ஓர் இலக்கியவாதியின் மறைவுக்குப்பின் எழுதப்படும் வணக்கக்கட்டுரை என்பது, வெறும் தகவல்களின் தொகுப்பாக இல்லாமல், அந்தப் படைப்பாளி உலாவிய கற்பனை உலகையும் அவர் விதைத்த சிந்தனைகளையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும். கட்டுரையின் தொடக்கத்தில், அந்த ஆளுமையின் மறைவு இலக்கியச் சூழலில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர்வுப்பூர்வமாகப் பதிவு செய்ய வேண்டும். அவர் மறைந்த செய்தியை மட்டும் கூறாமல், ஒரு வாழ்வு அல்லது ஒரு தனித்துவமான குரல் ஓய்ந்துவிட்டதை வாசகர்கள் உணரும் வகையில் முன்னுரை அமைய வேண்டும்.
அடுத்ததாக, அவரது படைப்புலகம் குறித்த ஆழமான பார்வையை முன்வைக்க வேண்டும். அவர் கையாண்ட கருப்பொருள், அவரது மொழிநடை, சமூகத்தில் அவரது எழுத்துக்கள் ஏற்படுத்திய தாக்கம் முதலானவற்றை விவரிக்க வேண்டும். அவர் எந்த இலக்கிய இயக்கத்தைச் சார்ந்தவர் அல்லது எந்தப் புதிய பாணியைத் தொடங்கி வைத்தார் என்பதைச் சுட்டிக்காட்டுவது அவசியம். வெறும் புத்தகப் பட்டியலாக இல்லாமல், அந்தப் புத்தகங்கள் வாசக மனங்களில் எத்தகைய மாற்றத்தை உண்டாக்கின என்பதை ஆய்வு ரீதியாக அணுக வேண்டும்.
தொடர்ந்து, அந்த இலக்கியவாதியின் தனிப்பட்ட ஆளுமை, கொள்கைகளைப் பற்றி எழுதலாம். அவருடன் பழகிய தருணங்கள் அல்லது அவருடைய நேர்காணல்கள் வழி வெளிப்பட்ட அவரது வாழ்க்கைச் சிந்தனைகளை இங்கே பகிரலாம். அவர் சந்தித்த விமர்சனங்கள், அவருக்கு இருந்த இலக்கியப் பிடிவாதம் அல்லது எளிமை போன்ற பண்புநலன்களைச் சுருக்கமாகக் குறிப்பிடுவது, அந்த ஆளுமையை ஒரு முழுமைக் காட்சியாக வாசகர் கண்முன் நிறுத்தும்.
நிறைவாக, அவர் விட்டுச் சென்ற இலக்கிய வாரிசுகள், அவரது படைப்புகள் எதிர்காலத் தலைமுறைக்கு எவ்விதம் வழிகாட்டும் என்பதை வலியுறுத்தி முடிக்க வேண்டும். உடல் மறைந்தாலும் ஒரு கலைஞன் தனது சொற்களின் வழியாக என்றென்றும் வாழ்வான் என்ற உண்மையை உரக்கச் சொல்லி, அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தும் விதமாக இறுதியுரை அமைய வேண்டும். அஞ்சலிக் கட்டுரை என்பது ஒருவருக்கு நாம் செய்யும் இறுதிப் புகழஞ்சலி மட்டுமல்ல, அது ஒரு படைப்பாளியின் வாழ்வை ஆவணப்படுத்தும் ஒரு வரலாற்றுச் சான்றும் கூட.
ஊடகங்களில் ஆண்டுக்கணக்கில் ஒரு தனியிடத்தைப் பெற்று வந்த பொருண்மியம் அது. சமூகம் கொந்தளிப்போடும் சினத்தோடும் இருந்தது. ஆட்டோ சங்கர் 1995ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். உடல் அடக்கத்தின் போது, அவரது தாயின் பிரிவாற்றாமையைக் கண்டு அந்தப் பகுதி மக்களெல்லாம் சோகத்தில் ஆழ்ந்திருந்ததாகவும் அந்தத் தருணங்கள் எப்படிப்பட்டதாக இருந்ததென்பதையும் இதழ்கள் படம் பிடித்துக் காண்பித்தன. அதைக் கண்டு, சினம் தணிந்த தமிழ்நாட்டுச் சமூகம் கலங்கியது. காரணம், சக மனிதனின் துக்கம், அவர்களது துயர் கண்டு மனம் நோவதென்பது மாந்தநேயத்தின் குறியீடு. சமூக அமைதிக்கு அது இன்றியமையாதது.
2005 - 2012ஆம் ஆண்டு வரையிலும், தனித்துவமான தமிழ் இணையவுலகமென ஒன்று இருந்தது. தமிழ்மணத்தின் பங்கு அதில் முதன்மையாகும். உலகெங்கும் இருக்கும் தமிழர்கள், தம் எழுத்துகளால் பிணைந்திருந்தார்கள். அப்படியான உலகில், பதிவர் டோண்டு என்பவர் நன்கறியப்பட்டவராக இருந்தார். காரணம், அவரது அதிதீவிர வலதுசாரித்தன எழுத்தும், விமர்சனப்பாங்கும். கடுமையான எதிர்ப்புக்கு ஆட்பட்டவராக இருந்தார். அவர் மறைந்து விட்டாரெனும் செய்தியறிந்து, ஒட்டுமொத்த தமிழ்ப்பதிவுலகும் இழப்பின் தாக்கத்தில் சிக்குண்டு போய், செய்வதறியாமல், சொல்வதறியாமல் கனத்த மெளனத்தைக் கடைபிடித்தது. அதை உணர்ந்த இதழ்கள், அத்தகு நிலையைக் குறிப்பிட்டு அவருக்கான இரங்கல் செய்திகளை வெளியிட்டன.
முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் மறைவின் போழ்து, காலமெல்லாம் தீவிரமாகவும் கடுமையாகவும் விமர்சித்த, எதிர்த்துவந்த இதழ்களெல்லாம், நினைவு இதழ்களைத் தத்தம் சொந்த செலவில் பக்கம் பக்கமாக வெளியிட்டுத் தத்தம் ஆழ்ந்த இழப்பினையும் உணர்வுகளையும் வெளிப்படுத்திக் கொண்டன.
ஞானபீடவிருதுச் சிறப்புக் கொண்ட ஜெயகாந்தன் மறைவின் போது, அவர் யாரையெல்லாம் காலமெல்லாம் விமர்சித்து வந்தாரோ அவர்களெல்லாம் வந்திருந்து மலர்வணக்கம் செலுத்தியது; அரசு இயந்திரமோ மேல்தட்டு வர்க்கமோ கண்டு கொள்ளாமலே விட்டுவிட்டதென்கின்ற அகங்கலாய்ப்புகள் இணையமெங்கும் இடம் பெற்றதென்பதையும் கண்டோம். https://daily.navinavirutcham.in/?p=23653 காரணம், மாந்தநேய மாண்பு.
இத்தகு சூழலில்தாம், தற்போது, 30 ஆண்டுகாலம் தமிழ் எழுத்துக்காகப் பங்காற்றிய ஒருவர், எம்மைப் போன்றவர்களையெல்லாம் அணுகி, எழுதுங்கள், எழுதிக்கொண்டே இருங்களென ஊக்கப்படுத்திய ஒருவர் மறைந்து விடுகின்றார். ஒவ்வொருவரின் சாவுக்கான பயணமும் பிறக்கும் போதேவும் துவங்கி விடுகின்றதெனச் சொன்னார் கவியரசர். நாம் எல்லாருமே சாவுக்கான பயணத்தில்தாம் இருக்கின்றோம். அவரவருக்கான நேரம் வந்ததும் பயணம் முடிவுக்கு வருகின்றது. அப்படியான இலக்கியப் பங்களிப்பின் முடிவுக்கு அபத்தமான ஓர் அஞ்சலிக்குறிப்பு. இலக்கிய உலகம் நொந்து கொள்கின்றது.
நியூயார்க், இலண்டன், ரொறண்ரோக்களில் தமிழ்விழாக்கள் நடந்தால் மட்டும் போதுமா? இலக்கிய மாண்பென்பது, இலக்கியவாதியிடமிருந்தே பிறக்க வேண்டும்.
No comments:
Post a Comment