங்க இருக்குற பங்காளிக எல்லாம் வந்து கலந்துக்குங்க!!!

==========================

அமெரிக்காவோட தலையாய பிரச்சினைகள்ல, முதல் பத்துல இருக்குற பிரச்சினை தூக்கப் பிரச்சினையாமுங்க! சரிவரத் தூங்க முடியுறது இல்லையாம்; அதனால, மக்களுக்கு நிம்மதியே இல்லையாம். நம்ம ஊர்ல கேட்டா, தூங்கறதுக்கு நேரமே போதலைங்றாய்ங்க... இஃகிஃகி... எனக்குந்தான்...

எதெதோ மருத்துவம், ஆலோசனை எல்லாஞ் சொல்றாய்ங்க இந்தப் பிரச்சினைக்கு.... எனக்கு செமையா தூக்கம் வர்றதுக்கு ஒரு காரணந்தான்... நான் நானாக மட்டுமே இருக்க முடியும்ங்றதுல உள்ள நம்பிக்கை.. அப்புறம், கேனத்தனமா எதையாவது செய்து, மனசைக் குளுமையா வெச்சிக்கிறதும்; இப்ப செய்துட்டு இருக்குற மாதர, எதனாச்சியும்.....

====================================

கழுதை கெட்டா, குட்டிச் சுவரு!  இந்தா, அலுமினிய டப்பா வந்து நிக்குது.... பொட்டிதட்டச் சட்டனூகா போகணும்.... வரட்டுமுங்ளா?

13 comments:

vinthaimanithan said...

நல்லாத்தான் சாமி பொலம்புறிய! பதிவு போட்டா மொதல்ல தமிழ்மணத்துல மொத ஓட்ட நமக்குநாமே திட்டத்தின்கீழ குத்திக்கணுமாம்! பாத்துக்கிடுங்க

கவி அழகன் said...

வாழ்த்துக்கள் நண்பா

Unknown said...

ஆஹா! இந்தப் பதிவர்கள் சந்திப்பு அழகு தான்.

டவுட்டு மக்கா டவுட்டு.

பின்னூட்டம் விடரவுங்களுக்கு எல்லாம் சந்திப்பு இல்லையாங்க.
டிஸ்கி: ஆமாங்க. பிரச்சனை உண்டு பண்ற ஆளுங்க இல்லையா.

vasu balaji said...

தளபதிய நேரில பார்த்து அந்த ம்ம்ம்கு என்ன அர்த்தம்னு கேட்டுட்டு வாங்க:)

/பொட்டிதட்டச் சட்டனூகா போகணும்..../

தட்டுற பொட்டிய சட்டனூகா போய்தான் தட்டணுமா?

/up to 1 gigabit per second. மாசம் 330 அமெரிக்க வெள்ளி கட்டணமாம்./

இக்கிக்கி. லாப்டாப்புல 2 ஜிபி மெமரி வெச்சிக்கிட்டு இத வாங்கி என்ன செய்ய? உங்களுக்கு வேலைக்கு ஆவாது

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்கள். சந்திப்பு முடிந்ததும் உடனடியாக அதுகுறித்த உங்கள் பதிவை எதிர்பார்க்கின்றோம்.

சாக்கு போக்கு சொல்லப்படாது...ஆமா..

Naanjil Peter said...

பெரியவரின் புலம்பல்
****
கடைசி காலத்தில்
என் பிள்ளைகள்
என்னை காப்பாற்றுவார்கள்
என்று சொத்துக்களை
அவர்கள் பெயரில்
வாங்கினேன்.
அவர்களும்
காப்பாற்றினார்கள்
என்னையல்ல....
என் சொத்தை.

- ரஹீம்கஸாலி

பவள சங்கரி said...

ம்ம்ம் நல்லா சுத்திட்டு வந்து அதப்பத்தியும் பதிவு போடுங்க.....வாழ்த்துக்கள்.அது சரி, புலம்பல் வேற புலப்பம் வேறயா? இரண்டும் ஒண்ணுதானே? நன்றி.

Mahi_Granny said...

யாருக்குமே புலம்பல் பிடிக்காது. இந்த புலப்பம் அப்படியில்லை.

Anonymous said...

நல்லாத்தான் சாமி பொலம்புறிய!!!!

நல்லா ஊரு சுத்திட்டு வாங்க.....

க.பாலாசி said...

நல்லதுங்க...

ஈரோடு கதிர் said...

||சந்திப்பு முடிந்ததும் உடனடியாக அதுகுறித்த உங்கள் பதிவை எதிர்பார்க்கின்றோம்||

மொதலாளி இவ்வளவு பெரிய பின்னூட்டமெல்லாம் போடுறாரா? நோட் பண்ணுங்க நசரேயன்

வருண் said...

சட்டனூகால ரூபி ஃபால்ஸ்தான் கேள்விப் பட்டு இருக்கேன்.

-----------
***அமெரிக்கத் தலைநகர்ல, தமிழ்ச் சங்க விழா! பட்டிமன்றத்துல ஆத்தப் போறோம் சொற்பொழிவு!!***

கெளப்புங்க! :)

அரசூரான் said...

அனைவரையும் அட்லாண்டாவுக்கு வருக வருக என வரவேற்க்கிறோம்.