8/07/2010

இளைய தமிழகம் - நெஞ்சார்ந்த நன்றி!!!


பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் கலைக் கல்லூரி, பெருந்துறை கொங்கு பொறியியற் கல்லூரி, சென்னிமலை MPNMJ பொறியியற் கல்லூரி முதலான கல்வி நிலையங்களில், கிட்டத்தட்ட 1400க்கும் மேற்பட்ட மாணவக் கண்மணிகளுடன், பதிவர் ஆரூரன் மற்றும் ஈரோடு கதிர் அவர்களுடன் இணைந்து உரையாடும் வாய்ப்புக் கிட்டியது.

பெருமகிழ்ச்சி கொள்கிறேன். இந்நல்வாய்ப்புகளை எமக்களித்த கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள், நண்பர்கள் பதிவர் ஆரூரன், பதிவர் ஈரோடு கதிர், பதிவர் வேளராசி உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

நேற்றைய நாளானது, இனிமையாகக் கழிந்தது. நிறைவாக, எம்மைக் கெளரவித்து, மிகச் செம்மையான கிராமிய விருந்தினை எமக்களித்த ஈரோடு பதிவர் குழுமத்திற்கும் நன்றிகளை உரித்தாக்குகிறேன். மேலும், ஈரோடு கதிர், ஆரூரன் உள்ளிட்ட ஈரோடு பதிவர் குழுமத்தினர் அவர்தம் பணியை மென்மேலும் எடுத்துச் செல்ல யாசிக்கிறேன்!!



தமிழால் இணைந்தோம்!

17 comments:

நசரேயன் said...

அண்ணே வாழ்த்த வயதில்லாமல் வணங்குகிறேன்

நசரேயன் said...

ஊருபக்கம் திரும்பி வார மாதிரி திட்டம் இருக்கா இல்லையா ?

a said...

//
ஊருபக்கம் திரும்பி வார மாதிரி திட்டம் இருக்கா இல்லையா ?
//
அதானே?

vasu balaji said...

அசத்துங்க:)

Karthick Chidambaram said...

வாழ்த்துக்கள் ஐயா

ஈரோடு கதிர் said...

||ஊருபக்கம் திரும்பி வார மாதிரி திட்டம் இருக்கா இல்லையா ?||

அது அவர் எடுத்த சில படங்களையொட்டி எழுதுவதைப் பொறுத்து இருக்கிறது...

கண்ணகி said...

அடுத்தகட்டத்துக்கு நகர்த்திச் செல்லும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்..

ஈரோடு கதிர் said...

701 வது இடுகைக்கு வாழ்த்துகள்

கண்ணகி said...

ஒபாமா ஸ்டெயிலில் அடுத்த முதல்வர் ஆகும் திட்டம் ஏதும் வச்சிருக்கீங்களோ...

பழமைபேசி said...

// கண்ணகி said...
ஒபாமா ஸ்டெயிலில் அடுத்த முதல்வர் ஆகும் திட்டம் ஏதும் வச்சிருக்கீங்களோ...

August 9, 2010 1:03 AM//

ஏனுங்க, ஏனுங்க இப்படி? இஃகி!!!

கண்ணகி said...

முஸ்தீபு....மன்னிக்க...தமிழில் என்ன..அடித்தளம் பலமாயிருக்கே...

அப்படியே தோரணை எல்லாம் எம்.ஜி.ஆர்..ஸ்டெயில்தான்...

கண்ணகி said...

அதே தொப்பி....???

Mahi_Granny said...

தங்கள் தமிழால் கல்லுரி மாணவர்கள் நிச்சயமாய் பயன் பெற்றிருப்பர் . தொடரட்டும் தங்கள் பணி

க.பாலாசி said...

பயனுள்ள நிகழ்வு, முன்னின்று நடத்தியமைக்கு நன்றிகள்...

பவள சங்கரி said...

வாழ்த்துக்கள். தங்கள் பணி மேன்மேலும் சிறக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்

சரண் said...

அட.. நான் படிச்சக் கல்லூரிக்குப் (கொங்கு) போய்ட்டு வந்திருக்கீங்க.. நெம்ப மகிழ்ச்சியாய்ருக்குங்க...