5/05/2010

சிகாகோ: கலாய்க்கலாம் வாங்க!

மக்களே, ஜூலை 2, 3 மற்றும் 4 தேதிகள்ல நடக்கப் போற அமெரிக்கத் தமிழ் விழாவுக்கு வந்திடுங்க. சந்திப்போம்... விழா நிகழ்ச்சிகளைக் கண்டு களிச்சிடுவோம்.

அப்புறம் நாம நாளைக்கு மாலை சிகாகோ நகரத்துக்கு போயி, வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் அங்க இருந்து பல நண்பர்களைக் கண்டுட்டு, ஊரைச் சுத்திட்டு வரலாம்னு இருக்கோம். நீங்க அந்தப் பகுதியில இருந்தா, என்னோட விபரக்கட்டத்துல இருக்குற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு தட்டு தட்டுங்க... சந்திப்போம்!

செந்தமிழால் சேர்ந்திணைவோம்!
செயல்பட்டே இனம் காப்போம்!!

6 comments:

Mahesh said...

ஊட்டம்மிணியுமு சின்னம்மிணிகளுமு ஊர்ல இல்லைன்னா இப்பிடி ஊர் ஊரா சுத்தறதா? உப்பயே போன் போட்டு சொல்லிப் போட போறேன்...
:))))))))))))))))))))))))

அப்பாதுரை said...

எப்ப வர்றீங்கன்னு தகவல் அனுப்புங்க; அவசியம் சந்திப்போம். msuzhi@ymail.com

Paleo God said...

கண்டிப்பா வந்துடறோம் தலைவரே!

(ஆனா இங்க பாரீஸுக்குத்தான் நிறைய பஸ் இருக்கு! ) :)

இராகவன் நைஜிரியா said...

// மக்களே, ஜூலை 2, 3 மற்றும் 4 தேதிகள்ல நடக்கப் போற அமெரிக்கத் தமிழ் விழாவுக்கு வந்திடுங்க. //

அண்ணே அபுஜா - நியூயார்க் - சிகாகோ - நியூயார்க் - அபுஜா மார்க்கத்தில் ஒரு பிசினஸ் கிளாஸ் டிக்கெட் எடுத்து அனுப்பிடுங்க. வந்துடறேன்.

vasu balaji said...

பொடி நடையா கெளம்பினா வந்துரலாமா தெரியல. யூத்து மாப்புவை கேக்கணும்.

தாராபுரத்தான் said...

நம்ம ஊர்களில் ஊர் ஊருக்கு போட்டி போட்டுக்கிட்டு நோன்பு சாட்டறாங்க. அதே போல அமெரிக்காவிலும் கிளம்பீட்டீங்க போல இருக்குதுங்க....