இந்தா, அவன் நல்லவன்... அப்படின்னா, கெட்டவனும் எங்கியோ இங்க இருக்கான்; அப்படித்தானே? நல்லதாவும் இல்லாம, கெட்டதாவும் இல்லாம ஒன்னு இருக்க முடியாதா??
இருக்கும்னா, அதுக்கு என்ன பேரு? இஃகி! வந்து மாட்டிகிட்டீங்கதானே? சொல்லுங்க... அப்பச் சொல்லுங்க....
கண்ணுகளா, நாம பொறக்கும் போது அல்லாருமே, உறாதவர்களாத்தான் பொறந்தோம்.... உறாததுன்னா, எந்நிலையும் கொள்ளாத ஒன்னுன்னு சொல்லிச் சொல்றாய்ங்க பெரியவங்க.... நாளா வட்டத்துல, அந்த சொல்லே காணாமப் போயிடுச்சி சமூகத்துல....
நல்லவன்... அல்லன்னா, கெட்டவன்! நல்லது, அல்லாங்காட்டி கெட்டது... இப்பிடிச் சொல்லிச் சொல்லியே பழகிப் போனாய்ங்க மனுசங்க....
நல்ல பழமையுஞ் சொல்லலை அவன்... அதே நேரத்துல கெடுதியாவுஞ் சொல்லலை... உறாதவனா இருக்கான்... இருந்துட்டுப் போறான்... அப்படி வுடுறமா நாம? நல்லவங் கெட்டவன்னு ரெண்டு கட்சிக்காரனும் அவனைப் பார்த்து, வெத்துப்பயன்னு பேசிப் பேசியே அவனையுங் கெட்டவனாக்குறோம்...
இப்பக் கூடப் பாருங்க... நான், இந்த பழமைய எதுக்கு சொல்றன்னா, உறாதல்ங்ற சொல்லை அறிமுகம் செய்யத்தான் சொல்றதே... அதுக்கும் ஒரு சாயம் பூசி, நல்லது கெட்டதுக்குள்ள தள்ளி வுடுவாய்ங்க பாருங்க...... உறாமப் படிச்சி, எளிமையா இருக்கலாம்... இருக்க முயற்சியாவது செய்யுலாம்... இஃகிஃகி...
எளிமைன்னு சொன்னதும், இன்னொரு கதை ஞாவகத்துக்கு வருது.... அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்துல அப்படி ஒரு முசுவா, வேலை பார்த்துட்டு இருந்தாங்களாம் விஞ்ஞானிக....
எடுத்த ஆய்வுக் குறிப்புக, கணக்குகளை எல்லாம் ஏட்டுல எழுதணும்னு அல்லாரும் முயற்சியோ முயற்சி செய்யுறாங்க... ஆனா, எழுதி வெக்கவே முடியலையாம்....
செஞ்சிட்டு இருக்குற ஆராய்ச்சிய உட்டுப் போட்டு, ஏன் எழுத முடியலைன்னு ஆராய்ச்சியத் துவங்கினாங்களாம் விஞ்ஞானப் பக்கிக... எத்தனியோ பேனாவுகளை மாத்தி மாத்தி எழுதிப் பார்த்தாலும் முடியலையாம்...
இதைப் பார்த்துட்டு இருந்த வேலையாள் ஒருத்தரு, படக்குனு சிலேட்டுக் குச்சியில, ரைச்சோ ரைச்சுன்னு ரைச்சு (tick mark) போட்டு போட்டுப் பார்த்துகிட்டு இருந்தாராம்...
அதைப் பார்த்ததுமே, அந்த விஞ்ஞானப் பக்கிகளுக்கு விளங்கிடுச்சி... ஆய்வு மையத்துல இருக்குற மாற்றியமைச்ச புவி ஈர்ப்பு விசையினால, மையி கீழ் வாக்குல எறங்குறதுல சிக்கல்னு....
என்ன பிரச்சினையானாலும்,மலையாட்டம் நினைச்சு பதட்டப் படக்கூடாது... எளிமையா, அடிபணிஞ்சு யோசிச்சாத்தான் எதுவும் நடக்கும்னு சொல்லிச் சொல்றதுக்கு எங்க ஆசான் இந்தக் கதைய நமக்கு சொன்னதை, நானும் சொல்லிகிடுறேனுங்க...
ரைச், ரைச்.. போலாம் ரைச்....
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
நல்ல தகவல்ங்க அண்ணே... நாமல்லாம் உறாதவன் மாதிரியா இருக்கோம்? ஒரு கேள்வி மனசுக்குள்ள... கடைசியா முடிவு நாயகன் பாணியில...தெரியலப்பா...
அருமைங்கண்ணே...
பிரபாகர்...
* உறாதவனா இருக்கான் *
தம்பி வணக்கம்!
தமிழ் இலக்கியத்தில் எங்காவது இந்தச்சொல் பயன்படுத்தி இருக்கிறார்களா?
ரைச்சு
uru meen theriyum. urathavan theriyaathu. neengalum nallaaththaan solli irukkareenga.
உறாதவர்களாகப் பிறந்த மாதிரியே உறாதவர்களாகவே போய்ச்சேர்ந்தாலே புண்ணியம் தான்..........ஒரு புதிய சொல் நானும் கத்துக்கிட்டேனே......நன்றிங்கோவ்.....ஆய்வு மையக் கதை வாழ்க்கைப் பாடம்தான்........
என்ன பிரச்சினையானாலும்,மலையாட்டம் நினைச்சு பதட்டப் படக்கூடாது... எளிமையா, அடிபணிஞ்சு யோசிச்சாத்தான் எதுவும் நடக்கும்னு சொல்லிச் சொல்றதுக்கு எங்க ஆசான் இந்தக் கதைய நமக்கு சொன்னதை, நானும் சொல்லிகிடுறேனுங்க...
////
அருமைங்கண்ணே...
நெஞ்சை தொட்ட ..........
//naanjil said...
* உறாதவனா இருக்கான் *
தம்பி வணக்கம்!
தமிழ் இலக்கியத்தில் எங்காவது இந்தச்சொல் பயன்படுத்தி இருக்கிறார்களா?
//
அண்ணா,
வணக்கம்; இச்சொல் நிறைய இடங்களில், வெகு சரளமாகப் பாவிக்கப்பட்டு உள்ளது.
திருக்குறள் 1096ல் கூட வருகிறது....
உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.
உறாதவர் போல, எதுவுமின்றிக் காணப்பட்டாலும், அன்பு கொண்டவரின் மனது விரைவில் வெளிப்பட்டுவிடும்.
இந்த கொடுமையக் கேளுங்க.... இந்தக் குறளுக்கு உரை எழுதினவங்கள்ல முக்கால்வாசி ஆசிரியர்களும், நல்லவன்/கெட்டவன் பாணியிலயேதான் எழுதி இருப்பாங்க...
என்ன கொடுமைடா சாமி? உறாதவன்ங்ற சொல்லையும், கெடுதியாப் பேசுறவன் அளவுக்கு கொண்டு போய்ட்டாரு ஒருத்தரு... அவர், யாரு? யாரு??
வேண்டாம், ஊர் வம்பு நமக்கெதுக்கு???
அறிந்து கொண்டேன்.
நட்பும் அல்லாமல் பகைமயும் அல்லாத உறவை “நொதுமல்” என்ற பெயரால் வள்ளுவர் குறிப்பிட்டதாக அறிந்திருக்கின்றேன். உறாதவன் வார்த்தை புதிது. அறிந்து கொண்டேன்.
அன்புடன்
ஆரூரன்
@@ ஆரூரன் விசுவநாதன்
சினமுற்றேன்... கேள்விப்பட்டது இல்லீங்களா முதலாளி? உற்றவனுக்கு எதிர்ச் சொல்தான் உறாதவன்...
ஒரு நிலைப்பாடை அடையாதவன், உறாதவன்... அம்புடுதேன்....
உறாதல் - Neutral னு சொல்லலாமா. அப்பிடி இருக்க முடியுமா. ஏதாவது ஒரு விசயத்தில் ஏதோ ஒரு பக்கம் சாயத் தானே முடியும்.
//Sethu said...
உறாதல் - Neutral னு சொல்லலாமா?? அப்பிடி இருக்க முடியுமா.//
கொலை செய்ய முயற்சித்தவன் கெட்டவன்.
காயம்பட்டவனைக் காப்பாற்ற முயற்சித்தவன் நல்லவன்.
அந்த இடமே ஆகாதுன்னு, ஒதுங்கிப் போனவன்??
// ஏதாவது ஒரு விசயத்தில் ஏதோ ஒரு பக்கம் சாயத் தானே முடியும்.
//
அதுல நாட்டமே இல்லாமல் இருந்தவன்??
நல்ல இருக்கு நண்பரே .
அது என்ன இறுதியில் ரைச், ரைச்.. போலாம் ரைச்.... !???????????
உராதவன் சரி.' முசுவா' யூகத்துக்கு விட்டீங்களே
Post a Comment