12/04/2010

நல்லாத்தான் காது குத்துறாய்ங்க....

(c-குணுக்கு, d-சந்திரபாவலி) 
(கம்மல், கடுக்கண், சிலுவணி, காதுப்பூ, பூடி)
(தண்டொட்டி)

அலுக்குத்து
இட்டடுக்கி
கர்ணபூரம்
காதுச்சில்லறை
காதுப்பூ
குணுக்கு
கொப்பு
சந்திரபாவலி
சல்லடைமுருகு
சிலுவணி
தட்டுக்குச்சு
தண்டொட்டி
தளப்பம்
தாடங்கம்
தாளுருவி
கடுக்கன்
கம்மல்
வயிரவாளி
பூடி (பொகடி)
தோடு

 "ஊழலற்ற ஆட்சியை தமிழகத்தில் அமைப்பேன்!!! காது குத்துறாய்ங்கல்ல?  மேல சொன்னதுகளையும் வாங்கிக் குடுக்கச் சொல்லுங்க... போட்டுக்கலாம்!!!

11 comments:

சங்கரியின் செய்திகள்.. said...

ஆமாம் நல்லாத்தான் சொன்னீங்க...போங்க.....

ஊழலா... அப்ப்புடீன்னா என்னாங்கோ? நாங்கல்லாம் உத்தமருங்கோவ்.......

அப்பாதுரை said...

அப்படிப் போடுங்க.. காதுல.

'welcome back'க்கு அழகான பழந்தமிழ் சொல்லுங்கய்யா. உங்களுக்குத் திருப்பிச் சொல்ல :)

வருண் said...

***காது குத்துறாய்ங்கல்ல? மேல சொன்னதுகளையும் வாங்கிக் குடுக்கச் சொல்லுங்க... போட்டுக்கலாம்!!!***

தங்கத்துலயா? இல்லை பித்தளை, செம்பு, அலுமினியம்னாலும் ஓ கேயா? :)))

அரசூரான் said...

இரண்டு மாதம் தீவிர பயிற்ச்சின்னு சொன்னது... காது குத்தா இல்ல பதிவு குத்தா?

vasu balaji said...

காது குத்துல உள்குத்து.

Unknown said...

Pazhamai,

Nallaa kaathu kuthareenga. Nallaa irukku.

ஈரோடு கதிர் said...

பவுனு விக்கிற விலைக்கு காது குத்துறீங்களாக்கும்!!!

ஆரூரன் விசுவநாதன் said...

ஆஹா.....

நிலாமகள் said...

தகவல் அபூர்வம் !
தற்கால அரசியலில் மிச்சமிருக்கும் இடங்களுக்கும் மொத்தமாய் கவசம் போடும் வேலை ஊழலற்ற ஆட்சி!

ஆறாம்பூதம் said...

இந்த காதுகுத்தல் எல்லாம் பெண்களுக்குத்தானா , ஆண்களுக்கு காது குத்துவதற்கு ஒரு லிஸ்ட் போடுங்க்ங்...பழமையார்ர்ர்ர்ர்ர்ரே...

ரிஷபன்Meena said...

நிஜமா காது குத்துபவருக்கு நாம காசு கொடுக்கனும்

ஆனால் வாக்களார்களுக்கு, காது குத்துபவரே காசும் கொடுப்பாரே. அப்புறம் என்ன காசு-ஐ வாங்கிகிட்டு குத்திக்க வேண்டியது தானே