9/13/2011

ஆவுள்ளம்

அலுவலுக்குச் செல்லும் வேளையிது. எனினும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு அளப்பரியது. கொங்குநாட்டில், அன்பின் மிகுதியாலும் வாய் நீளுவது உண்டு. ”ஆவுளக் கண்டாரோளி என்னை வுட்டுட்டுப் போய்ட்டாளே” என நெகிழ்ந்து நெக்குருகித் துயரத்தை வெளிப்படுத்துவார்கள்.

'ஆவுள' என்றால் என்ன என்பதைப் பற்றி நாங்களெல்லாம் அறிந்து கொள்ளத் தலைப்பட்ட போது, சர்க்கார் பாளையம் (ஜக்கார் பாளையம்) கோவிந்தராசு அய்யா அவர்கள், ஆவுள்ளம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் நாடோடிச் சொலவடைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். இன்று அவர் எம்மோடு இல்லை. என்றாலும் அவரை நன்றியோடும் உருகிய உள்ளத்தோடும் நினைத்துப் பார்க்கிறேன்.

’ஆ’ என்றால் பசு. எங்கள் ஊருக்கு அண்மையில், ஆவுகளுக்கான கோயில் ஒன்றும் உண்டு. மால கோயில் என்பார்கள். ஆல் கொண்ட மால் கோயில் என்பது திரிந்து, மால கோயில் ஆயிற்று.

ஆவின் உள்ளம் தாய் உள்ளத்தைக் காட்டிலும் சிறந்ததாம். ஆகவேதான், ஆவுளச் சிறுக்கி, ஆவுளக் கண்டாரோளி என்றெல்லாம் ஒப்பாரிகளில் எடுத்தியம்புகிறார்கள்.

இதோ, அச்சொல்லாட்சிக்குக் கட்டியம் கூறும் படங்கள்!

அம்முகத்தைப் பாருங்கள். வாஞ்சை வழிந்தோடுகிறது!!

ஆவின் கண்ணைப் பாருங்கள். கனிவு கசியும் கண்கள்!!

11 comments:

vasu balaji said...

காணொளியும் இருக்கே:)

Jeeva said...

amazing post. where did you get this photograph. You have a very interesting blog. Keep up the good work. You have a knack for writing....keep writing.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.

பழமைபேசி said...

@@வானம்பாடிகள்

அண்ணே... சுட்டி குடுங்க அண்ணே!!

@@Jeeva

Thanks and appreciated. Got them from one of my friend who shared them in Facebook.

@@Rathnavel

நன்றிங்க அய்யா!!

VJR said...

Kandaaroli? Do u know the meaning boss?

பழமைபேசி said...

//VJR said...
Kandaaroli? Do u know the meaning boss?//

ரொம்ப நல்லாத் தெரியுமுங்க... ஆனாலும் ஊர்ல மேம்போக்காகப் பாவிக்கும் ஒரு இழிசொல்தான்... இப்படியான நேரங்களில் யாரும் ஆழ்ந்து கருத்தூன்றுவது கிடையாது.

வருண் said...

Seems like he is pleading "guilty" rather than "innocent"!

பசு உள்ளம் மன்ஷத்தாய் உள்ளத்தைவிட உயர்ந்துனு சொல்ல வர்ரீங்கனா, ஒப்பாரி வைக்கும்போது "ஆவுளச் சிறுக்கி, ஆவுளக் கண்டாரோளி" னு கெட்ட கெட்ட வார்த்தையாச் சொல்லி பசுவை ஏன் இழிவுபடுத்துறா (றீங்க)னு தெரியலை?

வருண் said...

I get it, it is just like saying he is a "lucky son of a bitch". Where "SOB" is not meant to offend. :)

பழமைபேசி said...

@@வருண்

வாங்க, வணக்கம்! கண்டு கன நாளாச்சுது!!

எல்லாம் ஆங்கிலத்துல இருந்து பின்னாடி போக வேண்டி இருக்கு?! அவ்வ்வ்....

துபாய் ராஜா said...

திருநெல்வேலி வட்டார பேச்சில்
ஏ(ஆ)வுள,என்ன(ஆ)வுள,வா(ஆ)வுள,போ(ஆ)வுள என்று பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை அழைப்பது உண்டு. இதுவரை
ஏ இவளே அல்லது ஏ புள்ளே என்பதாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் அதன் காரணம் தெளிவாக புரிந்தது.
விளக்கத்திற்கு மிக்க நன்றி.

ஓலை said...

Arumai pazhamai.