நெடுநேரமாய்
அலசி, ஆராய்ந்து
கொண்டிருந்தான்...
கூடுவதும்
குறைவதுமாய்
ஓரிடத்தில் நில்லாது
போக்குக் காட்டிக் கொண்டிருந்த
கணக்காயத்தில் இருந்த
தன் பங்குகளை!
ஏங்க? எத்தினிவாட்டி சொல்றது??
வெளியில
ரொம்ப நேரமா
உங்களுக்கோசரம்
உக்காந்தது உக்காந்தவாக்குல
காத்திட்டு இருக்காரு
ஊர்லிருந்து வந்துருக்குற
உங்க அப்பா!!
11 comments:
பிள்ளை மனம் கல்லு.. :(
அப்பாவும் மனதுள் கணக்கிட்டுக் கொண்டிருப்பாரோ கடந்து வந்த வாழ்வின் லாப நஷ்டப் பங்குகளை....!
வித்தியாசமான கவிதை
விழுதுகளாக இல்லாத பழுதுகள்...
பிரபாகர்...
//பிரபாகர் said...
விழுதுகளாக இல்லாத பழுதுகள்...
பிரபாகர்...//
ங்கொய்யல. பயபுள்ள இன்னைக்கு எல்லா இடத்துலயும் ஒரு மார்க்கமாத்தான் கமண்ட் போடுது:))
ப்ச்
தப்பித்தவறி இதைப் பார்த்தாவது எழுந்து போவாரா?
"பொய் விழுது"
பாவங்க. அப்பாக்கே இந்த நிலைமையா. அப்ப மத்தவங்கெல்லாம்.
விதிகளுக்குள் அடங்காத விழுது போல தெரியுதே!
ஓ பங்கு சந்தை போக்கு காமிக்கிதா?
குட்டிப் போட்ட பூனை மாதிரி சுத்தி வரிங்களோ...அவ்வ்வ்வ்
அருமை!
Post a Comment