5/30/2010

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

கடந்த இரு நாட்களாக, மின்தமிழ் மடலாடற் குழுவில் நான் இட்ட இரு இடுகைகளும் சிறந்த விவாத இழைகளாக உருவெடுத்தன. அதிற்கிடைத்த ஒரு தகவல்தான் இது!

லெனின் சோவியத் ருஷியாவின் ஆட்சிச் தலைமையில் இருந்த போது, மேடையில் பேசக் கூப்பிட்ட தருணத்தில் தன்னைப் புகழ்ந்தவர்களைப் பார்த்துச் சொன்னார். ”தோழர் லெனின் என்பதற்குமேல் ஒரு வார்த்தை என்னைப் பற்றிப் பேசக்கூடாது. மக்களிடம் பேசவந்த கருத்தைப் பேசுங்கள்” என்று.

இதையே பணிவோடு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் பாராட்டும் ஒவ்வொரு சொல்லும் உங்களிலிருந்து என்னை அன்னியப் படுத்துகிறது. நமக்குள் உள்ள நட்பில் இடைவெளியையும் எனக்கு மனச்சங்கடத்தையும் ஏற்படுத்துகிறது.

அறிவு ஒரு கூட்டுமுயற்சி. பலபேர் சேர்ந்து தேர் இழுப்பதுபோல், பலபேர் சேர்ந்து சிந்திக்கும்போது, உங்களுக்குத் தெரிந்ததை நானும், எனக்குத் தெரிந்ததை நீங்களும் என ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்கிறோம்.

அகமதாபாத்தில் பேச அழைத்தார்கள். அங்குத் தமிழர்கள் மிகுதியாக வாழ்கிறார்கள். இது 80களில் நடந்தது. வடஇந்தியாவில் முருகன் கோயில் உள்ளதா எனக் கேட்டேன். அவர்கள் இல்லை என்று சொன்னார்கள். ஏன் என்றேன். தந்தைக்கே பாடம் சொன்னவன் முருகன். தந்தையை விஞ்சியவன். தகப்பன் சாமி. இங்குள்ள மக்கள், எவ்வளவு வளர்ந்தாலும் தகப்பனுக்குப் புத்திசொல்லும் பண்பாடு இல்லை. அதனால் முருகனையும் இவர்கள் ஏற்பதில்லை என ஒருவர் சொன்னார்.

அக்கருத்து சரியா தவறா என்பது வேறு. ஆனால் தமிழ் நாட்டில் அறிவு பெரியவரிடம் இருந்தாலும் சிறியவரிடம் இருந்தாலும் மகனிடம் இருந்தாலும் ஏற்றுப் போற்று எனக் கற்பிக்கப்பட்டிருக்கிறோம்.

”அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்...
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே!”

என ஒரு அரசன் பாடுகிறான்.

எல்லோரும் ஒவ்வொருவிதத்தில் அறிவு சான்றவர்கள். எனக்கு இலக்கணமும் தத்துவமும் தெரியுமென்றால் வேறு சிலருக்கு கம்யூட்டரும், மருத்துவமும் தெரியும். பிறர் திறமை நமக்குத் தெரிவதில்லை. அவ்வளவுதான்.

பெரியோரை வியத்தலும் இலமே!
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!!

அன்புடன்
ஆராதி


4 comments:

ஈரோடு கதிர் said...

//அறிவு ஒரு கூட்டுமுயற்சி//

உண்மைதான்

vasu balaji said...

//However, Kartikeya's popularity in North India receded from the Middle Ages onwards, and his worship is today virtually unknown except in parts of Haryana. There is a very famous temple dedicated to Him in the town of Pehowa in Haryana and this temple is very well-known in the adjoining areas, especially because of the fact that women are not allowed anywhere close to it. Women stay away from this temple in Pehowa town of Haryana because this shrine celebrates the Brahmachari form of Kartikeya. Reminders of former devotions to him include a temple at Achaleshwar, near Batala in Punjab, and another temple of Skanda atop the Parvati hill in Pune, Maharashtra. Another vestige of his former popularity can be seen in Bengal, where he is worshipped during the Durga Puja festivities alongside Durga.//

முழுத்தகவலுக்கு

vasu balaji said...

அதெப்புடிங்க. முகஸ்துதி நெளிய வைக்கலாம். ஒரு தகவல் தெரிஞ்சதும் ஆகான்னு மனசுல பட்டுச்சுன்னா உடனே சொன்னவர சபாசுன்னு ஒரு துள்ளலா வர்ர பாராட்டாம இருக்க முடியலைங்களே. இயல்பா இருக்க முடியாத ஒரு கட்டுப்பாடு சங்கடம்தானே.

பழமைபேசி said...

//இயல்பா இருக்க முடியாத ஒரு கட்டுப்பாடு சங்கடம்தானே.//

ஆமாங்கண்ணே!

@ஈரோடு கதிர்

வாங்க மாப்பு!