12/09/2015

மாந்தநிலை அறிக்கை

 

கடந்த சில நாட்களாக சென்னை, அதையொட்டி இணையம் முதலான இடங்களில் குடி கொண்டிருந்த மனிதநிலை சிறிது சிறிதாக வலுவிழந்து படிப்படியாக இயல்புவெறிநிலைக்கு முற்றிலுமாகத் திரும்பி, அடுத்த 48 நேரத்திற்கு ஆங்காங்கே உக்கிரமான காழ்ப்பும் அநேக இடங்களில் அரசியல் வாடையும் ஒருசில இடங்களில் மிதமான மனிதமும் ஓரிரு இடங்களில் பலத்த மனிதமும் தமிழகம் முழுதுமுள்ள தொலைக்காட்சிகளில் சீரான பினாத்தலும் இருக்குமென்று மாந்தநிலை இயக்குநர் வாமனன் தெரிவித்தார்.

3 comments:

வருண் said...

இந்தப்பக்கம்லாம் எதுக்கு வர்ரீங்க? கூகுள் பிள்சோட அல்லது முகநூலோட நிறுத்தி இருக்கலாமே. சரியான அளவு மனிதம் அங்கேல்லாம் கெடைக்கலையாக்கும். பதிவுலகில் உங்களுக்கு "திதி" எல்லாம் கொடுத்து முடிச்சு பலகாலமாச்சே! :))

எப்போவாவது வர்ரவங்களை நாங்க இப்படித்தான் வரவேற்போம்..:)))

பழமைபேசி said...

ஆகா.... இனி அடிக்கடி வர்றனுங்க... :-))

வருண் said...

உங்க கூட்டாளிகள் நசரேயன் அப்புறம் ஒருத்தர் டெக்ஸாஸ்ல இருந்ந்து எழுதுவாரே.. குடுகுடுப்பைனு அவங்க எல்லாம் என்ன செத்துட்டாங்களா? கேதத்துக்குப் போனீங்களா?! இல்லைனா கேதத்துக்கு வரலைனா அவருக்கு தெரியவாபோதுனு விட்டுட்டீங்களா? :)))