6/28/2009

'விசிறி’ சரியானதல்ல!

மொழி பெயர்த்தல், மொழியாக்கம் இந்த மாதரக் காரியங்கள்ல சித்த கண்ணுங் கருத்துமா இருங்கப்பு. நேற்றைக்குப் பாருங்க, நண்பர் ஒருத்தர் செமக் காந்தலாக் கத்தினாரு, ‘ஏய், நான் அவரோட பரம விசிறி. அவரைப் பத்தி இனிமேலும் தப்பாக் கிப்பாப் பேசினாக் கொலைகூட விழும்!’ன்னாரு.

ஒடனே நமக்குப் பத்திகிச்சு, அது என்ன பரம விசிறி? அவரோட எழுத்தை இரசிக்கிறயா, இரசிச்சிட்டுப் போ. அதுக்கெதுக்கு விசிறி கிசிறின்ட்டு ஒரே அலம்பல்? விசிறின்னா என்ன?

ஆராய்ஞ்சு பார்த்ததுல பாருங்க, பரங்கி மொழியில, அதாங்க ஆங்கிலம்! ஆங்கிலம்!! அந்த ஆங்கிலத்துல சொன்னது Fan. அதை அப்படியே தமிழ்ப்படுத்தினது விசிறி! விசிறி!!

அதாவது ஒருத்தரை வெகு மூர்க்கமா, கலையுணர்வு காரணமாவோ, இசையுணர்வு காரணமாவோ, இலக்கிய உணர்வு காரணமாவோ, எதோ ஒன்றால உந்தப்பட்டு, வெறித்தனமா அவரின்பால் ஈடுபாடு காண்பிப்பதை இலத்தீன் மொழிய மூலமா வெச்சி, பின்னாளில் ஆங்கிலத்துல சொன்னது Fanatic. இது 18ம் நூற்றாண்டுகள்ல தோன்றினதுன்னும் சொல்லுறாங்க. அதுவே பேச்சு வழக்குல சுருக்கமா, Fanன்னும் ஆச்சுது.

கலை, இலக்கியம், பண்பாடு இதுகளைக் கருத்துல கொள்ளாம, வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்யுறதுல நடக்குற பிறழ்வுகள் போலவே Fanம், விசிறியாயிடுச்சு. ஒரு வேளை, நம்ம திரைப்பட நடிகர்களோட விசிறிகளை மனசுல வெச்சு முன்னமே வெள்ளைக்காரன் Fanaticsன்னு சொல்ல ஆரம்பிச்சிருப்பானோ?

அதை அப்படியே முறைப்படி மொழியாக்கம் செய்தாலும், நான் அவரோட மூர்க்கன்னு சொல்லக் கேவலமா இருக்காது? ஆகவே நான் அவரோட ஆர்வலன்னு சொல்றதுதான் சரியா இருக்கும். அப்ப விசிறின்னு இனி நீங்க சொல்ல மாட்டீங்கதானே? அப்படிச் சொன்னா, உங்களை நீங்களே மூர்க்கன்னு சொல்றதுக்கு ஒப்புதல் வாக்குமூலம் தர்றமாதிரி ஆயிடும். நீங்களே முடிவு செஞ்சுகிடுங்க, நீங்க மூர்க்கனா அப்படின்னு! இஃகிஃகி!!

பொறுப்பி: இந்த இடுகைக்கும், சாறு மோருங்றவங்களோட விசிறிகள், ஆர்வலர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது! கிடையாது!! Because, I am a well known 'Red Card'ed guy you know?!

21 comments:

ஈரோடு கதிர் said...

நான் பழமையோட‌ ஆர்வலன்

ப்ரியமுடன் வசந்த் said...

u green card member its true

பழமைபேசி said...

//பிரியமுடன்.........வசந்த் said...
u green card member its true
//

வசந்த் கண்ணூ, நெம்ப நன்றிங்க கண்ணு...

பழமைபேசி said...

//கதிர் said...
நான் பழமையோட‌ ஆர்வலன்
//

இஃகிஃகி, கதிர்த் தம்பி இனி காத்தோட்டத்துக்குக் கூட விசிறி எடுத்தாறச் சொல்ல மாண்டார் போலிருக்கே..... இஃகிஃகி!!

Arasi Raj said...

கதிர் said...
நான் பழமையோட‌ ஆர்வலன்
.....

////

நான் சொல்ல வந்தேன்....இவர் முந்திட்டார்

தீப்பெட்டி said...

நானும் இனி உங்களோட ஆர்வலன் தான் பாஸ்..

பழமைபேசி said...

@@நிலாவும் அம்மாவும்
@@தீப்பெட்டி

நன்றிங்க மக்களே!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

விசறன் என்ற ஒரு சொல் இலங்கைத் தமிழில் உண்டே தல..,

(தெனாலி மூலம் எனக்கு அறிமுகமான சொல் அது. மிகச் சரியான உச்சரிப்பு தெரியவில்லை)

அதிலிருந்தும் கூட விசிறி உருவாகியிருக்கலாம் அல்லவா..,

பழமைபேசி said...

தலை, அது விசர்!

Mahesh said...

சரியாச் சொன்னீங்க போங்க... நான் என்னமோ விசிலடிச்சாங்குஞ்சுக விசிலியா மாறி அப்பறமா விசிறியாச்சுன்னு நினைச்சேன் :)))))

வர வர சில பதிவுகளைப் படிக்கும்போது ப்ளாக்கிங்கா பாக்ஸிங்கான்னே தெரியல :((((

Unknown said...

தெளிவான விளக்கம்...!! நன்றிங்க தலைவரே ....!!


இனிமேலு நானும் உங்க விசிறி.......!!!!! இஃகிஃகி...!!!

தேவன் மாயம் said...

கொஞ்சம் விசிறி விடுங்கப்பா!!!
நன்றி !!தமிழா!!

ஆ.ஞானசேகரன் said...

சரியான விளக்கம் போல இருக்கு.. தேவன் சாருக்கு கொஞ்சம் விசிறி விடுனுமாம்....

Joe said...

நல்லாச் சொன்னீங்க போங்க.

ஆனா எவன் பின்பற்றப் போறான்?

பழமைபேசி said...

//Mahesh said...
சரியாச் சொன்னீங்க போங்க... நான் என்னமோ விசிலடிச்சாங்குஞ்சுக
//

இஃகிஃகி! அதுவும் நல்லா இருக்குங்கண்ணே!

@@லவ்டேல் மேடி
@@thevanmayam
@@ஆ.ஞானசேகரன்
@@Joe

மக்களே, நன்றிங்கோ!

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

அண்ணா, சரியா சொன்னீங்க.. நமக்குத்தான் வெள்ளக்கார துரைக (இத துறைனு எழுதறங்களும் இருக்காங்க :) ) எது செஞ்சாலும் அப்படியே செய்யனுமே.. ஏன்னா அது தான் பேசன்...

kicha said...

ந‌ல்ல‌ விள‌க்க‌ம், ந‌ன்றிங்க‌. நேர‌ம் கிடைத்தால் த‌வ‌றாக‌ புரிந்து கொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் ப‌ற்றிய‌ என்னுடைய‌ ‌இந்த‌ப் ப‌திவை ப‌டிக்க‌ வேண்டுகிறேன்.
http://yaazhumvaazhum.blogspot.com/2009/06/blog-post_29.html

Unknown said...

நல்ல விளக்கம்..

நா. கணேசன் said...

fan ( < fanatic) - இதற்கு
வெறியார்வர், வெறியன்பர், விடாவெறியர், வெறியன்

என்றும் சொல்லலாம்.

பழமைபேசி said...

//நா. கணேசன் said...
fan ( < fanatic) - இதற்கு
வெறியார்வர், வெறியன்பர், விடாவெறியர், வெறியன்

என்றும் சொல்லலாம்.
//

இதான் பொருத்தமா இருக்குங்க அண்ணா! நன்றிங்க!!

நசரேயன் said...

நான் உங்களோட ஆர்வலன்