6/24/2009

படித்ததில் உறைப்புக் காட்டியது!

”இப்போது கற்றவர் தொகை பல மடங்கு பெருகி வருகிறது. அந்தப் பலருக்குள் பெரும்பாலோர் ஆழமின்றி மேம்போக்காகப் படிப்பவர்களே! முன்பெல்லாம், ஒரு நூல் எழுதப்பட்டால் படித்தவர்கள் அதைப் பாராட்ட வேண்டும் என்ற கவலை எழுத்தாளனுக்கு இருந்தது. ஆகவே, கவலையோடு பொறுப்புணர்ந்து எழுதினார்கள்.

இன்றைக்கு பெரும்பாலானோர் அப்படி எழுதுவது இல்லை. அவ்வாறு உணர்ந்து எழுத வேண்டிய கவலையும் அவர்களுக்கு இல்லை. கற்றவர் தொகை பெருகிவிட்ட இன்றைய சூழலில், ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் மேற்போக்காகப் படிக்கும் வெள்ளம் போன்ற கூட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியாரின் ஆதரவு தமக்குக் கிடைத்தால் போதும் என்று அந்த எழுத்தாளர்கள் எண்ணுகிறார்கள்.

மேலும் மேலும் அவர்களின் ஆழம் இல்லாத, பண்படாத சுவைக்கு ஏற்ற உணவை நூல்களில் தந்து, எழுத்துலகில் தன்னை வளர்த்துக் கொள்கிறார்கள். பலர் விரும்பிப் படிக்கும் எழுத்தாளர் யார் என்று இதழ்களின் ஆசிரியர்கள் தேடுகிறார்களே அல்லாமல், நடுநிலைமையாகவும் தரமாகவும் எழுதுகிற எழுத்தாளர் யார் என்று தேடுவதில்லை. ஆகவே, பத்திரிகையுலகத்திலும் முன்கூறிய எழுத்தாளர்கள் செல்வாக்குப் பெற முடிகிறது.

எப்படியாவது பணம் வந்தால் போதும் என்ற துணிச்சலான மனநிலை வந்த போது, கவலை இல்லாமல் மக்களை ஏய்த்து மயக்கும் போக்கை நேரே நாடுகிறார்கள்! சிலர், தனக்கென்று புகழ் வளர்ந்தபின் பழைய தவறான முறையைக் கைவிட்டுப் பண்பட்ட - சிந்தனை வளம் உள்ள படைப்புகளைத் தந்து நல்ல எழுத்தாளர்களாய் விளங்குவதும் உண்டு!”

தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் எண் - 327, மு.வரதராசன்

24 comments:

பழமைபேசி said...

இந்த இடுகைக்கு கண், காது, மூக்கு வெச்சிடாதீங்க, செரியா?! இஃகிஃகி!!

அது சரி(18185106603874041862) said...

அண்ணே,

உண்மையைச் சொல்றேன்...இப்பெல்லாம் என்ன நடக்குதுன்னே தெரியல...யாரு யாரைப் பத்தி எழுதியிருக்காங்க...எதைப் பத்தி எழுதியிருக்காங்க, உள்குத்து இருக்கா இல்ல எந்த குத்தும் இல்லாம இருக்கது தான் உள்குத்தா....

ஒண்ணுமே புரியல ஒலகத்துல...

தலை சுத்துது தல!

நா. கணேசன் said...

Thoughtful words written 38 years ago! I wonder what Dr. Mu. Va. (1912 - 1974) would say of many blogs.

I'd like you to meet prof. V. T. Balasubramaniam in Udumalpet. A student of Mu.Va. and now retired,
and living with his son, Murukan
in Gandhi Nagar. Daughter Puungulali lives in San Francisco. Originally from Vallakundapuram.
will send all contact details.

N. Ganesan

அப்பாவி முரு said...

அண்ணே,

உண்மையைச் சொல்றேன்...இப்பெல்லாம் என்ன நடக்குதுன்னே தெரியல...யாரு யாரைப் பத்தி எழுதியிருக்காங்க...எதைப் பத்தி எழுதியிருக்காங்க, உள்குத்து இருக்கா இல்ல எந்த குத்தும் இல்லாம இருக்கது தான் உள்குத்தா....

ஒண்ணுமே புரியல ஒலகத்துல...

தலை சுத்துது தல!

repeettayy...

குடுகுடுப்பை said...

எனக்கு போட வேண்டிய கமெண்டா இது?

வருண் said...

1974 ல, கல்கி, அகிலன், லக்ஷ்மி ஜானகிராமன் எல்லாம் ஓய்வு பெற்றுவிட்டார்கள்.

சுஜாதா, புஷ்பாதங்கதுரை, வாசந்தி, சிவசங்கரி, இந்துமதி, ரமணி சந்திரன், சாண்டில்யன், அனுராதா ரமணன் போன்றவர்களைத்தான் மு வ. சாடுகிறார்.

நம்ம "சாரு" எழுதுவதை எல்லாம் பார்த்து இருந்தார்னா, என்ன சொல்லி இருப்பார், மு. வ??? :)

priyamudanprabu said...

நம்ம "சாரு" எழுதுவதை எல்லாம் பார்த்து இருந்தார்னா, என்ன சொல்லி இருப்பார், மு. வ??? :)


repeettayy...repeettayy...repeettayy...repeettayy...repeettayy...repeettayy...repeettayy...repeettayy...repeettayy...repeettayy...repeettayy...repeettayy...

Unknown said...

பதிவு நல்லாத்தேன் இருக்குது...!!! ஆனா இதுல உள்குத்து ஏதோ இருக்குது போல...!! யாரோ... புதுசா ஒரு பத்திரிக்கையில எழுதப் போற எழுத்தாளர பத்தி சொன்ன மாதிரி ஒரு எபெக்ட்......!!

எப்படியோ நாடுகளுக்கிடையே தான் மறைமுக தாக்குதல்கள் இருந்துது... இப்போ அந்த வைரஸ் நம்ம ஆளுங்க கிட்டயும் கண்ணா பின்னானு பரவுது.....!!!


இல்ல....... " அன்னை காளிகாம்பாள் " படத்துல வர்ற விவேக் , மயில் சாமி மாதிரி முன்னாடி திட்டிகிட்டு , வெளியில வந்ததுக்கு அப்புறம் ... " அண்ணே என்னைய திட்டுற மாதிரி நல்லா நடுச்சீங்க அண்ணே.... இதுல எனக்கு நல்லா பப்ப்ளிசிடி கெடச்சுது அண்ணே..." அப்புடீங்குரே ரேஞ்சுல ஏதாவது அண்டர் க்ரவுண்டு டீலிங் இருக்குதா......!!!!

எப்புடியோ நல்லாருந்தா சேரி.....!!!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓ. கே.., ஓ.கே...,

நாமக்கல் சிபி said...

//அண்ணே,

உண்மையைச் சொல்றேன்...இப்பெல்லாம் என்ன நடக்குதுன்னே தெரியல...யாரு யாரைப் பத்தி எழுதியிருக்காங்க...எதைப் பத்தி எழுதியிருக்காங்க, உள்குத்து இருக்கா இல்ல எந்த குத்தும் இல்லாம இருக்கது தான் உள்குத்தா....

ஒண்ணுமே புரியல ஒலகத்துல...

தலை சுத்துது தல!//

அது சரி!

நாமக்கல் சிபி said...

//இந்த இடுகைக்கு கண், காது, மூக்கு வெச்சிடாதீங்க, செரியா?! இஃகிஃகி!!//

சரிங்க!

(இப்படி சொல்லி என் கையைக் கட்டிப் போட்டுட்டீங்க)

சுந்தர் said...

//பெரும்பாலோர் ஆழமின்றி மேம்போக்காகப் படிப்பவர்களே! முன்பெல்லாம்// நான்கூட புதுசு னு நினைச்சேன்.,

குடந்தை அன்புமணி said...

பதிவை படிச்ச பரபரப்போட பின்னூட்டம் பக்கம் போனாவுடனே கப் சிப்-னு ஆயிட்டேன், உங்க பின்னூட்டத்தப் பார்த்து... என்னமோ நடக்குது...

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றிண்ணே

Anonymous said...

எனக்கு எதுவும் சொல்லத் தெரியல அண்ணே...38 வருஷமா முன்னாடியே மு.வ அவர்கள் இப்படி எல்லாம் நடக்குமுன்னு எழுதியிருக்கிறதா நினைச்சா ஆச்சரியமா இருக்கு. ஒரு வேலை அவரோட காலத்துலயும் இந்து மாதிரி நடந்துருக்குமோ?

பழமைபேசி said...

@@அது சரி


வாங்க அது சரி அண்ணே! தமிழ் இலக்கியத்தின் வரலாறுங்ற தலைப்புல ஒரு மேடை நிகழ்ச்சியில கலந்துக்குறேன் அண்ணே! அதற்காக தயார்படுத்திக்கும் போது, இந்த வாசகங்கள் தென்பட்டது. அதை அப்படியே உங்களுக்கும்....

பழமைபேசி said...

@நா. கணேசன்

நன்றிங்க அண்ணா, அவசியம் கொடுங்க...

பழமைபேசி said...

@@அப்பாவி முரு
@@குடுகுடுப்பை
@@வருண்
@@பிரியமுடன் பிரபு
@@SUREஷ் (பழனியிலிருந்து)
@@நாமக்கல் சிபி
@@தேனீ - சுந்தர்
@@ குடந்தை அன்புமணி
@@ஆ.ஞானசேகரன்
@@இங்கிலீஷ்காரன்

நன்றி மக்களே.... இலக்கியத்தோட வரலாறுல இதுவும் ஒரு கூறு...

பழமைபேசி said...

//லவ்டேல் மேடி said...
பதிவு நல்லாத்தேன் இருக்குது...!!! ஆனா இதுல உள்குத்து ஏதோ இருக்குது போல...!! யாரோ... புதுசா ஒரு பத்திரிக்கையில எழுதப் போற எழுத்தாளர பத்தி சொன்ன மாதிரி ஒரு எபெக்ட்......!!
//

கண், காது, மூக்கு வெச்சிட்டீங்களே பரட்டை? வெச்சிட்டீங்களே?! அவ்வ்...

Unknown said...

//.. பழமைபேசி said...

இந்த இடுகைக்கு கண், காது, மூக்கு வெச்சிடாதீங்க, செரியா?! இஃகிஃகி!!..//

பதிவ படிக்கும்போது ஒண்ணும் தோணல..
இந்த பின்னூட்டத்த பார்த்தா தான் என்னமோ வில்லங்கமா தெரியுது..

..??!!

தீப்பெட்டி said...

//ஆழ்ந்த சிந்தனை இல்லாமல் மேற்போக்காகப் படிக்கும் வெள்ளம் போன்ற கூட்டத்தில் ஏதேனும் ஒரு பகுதியாரின் ஆதரவு தமக்குக் கிடைத்தால் போதும் என்று அந்த எழுத்தாளர்கள் எண்ணுகிறார்கள்//

நிஜமாவே அது நம்ம துரதிஷ்டம் தான்..

//இந்த இடுகைக்கு கண், காது, மூக்கு வெச்சிடாதீங்க, செரியா?! இஃகிஃகி!!//

தாமரை கவிதைக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு இப்போ நான் நம்புறேன் பாஸ்..

ஆனா உங்க இந்த இடுகை என்னோட டாஸ் போர்டில் வரலையே! ஏதும் வெளி நாட்டு சதி இதுல இல்லையே..

தீப்பெட்டி said...

//தமிழ் இலக்கியத்தின் வரலாறுங்ற தலைப்புல ஒரு மேடை நிகழ்ச்சியில கலந்துக்குறேன் அண்ணே! //

கலக்குங்க பாஸ்.. வாழ்த்துகள்..

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

உண்மை!!

உங்கள் பதிவில் குறிப்பிட்ட கருத்து பதிவுலகிலும் பரவியுள்ளது.

பழமைபேசி said...

//பட்டிக்காட்டான்.. said... //

இஃகிஃகி...

//தீப்பெட்டி said...
தாமரை கவிதைக்கும் இந்த பதிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு இப்போ நான் நம்புறேன் பாஸ்..
//

ஓ நீங்க இன்னொரு கண் காது மூக்கு செட்டோட வந்து இருக்குறீங்க போல இருக்கே?!

// ச.செந்தில்வேலன் said...
உண்மை!!
//

நன்றிங்க!