வணக்கம்! பள்ள(ளை)யம் தொடரில் மீண்டும் உங்களை எல்லாம் சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். பள்ளயம் என்பதின் பொருள் அறிய விழைவோர், எமது இந்த முந்தைய இடுகையினைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவும். ---------------------------
நான் எப்படியும் தினம் ஒரு முறையாவது கூகுள் மடல் பேழைக்கு வர்றது உண்டு. வரும் போது, மின்னாடல்த் தெரிநிலையில, இருப்பைக் காண்பிச்சுக்க மாட்டேன்; மாறா உள்ளிரு(invisible)ப்பா இருக்குறதுதான் வழக்கம்! எப்பவாவது ஒருவாட்டி பச்சை வண்ணம் மிளிர விடுவேன். அப்படிதாங்க, நேற்றைக்கு ஒளிரவிட்ட மறு வினாடியே, ‘ப்ளுக்’னு மின்னாடல் பெட்டி மேலெழும்புச்சு!
“நீங்களும் கதிரும் சொந்தக்காரங்களா?”
“ஆமாங்க!”
“எப்படி சொந்தம்?”
“தூரத்து சொந்தம்!”
“அப்படின்னா?”
“அவர் ஈரோட்டுல இருக்காரு; நான், சார்லட், அமெரிக்கால இருக்கேன்!”
அவ்வளவுதான், ஆளே காணோம்! என்னங்யா இது? முன்பின் அறிமுகம் செய்துக்காம உள்ள வந்து கேள்வி கேட்பீங்க...அப்புறம் போயிடுவீங்க... குறைந்தபட்சம் வணக்கமாவது சொல்லிப் பழகுங்கய்யா! ---------------------------
அப்படித்தான் பாருங்க, போன வாரம் வாசிங்டன் போயிருந்தப்ப ஆசான், உயர்திரு. கொழந்தைவேல் இராமசாமி ஐயா அருமையான ஒரு பற்றியம் சொன்னாரு. பொதுவா, இது இந்தியர்களுக்கே உண்டான பழக்கந்தான்.
சக ஊழியர்கள்கிட்டவோ, உயரதிகாரிகள்கிட்டவோ ஒன்னை செய்யச் சொல்லும் போது, ஆங்கிலத்துல ‘Please'ங்ற பதத்தை நாம பாவிப்போம். Kindly do the needfulன்னுவோம். அந்த பதத்தைத் தட்டும் போதே, மனசுல தயவு கூர்வது மாதிரியான ஒரு பணிவு மனசுல தோணுதுதான். அதே நெனப்புல மடலையும் தட்டி வுடுறோம்.
ஆனா, மறுபக்கம் அவன் அதை எப்படி எடுத்துக்குறான்? அது அவனோட பதவியின் நிலையப் பொறுத்து மாறுபடுது. சக நிலையில் இருப்பவனோ, அல்லது கீழ இருக்குறவனோ ஆயிருந்தா பரவாயில்லை. அதே, ஒரு உயரதிகாரியா இருந்தா அதனோட தொனி மாறுபடும். அது உங்களுக்குத் தெரியுமா? உதாரணம்: Please approve my vacation!
தூக்கிவாரிப் போடுதுல்ல? நீங்க என்னதான் ‘please'னு பரிஞ்சி எழுதினாலும், அது அவனை, அதைச் செய்ங்ற தொனியிலதான் இருக்கு! It's more of a direct and demanding. Rather, say, "Will you please approve my vacation when you get a chance?".
”தயவு கூர்ந்து செய்யவும்!” இது நேரிடையா இருக்காம்; ஆகவே மக்கா, ”தங்களுக்கு கால அவகாசம் இருக்கும் போது தயவு கூர்ந்து இதைச் செய்ய முடியுமா?” அப்படீன்னு குழையத் தெரிஞ்சுக்குங்க!
நான் போயி, என்னோட சகாவான Quient Pieskyகிட்ட இதைப் பத்திப் பேசவும், அவன், yeah, we, buggers overused it in America; because of that, you got to work around! but you are alright!! அப்படீன்னான். இஃகிஃகி!! ---------------------------
காத்துல வெண்ணெய் எடுக்குற பய அவன்!
வெறுங் கையில மொழம் போடுற பய அவன்!
ஒன்னுக்கு ஊத்தி மீன் புடிக்கிற பய அவன்!
கோழி மொட்டுக்கு சுருக்கு வெக்கிற பய அவன்!
மொட்டத் தலைக்கு குடுமி வெக்கிற பய அவன்!
காத்துல காப்பி ஆத்துற பய அவன்!
எச்சிக் கையால காக்கா ஓட்டாத பய அவன!
பழசையெல்லாம் இடுகையாக்குற பய அவன்!
- - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - -
- - - - - - - - - - - - - - - - -
(மக்களே! எங்க, உங்களுக்கு தெரிஞ்சதை எடுத்து வுடுங்க பாக்கலாம்!)
---------------------------
ஆசானும் அண்ணனுமான, உயர்திரு நாஞ்சில் பீற்றர் ஐயா அவர்கள்கிட்ட இருந்து, நிறைய தெரிஞ்சிகிட்டேன். அதுகெல்லாம் பிரத்தியேக இடுகையா போடணும். அதுல ஒன்னை இன்னைக்குப் பார்க்கலாம். அவர் சொன்ன பின்னாடிதான், கனடாவுல நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.
ஃபிரான்சிஸ் பெர்னாண்டஸ்னு ஒரு நண்பன், யார்க் பல்கலைக் கழகத்துல என்னோட படிச்சான், நெருங்கிய நண்பன், கோவக்காரன் அல்ல; அவன் கோவாக்காரன். நான் படிப்பை முடிச்ச கையோட அமெரிக்காவுக்குள்ள வந்துட்டேன். அவன், கனடிய நடுவண் அரசுக்கு வேலை பாக்கப் போயிட்டான். இன்னும் அங்கதான் வேலை!
வேலை பார்க்குற எடத்துல பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகம். இவனுக்கு அலுவலகத்துகுள்ள நுழையும் போதெல்லாம் அடிக்கடி பிரத்தியேக சோதனை; ஆய்வு, இப்படியான சிரமங்கள். காரணத்தை ஆய்ஞ்சி பார்த்ததுல தெரிஞ்சது, அவனோட உடல் தோற்றமும் அடையாள அட்டையில இருக்குற பேரும் பொருந்திப் போகாததுதான் பிரச்சினைன்னு. அப்புறம், ஃபிரான்சிஸ் குமார் பெர்னாண்டஸ் ஆயிட்டான். இப்ப, எந்த பிரச்சினையும் வர்றதில்லையாம்!
ஆக, ஒருத்தனுக்கு பூர்வீக அடையாளம் முக்கியம் மக்கா! கூடவே, கடந்து வந்த வரலாறும் முக்கியம்!! அதைப் போயிச் சிதைக்கலாமா? சிதைக்கலாமா?? நாம், நாமாக இருக்கிற வரையிலும், நமது நமக்கே!