9/16/2010

அரசி நகரான சார்லட்டில், தமிழர் விழா!

மக்களே, வணக்கமுங்க! அண்ணன் குடுகுடுப்பையார் மற்றும் பதிவுலகின் இன்றைய பிரபலமுமான தம்பி முகிலன் அழைப்பை மறுக்க வேண்டிய ஒரு சூழல். மேலும், வட அமெரிக்க வலைஞர் தளபதியின் எள்ளலை முறியடிக்க ஒரு வாய்ப்பு எமக்கு.

“என்னங்ணே, அங்க தமிழ் விழா, இங்க தமிழ் விழா” அப்படின்னு எப்ப பார்த்தாலும் இடுகை போடுறீங்க? உங்க ஊர்ல தமிழ்ச் சங்கமோ அல்லது தமிழ் விழாவோ நடக்குறதே இல்லியேன்னு கடுப்பேத்திகிட்டு இருந்தாரு. இதோ, அவரைக் கடுப்பேத்துறதுக்கான ஒரு வாய்ப்பு எமக்கு.

ஆம் மக்களே, எங்கள் சார்லட் பெருநகர தமிழ்ச் சங்கத்தின் கோடை விழாவானது எதிர்வரும் ஞாயிறு, செப் 19 அன்று வெகு விமரிசையாக நிகழ் இருக்கிறது. அந்நிகழ்வில், பனைநிலம் தமிழ்ச் சங்கத்தின் சிலம்பாட்டமும் இடம் பெற உள்ளது. அனைவரும் வருக, ஆதரவு தருக!!

Location:

Reedy Creek Park
2900 Rocky River Road
Charlotte, NC 28215 US

When: Sunday, September 19, 10:00AM - 4:00 PM

கூடுதல் விபரங்களுக்கு இங்கே சொடுக்கவும்!

தமிழால் இணைந்தோம்!

7 comments:

நசரேயன் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்

அரசூரான் said...
This comment has been removed by the author.
அரசூரான் said...

மின்னழைப்பு இப்பவே மூன்று நூறை முட்டுதே
நிகழ்ச்சிய நினாச்சா என்/எண் கண்ணை கட்டுதே
நிகழ்ச்சியின்பின் பழமையின் பதிவு விண்ணை முட்டுதே
(முக்காலமும் உணர்ந்து சொல்லுவோம்ல...)

விழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.

ஆரூரன் விசுவநாதன் said...

விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்

Unknown said...

விழா சிறக்க வாழ்த்துகள்..

இங்கயும் நயகரா நீர்விழ்ச்சி பூங்காவுல ஒரு மாபெரும் பதிவர் சங்கமம் நிகழ இருக்கு..

ஒரு காசு said...

விழா இனிதே நடைபெற வாழ்த்துகள்.

பழமைபேசி said...

அனைவருக்கும் நன்றி!