குழந்தைகளையும் பாராமல்
ஓடிப்போன அந்த அண்டை வீட்டு
அத்தையின் வெற்றிடத்தை நினைத்து நினைத்து
அழுது புலம்பும் மாமாவை
வீட்டு வாசலில் இருந்து பார்த்த
அரும்புமொட்டு ஒன்று,
அம்மா, அம்மா...
நீயும்
காணாமப் போயிடுவியாம்மா?
அப்ப நானூ??
அக்கணமே,
சுவற்றில் பட்டுச் சுக்கு நூறாகித் தெறித்தது
தொடுப்பிலிருந்த
அந்தக் கொடிய அலைபேசி!
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
ஹ்ம்ம் புரியலீங்களே
இளா மாதிரியே நானும். நீங்களும் அப்படித்தானா?
//நீயும்
காணாமப் போயிடுவியாம்மா?
அப்ப நானூ??//
சுக்கு நூறானது கலாச்சாரமும் பண்பாடும் கூட!
//சுவற்றில் பட்டுச் சுக்கு நூறாகித் தெறித்தது
அந்தக் கொடிய அலைபேசி! //
அந்த குழந்தையோட அம்மா,வேறு ஒருவனிடம்(மாற்றான்) பேசிக்கொண்டு இருக்கிறாள் என்பது மட்டும் புரிகிறது.....
நான் புரிந்து கொண்டது இதுதான்..பிழை இருந்தால் மன்னிக்கவும்...
நல்லாருக்கு கவிதை..
நைஸ்.. தலைவி போனை போட்டு உடைத்ததை நீங்கள் உடைக்காமல் விட்டதுதான் எங்கள் தலையை உடைத்தது..
www.narumugai.com
சூப்பர் சவுக்கடி. என்னமா சொடுக்குது வரிகள்.
இதென்ன மேட்டருங்க மாப்பு!
@@நல்லவன் கருப்பு...
தங்கள் யூகம் சரிதானதுதான்!
என்ன கொடுமை நண்பா,.....
Post a Comment