10/21/2011

உள்ளூர் நிலவரம்

மேப்பில் மரத்தில்
தார்ச்சிட்டுக் குருவிகள்
சிலுசிலு ஓசைதனைச் சீராய்
சிந்திக் கொண்டிருந்தன!

எழுந்து வெளியே வந்தேன்
கீழ்வானத்தில் வெள்ளை
பூசப்பட்டுக் கொண்டிருந்தது

அட விடிஞ்சிடுச்சு இங்க!
ஊரில் விடிந்துவிட்டதா?
கேட்டுத்தான் பார்ப்போமே?!

ஆட்டம் போட்ட குண்டர்கள்
அனைவரும் தோற்றிருந்தனர்
மகிழ்ச்சி கொண்டது மனம்!

அப்ப இனி?
வென்றதெல்லாம் யாரு??
தெளிவாய் சொன்னார்கள்,
உறங்கி இருந்த வேறு சில குண்டர்கள்!

அட,
அங்க இன்னும் விடியல போலிருக்கு!!

5 comments:

Mahi_Granny said...

நம்புவோம். சீக்கிரம் விடியும் என்று.

ஓலை said...

Mmm.

Thadi eduththavan thandakkaaran.

இராஜராஜேஸ்வரி said...

வென்றதெல்லாம் யாரு??
தெளிவாய் சொன்னார்கள்,
உறங்கி இருந்த வேறு சில குண்டர்கள்!

அட,
அங்க இன்னும் விடியல போலிருக்கு!!/

எப்போது விடியும் என்று ஏக்கம் கொள்ளவைக்குப் அருமையான பகிர்வு.

கொங்கு நாடோடி said...

அருமை அருமை...

இதுதான் பழமை பேசுவதோ ...

ILA (a) இளா said...

ஒரே வரி சேர்த்திருக்கலாம், இன்னும் சுவைபட்டிருக்கும்

//அட,
அங்க இன்னும் விடியல போலிருக்கு!!

எழுதியது 1961ம் ஆண்டு//