12/28/2010

வலையுலக விடுப்பும், நாமும்!

”ஏன் இப்பெல்லாம் எழுதுறதே இல்லை?”

”பழம அண்ணே.. ரொம்ப நாளா ஆளையே காணோம்?”

“இருக்கீங்ளா, இல்லையா?”

அதான் அறிவிப்பு கொடுத்துட்டுதானே போனோம்? சரி விடுங்க; தெளிவா எழுதிடுவோம்!

=========================

தொழில்முறைச் செலுத்து மேலாண்மை(BPM), தொழில்முறைச் செலுத்துக் கட்டுறுத்தல்(BPC) ஆகிய இரண்டும் எந்த ஒரு பெருந்தொழிலுக்கும் இன்றியமையாதவை மட்டுமல்ல, அச்சாணி போன்றவை. முறையே, Business Process Management, Business Process Control என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

நீங்கள் ஒரு பெட்டிக் கடை நடத்துகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதிலே கூட, தொழில்முறைச் செலுத்து மேலாண்மை என்பது அவசியமாகப்படும். எப்படி?

ஒரு பயனர் வந்து ஒரு பொருளைக் கேட்பதிலிருந்து, அவரது தேவையைப் பூர்த்தி செய்து வருவாயை ஈட்டுவது வரையிலும், சுருக்கமாக ஆறு ‘ஆ’க்கள் அடிப்படையாக அமையும். அந்த ஆறு ’’க்கள்? ட்கொளல், ங்குதல், ய்தல், க்குதல், ச்சுதல் மற்றும் வேதனம் என்பவைதான் அவை.

இந்த ஆறு செயல்களைச் செய்வதில், மேம்பாடு காண்பது எப்படி என்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டமையே நமது விடுப்புக்கான காரணம். இனி, நாம் அந்த ஆறு “”க்களையும் என்னவென்று காண்போம்.

BPM(Business Process Management) is a management discipline that treats business processes as assets to be valued, designed and exploited in their own right. It aims to improve agility and operational performance.

ஆட்கொளல்: பயனர் தன் தேவையை நாடும் போது, அவர்தம் கோரிக்கையை முறையாக ஆட்கொள்ள வேண்டும். Receive the request in a manner.

ஆங்குதல்: தேவையை முறையாக ஆட்கொண்டபிறகு, சரியானபடி ஆங்குப்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு, பயனர் பருப்பு கேட்டார் என்றால் தானியம் இருக்கும் இடத்திற்கு வழிநடத்திடுதல் வேண்டும். You got to Route the request to a right person or into right direction.

ஆய்தல்: அடுத்தபடியாக, வந்த சேர்ந்த முறையீட்டை ஆய்திடல் வேண்டும். தேவைக்கொப்ப சேவையானது அமைந்திட, இச்செயல் வெகு முக்கியமானது. இந்த இடத்தில் வழு நேர்ந்திட்டால், அது பயனரது மனநிறைவுக்கான குந்தகம் மற்றும் வீண் விரயத்திற்கு வித்திடும். You got to Research the request with care.

ஆக்குதல்: ஆய்வின் மூலம் திரட்டப்பட்ட முழுமைத் தகவல்களைக் கொண்டு, சேவையைச் செவ்வனே ஆக்குதல். Resolve the request with quality.

ஆச்சுதல்: ஆக்கப்பட்ட பொருளைத் தக்க முறையில் ஆச்சுப்படுத்துதல்; அதாவது, பயனரிடம் உரிய முறையில், உரிய காலத்தில் ஆச்ச்சுங்கவெனக் கொண்டு சேர்ப்பது. Respond on time with passion and kindness.

ஆவேதித்தல்: நடக்கும் செயல்களைச் தரவுப்படுத்தி ஆவேதனம் செய்தல். எந்த ஒரு கட்டத்திலும், பயனரது தேவை, கோரப்பட்ட நேரம், சேவை புரிந்திட்ட நேரம், தகவு, விலை முதலான விபரங்களை அறிக்கைப்படுத்திட ஏதுவாக இருந்திடல் வேண்டும். ஆவேதனங்கள், வரவு, செலவு முதலானவற்றைக் கணித்திட இன்றியமையாதவை. Report the business with accuracy.

இப்படியாக, எந்தவொரு தொழிற்செலுத்து முறைக்கும் Receive, Route, Research, Resolve, Respond and Report என்பன முறையாக அமைந்திடல் வேண்டும். அவற்றிலே உள்ள நுணுக்கங்களை ஆழ்ந்து ஆராய்ந்து, அவற்றைச் சீரமைத்து மேன்மையைக் கூட்டுவதன் மூலம் காலவிரயம் மற்றும் பொருட் சேதாரத்தைக் குறைக்க முடியும். சரி, இதில் நமது பங்கு என்ன?

அமெரிக்க நடுவண் அரசால் பராமரிக்கப்பட்டு வரும் இரு சுகாதாரத் திட்டங்களின், உபகரண மேல்முறையீட்டு வணிகத்தைக் கொண்டு செலுத்தும் மென்பொருளைக் கட்டமைப்பதில் நாமே முதன்மைக் கட்டமைப்பாளன்.

அமெரிக்க மத்திய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மின்சற்கர நாற்காலிக்கு விண்ணப்பம் செய்யப்பட்டு, அது நிராகரிக்கப்பட்ட நிலையில் ஒருவர் மேல்முறையீடு செய்திட முடியும். அந்நிலையில், அவர் தொலைபேசியில் அழைத்தாலோ, அஞ்சல் மூலமாக அல்லது மின்பிரதி மூலமாகத் தொடர்பு கொண்டாலோ, அவை நாம் வடிவமைத்த மென்பொருளையே வந்தடையும்.

வந்தடைந்த இடத்தில் இருந்து, கிட்டத்தட்ட மூன்று அடுக்குகள் கொண்ட மீள்பார்வைக் குழுவினரின் ஆய்வுக்குப் பிறகு, ஆச்சுப்படுத்தி, ஆவேதனப் படுத்துதலே, நாம் செய்த காரியம்.

அமெரிக்கா முழுமைக்கும், இம்மாதிரியான முறையீடுகளைப் பெறுவதற்கு நான்கு சேவை மையங்கள் உள்ளன. அவையாவிலும் நாம் வடிவமைத்த மென்பொருள்தான் பயன்பாட்டில் உள்ளது.

நாளொன்றுக்கு எத்தனை முறைப்பாடுகள், ஒவ்வொரு முறைப்பாட்டையும் நிறைவு செய்ய நாம் ஒத்துக் கொண்ட காலம்(service level agreement), மென்பொருளைக் கையாளும் பணியாளர்கள் எண்ணிக்கை  முதலானவற்றைப் பார்த்தோமானால் மிக்வும் சுவாரசியமாக இருக்கும். என்றாலும், தொழில் அறம் கருதி அவற்றைத் தவிர்ப்பதே உசிதம்.

அதுதான் மென்பொருளைக் கட்டமைத்து ஆயிற்றே? பிறகெதற்குப் பயிற்சி என வினவிடலாம். அதற்கும் காரணம் இருக்கிறது.

நாம் மேற்கூறிய தொழிற்கூறினைப் போலவே, மற்றதொரு தொழிற்கூறினை, மற்றொரு நிறுவனம் கிட்டத்தட்ட 110 ஆண்டுகளாகப் பராமரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, அவர்கள் காரியமாற்றும் நேரத்தினின்றும் மிகக் குறைவான காலநேரத்தில் எங்களால் சேவையாற்றிட முடியும் என வாதிட்டு வெல்வதில் நம்பங்கும் அடங்கி இருந்தது; இருக்கிறது. எனவேதான் கூடுதல் பயிற்சியின் அவசியம் நேரிட்டது.

வழக்கு மற்றும் அதன் உட்கூறுகளை விரைவில் விலேவாரியாகக் காண்போம். தற்போதைக்கு, நீங்களும், தத்தம் தொழிற்கூறுகளில், ஆட்கொளல், ஆங்குதல், ஆய்தல், ஆக்குதல், ஆச்சுதல் மற்றும் ஆவேதனம் ஆகியவற்றை மேம்படுத்தி, எதிர்வரும் புத்தாண்டினைக் கோலாகலமாய் எதிர்கொள்வீரே!

11 comments:

Unknown said...

அப்பப்ப கட் அடிச்சிட்டு ப்ளாக் பக்கம் வந்ததெல்லாம் விடுப்புல சேத்த முடியுமா?

ஜோதிஜி said...

சிறப்பு. வாழ்த்துகள்.

சில இடங்களில் வாக்கியங்கள் கொடுக்கும் பிழைகள் தெரிகிறதா?

குழுமத்தில் வேறு கொடுத்து இருக்கீங்கன்னு நினைக்கின்றேன். முடிந்தால் உரையாடுவேன்.

Unknown said...

Receive, Route, Research, Resolve, Respond and Report

ஆட்கொளல், ஆங்குதல், ஆய்தல், ஆக்குதல், ஆச்சுதல் மற்றும் ஆவேதனம்

பழமையின் புலமை சூப்பர். ஆனா யாரு சரிபார்கிறது (Testing)?

Unknown said...

ஆஹா அற்புதம். முறையா குறைவில்லாம medicare medicaid கிடைக்க உங்க மென்பொருள் சாதனம் உதவி செய்யட்டும்.

ஆரூரன் விசுவநாதன் said...

வணக்கங்க. நேற்று நண்பர்களோடு பேசியது இன்று நடைமுறைப்படுத்த பட்டதில் மகிழ்ச்சி/

இணையத்தில் நமக்கு பிடித்ததை எழுதும் போது அவ்வப்போது நமக்குத் தெரிந்ததையும் எழுதினால் பலருக்கும் பயன் படும்’ தமிழில் இன்னும் எழுதப்படாத எவ்வளவோ விடயங்கள் இருக்கின்றன என்று பேசிக் கொண்டிருந்தோம்/ நீங்கள் செயல் படுத்திவிட்டீர்கள்/ வாழ்த்துக்கள்

தாராபுரத்தான் said...

வணக்கமுங்க.

Unknown said...

பழமை,

medicare medicaid:இந்த இரண்டு திட்டங்களும் என்ன, எவ்வாறு செயல் படுதுன்னு ஒரு விளக்கமான தமிழ் கட்டுரை எழுதுங்களேன். இந்தியாவிலும் மருத்தவம் எட்டாக் கனியா ஆயிட்டுருக்கு.

ப.கந்தசாமி said...

Good, waiting

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே எதோ கட்டுரை எழுதி இருக்கீக.அப்படியே என்ன மொழில எழுதி இருக்கீயன்னு சொன்னா நல்லாருக்கும் :)))

vasu balaji said...

//எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே எதோ கட்டுரை எழுதி இருக்கீக.அப்படியே என்ன மொழில எழுதி இருக்கீயன்னு சொன்னா நல்லாருக்கும் :)))//

That's Tamil:)))

பழமைபேசி said...

@@Sethu

செய்திடலாமுங்க!

@@ஜோதிஜி

கடைசி வரைக்கும் சொல்லாமலே போய்ட்டீங்க!

@@ஆரூரன் விசுவநாதன்

ஆமாங்க; அப்படியே செய்திடுவோம்!

@@தாராபுரத்தான்

அண்ணா, பதில் வணக்கமுங்கோ!

@@ DrPKandaswamyPhD

சரிங்ணா; எழுதிடுவோம்!

@@எம்.எம்.அப்துல்லா

இஃகிஃகி!

@@வானம்பாடிகள்

ச்சே, எங்க பாலாண்ணன் மேல யாரோ கண்ணுப் போட்டாய்ங்க....