12/29/2015

முதற்பார்வையில்...

முதற்பார்வை கண்டதும்
விரல்களைக் காட்டுவேன்!
ஐந்து விரல்களெனில்
நான்குதான் சொல்லி
இட்டுச் செல்வாள்!
நான்கு விரல்களெனில்
மூன்றுதான் சொல்லி
இட்டுச் செல்வாள்!
மூன்று விரல்களெனில்
இரண்டுதான் சொல்லி
இட்டுச் செல்வாள்!
குறைத்துச் சொல்லி
பிகு செய்வதில்
ஒரு கிரக்கம் ஒரு இது!
இன்று,
நானறியாமலே
ஏதோ நினைப்பில்
ஆட்காட்டி மட்டும்
காண்பித்து விட்டேன்
மீன்குளங்களிரண்டும்
நிரம்பி வழிய
மென்பூமியின்
விசும்பலொலி!!
மென்பூமியின்
விசும்பலொலி!!

1 comment:

ராஜ நடராஜன் said...

காள மேக தாத்தா கனவுல வந்துட்டார்! கனவு மெய்ப்பட வேண்டும்.