10/02/2010

மகாத்மா பிறந்த நாள் விழா, படங்கள்!

வட கரோலைனா மாகாணம், சார்லட் நகரில் இருக்கும் பாலண்டைன் பகுதியில், உலகம் போற்றும் மகாத்மா காந்தியின் பிறந்த நாள், கல்விக் கண் திறந்த தலைவர் காமராசர் நினைவு நாள் முதலானவை கடைபிடிக்கப்பட்டது.

அக்டோபர் மாதம் முதல் நாளன்று, மாலை ஆறு மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மகேசுவரி வாசன் அவர்கள் சிறப்புறச் செய்திருந்து, வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினார்.

அதையடுத்து, தலைமை விருந்தினராக வந்திருந்த, சார்லட் இந்தியப் பாரம்பரிய நேசக்குழுத் தலைவர் அப்பன் அவர்கள், மகாத்மா அவர்கள் போற்றிய அகிம்சை மற்றும் சகிப்புத் தன்மையின் அவசியம் ஆகியவற்றை வலியுறுத்திப் பேசினார்.

அடுத்ததாக, நிகழ்ச்சியின் சிறப்புப் பேச்சாளரும், கல்விமானும், தமிழ்ப் பதிவருமான சீமாச்சு அவர்கள், அமெரிக்காவில் வாழும் இந்தியக் குழந்தைகள் ஏன் காந்தி பிறந்த நாளைக் கடைபிடிக்க வேண்டும்? கல்விக்காக, கர்மவீரர் காமராசர் செய்தவை என்னென்ன?? போன்ற வினாக்களை வினவி, குழுமி இருந்த குழந்தைகளுக்கு எளிமையான முறையில் தகவல்களைப் புகுத்தினார்.

சில மாதங்களுக்கு முன்னர் கூட, திரு. சீமாச்சு அவர்கள், காமராசர் திரைப்படத்தைப் பார்த்தபடி கண் கலங்கிக் கொண்டிருந்தமையை நாம் நன்கறிவோம். அவரது மகள், நாடு பார்த்தது உண்டா... நாடு பார்த்தது உண்டா... என அப்படத்தின் பாடல் ஒன்றின் பின்னணி இசையை உச்சரித்துச் சிலிர்ப்பது வழமையான ஒன்றாகும். 
இறுதியாகப் பேச வந்த, இந்தியக் குடும்பத் தலைவி காயத்ரி அவர்கள், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து, இணக்கம், கல்வி மற்றும் தாய் நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய பங்களிப்பு முதலானவற்றை நினைவு கூர்ந்தார்.

வந்திருந்த அனைவரும், உரைகளைக் கவனமுறக் கேட்டு உள்வாங்கி, இறுதியில் பரிமாறப்பட்ட உணவினை நன்கு புசித்து, மகிழ்வுடன் விடை பெற்றனர்.

--சார்லட்டில் இருந்து பழமைபேசி!

9 comments:

Unknown said...

"--சார்லட்டில் இருந்து பழமைபேசி! "

நிருபருக்கு வணக்கம்.

வெளியூர்ல இருக்கும் போது தான் நாம் நாட்டின் மீதான அளவு கடந்த பாசம் வெளிப்படுது. எதையும் ஒரு பாசிடிவ் கண்ணோட்டத்தோட பாக்கணும் கிறத இந்த ஊரு மக்கள்ட்ட கத்துக்கொண்டதின் வெளிப்பாடு. இந்தியாவிலே இருக்கும் பொது மக்கள் செய்வாங்களான்னு தெரியல. நீங்க செய்து பெருமை தேடிக் கொண்டீர்கள். வாழ்க வளர்க உங்கள் பற்றும் பாசமும்.

மனதார வாழ்த்துக்கள்.

sakthi said...

நம் காந்தி மகானின் பெருமை உலகம் முழுவதும் இன்றும் நினைவு கூறுவது மகிழ்ச்சியளிக்கின்றது

vasu balaji said...

கேக் நல்லாருக்கு:))

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க..

S.Lankeswaran said...

மகாத்மா காந்திஜி புலால் உண்ண மாட்டார். ஆனால் அவரின் பிறந்தநாளை நீங்கள் முட்டை சேர்க்கப்பட்ட கேக் வெட்டிக் கொண்டாடுவது ஏற்புடையது அல்ல.(சைவக் கேக் என்று கூறி சமாளிக்காதீர்)

அபி அப்பா said...

தாய்லாந்து சாந்தி வாழ்க....அய்யோ மன்னிக்கவும் அதிகமா பிளாக் படிக்கிறேன் போல .....தாய்நாட்டு காந்தி வாழ்க..

ராஜ நடராஜன் said...

காந்தி கேக் கூட வெட்டியாச்சா?வாழ்த்துக்கள் காந்தி பையா!

அரசூரான் said...

//தாய்லாந்து சாந்தி வாழ்க....அய்யோ மன்னிக்கவும் அதிகமா பிளாக் படிக்கிறேன் போல .....தாய்நாட்டு காந்தி வாழ்க..//
மாயவரம் குசும்பு (?!)

உடன்பிறப்பு said...

காந்தியார் கேக் பக்கத்தில் கத்தி எல்லாம் இருக்கே, இருந்தாலும் ஹேப்பி காந்தி ஜெயந்தி